Untitled Document
August 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா: Top News
[Sunday 2017-04-09 17:00]

யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,

யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,

  

இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை அவைத்தலைவர் திரு. சீ.வி.கே சிவஞானம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக சிவபூமி ஞான வைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் திருமுறை வழிபாடு, வரவேற்புரை என்பன இடம்பெற்று, சைவப் பெரியார்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து தரிசனம் ஆவண ஒளிநாடா மற்றும் சிவபூமி நிழல் சிறப்பு மலர் என்பன வெளியிட்டு வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

  
   Bookmark and Share Seithy.com



நல்லைக் கந்தன் தீர்த்தத் திருவிழா! Top News
[Monday 2017-08-21 18:00]

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தத் தீர்த்தத் திருவிழா இன்று காலை சிறப்புற நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் விசேட மதிய உணவு வழங்கல்! Top News
[Sunday 2017-08-20 17:00]

கனடாவில் வசிக்கும் பகீரதன் சுதாஜினி தம்பதிகளின் செல்வ புதல்வி இலக்கியா அவர்களுடைய பூப்புனித நீராட்டு விழாவினை முன்னிட்டு நேற்று 19.08.2017 தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வவுனியா மணிப்புரம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் கலந்து கொண்டார்.



கல்விக்கு கரங்கொடுக்கும் உன்னத பணியில் கனடா நந்தா உணவகம்: Top News
[Thursday 2017-08-17 18:00]

கல்விக்கு கரங்கொடுக்கும் உன்னத பணியில் நந்தா உணவகம் கனடா வன்னிப்பட்டறை அமைப்பு ஊடாக எமது அங்கத்தவர்களின் பிள்ளைகள் இருபது பேருக்கு மாதாந்த கல்விக் கொடுப்பனவு இன்றையதினம் வன்னிப்பட்டறை பிரதீன் அண்ணாவின் தாயார், பாரியார், பிள்ளைகள் , மற்றும் அக்கா ஆகியோரால் வளங்கி வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை.



மடு மாதாவின் ஆவணித் திருவிழா! - 7 இலட்சம் பக்தர்கள் திரண்டனர் Top News
[Tuesday 2017-08-15 18:00]

மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா, இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து, திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.



வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு: Top News
[Tuesday 2017-08-15 18:00]

உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளிற்கு இனங்க யேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பினரால் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தில் 15/08/2017 இன்று இந்த நிகழ்வு உதயம் சமூக தொண்டு அமைப்பின் வடபிராந்திய இனைப்பாளரும் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இனைப்பாளருமான S.T.பிரனீவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளரும் யேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பின் கிழக்கு மாகாண இனைப்பாளருமான A.யோன்சன் Tamil Peoples Aid அமைப்பின் பணிப்பாளர் பொறியியலாளர் K.அனித்தன்Eng மற்றும் கிராம சமூர்த்தி உத்தியோகத்தர் தினேஷ்,கிராம பெண்கள் அபிவிருத்தி சங்க தலைவி கலைச்செல்வி,பொருளாளர் சுதா,மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



சர்வதேச தமிழினத்தை கனடாவில் ஒன்றிணைத்த பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி! Top News
[Friday 2017-08-11 07:00]

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒரே புள்ளியில் இணைக்கும் விளையாட்டுக் களமாக பூப்பந்தாட்டம் (Badminton) இன்று முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த சில வருடங்களாக புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்கள் பூப்பந்தாட்ட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில்,தத்தமது நாடுகளில் மட்டுமே ஆடிவந்த விளையாட்டை சர்வதேசப் போட்டிக் களத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.



பிரான்சில் இடம்பெற்ற மூதூர் படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Saturday 2017-08-05 21:00]

சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 11 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (04.08.2017) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப்பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.



WTBF இன் 5 வது உலகக்கிண்ண பட்மின்ரன் போட்டிகள் – ரொறன்ரோ - கனடா: Top News
[Friday 2017-08-04 18:00]

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் 5 வது உலகக்கிண்ணப்போட்டிகள் இவ்வருடம் கனடா நாட்டிலே ரொறன்ரோ நகரிலே யூலைமாதம் 29 30 திகதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியுள்ளது WTBF இன் கனேடியப்போட்டிகளுக்கான உலகக்கிண்ண நிர்வாகக்குழு மிகநேர்த்தியாக செயலாற்றியுள்ளது.



நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா 2017 Top News
[Tuesday 2017-08-01 17:00]

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக லண்டன் மாநகரில் மாபெரும் விளையாட்டு விழா 2017 நேற்றுமுன்தினம் (30.07.2017) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை MODERN PARK, LONDON ROAD SM4 5HE எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் ஞாபகார்த்தமாக இவ்விளையாட்டு போட்டி 3வது முறையாக விளையாட்டால் ஒன்றிணைவோம் என்ற கருப்பொருளில் நடைபெற்றுள்ளது.



அமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி: Top News
[Thursday 2017-07-27 18:00]

அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் பிலேயின் நகரில் நடைபெற்ற 33வது அமெரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டியிலேயே 14 வயது ஆண்கள் பிரிவின் வெள்ளிப்பிரிவின் வெற்றிக்கிண்ணத்தையே கனடாவில் இருந்து சென்ற செம்பகம் இளையோர் அணி தனதாக்கி சாதனை படைத்துள்ளது. இது குறித்து மேலும் அறியவருவதாவதுஇ அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் பிலேயின் நகரில் 1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமெரிக்க கோப்பை கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டிகள். 33வது தொடர்வருடமாக நடைபெறும் இப்போட்டிகள் மேற்குலகில் நடைபெறும் பெரும் கால்பந்தாட்ட போட்டியாகும். இப்போட்டிகள் அங்கமைந்துள்ள தேசிய விளையாட்டரங்க திடல்களிலேயே நடைபெறுகின்றன.



மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்…!! - நாவல் மரத்தின் விழிப்புணர்வு. Top News
[Thursday 2017-07-27 18:00]

ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் நிழல்கள் அமைப்பின் நிதிஉதவியுடன் Green future world நிறுவனத்தின் ஆலோசனையுடன் Trinco aid நிறுவனத்தினூடாக little penguin பாலர் பாடசாலை சிறார்களுக்கு நாவல்மரம் மற்றும் விளிமர கன்றுகள் Trinco aid ஸ்தாபகர் இராஐக்கோண்ஹரிகரன் அவர்களின் மகள் கருண்யாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.



ஈழத்து நூலகங்களுக்குத் தமிழகத்தின் நூல்கொடை: Top News
[Monday 2017-07-24 18:00]

தமிழகப் பதிப்பகங்களிடம் இருந்து ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 1000 படிகளை விலைக்கு வாங்கித் தமிழக நூலகங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்குகிறது. இதற்காககத் தமிழக மக்கள் வரி கொடுக்கிறார்கள். உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களுக்கும் 100 படிகள் சேர்த்து வாங்குக அவர்களுக்கு அனுப்புக என நான் தொடர்ச்சியாகத் தமிழக அரசைக் கேட்டுவந்துள்ளேன்.



பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டு நிறைவு விழா. Top News Top News
[Sunday 2017-07-23 18:00]

கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற் எல்லைப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக தமிழ்ப் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்து வரும் தமிழ் அறிவியற் கழகமானது தனது ஆண்டு நிறைவினையொட்டி கலைவிழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் . மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் முதலில் வீரமறவர்களுக்கு அகவணக்கம் செலுத்தியபின்பு பாடசாலை கீதத்துடன் கலை நிகழ்வுகளை ஆரம்பித்தார்கள்.



மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி முன்சன். Top News
[Sunday 2017-07-23 18:00]

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனியின் பல பாகங்களிலும் உள்ள தமிழாலயங்களை இணைத்து மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் 22.7.2017 சனிக்கிழமை யேர்மனியில் முன்சன் நகரத்தில் யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.



சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட 'கறுப்பு ஜூலை'! Top News
[Sunday 2017-07-23 18:00]

'தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்'. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சரித்திர நிகழ்வு கறுப்பு ஜூலை. ஆண்டுகள் பல கடந்து வந்து விட்டாலும் தமிழ் தலைமுறைப் பிள்ளைகள் அறிந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுப் பாடம்.



மீசாலையில் ஜேர்மனிய வெள்ளைக்கார மாப்பிளை பழமை மாறாத திருமணம்: Top News
[Friday 2017-07-21 19:00]

யாழ்ப்பாணம், மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஜேர்மனியை சேர்ந்த இரு ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றும் இவர்கள் இன்றைய தினம் காலை 11:15 மணியளவில் மாட்டு வண்டி மூலம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்துக்கு வந்து திருமண பந்தத்தில் இணைத்துக் கொண்டனர்.



தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பிரித்தானியாவில் கைகூடும் வாய்ப்பு! Top News
[Tuesday 2017-07-18 18:00]

முள்ளிவாய்க்கால் பின்னடைவின் பிற்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு முன் முயற்சிகளும் பரிசோதனைகளும் இடம்பெற்றன. அவை சாதகமானதும் பாதகமானதுமான வெவ்வேறு பெறுபேறுகளை பெற்றன. இக் காலகட்டப் பகுதியில் தமிழ் மக்களின் முயற்சிகளுக்கு சமாந்திரமாக அவர்களது கூட்டு முயற்சிகளை சிதைக்கும் போக்குகளும் இடம்பெற்றன. செயல்படும் அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களிடையே பல்வேறு முரண்பாடுகளை கண்டு வெதும்பிய புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கிய விரக்தியின் காரணமாக எடுக்கப்படும் முயற்சிகள் அதன் பூரணத்துவத்தை அடைய முடியவில்லை. கடந்த காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முயற்சிகள் தமிழ் மக்களின் ஒற்றுமை நோக்கி அடி எடுத்து வைத்தாலும் எதோ ஒரு விதமாக அவை சிதைவடையும் போக்கும் இடம்பெற்று வந்தன.



யேர்மனியின் மத்திய மாநிலம் 2 கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி-2017 Arnsberg: Top News
[Tuesday 2017-07-18 18:00]

யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 15.7.2017 சனிக்கிழமை அன்று யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்றது இப்போட்டியில் யேர்மனியின் மத்திய மாநிலம் 2 இல் உள்ள பல தமிழாலயங்களின் மாணவ மாணவிகள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின்பு யேர்மனியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.



கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி: Top News
[Thursday 2017-07-13 18:00]

கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சு நடாத்திய 2ம் வருட தடகள விளையாட்டுப்போட்டி ஜூலை 3ந் திகதி Bill Crothers பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 170க்கும் மேட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.மார்க்கம் நகரசபை 7ம் வட்டார நகரசபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.இவர் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந்தமான விடயங்களிட்கு முன்னுரிமை கொடுப்பவர்.



முள்ளிவாய்க்கால் பகுதியில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு: Top News
[Thursday 2017-07-13 11:00]

முள்ளிவாய்க்கால் பகுதியில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு - கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வறுமைக்கோட்டின் கீழான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா