Untitled Document
August 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பனாமா ரகசிய ஆவண விவகாரம்: - பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
[Friday 2017-04-21 07:00]

பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனம் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின.அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனம் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின.அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

  

இது தொடர்பாக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்யை வெளியிட்டுள்ளது. அதில், நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை கூட்டு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் எனவும், புலனாய்வு குழு விசாரணைக்கு நவாஸ் ஷெரீப் அவரது இரண்டு மகன்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 60 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அடுத்த ஆண்டு அங்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்ப்பால் நவாஸ் ஷெரீப்புக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comஇன்று தென்கொரியா அமெரிக்கா கூட்டு போர் பயிற்சி: -வடகொரியா எச்சரிக்கை!
[Monday 2017-08-21 09:00]

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது.உலகக் கோப்பைக்குத் தயாராகும் கட்டார்: - தொப்பி வடிவில் அமைக்கப்பட்ட மைதானம்
[Monday 2017-08-21 07:00]

2022-ம் ஆண்டு, பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் கத்தாரில் நடக்க இருக்கிறது. தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கத்தார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இது ஒரு புறமிருக்க, 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கத்தார் நாடு தொடங்கியுள்ளது.அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல்: - சிங்கப்பூர் கடலில் 10 வீரர்கள் மாயம்
[Monday 2017-08-21 07:00]

அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.நைஜீரியாவில் காதலனை கத்தியால் குத்திக்கொன்ற பெண்!
[Monday 2017-08-21 07:00]

நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.நைஜீரியாவைச் சேர்ந்த இஸ்சு என்பவர் டெல்லியில் தனது காதலியுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அவர் காதலி அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார்.ஆறு லட்சம் ஆண்டுக்கு பிறகு வெடிக்க தயாராகும் சூப்பர் எரிமலை!
[Sunday 2017-08-20 17:00]

உலகின் 20 சூப்பர் எரிமலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று எல்லோஸ்டோன் கால்டெரா. இது அமெரிக்காவில் வியோமிங் பகுதியில் ஹைடன் பள்ளத்தாக்கில் எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் அமைத்துள்ளது.இந்த சூப்பர் எரிமலை 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். அப்போது வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு பூமிக்கும், சுற்றுச் சூழலுக்கும் கடும் பாதிப்பையும், மனிதர்களின் உடல் நலனுக்கு கேடுகளையும் விளைவிக்கும்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து கடைசி நகரத்தையும் மீட்க ஈராக் தீவிரம்!
[Sunday 2017-08-20 17:00]

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் டல் அஃபார் நகரை அவர்களிடமிருந்து மீட்க அந்நாட்டு ராணுவம் முயற்சியை மேற்கொண்டுள்ளது.ஈராக்கில் பல்வேறு இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொன்றாக ஈராக் ராணுவம் மீட்டு வருகிறது.இந்து கோவில் கட்டுமானப்பணியில் தவறி விழுந்து சிறுவன் பலி: - அமெரிக்காவில் சம்பவம்
[Sunday 2017-08-20 09:00]

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில், ஹேமில்டன் என்ற இடத்தில் சுவாமி நாராயண் மந்திர் என்ற இந்து கோவிலில் கட்டுமானப்பணி ஒன்று நடந்து வந்தது.இதில் தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கட்டுமானப்பணியில் உதவினர்.இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக் கணக்கானோர் பேரணி!
[Sunday 2017-08-20 09:00]

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார்.வடகொரியாவில் அரச கல்லறையை கண்டுப்பிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
[Sunday 2017-08-20 09:00]

வடகொரியாவில் Goryeo வம்ச காலத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வடகொரியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக Goryeo வம்சம், வடகொரியாவை ஆண்ட (918-1392) காலக்கட்டத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.சிறையில் இருக்கும் பெண்கள் கருத்தடை செய்து கொண்டால் விடுதலை!
[Sunday 2017-08-20 09:00]

அமெரிக்காவில் சிறையில் இருக்கும் பெண்கள் கருத்தடை செய்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டால் அவர்களின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு விடுதலை வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.டென்னசி மாகாணம் வைட் கவுண்டியை சேர்ந்த டியோனா டோலிசன் என்ற பெண் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.ஜிம்பாப்வேயில் மரத்தில் கட்டி வைத்து ஆசிரியையை பலாத்காரம் செய்த பிச்சைக்காரன்!
[Saturday 2017-08-19 18:00]

ஜிம்பாப்வே நாட்டில் ஹவாஞ் பகுதியை சேர்ந்தவன் பான்பேஸ் நியாம்பியா (32). பிச்சைக்காரனான இவன் அங்குள்ள ஒரு பஸ் நிலையத்தில் தங்கியிருந்தான்.அவன் பிச்சையெடுக்கும் பணத்தை பயன்படுத்தி விபசார அழகிகளிடம் உல்லாசமாக இருந்து வந்தான். சமபலத்தன்று ஒரு விபசார அழகியை உல்லாசத்துக்கு அழைத்தான். அதற்கு அவள் மறுத்துவிட்டாள்.குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை: - விஞ்ஞானிகள் சாதனை
[Saturday 2017-08-19 18:00]

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர்.சட்டையில்லாத ரஷ்ய ஜனாதிபதியின் புகைப்படங்கள்: - மக்களுக்கு தொற்றிய ஆர்வம்
[Saturday 2017-08-19 18:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரு மாதங்களுக்கு முன்னர் சட்டையில்லாத நிலையில் தனது விடுமுறையை ஜாலியாக கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அது வைரலானது.ரஷ்ய தொலைகாட்சியும் இதை வெளியிட்டது. நமது ஜனாதிபதி போலவே நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அந்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும், #PutinShirtlessChallenge என்ற டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.மனைவியுடன் உடலுறவு கொள்ள கணவனுக்கு தடை: - 10,000 பவுண்ட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
[Saturday 2017-08-19 17:00]

பிரித்தானிய நாட்டில் மனைவியுடன் உடலுறவுக்கொள்ள கணவனுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி இருவர் தொடர்பான முகவரி, பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.வடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தங்கள் ராணுவம் தயார்: - அமெரிக்கா
[Saturday 2017-08-19 07:00]

வடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தங்கள் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவை தாக்குவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால போர் பதற்றம் நிலவி வருகிறது.தாய்லாந்தில் சிறை வடிவில் அமைக்கபட்ட உணவு விடுதி!
[Saturday 2017-08-19 07:00]

தாய்லாந்தில் ஒரு உணவு விடுதியானது சிறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்கிச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சிறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு உணவு விடுதியானது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.சீனாவில் முதலாளி கொடுத்த தண்டனையால் உயிரிழந்த 14 வயது சிறுமி!
[Friday 2017-08-18 17:00]

சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 14 வயது சிறுமி அவரது முதலாளி கொடுத்த தண்டனையால் சுவாச செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.Wu(15) என்ற பள்ளி மாணவி தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்காக தனது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு நிறுவனம் ஒன்றில் பணிக்கு அமர்ந்துள்ளார்.பார்சிலோனாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம்!
[Friday 2017-08-18 16:00]

பார்சிலோனாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் நேற்று மாலை 5 மணியளவில் வாகனம் ஒன்று கூட்டத்தினர் மீது பாய்ந்துள்ளது.இத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.சுவிஸில் சர்ச்சையில் சிக்கிய ராணுவ அதிகாரி: - பதவியை இழக்கும் அபாயம்
[Friday 2017-08-18 16:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்திய வார்த்தைகளால் அவர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் கடந்த ஏப்ரல் மாதம் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.விரைவில் டிரம்ப் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வார்: - நண்பர் தகவல்
[Friday 2017-08-18 08:00]

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் தனது பதவியை சில வாரங்களில் ராஜினாமா செய்வார் என அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக டிரம்ப் The Art of the Deal என்ற புத்தகத்தை எழுதினார்.இந்த புத்தகத்தை எழுதுவதற்கு அவருடைய நெருங்கிய முன்னாள் நண்பரான Tony Schwartz என்பவர் உதவியுள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா