Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு பேச்சுவார்த்தை தோல்வி!
[Friday 2017-04-21 18:00]

பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்டக் கலந்துரையாடல்,  யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று  இடம்பெற்றது.

பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

  

கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்த 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதனால் அவற்றை விடுவிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமா, இல்லையா, விஸ்தரிக்கப்படுமானால் அதற்கு எவ்வளவு காணிகள் தேவைப்படும் என்பது தொடர்பில் உயர் மட்டத்துடன் கலந்துரையாடி முடிவுகள் மேற்கொள்ளப்படும். விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமானால் தனியார் காணிகளைச் சுவீகரிக்க கூடிய சூழல் உள்ளது. இது தொடர்பான தரவுகள், விவரங்கள் தற்போதும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனை வைத்துக்கொண்டு மக்களுடனும் கலந்தாலோசித்து இது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வோம். அதன்படி நாங்கள் எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் படைத்தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

இராணுவத்தினரிடம் இருக்கின்ற பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. சில இடங்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். தனியார் காணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அவை முடிவடையவில்லை. அது குறித்து இராணுவத்தினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், தனியார் காணிகளை விடுத்து, அரச காணிகளின் பாதுகாப்பு கருதி இடங்கள் தேவைப்படின் அவைகளை இராணுவத்தினரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

காணிகள் குறித்த விவரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள். பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஏனைய விடயங்களை கையாள முடியும்.

2009 போர் முடிவடைந்த பின்னர் 27 ஆயிரம் ஏக்கர் காணி படையினர் வசம் இருந்ததாகவும், தற்போது 4 ஆயிரத்து 700 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர். வலி. வடக்கு பிரதேசத்தினைச் சூழ்ந்த பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் ஆரம்பத்தில் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய 2 பேர் இணைந்து உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்த போது, ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றயவரின் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜாவின் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகின்றது. அதில் படிப்படியாக சில இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு இவை அனைத்து காணிகளும் மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு கையளிக்கப்பட வேண்டுமென்ற இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது. அதற்கான படிமுறைகளை வகுத்திருந்தும் கூட 10 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மிகக்குறைவானவை.

மீள்குடியேற்றம், அல்லது சுமூக நிலை வருகின்ற போது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ வேண்டுமென்பது எமது அடிப்படை கோரிக்கை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பால சிறிசேன இருந்த போது தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதி அளித்திருந்தார். ஆகவே ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். தனியார் காணிகளை விடுவித்து, தமது இடங்களை மாற்றி அமைத்தும் உண்மையிலே பாதுகாப்புக்கு தேவையான இடங்களுக்கு சென்ற பின்னரும், அதிகளவான காணிகள் பாதுகாப்புத் தரப்பினரிடம் இருக்குமாக இருந்தால், அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சிந்திக்க முடியும். மாவட்ட ரீதியாக நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னர், அரசியல் தலைவர்களுடன், அமைச்சர்களுடனும் நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடல் தான், மிக முக்கியமாக இருக்கும். அவை தான் காணி விடுவிப்பு குறித்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடலாக இருக்கும்" என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



இரணைதீவு மக்களின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது! - மக்களை அச்சுறுத்திய பொலிஸ் Top News
[Friday 2017-06-23 18:00]

இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், ஏ-32 வீதியை மறித்து இன்று காலை முதல் மேற்கொண்டு வந்த போராட்டம், பூநகரி பிரதேச செயலர் எஸ்.கிருஸ்ணேந்திரனின் கோரிக்கையை அடுத்து கைவிடப்பட்டது.இதேவேளை, இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் வழமைபோன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



முதல்வருக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களுக்கே அமைச்சர் பதவி?
[Friday 2017-06-23 18:00]

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக கையெ­ழுத்­திட்­ட­வர்­க­ளில் குறிப்­பிட்ட சில­ரி­டம் மாத்­தி­ரமே, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், சுய­வி­வ­ரக் கோவை­யைக் கோரி­யுள்­ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



முப்படை 'நாய்கள்' பற்றிய தகவல்களை வெளியிட முடியாது! - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
[Friday 2017-06-23 18:00]

முப்படைகளிலும் கடமை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படும் நாய்கள் தொடர்பிலான தகவலை வழங்கமுடியாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது! Top News
[Friday 2017-06-23 18:00]

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று நண்பகல் நாகர்கோவில் பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாண நீரியல் வளத்திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல்மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - சிவசக்தி ஆனந்தன் விளக்கம்
[Friday 2017-06-23 18:00]

வடக்கு மாகாணசபை விவகாரம் ஒரு வழியாக முடிவிற்கு வந்ததன் பின்னர், கடந்த 22.06.2017 அன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாணசபை குழப்பம் தொடர்பாகவும் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார்.



விக்னேஸ்வரனுக்கு சிறிதரன் எழுதியதாக வெளியான போலிக் கடிதம்!
[Friday 2017-06-23 18:00]

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எழுதியுள்ள கடிதம் என்று ஊடகங்களில் வெளியானது, போலிக் கடிதம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் எழுதியது போன்று சில இணைய ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.



வெளிநாட்டில் உள்ள மகன் பற்றிய தகவல்களைக் கேட்டு நவாலியில் தந்தை மீது தாக்குதல்!
[Friday 2017-06-23 18:00]

நவாலி மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த வயோதிபர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்தநிலையில் தமக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக குறித்த வீட்டார், யாழ்.மனித உரிமைகள் ஆணைகுழுவில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.



13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும்! - பேராயர் மல்கம் ரஞ்சித்
[Friday 2017-06-23 18:00]

13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். யாழ் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.



கற்பிட்டியில் கரையொதுங்கிய கடற்பன்றி! Top News
[Friday 2017-06-23 18:00]

கற்பிட்டி கடற்கரையில் பாரிய கடல் பன்றியின் உடல் ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த கடல் பன்றி கிட்டத்தட்ட 10 அடி நீளமானதாகும். கடல் பன்றிகள் ஆபத்தான பாலூட்டிகள் என கடற்படை உதவி இயக்குநர் ஏ. ஏ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடல் பன்றின் உடல் கற்பிட்டி வனவிலங்கு அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.



முழங்காவிலில் சிறுவனை மோதி விட்டுத் தப்பிய கார்ச் சாரதி கைது! Top News
[Friday 2017-06-23 18:00]

கிளிநொச்சி-முழங்காவில் பகுதியில் சிறுனை மோதிக்காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கார்ச் சாரதி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். முழங்காவில் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த போது கார் மோதி சிறுவனொருவன் விபத்திற்கு உள்ளாகியிருந்தார். முழங்காவில் - நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற 11 வயது சிறுவனே கடந்த 17ஆம் திகதி இந்த விபத்தில் சிக்கியிருந்தார்.



தெரி­வுக்குழு விசா­ர­ணைக்கு முகம் கொடுக்­கத் தயா­ர்! - டெனீஸ்வரன்
[Friday 2017-06-23 18:00]

சுயா­தீ­ன­மான – சட்­ட­வ­லு­வுள்ள– மாகாணசபை உறுப்பினர்­களை உள்­ள­டக்­கிய தெரி­வுக் குழு விசா­ர­ணைக்கே முகம்கொடுக்­கத் தயா­ரா­க­வுள்­ளேன். இதனை உள்­ள­டக்கி விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்­ட­தும் எனது விடுப்­புக் கடி­தத்தை, தேவை ஏற்­ப­டின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கும் வகை­யில் பதவி வில­கல் கடி­தத்­தைக்­கூட கொடுப்­ப­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்­றேன் இவ்­வாறு வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.



மன்னாரில் மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! - கைது செய்ய நடவடிக்கை
[Friday 2017-06-23 18:00]

மன்னாரில் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், குறித்த சம்பவத்தை நேரில் கண்டு உரிய அதிகாரிகளிடம் தெரிவித்த அதே பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



பூநகரி - மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர் இரணைதீவு மக்கள்! Top News
[Friday 2017-06-23 09:00]

கடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்த, மக்களுக்கான பதிலை அரசாங்கம் வழங்காத நிலையில், இன்று அப்பகுதிமக்கள் பூநகரி -மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இலங்கையின் முதல் பெண் நீதிபதி சிவகாமசுந்தரி காலமானார்!
[Friday 2017-06-23 09:00]

இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி, 81 ஆவது வயதில் நேற்று நியூசிலாந்தில் காலமானார். புலோலி மேற்கைப் பிறப்பிடமாக கொண்ட இவர் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி கல்வி கற்று சட்டத்துறைக்குள் பிரவேசித்து 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கறிஞர் ஆனார்.



இலங்கைத் தமிழருக்கு ஆயுள்தண்டனை விதித்த கனடிய நீதிமன்றம்!
[Friday 2017-06-23 09:00]

கனடாவில் அயல்வீட்டுக் காரரை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் நடைபெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் 10 வருட சிறைத்தண்டனையின் பின்னர் வெளியேற முடியும்.



அமைச்சர் தயாசிறியை குரங்கு என விமர்சித்த மலிங்கவுக்கு எதிரான விசாரணை!
[Friday 2017-06-23 09:00]

விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை குரங்கு என விமர்சித்த, கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க மீது விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.



அவைத் தலைவர் சீ.வி.கே.யைச் சாடுகிறார் கஜேந்திரகுமார்!
[Friday 2017-06-23 07:00]

சீ.வி.கே. சிவஞானம் நேர்மையில்லாத, படுமோசமான சந்தர்ப்பவாதி என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். ' ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்தவர் அவர். தமிழரசுக் கட்சியில் போட்டியிட இடம் வழங்காத போது தமிழ்க் காங்கிரசின் காலில் விழுந்து ஆசனம் வழங்குமாறு கோரியிருந்தார்.



பல்கலைக்கழக மாணவர்களா? பயங்கரவாதிகளா? - மஹிந்தவின் கேள்வி
[Friday 2017-06-23 07:00]

பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்து கொண்டனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மஹாவலி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 'கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்த பொருத்தமான தனியிடமொன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.



தேசிய அரசியலில் நீடிப்பதா? - 3 மாதங்களில் முடிவு என்கிறார் டிலான்
[Friday 2017-06-23 07:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது. ஏனெனில் குறித்த காலப்பகுதியில் இடம்பெறும் விடயங்களை அடிப்படையாக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்பட்ட வகையில் தனக்கு திருப்தியில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.



குமார் குணரட்ணத்துக்கு வழங்கப்பட்டது இலங்கை குடியுரிமை!
[Friday 2017-06-23 07:00]

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்துக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்கு இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உட்துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் அமைச்சின் செயலாளர்களது கையொப்பங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா