Untitled Document
April 16, 2024 [GMT]
சுவிஸில் ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கிய சிறுவன்: - நிகழ்ந்த விபரீத சம்பவம்
[Wednesday 2017-03-22 17:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் நீண்ட தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸில் உள்ள பேசல் மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.நேற்று பிற்பகல் வேளையில் 10 வயதான சிறுவன் ஒருவன் Kappeli ட்ராம் நிலையத்திற்கு சென்றுள்ளான்.அப்போது, 14 வழித்தடத்திற்கு செல்வதற்காக ட்ராம் இருப்புச் சாலையை கடக்க முயன்றுள்ளான்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் நீண்ட தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸில் உள்ள பேசல் மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.நேற்று பிற்பகல் வேளையில் 10 வயதான சிறுவன் ஒருவன் Kappeli ட்ராம் நிலையத்திற்கு சென்றுள்ளான்.அப்போது, 14 வழித்தடத்திற்கு செல்வதற்காக ட்ராம் இருப்புச் சாலையை கடக்க முயன்றுள்ளான்.

  

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அவ்வழியாக வந்த ட்ராம் வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதியுள்ளது.இதில் சிறுவன் ட்ராம் சக்கரம் இருந்த இடத்தில் சிக்கிக்கொண்டான்.சில மீற்றர்கள் தூரம் வரை சிறுவன் இழுத்துச் செல்லப்பட்டான். இச்சம்பவம் அறிந்த உடனே ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் அங்கு விரைந்து வந்துள்ளனர். சிறுவனின் உடல் முழுவதும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.எனினும், சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்ததால் சிறுவன் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ட்ராம் வாகன விபத்துக் காரணமாக 14 வழித்தடத்தில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரான்!
[Wednesday 2024-04-17 03:00]

பழி தீர்ப்பது உறுதி என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களால் அடிப்போம் என்று ஈரானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பழி தீர்ப்போம், விட்டுவிட மாட்டோம் என இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.



பேய் மழைக்கு மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
[Wednesday 2024-04-17 03:00]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.



பிரித்தானியாவில் கடும் தட்டுப்பாடு வரலாம்: விரிவான பின்னணி!
[Wednesday 2024-04-17 03:00]

காலநிலை நெருக்கடியால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சியால் பிரித்தானியர்கள் உட்கொள்ளும் பல உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளம், வறட்சி உட்பட பல்வேறு காரணங்களால் உலகளாவிய உணவு உற்பத்தி என்பது சிக்கலில் உள்ளது. பிரித்தானியாவில் வாங்கப்பட்டு நுகரப்படும் பல பொருட்கள் சரிவடைந்த விநியோகம் மற்றும் விலை அதிகரிப்பு அபாயத்தில் உள்ளன.



போரை நிறுத்த சீனாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்த ஜேர்மனி!
[Tuesday 2024-04-16 18:00]

ஜேர்மன் சேன்ஸலர் சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு மறைமுகமாக கேட்டுக்கொண்டார். ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த அவர், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியுள்ள விடயம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார். அதாவது, போரை நிறுத்துமாறு தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் சீன ஜனாதிபதியை மறைமுகமாக கேட்டுக்கொண்டுள்ளார்.



இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்தின் முக்கிய பங்கு!
[Tuesday 2024-04-16 18:00]

இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்துக்கு ஒரு மறைமுகப் பங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பல ஆண்டுகளாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தூதரக உறவுகளை பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்துதான் பாலமாக செயல்பட்டுவருகிறதாம். அதாவது, ஈரானும் அமெரிக்காவும் நேரடியாக பேசிக்கொள்வதில்லை. அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது.



பதவியை ராஜினாமா செய்யும் சிங்கப்பூர் பிரதமர்?
[Tuesday 2024-04-16 18:00]

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமரான இவர், 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.



கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம் என்ன?
[Tuesday 2024-04-16 18:00]

கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதை நாம் கவனித்துவருகிறோம். ஆக, புலம்பெயர்தல் கொள்கைகளை மறுசீரமைத்துவிட்டால் வீடுகள் தட்டுப்பாடு குறைந்துவிடுமா?



26 வருட மர்மம்: பிரித்தானியாவில் குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்!
[Tuesday 2024-04-16 05:00]

1998ஆம் ஆண்டில் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் கொலை வழக்கில் பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம், woodlandஇல் உள்ள Warrington பார்க்கிற்கு அருகில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு அதிகாரிகள் "Callum" என்று செல்லப் பெயர் சூட்டினார்கள், இது தொடர்பாக கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டாலும், பல ஆண்டுகளாக இந்த வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தது.



இஸ்ரேல் பதிலடிக்கு தயாரா? தெஹ்ரானில் விமானத் தடையை நீக்கியது ஈரான்!
[Tuesday 2024-04-16 05:00]

தலைநகர் தெஹ்ரான் மீதான விமானத் தடையை ஈரான் நீக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பின்னடைவு!
[Tuesday 2024-04-16 05:00]

பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹாரி பின்னடை அடைந்துள்ளார். பிரித்தானியாவில் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சட்டப் போராட்டத்தில் இளவரசர் ஹரி பின்னடை அடைந்துள்ளார். ஏப்ரல் 15, 2024 அன்று, இளவரசர் ஹரி மேற்கொண்ட மேன்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.



அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு பயங்கரம்: தேவாலயத்தில் கத்திக்குத்து!
[Monday 2024-04-15 18:00]

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பலித்தது: மூன்றாம் உலகப்போர் அச்சத்தில் மக்கள்!
[Monday 2024-04-15 18:00]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு பலித்துள்ளதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர். புகழ் பெற்ற பிரெஞ்சு ஜோதிடக்கலை நிபுணரான Michel de Nostredame என்னும் நாஸ்ட்ரடாமஸ், 450 ஆண்டுகளுக்கு முன், தனது Les Prophéties என்னு புத்தகத்தில் உலகில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பல்வேறு விடயங்களை கணித்து எழுதியுள்ளார். ஹிட்லருடைய எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை முதல், கோவிட் வரை அவர் கணித்த பல விடயங்கள் துல்லியமாக நிறைவேறியுள்ளன.



ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்பு!
[Monday 2024-04-15 18:00]

ரொறன்ரோவில் களவாடப்பட்ட 600 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட வாகனங்கள் இவ்வாறு மொன்றியல் துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வாகனங்களில் பெரும்பான்மையானவை கார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



"ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" - ஜோ பைடன் உறுதி!
[Monday 2024-04-15 18:00]

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது எந்தவிதமான எதிர் தாக்குதல் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபடாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.



"புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் விரைவில் புறப்படும்" - கேபினட் அமைச்சர் அறிவிப்பு!
[Monday 2024-04-15 06:00]

சட்ட விரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் இன்னும் சில வாரங்களில் புறப்படும் என சுகாதார செயலர் அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் சுகாதார செயலர் Victoria Atkins தெரிவிக்கையில், உள்விவகாரத்துறை தொடர்புடைய திட்டத்தை முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



ஈரான் தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு!
[Monday 2024-04-15 06:00]

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணையால் அதிரடி தாக்குதலை முன்னெடுத்த ஈரானுக்கு பதிலடி அளிக்க இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதலை முன்னெடுக்க உரிய நேரம் மற்றும் அதன் அளவு தொடர்பில் அமைச்சரவையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.



ஈரானின் எதிர்பாராத தாக்குதல்: இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா!
[Monday 2024-04-15 06:00]

மத்திய கிழக்கில் நெருக்கடி அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் இருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்த நிலையிலேயே வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடன் ஒரு போருக்கு அமெரிக்கா தயாரில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.



இஸ்ரேல் மீதான தாக்குலுக்கு ட்ரூடோ கண்டனம்!
[Sunday 2024-04-14 18:00]

இஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வன்மையாக கண்டித்துள்ளது. பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலான மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



பதிலடி கொடுத்தால் மீண்டும் பலமாக தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!
[Sunday 2024-04-14 18:00]

இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. சனிக்கிழமை இரவு 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலமடங்கு பலத்துடன் தாக்குவோம் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது .



எயர் கனடா விமான சேவையின் அவசர அறிவிப்பு!
[Sunday 2024-04-14 18:00]

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா