Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கான புதிய கிரகத்தை கண்டுபிடித்த ஐரோப்பிய விஞ்ஞானிகள்!
[Friday 2017-04-21 08:00]

பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக்க புதிய கிரகம் ஒன்றை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரத்தை இந்தக் கிரகம் சுற்றிவருவதாக ஐரோப்பிய வானியல் மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக்க புதிய கிரகம் ஒன்றை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரத்தை இந்தக் கிரகம் சுற்றிவருவதாக ஐரோப்பிய வானியல் மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  

எல்.எச்.எஸ். 1140பி. சூப்பர் எர்த் என இந்த புதிய கிரகத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிரகம் உருவாகி இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தக் கிரகம் பூமியை விட அதிக விட்டம் கொண்டது என்று கூறும் விஞ்ஞானிகள், 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதன் மீது வெளிச்சம் விழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.comவிலங்குகளுக்கு கணக்கு தெரியும்: - ஆய்வில் தகவல்
[Monday 2017-12-18 08:00]

கணக்கில் தீர்வு காணும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது, மற்ற விலங்குகளுக்கு இல்லை. ஆனாலும், சில விலங்குகளுக்கு ஓரளவு அடிப்படை கணக்கு திறன் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 1900ம் ஆண்டுகளில் பெர்லினைச் சேர்ந்த ஒருவர், தனது குதிரைக்கு நன்றாக கணக்கு தெரியும் என கூறி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கை கூறினால், தனது கால் குளம்பால் தட்டி சரியான விடை கூறும் என்றார். இது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த குதிரைக்கு கணக்கு திறன் இல்லை, முக மற்றும் உடல் பாவனைகளை கூர்ந்து கவனித்து சரியான விடையை தீர்மானிக்கிறது என கூறினர்.பிலிப்பைன்சை தாக்கிய கய்-தக் புயல்: - நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
[Monday 2017-12-18 08:00]

பிலிப்பைன்சில் கய்-தக் புயல் தாக்கியதால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலியாகினர். பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட புயல்கள் ஏற்படுகின்றன. சமர், லெய்ட் மாகாணங்களில் 2013ல் தாக்கிய ஹையான் புயலில் சிக்கி 7,350 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை இந்நாட்டில் கய்-தக் என்ற சூறாவளி தாக்கியது. இதனால், 39 நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள், மேம்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.இரு நூறு அடி உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை!
[Sunday 2017-12-17 09:00]

பிரான்சை சேர்ந்த கயிற்றில் நடக்கும் கலைஞர் நாதன் பாலின் புதிய சாதனை படைத்துள்ளார். அரிய நோய்களுக்கான மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இவர் 200 அடி உயரத்தில் கயிற்றில் நடந்து பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரபலமான ஈபிள் டவரில் இருந்து பாரீஸ் டிரோகாடிரோ சதுக்கம் வரை 670 மீட்டர் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்துள்ளார். நகரப்பகுதியில் அதிக தூரம் அந்தரத்தில் நடந்து சென்றதில் இதுவே உலக சாதனை.ஆசியாவின் மிக உயரமான மரக் கோயில் தீயினால் கருகியது!
[Sunday 2017-12-17 09:00]

சீனாவின் சிசுவான் மாகாணம் மியான்ஜூ நகரில் லிங்குயன் கோபுரம் எனப்படும் புத்த ஆலயம் அமைந்துள்ளது. முழுவதும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டிடம் 16 மாடிகளை கொண்டது. ஆசியாவின் மிக உயர மரக் கோயில் என்ற பெருமைக்கும் உரியது. இந்த கோயில் தற்போது தீ விபத்தில் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. தரை தளத்தில் பிடித்த தீ மளமளவென பரவி 4 மணி நேரத்தில் கோயில் முற்றிலும் உருக்குலைந்தது. 2010ல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிறகு இக்கோயிலை கடந்த 7 ஆண்டாக புனரமைத்து வந்தனர். தற்போது தீயில் முற்றிலும் அழிந்து விட்டது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஓராண்டில் மட்டும் 70 கோடி சம்பாதித்த 6 வயது சிறுவன்!
[Sunday 2017-12-17 09:00]

பொதுவாக சினிமாவிலோ, விளம்பர படத்திலோ நடிக்கும் சிறுவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும். ஆனால், ரியானின் பெற்றோர் கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்காங்க. ரியானுக்கு 3 வயது இருக்கும் போது, விளையாட்டு பொம்மைகளை கொடுத்து, அதன் தரம், பயன்பாடு குறித்து விமர்சனம் செய்ய வைத்து வீடியோ எடுத்துள்ளனர். அதை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தனர். ரியானின் விமர்சனம் செம ரீச்சாகி விட்டது. இப்போது ரியானுக்கு 6 வயது.ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்!
[Saturday 2017-12-16 18:00]

ஆஸ்திரேலியா நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக வாக்குரிமை பெற்ற பொதுமக்களிடையே நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 80 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 62 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.இங்கிலாந்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் குழந்தை பெற்றார்!
[Saturday 2017-12-16 18:00]

இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்தவர் கச்சி சுல்லிவான். இவர் பெண்ணாக பிறந்து வளர்ந்தவள். ஒரு ஆணுடன் இவருக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதையடுத்து ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் வாழ்ந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.குழந்தைகளுக்கு பாலியல் வன்செயல்களில் இருந்து பாதுகாப்பு இல்லை: - தேசிய துயரம் என பிரதமர் வருத்தம்
[Saturday 2017-12-16 18:00]

ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து 5 ஆண்டுகளாக அரசின் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.இந்த விசாரணையில், அங்குள்ள தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றில் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.2013-ம் ஆண்டில் இருந்து எழுந்த 2 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வந்தது.அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை: - கொள்ளையர்கள் அட்டூழியம்
[Saturday 2017-12-16 18:00]

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 58,491 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 14,763 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 29,888 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை காப்பகம் என்ற வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, சமீப காலங்களில் இந்தியர்களை குறிவைத்து அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத் துவக்கத்தில் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவரை அடையாளம் தெரியாத நபர் சுட்டதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல இந்தியாவை சேர்ந்த னிவாஸ் குச்சிபோட்லா என்ற சாப்ட்வேர் பொறியாளர் மற்றும் சிங் ஒருவரும் தனித்தனியாக துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார்கள்.இருபது லட்சம் டொலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை!
[Saturday 2017-12-16 18:00]

ரஷியாவில் நிதி மந்திரியாக இருந்த அலெக்சேய் உல்யுக்காயேவ்(61) மீது கடந்த ஆண்டு ஊழல் புகார் எழுந்தது. ரஷியா நாட்டு மைய அரசுக்கு சொந்தமான ரோஸ்னெப்ட் என்ற பெட்ரோலிய நிறுவனம், பஷ்கோர்ட்டோஸ்தான் குடியரசில் இயங்கிவரும் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 50 சதவீதம் பங்குகளை வாங்க தீர்மானித்தது. இந்த பங்குகளை வாங்குவது தொடர்பான சாதக - பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரஷிய நாட்டின் நிதித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது.வடகொரியா மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்த ஜப்பான்!
[Saturday 2017-12-16 09:00]

ஜப்பான், வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக, மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.சீனாவில் 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் தயாரித்து கின்னஸ் சாதனை!
[Friday 2017-12-15 19:00]

சீன சமையல் கலைஞர்கள், கையால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள உணவு நிறுவனத்தின் சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடுல்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அதன் மொத்த நீளம் 3 கி.மீ அல்லது 10 ஆயிரத்து 100 அடியாகும்.சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்ட புதிய கோள்: - நாசா தகவல்
[Friday 2017-12-15 11:00]

சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா அறிவித்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது.நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்: - இரண்டு பேர் பலி
[Friday 2017-12-15 11:00]

நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிச் நகரில் சில நிமிட இடைவேளையில் நடந்த இரண்டு கத்திக்குத்து தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் தெற்கு பகுதியில் இருக்கும் மாஸ்ட்ரிச் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு தாக்குதல்களுமே சில நிமிட இடைவேளையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விண்வெளி சுற்றுலா செல்ல அனைவருக்கும் வாய்ப்பு: - ரூ.1.60 கோடி இருந்தால் போதும்
[Friday 2017-12-15 08:00]

அடுத்த ஆண்டு முதல் அனைவரும் விண்வெளி சுற்றுலா செல்லும் வாய்ப்பை அமெரிக்க நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு ரூ.1.60 கோடி இருந்தால் போதும். விண்வெளி ஆராய்ச்சிதான் இதுவரை நடந்து வந்து இருக்கிறது. தற்போது முதன்முறையாக அனைவரையும் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. மேற்கு டெக்ஸாசில் உள்ள புளூ ஆர்ஜின் என்ற அந்த நிறுவனம் விண்வெளிக்கு பொதுமக்களும் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு கேப்சூல் வகை விண்கலத்தை தயார் செய்து வந்தனர். அதை கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளனர்.பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அணிதிரண்ட எம்.பி.க்கள்!
[Friday 2017-12-15 08:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரம் தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா?
[Thursday 2017-12-14 14:00]

“இன்னைக்கு இருக்கற பொருளாதார சூழல்ல செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் ஒரு மனுஷன் போக முடியுமா?” என்று போதையில் நம் மயில்சாமி கேட்ட கேள்வியை இன்று அமெரிக்காவில் நாசாவைப் பார்த்து பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாக டொனால்ட் ட்ரம்ப்பும், “ஃபர்ஸ்ட் நிலா, அப்பறம் செவ்வாய்!” என்று நாசாவுக்கு புது ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார். “இதுக்கெல்லாம் எங்க பாஸ் நிதி? வழக்கம் போல எக்ஸ்ட்ரா டேக்ஸ் தானா?” என்று மக்களும் பீதியில் உள்ளனர்.சோமாலியாவில் பொலீஸ் அக்கடமி மீது தற்கொலைப்படை தாக்குதல்: - 13 பேர் பலி
[Thursday 2017-12-14 14:00]

ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரில் உள்ள போலீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் போலீஸ் அகாடமி உள்ளது. இந்நிலையில், இன்று உடலில் குண்டுகளை கட்டி எடுத்து வந்த தீவிரவாதிகள் அகாடமியின் உள்ளே நுழைந்து வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Thursday 2017-12-14 14:00]

ஃபிலிப்பைன்ஸில் 30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.நாய்களுக்கான கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக 40 நாய்கள் காற்றோட்டமில்லாத வேன் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. கண்காட்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும், வேனின் கதவுகள் திறக்கப்பட்டபோது அதில் 30 நாய்கள் உயிரிழந்தவிட்டதைக் கண்டு அங்கிருந்து நாய்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.திருமணமாகாத ஆண்களே தனிமையில் இருப்பதாக உணர்கிறார்கள்: - ஆய்வில் தகவல்
[Thursday 2017-12-14 14:00]

தனியாக உள்ள பெண்களை விட தனியாக உள்ள ஆண், தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஐசிஎம் என்ற அமைப்பு உணர்ச்சி மற்றும் உறவு என்பது தொடர்பாக 4054 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் திருமணமாகாதவர்களின் சுதந்திரம், பொழுதுபோக்குக்கு கிடைக்கும் நேரம், உடல் தொடர்பு ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் திருமணமாகாத 1,418 பேரும் பங்கேற்றனர்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா