Untitled Document
April 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அவனால் மட்டுமே இனி அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்: - சமுத்திரகனி அதிரடி
[Tuesday 2017-04-18 15:00]

கோலிவுட்டில் ஒரு சிலரே பணத்தை தாண்டி நல்ல கருத்தை பதிய வைக்க படம் எடுப்பவர்கள். அந்த வகையில் தொடர்ந்து கரண்ட் ட்ரெண்டில் நடக்கும் அநீதிகளை படமாக எடுத்து வருபவர் சமுத்திரகனி.இவர் இயக்கத்தில் மே மாதம் திரைக்கு வரவுள்ள படம் தொண்டன். இப்படத்தில் விக்ராந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘விவசாயிகளை சாமியாக கும்பிட வேண்டும், இதை நான் அப்பா படத்திலேயே கூறியிருந்தேன்.

கோலிவுட்டில் ஒரு சிலரே பணத்தை தாண்டி நல்ல கருத்தை பதிய வைக்க படம் எடுப்பவர்கள். அந்த வகையில் தொடர்ந்து கரண்ட் ட்ரெண்டில் நடக்கும் அநீதிகளை படமாக எடுத்து வருபவர் சமுத்திரகனி.இவர் இயக்கத்தில் மே மாதம் திரைக்கு வரவுள்ள படம் தொண்டன். இப்படத்தில் விக்ராந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘விவசாயிகளை சாமியாக கும்பிட வேண்டும், இதை நான் அப்பா படத்திலேயே கூறியிருந்தேன்.

  

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்ட இளைஞர்கள் அதற்காக மட்டும் ஒன்று கூடவில்லை. பல பேரின் அடக்குமுறையின் வெளிப்பாடு அது.மேலும், இனி எல்லா பிரச்சனைகளுக்கும் அவன் வருவான், அவனால் மட்டுமே இனி அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்’ என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comதோழிகளை கழற்றிவிட்டு தாயுடன் வெளிநாடு பறந்த திரிஷா!
[Wednesday 2017-04-26 17:00]

மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என 3 படங்களை நடித்து முடித்துள்ளார் திரிஷா. மூன்று படத்துக்கும் ரிலீஸுக்கான இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. தொடர்ச்சியான நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கவும், கோடை வெயிலை சமாளிக்கவும் வெளிநாடுக்கு டூர் புறப்பட திட்டமிட்டார். வழக்கமாக டூர் சென்றால் தனது தோழிகளுடன் சென்று ஜாலியாக பொழுதை கழிப்பார். இம்முறை என்ன ஆனதோ தோழிகளை கழற்றிவிட்டு தாய் உமாவுடன் வெளிநாடு பறந்துவிட்டார்.காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கும் துல்கர் சல்மான்!
[Wednesday 2017-04-26 14:00]

1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்த படத்திற்கு மகாநதி என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கையில் மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் முக்கியமானவர்! இந்த கேரக்டரில் நடிகர் துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நெருப்புடாவில் நடிப்பில் கொளுத்தியிருக்கிறாராம் விக்ரம் பிரபு!
[Wednesday 2017-04-26 14:00]

முதல் படமே முத்தாய்ப்பான படமாக ஒரு ஹீரோவுக்கு அமைவது மிகவும் அரிது. நடிகர் திலகத்துக்கு பராசக்தி அமைந்ததைப்போல, அவரது பேரன் விக்ரம் பிரபுவுக்கும் கும்கி அமைந்தது. நடிக்க வந்ததில் இருந்தே எனர்ஜிலெவல் கொஞ்சமும் குறையாமல் நடித்துக்கொண்டிருப்பவர் விக்ரம் பிரபு. லேட்டஸ்டாக நெருப்புடாவில் நடிப்பில் கொளுத்தியிருக்கிறாராம். படத்தின் இயக்குநர் அசோக்குமார் டப்பிங் வேலைகளுக்காக பைக்கை ஸ்டார்ட் செய்த நிலையில், பேட்டி என்று எதிர்ப்பட்டோம். கொஞ்சமும் தயங்காமல், ஜூஸ் கடைக்கு போலாமா? என்று உபசரித்தார். ஜூஸ் குடித்துக் கொண்டே அவரிடம் பேசினோம்.வீட்டு சிறையில் ஸ்ரீதேவி மகள்!
[Wednesday 2017-04-26 13:00]

இவர் பாலிவுட் சென்று அங்கும் நம்பர் 1 ஹீரோயினாகவே வலம் வந்தார்.இந்நிலையில் இவரின் மூத்த மகள் விரைவில் சினிமாவில் நடிக்க வருவதாக கூறப்பட்டது, ஆனால், அவரோ எப்போதும் பார்ட்டி, கிளப் என்று தான் இருக்கின்றாராம்.ஒரு நாள் யதார்த்தமாக தன் மகளின் மொபைலை பார்க்க ஸ்ரீதேவி அழுதேவிட்டாராம், தன் மகள் மிகவும் தவறான பாதைக்கு செல்வதை உணர்ந்துள்ளார்.இது ஆவி வந்த கதை ஆனால் இதில் தெர்மாக்கோல் பயன்படுத்தவில்லை: - கமல்ஹாசன்
[Wednesday 2017-04-26 13:00]

ஜீவா – ஸ்ரீதிவ்யா முதல்முறையாக ஜோடி சேரும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. எம்.ஆர்.ராதாவின் பேரன் ‘ஐக்’ இயக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் அட்லீயின் A for Apple மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கடந்த வாரம் வைகை அணையில் உள்ள நீர் ஆவியாவதை, தெர்மாக்கோல் மூலம் தடுக்க நினைத்த தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவின் செயல், நெட்டிசன்களால் கடும் கிண்டலடிக்கப்பட்டு வைரலானது. அந்தச் செயலைச் சுட்டிக்காட்டும்விதமாக, இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனும் ராதாரவியும் கலாய்த்துப் பேசியது, சமூக வலைதலங்களில் செம வைரலானது!மலேசியா செல்லவுள்ள வேலைக்காரன் படக்குழு!
[Wednesday 2017-04-26 13:00]

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இப்பட வேலைகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளனர்.இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வேலைக்காரன் படக்குழு மலேசியா செல்ல இருக்கின்றனராம். இந்த தகவலை மோகன்ராஜா ஏற்கெனவே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை மையக்கருவாக வைத்த உருவாக்கப்படும் இப்படத்தில் சில ஸ்பெஷல் விஷயங்களையும் படக்குழு புகுத்தியுள்ளனராம்.அழகு கிரீம் நடிகைகளை சீண்டிய ஸ்ரேயா!
[Tuesday 2017-04-25 17:00]

ரஜினி, விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. கடும் முயற்சிக்கு பிறகு சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் உள்பட 4 படங்களில் இந்த ஆண்டு நடித்து வருகிறார். யாமி கவுதம் உள்ளிட்ட பல இளம் நடிகைகள் அழகு கிரீம் விளம்பர மாடல்களாக நடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஸ்ரேயாவும் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார். தற்போது அதுபோல் நடிக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா!
[Tuesday 2017-04-25 13:00]

குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து, இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு பயணித்த கல்பனா சாவ்லா அங்கு 31 நாட்கள், 14 மணிநேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் தனது ஆராய்ச்சிகளை முடித்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்தார்.விஜய் அப்படி சொல்லியிருந்தாலும் என்ன தப்பு? - கஸ்தூரி
[Tuesday 2017-04-25 13:00]

கஸ்தூரி சமீப நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் பற்றி கருத்து கூறிவருகிறார். சமீபத்தில் அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் என தருண் விஜய் சொன்னதால் வந்த சர்ச்சை பற்றி கூறியுள்ளார்.நான் தகுதியற்றவன் என்றால் விருதை திரும்பி பெற்றுக்கொள்ளுங்கள்: - பிரபல நடிகர் அதிரடி
[Tuesday 2017-04-25 13:00]

எந்த விருது விழா என்றாலும் எப்போதுமே ரசிகர்களிடம் பிரச்சனையாக தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் சில ரசனைகள் இருப்பதால் இவருக்கு விருது கிடைத்திருக்க வேண்டும், அவருக்கு கிடைக்க வேண்டும் என புலம்புவார்கள். அண்மையில் வெளியான இவ்வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது அக்ஷய் குமார் அவர்களுக்கு கிடைத்திருந்தது. இந்த விருதுக்கு பல பேர் சர்ச்சையை கிளப்பி வந்தனர்.ரம்யா பாண்டியனை பாராட்டிய சமுத்திரக்கனி!
[Tuesday 2017-04-25 13:00]

`ஜோக்கர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாயகி ரம்யா பாண்டியனை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பாராட்டியுள்ளார்.தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் ராஜு முருகன் இயக்கத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அடுத்து தாமிரா இயக்கும் ‘ஆண் தேவதை’ படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்திருக்கிறார். இதுபற்றி ரம்யாபாண்டியனிடம் கேட்ட போது...`ஜோக்கர்’ படத்தை விட இதில் வித்தியாசமான வேடம். முதல் படத்தில் அதிகமாக பேசவில்லை. இதில் நிறைய வசனம் பேசி நடித்திருக்கிறேன். இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாம். ‘ஜோக்கர்’ படத்தை போலவே ‘ஆண் தேவதை’ படத்திலும் எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன்.ஆடையில்லாமல் நடிப்பதற்கான துணிச்சலும் இருக்கிறது: - சுஜாவரூணி
[Tuesday 2017-04-25 13:00]

‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜாவரூணி.“ எனக்கு வாய்ப்பளிப்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குனரிடம் முதலில் நான் திறந்த மனதுடன், கதையை கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் ‘நச்’ சென்று ரசிகர்களின் மனசில் நிற்க வேண்டும். அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை.மலைகிராம பெண்கள் யாரும் சிவப்பாக இல்லையா? - கேத்ரின் தெரசா
[Monday 2017-04-24 18:00]

கடம்பன் படத்தில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கோலிவுட்டில் சுழன்று சுழன்று பட புரமோஷனில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். அவர் கூறியது: நான் கோபக்காரியா என்கிறார்கள். சாதாரண பெண்தான். சில சமயம் என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது அதை சிலர் கோபமாக பார்க்கிறார்கள். சிரஞ்சீவி படம் கைதி நம்பர் 150ல் நடிக்க சென்றபோது அங்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் நான் நடிக்காமல் வெளியேறினேன். எதற்காக வெளியேறினீர்கள், யாருடன் சண்டை என்றெல்லாம் கேட்கிறார்கள்.வடசென்னையை மாற்றும் விக்ரம் - தமன்னா!
[Monday 2017-04-24 18:00]

வட சென்னை என்றதும் ரவுடி, தாதா, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை என்றுதான் பெரும்பாலும் படங்கள் வருறது. அந்த இமேஜை மாற்றும் படமாக உருவாகிறது ஸ்கெட்ச். இதுபற்றி இயக்குனர் விஜய்சந்தர் கூறியது: படிப்பறிவில்லாத பாமரர்கள், ஏழைகள் என்பதுபோன்ற இமேஜுடன்தான் இதுவரை வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால் அங்கு டாக்டர்கள், வக்கீல்கள் என உயர்மட்ட மக்களும் உள்ளனர் என்பதை வலியுறுத்தும் ஆக்‌ஷன் கதையாக ஸ்கெட்ச் உருவாகிறது.இவர்கள் திறமையான நடிகர்கள்: - விவேக் கூறிய அந்த நடிகர்கள் யார் யார்?
[Monday 2017-04-24 18:00]

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் இப்போதும் பலரது மனதில் நிலைத்து இருப்பவர் நடிகர் விவேக். நடிப்பையும் தாண்டி மறைந்த அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைப்படி செடிகள் நடும் பணி மும்முரமாக இருக்கிறார்.டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் இன்று நடிகர்கள் பரத், ஆர்யா, ஷ்யாம் போன்றோரின் புகைப்படங்களை போட்டு, மிகவும் திறமையான, அழகான நடிகர்கள். அவர்களுக்கு நல்ல கதையும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.சூர்யாவும் குழந்தைகளும் என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்கள்: - ஜோதிகா
[Monday 2017-04-24 18:00]

நடிகை ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஜோ சிவக்குமார் குடும்பத்தின் ஆண்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.நான் நடிப்பதற்கு சப்போர்ட் செய்தார்கள். இந்த படத்தில் நடித்தது மிகவும் பிடித்திருந்தது. வீட்டிலிருந்து நான் கிளம்புப் போது சூர்யா வெளியே கார் வரைக்கும் வந்து டாட்டா சொல்லி அனுப்பிவைப்பார்.அதே போல என் அப்பாவும் வாழ்த்திக்கொண்டே இருப்பார். சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகு நான் சூர்யாவுக்கு ஒரே ஒருமுறை தான் தோசை சுட்டுக்கொடுத்தேன்.நடிகை ராய் லக்ஷமிக்கு வந்த புதிய ஆசை: - அப்படி ஒரு படத்தில் நடிக்கணுமாம்
[Monday 2017-04-24 18:00]

லக்ஷமி ராய் என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது ராய் லக்ஷமி என்று பெயரை மாற்றி வைத்துவிட்டார். சொல்லப் போனால் பெயர் மாற்றத்திற்கு பிறகு அவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் இப்போது ராய் லட்சுமியின் பாலிவுட் படமான ஜுலி 2 படத்தை மிகவும் எதிர்ப்பார்க்கிறார்கள்.இவ் வருடத்தில் வெளியாகுமா விஸ்வரூபம்-2!
[Sunday 2017-04-23 17:00]

கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என கடந்த 2014-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்‘. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில நாட்களிலேயே இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கமலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு கமலும் விபத்தில் சிக்கி, நடக்க முடியாமல் கஷ்டப்படவே, ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பும் கிடப்பில் போடப்பட்டது.படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த அஜித்!
[Sunday 2017-04-23 17:00]

அஜித்தின் கடின உழைப்பு பற்றி அவரது ரசிகர்களை தாண்டி அனைவருக்குமே தெரியும். ஒரு காரியத்தை தொடங்கிவிட்டால் அதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்துவார்.தல அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி வர இருப்பதால் ரசிகர்கள் இப்போதே பல வகையில் கொண்டாட தயாராகி விட்டனர். இந்நிலையில் அஜித் காதல் மன்னன் படம் நடிக்கும் போதே பகைவன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இரவு, பகல் என மாற்றி மாற்றி படப்பிடிப்பு செய்துள்ளார்.விவசாயிகளுக்கு கை கொடுத்த பிரசன்னா சிநேகா!
[Sunday 2017-04-23 17:00]

ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்ந்து தற்போது விவசாயிகளின் பிரச்சனை பெரிதாக பேசப்படுகிறது தமிழ்நாட்டில். டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு விதமாக விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாட்டில் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க முன்வந்துள்ளனர் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா. பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பின் 10 விவசாய குடும்பங்களுக்கு தொகையையும் வழங்கியுள்ளனர்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா