Untitled Document
April 27, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சியில் கர்ப்பிணிப் பெண் மயங்கி விழுந்து மரணம்!
[Friday 2017-04-21 18:00]

கிளிநொச்சி- குமாரசாமிபுரம் பகுதியில், சமுர்த்திக் கூட்டத்துக்குச் சென்ற மூன்று பிள்ளைகளின் தாயான கர்ப்பிணி பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். நேற்று மாலை 4.15 மணியளவில் மயக்கமடைந்த அவரை, உறவினர்களும் அயலவர்களும் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்ற போதிலும் தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவரது உயிரிழந்து விட்டார்.

கிளிநொச்சி- குமாரசாமிபுரம் பகுதியில், சமுர்த்திக் கூட்டத்துக்குச் சென்ற மூன்று பிள்ளைகளின் தாயான கர்ப்பிணி பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். நேற்று மாலை 4.15 மணியளவில் மயக்கமடைந்த அவரை, உறவினர்களும் அயலவர்களும் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்ற போதிலும் தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவரது உயிரிழந்து விட்டார்.

  

குறித்த பெண் கர்ப்பமாக இருந்தமையால், விசேட வைத்திய நிபுணரின் பிரேத பரிசோதனைக்காக சடலம், அநுராதபுர வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான போக்குவரவுச் செலவுகளை சுகாதாரத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comவடக்கு கிழக்கில் தொடங்கியது ஹர்த்தால் - முடங்கியது இயல்பு நிலை! Top News
[Thursday 2017-04-27 07:00]

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும் ஆதரவளித்துள்ளன.தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டித் தீர்வே பொருத்தமானது! - ராஜித சேனாரத்ன
[Thursday 2017-04-27 07:00]

தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இலங்கைக்குப் பொருத்தமானது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, 'தந்தை செல்வா நினைவுப் பேருரை' நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைக்குமா? - இன்று தெரியும்
[Thursday 2017-04-27 07:00]

ஜீ.எஸ்.பி. பிளஸ் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச்சலுகை வசதியினை மீளவும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக தீர்மானம் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்தச் சலுகையை எப்படியாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இறுதிக்கட்ட பேச்சுக்களில் அரசின் சார்பில் அதன் பிரதிவெளிநாட்டமைச்சர் ஹர்ஷ டீ சில்வா ஈடுபட்டுள்ளார்.இலங்கையில் எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடமாட்டாராம் மோடி!
[Thursday 2017-04-27 07:00]

ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர ​மோடி, ஒப்பந்தம் எதிலும் கைச்சாத்திடமாட்டார். அதற்கு அவருக்கு நேரமும் இல்லை என, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.பாதுகாப்பு செயலாளர் பதவியிலும் வருகிறது மாற்றம்?
[Thursday 2017-04-27 07:00]

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு பிரிவில் உயர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய ஒருவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கான ஆலோசனை இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்! - ரணிலிடம் வலியுறுத்திய மோடி
[Thursday 2017-04-27 07:00]

தமிழக மீனவர்கள் விடயத்தில் இலங்கை கடற்படை மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போதே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.தந்தை செல்வா நினைவு தின பரிசளிப்பு விழா! Top News
[Thursday 2017-04-27 07:00]

தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தின பரிசளிப்பு விழா அவரது புதல்வரான செ.சந்திரகாசன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம்!
[Thursday 2017-04-27 07:00]

சர்வதேச சட்டங்களுக்கு அமைய திருத்தப்பட்ட இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கீகாரமளித்துள்ளது என, அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தீர்மானங்களை அறிவிக்கும், ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, அவர் இதனைக் கூறினார்.வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்! Top News
[Thursday 2017-04-27 07:00]

வவுனியா வேப்பங்குளத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.நாளை வடக்கு,கிழக்கு முற்றாகச் செயலிழக்கும் ! - முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைத்து தரப்பும் ஆதரவு
[Wednesday 2017-04-26 18:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாக, நாளை வடக்கு கிழக்கு எங்கு முழுமையான கடையமைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அரசாங்கம் எந்த தீர்வையும் தராததால், நாளை முழுமையான கடையடைப்பு போராட்டத்தை நடத்தி சர்வதேச கவனத்தை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.தந்தை செல்வாவுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Wednesday 2017-04-26 18:00]

தந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் யாழ். பொதுநூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இன்று நினைவு கூரப்பட்டது.

 இன்று காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தந்தை செல்வநாயகத்தின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தந்தை செல்வநாயகத்தின் நினைவிடத்தில் மலர் அஞ்சலியை செலுத்தினர்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் ரணில்! - உடன்பாடும் கைச்சாத்து Top News
[Wednesday 2017-04-26 18:00]

ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடினார். ஹைதராபாத் இல்லத்தில் இன்று மதியம் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழர் தாயகத்தில் நாளை பூரண ஹர்த்தால் : தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தார்மீக ஆதரவு.
[Wednesday 2017-04-26 18:00]

நாளைய தினம் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம் பெற இருக்கும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை தார்மீக ஆதரவை வழங்குவதுடன் அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்குமாறும் பகிங்க அழைப்பையும் விடுகின்றது.
*காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான போராட்டம்.
*சொந்த நிலத்தை மீட்பதற்கானபோராட்டம்.
*அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்
எமது இனத்தின் விடியலுக்காய் எம் தாயக மண்ணில் கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத இழப்புக்கள் ஏராளம்.குறிப்பாக எண்ணிலடங்கா உயிர்களை எம் மண்ணின் விடிவுக்காகவும்,இனத்தின் உரிமைக்காகவும் விதைத்துள்ளோம்.படைகளுக்கு மீண்டும் தலைமையேற்கிறார் சரத் பொன்சேகா! - அமைச்சரவையில் முடிவு
[Wednesday 2017-04-26 18:00]

அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிகாரங்களுடன் கூடிய உயர் இராணுவ பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்திருப்பதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பிரித்தானிய தூதுவருடன் சம்பந்தன் பேச்சு! Top News
[Wednesday 2017-04-26 17:00]

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொரீஸுடன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று பேச்சு நடத்தினார். எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.வடக்கில் நான்கு இடங்களில் தொடர்கிறது போராட்டம்!
[Wednesday 2017-04-26 17:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 66ஆவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்ந்து வருகின்றது. அத்துடன் திருகோணமலை, முல்லைத்தீவு, மருதங்கேணி, வவுனியா ஆகிய இடங்களிலும் தொடர்போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.புதுக்குடியிருப்பு, கைவேலி 'சுயம்' அமைப்பினருக்கு புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் உதவி Top News
[Wednesday 2017-04-26 17:00]

புலம் பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர், புதுக்குடியிருப்பு, கைவேலி கிராமத்தில் அமைந்துள்ள 'சுயம்' என அழைக்கப்படும், வறிய நிலையில் உள்ள பெண்களினால் ஒன்றிணைந்து நடாத்தப்படும் உணவுப் பொருட்கள் உற்பத்தி நிலையத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்காக ரூபா 25000/- நிதியுதவியினை வழங்கியுள்ளனர்.கோத்தாவைக் கண்டு அஞ்சினார் மஹிந்த! அமைச்சர் ராஜித
[Wednesday 2017-04-26 17:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு பயந்து கொண்டே செயற்பட்டார். இதற்கு என்னிடம் சிறந்த உதாரணம் உள்ளது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பளையில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Wednesday 2017-04-26 17:00]

பளையில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியதுடன், எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் விசேட அமர்வுக்கு ஜனாதிபதி உத்தரவு!
[Wednesday 2017-04-26 17:00]

குப்பைகளை அகற்றுதலை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில், எதிர்வரும் 28ம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வொன்றை கூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டு, வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்ற அமர்வுகள் ஒத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா