Untitled Document
August 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவம் உறுதி! - சுமந்திரன்
[Thursday 2017-04-20 17:00]

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக, இன்றைய சந்திப்பின் போது தமக்கு தெரிவிக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக, இன்றைய சந்திப்பின் போது தமக்கு தெரிவிக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  

இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும். தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்கம் என இராணுவம் தெரிவித்துள்ளது. காணி விடுவிப்பு தொடர்பில் கிடைக்கப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு தாம் முன்னுரிமை வழங்கவுள்ளதமாகவும் இராணுவம் தெரிவித்தது. தமக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு பாரிய செலவீனம் காணப்படுவதாகவும், அரசாங்கம் அந்த செலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தாம் உடனடியாக அந்த காணிகளை விட்டு வௌியேற தயாராகவுள்ளதாகவும் இராணுவத்தினர் இன்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இரணைமடுவை அண்மித்து கையகப்படுத்தப்பட்டுள்ள 2439 ஏக்கர் நிலப்பரப்பை வெகுவிரைவில் படிபடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் இன்று உறுதியளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள காணி விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், சிறிதரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ! - முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டதால் நடவடிக்கை
[Monday 2017-08-21 07:00]

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்ட, அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரெலோவின் பொதுச்செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.



பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன! - நாளை பதவியேற்கிறார்
[Monday 2017-08-21 07:00]

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அட்மிரல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னர், நாளை பாதுகாப்பு அதிகாரிகளின் புதிய பிரதானியாக பதவியேற்க உள்ளார். பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, நாளை பாதுகாப்பு அதிகாரிகளின் புதிய பிரதானியாக ரவீந்திர விஜேகுணவர்தன பதவியேற்கவுள்ளார்.



மன்னாரின் எண்ணெய் வளத்துக்கு போட்டி போடும் நாடுகள்!
[Monday 2017-08-21 07:00]

மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். “மன்னார் கடல் படுக்கையில் உள்ள 13 துண்டங்களில், 8 துண்டங்களில் அகழ்வை மேற்கொள்வதற்கு, 8 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.இந்த விடயம் வெற்றியளித்தால் இலங்கைக்கு நன்மையாக அமையும்” எனவும் தெரிவித்துள்ளார்.



ரவி கருணாநாயக்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட வெளிநாடுகளில் உள்ள தூதுவர்களுக்கான கூட்டம் ரத்து!
[Monday 2017-08-21 07:00]

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களுக்காக கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவிருந்த கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதுவர்களுக்கு அறிவிக்கும் சுற்று நிரூபமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவிடம் இலங்கை அணி படுதோல்வி - தம்புள்ள மைதானத்தில் ரசிகர்கள் எதிர்ப்பு! Top News
[Monday 2017-08-21 07:00]

இலங்கை- இந்திய அணிகளுக்குஇடையில் தம்புள்ள மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்ததை அடுத்து, மைதானத்தின் முன்பாக ரசிகர்கள் குழப்பம் விளைவித்தனர். போட்டி நிறைவடைந்து வீரர்கள் வெளியேற முயற்சித்த போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.



வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல்வீடுகளை அமைக்கும் திட்டம்! - கூட்டமைப்பு வரவேற்கிறது
[Monday 2017-08-21 07:00]

வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக 50ஆயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்துள்ளதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



விஜயதாஸ ராஜபக்ச பதவி விலக வேண்டும்! - சரத் அமுனுகம
[Monday 2017-08-21 07:00]

அமைச்சரவைப் பொறுப்புக்களை மீறும் எந்த அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தொடர்பிலேயே அவரின் பெயரைக் குறிப்பிடாமல் சரத் அமுனுகம இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை வெளிமேடைஒன்றில் வைத்து விஜயதாஸ ராஜபக்ச விமர்சித்திருந்தார்.



அமைச்சர்களே அரசாங்கத்தை விமர்சிக்கும் வரலாறு வேறெங்கும் கிடையாது! - மகிந்த கிண்டல்
[Monday 2017-08-21 07:00]

உலகில் எந்தவொரு அரசாங்கத்தையும் அதன் அமைச்சர்களே விமர்சித்த வரலாறு கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் அண்ணாந்து பார்த்துக்கொண்டு தன் முகத்தில்தானே துப்பிக் கொள்கிறது. இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களே அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுக​ளையும் பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.உலகில் எந்தவொரு அரசாங்கத்தையும் அதன் அமைச்சர்களே விமர்சித்த வரலாறு கிடையாது.



வளர்த்த மாடு நெஞ்சில் பாய்ந்தது! - குடும்பஸ்தர் மரணம்
[Monday 2017-08-21 07:00]

வேலணை மேற்கு 5ஆம் வட்டாரத்தில், வளர்ப்பு மாடு நெஞ்சில் பாய்ந்ததில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். முனியாண்டி பொன்னையா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர், காளை மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மாட்டுக்குத் தண்ணீர் வைக்கச் சென்ற அவர் அதனை பிடித்துக் கட்டுவதற்கு முயன்றபோது, மாடு அவரைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயங்களுக்கு உள்ளான நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.



நாவற்குழியில் மூன்றரைக் கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Monday 2017-08-21 07:00]

சாவகச்சேரி - நாவற்குழி பகுதியில் வீடு ஒன்றில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ கஞ்சாவை, யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் இரவு மீட்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர், கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



உண்ணாவிரதத்தில் குதித்தனர் அரசியல் கைதிகள்!
[Sunday 2017-08-20 19:00]

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு எதிராக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கோரி இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் சுமார் 20 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அதனை துரிதப்படுத்துமாறு கோரியே இவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.



அவுஸ்ரேலிய தேர்தலில் சாவகச்சேரி இளைஞன் போட்டி! Top News
[Sunday 2017-08-20 19:00]

அவுஸ்ரேலிய தேர்தலில் பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் போட்டியிடவுள்ளார். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதிப் போர் காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்ரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பை நிறுவியுள்ளார்.



நல்லூர் திருவிழா சிறப்பு - அமெரிக்க தூதுவர் வியப்பு!
[Sunday 2017-08-20 19:00]

நல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியையும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் வியந்து போயுள்ளார். “யாழ். நல்லூர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிற்றர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



தேர்தல் வாக்குகளை நிறைவேற்றிய பின்னரே அடுத்த தேர்தல்! - கயந்த கருணாதிலக
[Sunday 2017-08-20 19:00]

நாம் கடந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் பூரணமாக நிறைவேற்றிய பின்னரே அடுத்த தேர்தலில் களமிறங்குவோம் என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ள, கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தயார்! - ரவூப் ஹக்கீம்
[Sunday 2017-08-20 19:00]

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.“ மாகாணசபை தேர்தலைப் பிற்போடுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் யாப்பு திருத்தப்பட வேண்டும். அந்த அறிவித்தல் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக சில சிவில் அமைப்புகள் வழக்குத்தாக்கல் செய்வதற்குத் தயாராகி விட்டன.



வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணி! Top News
[Sunday 2017-08-20 19:00]

முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. பொதுமக்களுடன் இணைந்து ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்த சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். விடுதலை போராட்டத்தில் தம் உயிர்களை தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் வித்துடல்கள் வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ளன.



தேரேறி வந்த நல்லைக் கந்தன் - இலட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள் Top News
[Sunday 2017-08-20 18:00]

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா இன்று இலட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த தேர்த் திருவிழாவில், உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.



ஆளத் தெரியாதவர்கள் கையில் ஆட்சி! - விஜயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு
[Sunday 2017-08-20 18:00]

ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியை கையில் எடுத்தால் நாடு சீரழியும் என்ற பழைய கருத்துக்கு அமைவாகவே இன்று ஆட்சி நடந்து வருகின்றது. அதற்கான தண்டனையை இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். எனவே, இந்த காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.



விஜேதாச பதவி விலக வேண்டும்! - சரத் பொன்சேகா
[Sunday 2017-08-20 18:00]

அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு சுயமரியாதை இருக்குமானால் அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையற்ற காரணத்தினால், அவர் நீதி அமைச்சு பதவியில் இருந்து வெளியேற வேண்டும். நீதி அமைச்சர் அந்த பதவியில் இருந்து வெளியேறுவதே சிறந்ததென அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.



தப்பியோடிய 5000 படையினர் கைது!
[Sunday 2017-08-20 18:00]

மீண்டும் பணிக்கு திரும்பாமல் இருந்த 4300 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 777 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன கூறினார்.


Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா