Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நீதிமன்றில் காவி உடையுடன் முன்னிலைப்படுத்தப்பட்ட முருகன்!
[Friday 2017-04-21 16:00]

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் காவி உடையுடன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.அண்மையில் முருகனிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டன. இது குறித்த வழக்கு விசாரணை நேற்று வேலூர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் காவி உடையுடன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.அண்மையில் முருகனிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டன. இது குறித்த வழக்கு விசாரணை நேற்று வேலூர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

  

இதன் போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட முருகன் நீதிபதியுடன் மாத்திரம் ஓரிரு வார்த்தைகளை பேசியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

  
   Bookmark and Share Seithy.comபாஜகவின் பினாமி அரசு அதிமுக அரசு: - ராமதாஸ் பேட்டி
[Friday 2017-06-23 18:00]

கடந்த 2011- ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டார். அவரை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ தி.வேல்முருகன், முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, திரைப்பட நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுவிக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் பதில்:
[Friday 2017-06-23 18:00]

ராஜுவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜுவ் படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனு உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களது விடுதலை குறித்து சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார்.பசியை ஒழிக்கப் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவுக்கு இங்கிலாந்து ராணி விருது:
[Friday 2017-06-23 18:00]

பசியை ஒழிக்கப் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவுக்கு இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ‘இளம் தலைவர்’ விருதை அளிக்க உள்ளார். லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் இந்த விருது விழா, 29-ம் தேதி நடைபெற உள்ளது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அங்கித் கவத்ரா, கடந்த 2014-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு ‘ஃபீடிங் இந்தியா’என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் வீடுகள், ஓட்டல்கள், கேன்டீன்கள் மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவைப் பெற்று, அதை பசியால் வாடுபவர்களுக்கும், உணவு தேவைப்படும் இடங்களுக்கும் விநியோகித்து வருகிறார்.ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு - நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவு:
[Friday 2017-06-23 18:00]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை,‌ காவல் துறையி‌னர் வி‌சாரிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது. ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22 ஆம் தேதி செல்வ விநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டார். அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிக‌லா, மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முத‌லமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் எ‌ன அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.கருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி
[Thursday 2017-06-22 09:00]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்கவில்லை என்றால் கருணைக் கொலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ராபர்ட் பயாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.ராஜூவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் 25 ஆண்டுகளை கழித்துள்ளதால், தங்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விவசாயிகளை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது அரசு
[Thursday 2017-06-22 09:00]

துன்பத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யாமல், அவர்களை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது மத்திய அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகள் துன்பத்தில் இருக்கிறார்கள். போராட்டம் மூலம் தங்களது நிலையை உணர்த்த முயற்சிக்கும் அவர்களை மத்திய அரசு அடக்குகிறது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் தீவிரவாதிகளைப் போல் நடத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.துப்பாக்கிச் சண்டை: லஷ்கர் தீவிரவாதிகள் பலி
[Thursday 2017-06-22 09:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காக்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் லக்ஷர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த மஸ்ஜித் மிர், ஷரிக் அஹமத், மற்றும் இர்ஷாத் அஹமத் என்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.‘சவாசனம்’ செய்த விவசாயிகள்
[Wednesday 2017-06-21 14:00]

மத்தியப் பிரதேசம், போபாலில் பாரதீய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ‘சவாசனம்’ செய்து விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். நாடு முழுவதும் யோகா தினக் கொண்டாட்டங்களும், யோகா விழிப்புணர்வுப் பேரணிகள் நடந்துகொண்டிருக்கும் இதே வேளையில், பாரதீய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ‘சவாசனம்’ (இறந்த உடலைப் போல் கிடப்பது) செய்து, மத்தியப் பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.முதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி
[Wednesday 2017-06-21 08:00]

சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்ற காரில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்தது. முதலமைச்சரின் காரிலேயே தேசியக்கொடி தலைகீழாகப் பறந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவினை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.லிப்ட் கொடுப்பது போல் நூதன முறையில் கொள்ளை
[Wednesday 2017-06-21 08:00]

வாலிபர்களை மயக்கி நூதன முறையில் நகைகளை கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி வாலிபர்களிடமும், பணம் வைத்திருப்பவர்களிடமும் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.ஹோண்டா ஆக்டிவா வண்டியில் காட்டன் சாரி, ஜீன்ஸ்பேன்ட், சுடிதார், கூலிங்கிளாஸ் என மாடர்னாக வலம் வரும் ஆஷா சவுந்தர்யா என்ற பெண், வாலிபர்கள், முதியவர்களுக்கு லிப்ட் கொடுப்பது போல் நடித்து அவர்களை தனது வண்டியில் ஏற்றி நெருக்கமாக அமர வைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.பாஜக வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு
[Wednesday 2017-06-21 08:00]

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதன்மூலம் பாஜகவின் வேட்பாளர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவித சிரமும் இருக்காது என்று கூறிய அவர், ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தன்னிடம் கோரியதாகவும் தெரிவித்தார்.வேலை வாங்கி தருவதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஃபேஸ்புக் நண்பர்
[Wednesday 2017-06-21 08:00]

டெல்லி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி, ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.தென் கிழக்கு டெல்லியில் வசித்து வரும் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நண்பர் வேலை வாங்கி தருவாகக் கூறி அந்த பெண்ணை அங்குள்ள 5 நட்சத்திர விடுதிக்கு வரவழைத்துள்ளார். இதை நம்பி வேலைக்காக அங்கு சென்ற பெண்ணிற்கு அவர், குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். பின்னர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா
[Wednesday 2017-06-21 08:00]

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உ.பி.யில் மோடி தலைமையில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகா பயற்சியை மேற்கொண்டனர்.சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று பிரம்மாண்ட யோகா பயிற்சி நடைபெறுகிறதுமத்திய அரசின் காலில் விழுந்து லாலி பாடும் நிலை..! குதிரை பேர ஆட்சி நடக்கிறது: - மு.க.ஸ்டாலின் பேட்டி
[Tuesday 2017-06-20 22:00]

தமிழக சட்டப்பேரவையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்தை எதிர்த்து தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கைக்கு, உரிய பதில் அளிக்காத காரணத்தினால், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.ஒரு லட்சம் பிளாஸ்டிக் குண்டுகளை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பிய மத்திய அரசு!
[Tuesday 2017-06-20 18:00]

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், பெல்லட் குண்டுகளை விட ஆபத்து குறைவான பிளாஸ்டிக் குண்டுகளையும், மிளகாயில் இருந்து எடுக்கப்படும் வேதிப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் PAVA குண்டுகளையும் காஷ்மீர் போராளிகள் மீது பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.டெல்லியில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த நிகழ்வு:
[Tuesday 2017-06-20 18:00]

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருள்ள குழந்தையை இறந்துவிட்டதாக கூறி திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பதார்பூரைச் சேர்ந்தவர் ரோஹித் குமார் (33). தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சாந்தி தேவி(28). கர்ப்பமாக இருந்த சாந்தி தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அரசு நடத்தும் சஃப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 24 வாரத்தில் பிறந்ததால் 460 கிராம் எடை மட்டுமே இருந்துள்ளது.மாணவர் சேர்க்கை முறைகேடு சிபிஐ விசாரணை: கிரண் பேடி உத்தரவு
[Tuesday 2017-06-20 09:00]

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வாட்ஸ்அப் மூலம் பதிலளித்துள்ள கிரண் பேடி சுதந்திரமான உடனடி விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொணரமுடியும் என தெரிவித்துள்ளார். அரசியல், நிர்வாக மற்றும் மேலாண்மையின் ஒட்டுமொத்த தோல்விதான் இந்த முறைகேடுகளுக்கு காரணம் என கூறியுள்ள கிரண் பேடி, பெற்றோரும், தகுதிவாய்ந்த மாணவர்களும் இதில் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கிரண் பேடி அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.’இறந்து’ போனவரிடம் விசாரணை நடத்திய போலீஸ்!
[Tuesday 2017-06-20 09:00]

ஆக்ராவைச் சேர்ந்தவர் குஷ் சாராஸ்யா. ஞாயிற்றுக்கிழமை அன்று இவரை பாம்பு கடித்துவிட்டது. அங்குள்ள எஸ்.என். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் குஷ் சாவ்ராஸ்யா வீட்டுக்கு நேற்று ஒரு போலீஸ்காரர் வந்தார். வாங்க என்று வரவேற்ற குஷ்சின் மனைவி ரிச்சா, போலீஸ்காரருக்கு டீ கொடுத்தார். பிறகு முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்ட போலீஸ்காரார், ‘மனசை திடப்படுத்திக்குங்கம்மா. உங்க கணவர் இறந்துட்டாரு. அவரை பற்றிய டீட்டெய்ல் வேணும்’ என்றார். ரிச்சாவுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் அவர் கணவர் வீட்டுக்குள்தான் இருந்தார்.திருமாவளவன் சீமானை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமாம்: - எச். ராஜா வலியுறுத்தல்
[Monday 2017-06-19 18:00]

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டிற்கு மாடுகள் வளர்ப்பது அதனை கொன்று தின்பதற்குதான் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறி உள்ளார். எனவே அவரை உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் கைது செய்ய வேண்டும்.முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை அவரே எப்படி விசாரிப்பார்: - மு.க.ஸ்டாலின்
[Monday 2017-06-19 17:00]

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியது. முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 18-ம் தேதியே தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் திமுகவினர் மீது 12 வழக்குகள் உள்ளன என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கடிதம் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும் முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா