Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் மரணம்: - அதிர்ச்சி சம்பவம்
[Friday 2017-05-19 08:00]

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 10-ம் திகதி ஈக்வேடார் நாட்டிலிருந்து வந்த இந்தியர் அதுல் குமார் பாகுபாய் படேல் (58) உரிய ஆவணங்களை தன்னுடன் கொண்டு வராததால், அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் அவரை அந்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 10-ம் திகதி ஈக்வேடார் நாட்டிலிருந்து வந்த இந்தியர் அதுல் குமார் பாகுபாய் படேல் (58) உரிய ஆவணங்களை தன்னுடன் கொண்டு வராததால், அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் அவரை அந்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

  

விமான நிலையத்தில் தங்கியிருந்த படேலிடம் கடந்த இரு நாட்களாக அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் அவரின் உடல்நிலை மோசமாகவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இதயம் செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி படேல் உயிரிழந்தார்.அவரது மரணத்தை முறைப்படி அமெரிக்க குடியுரிமை துறை இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.இந்த நிதிஆண்டில் மட்டும் படேலுடன் சேர்த்து 8 பேர் அந்நாட்டு குடியுரிமை விசாரணையின் போது மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comவெனிசுலாவில் அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு: - கலவரம் ஏற்படும் அபாயம்
[Friday 2017-07-28 12:00]

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா நாட்டில் அரசியல் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நாட்டின் அதிபர் மடுரோவாவுக்கு எதிராக கடந்த 4 மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு அதிபர் ராணுவத்தையும், போலீசாரையும் ஏவி வருகிறார்.குழந்தையை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய்: - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
[Friday 2017-07-28 09:00]

குழந்தையை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Paul Hogan. இவர் மனைவி Cody-Anne Jackson (20) இவர்களுக்கு Macey Hogan (2) என்ற பெண் குழந்தை உள்ளது.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக Paul அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் Maceyயின் புகைப்படத்தை Paul-க்கு Jackson அனுப்பியுள்ளார்.முதலிடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய உலகின் பணக்கார நபர் யார் தெரியுமா?
[Friday 2017-07-28 07:00]

ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் உலகின் பணக்கார நபர்களின் பட்டியல், உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல், உலகின் பணக்கார குடும்பங்கள் போன்ற பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் உள்ளார். பெஜோஸ்-க்கு அமேசான் நிறுவனத்தில் 17 சதவீதம் பங்குகள் உள்ளது.பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும்: - அதிபர் விளாதிமிர் புதின்
[Friday 2017-07-28 07:00]

பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.உலகின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பல் இதுதான்!
[Friday 2017-07-28 07:00]

ரஷ்ய கடற்படை தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெறவுள்ள பயிற்சியில் பங்கேற்க உலகின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பலான The Dmitry Donskoy செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்துள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பல், 120 நாள்கள் மேற்பரப்புக்கு வராமல் நீருக்குள்ளேயே இருக்கும் திறன் படைத்தது.புற்று நோயை குணப்படுத்தும் மஞ்சள்: - புதிய ஆய்வில் தகவல்
[Thursday 2017-07-27 18:00]

நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்று நோயாக மாறுகிறது.50 வயதுக்கு பிறகு பெண்கள் செக்ஸ்சில் ஈடுபடுவது அவசியம்: - ஐரோப்பிய நீதிமன்றம்
[Thursday 2017-07-27 18:00]

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் மரியா ஜிவோன் கார்வல்கோ மொராய்ஸ் (72). 1995-ம் ஆண்டு 50-வது வயதில் அவரது பிறப்பு உறுப்பில் ஆபரேசன் நடந்தது.அப்போது நடந்த தவறான ஆபரேசனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரால் ‘செக்ஸ்’சில் ஈடுபட முடியவில்லை. அதை தொடர்ந்து அவர் தனக்கு நடந்த தவறான ஆபரேசன் குறித்து போர்ச்சுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அப்படி ஆசையிருந்தால் நரக வாழ்க்கை காத்திருக்கிறது: -எச்சரிக்கும் இஸ்லாமிய பெண்
[Thursday 2017-07-27 17:00]

ஐஎஸ் அமைப்பில் இணையவேண்டும் என்ற ஆசையில் வருகிறவர்களுக்கு நரக வாழ்க்கைதான் காத்திருக்கிறது என இஸ்லாமிய பெண் ஒருவர் கூறியுள்ளார்.துனிசியாவை சேர்ந்த எமான் என்பவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக சிரியாவில் உள்ள ரக்காவிற்கு சென்றுள்ளார்.எய்ட்ஸ் தொற்றைப் பத்து மாதங்கள் தடுத்த நோய் எதிர்ப்பொருள்!
[Thursday 2017-07-27 12:00]

பரிசோதனை முயற்சியாக அளிக்கப்பட்ட சிகிச்சை ஒரு நபரின் எச்.ஐ.வி தொற்றை பத்து மாதங்கள் கட்டுக்குள் வைத்திருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இயற்கையாகச் சுரக்கும், "விரிவாக நோய்க்களைத் தடுக்கும் எதிர்ப்பொருட்களை," ஊசி மூலம் செலுத்தும் சிறிய பரிசோதனை முயற்சிக்கு உள்ளான 18 நபர்களில் அவரும் ஒருவர். அந்த நோய் எதிர்ப்பொருட்கள் , எச்.ஐ.வி கிருமியானது, பரிசோதனையில் பங்கேற்ற பிற நோயாளிகளின் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துவதை சுமார் இரண்டு வார காலம் தாமதப்படுத்தின.ஜப்பானில் கிட்கேட் சொக்லெட் மோகம்: - தொழிற்சாலையை திறக்கவுள்ள நெஸ்லே நிறுவனம்
[Thursday 2017-07-27 12:00]

சாக்லெட்டிற்கு ஏற்பட்டுள்ள தேவையால் 25 வருடங்களில் முதல்முறையாக நெஸ்லே நிறுவனம் அங்கு தொழிற்சாலையை திறக்கவுள்ளது.அதிக வரவேற்பால் ஜப்பானில் நெஸ்லே தொழிற்சாலை தொடக்கம்கிட்கேட் பொதுவாக பால், சாக்லெட் மற்றும் பல சுவைகளில் செய்யப்படும்; ஆசியாவில் டஜன் கணக்கான கிட்கேட்கள் பிரபலமாக உள்ளது.மூன்று ஆண்கள் செய்து கொண்ட முக்கோணத் திருமணம்: -குவியும் பாராட்டு
[Thursday 2017-07-27 07:00]

கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மூன்று பேர் திருமணம் செய்து கொள்ளும் "முக்கோணத் திருமணங்களை" நம்மால் காண முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஒரே நேரத்தில் 25 பேரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நாட்டு மதத்தலைவர்: - விரைவில் தண்டனை
[Thursday 2017-07-27 07:00]

ஒரே நேரத்தில் 25 பேரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த கனடா நாட்டு மதத்தலைவர் மீது நடவடிக்கை பாயவுள்ளது.அமெரிக்கா மற்றும் கனடாவில் வசித்து வரும் இனக்குழுவினர் மோர்மோன், இவர்களிலிருந்து லாட்டர் டே ஸைண்ட்ஸ் என்ற சிறு குழுவினர் தனியாக பிரிந்து சென்று தங்களை இயேசு ஆலய வழிபாட்டு முறையினை பின்பற்றுபவர்கள் என அறிவித்து கொண்டனர்.ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது: - டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு
[Thursday 2017-07-27 07:00]

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்: - 26 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
[Wednesday 2017-07-26 17:00]

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ராணுவ வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர். கந்தக்காரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஆப்கான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பலர் பலியாகியுள்ளனர்.கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் ஆல்கஹால்: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-07-26 17:00]

மது குடித்தால் உடல்நலத்திற்குகெடு என்று எல்லோறும் அறிந்த ஒன்று, ஆனால் மதுவில் உள்ள ஆல்கஹால் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பன போன்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இத்தாலியில் வறட்சி எதிரொலி: - வத்திக்கானின் செயற்கை நீரூற்றுகளை நிறுத்தினார் போப்
[Wednesday 2017-07-26 13:00]

இத்தாலியின் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் வத்திக்கான் தன்னுடைய பிரபல செயற்கை நீரூற்றுக்களில் நீர்வரத்தை நிறுத்த தொடங்கியுள்ளது.இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் தொடர்பான போப் பிரான்சிஸின் போதனைகளுக்கு ஒத்ததாக அமைகிறது என்று வத்திக்கான் வானொலி தெரிவித்திருக்கிறது.சுற்றுச்சூழலால் உருவாகக்கூடிய தன்னுடைய அச்சங்களை 2015-ஆம் ஆண்டு வெளியிட்ட திருமுகத்தில் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.கால்பந்து விளையாட்டு பந்தயத்தில் தோல்வி: - எலி இறைச்சி சாப்பிட்ட மேயர்
[Wednesday 2017-07-26 12:00]

பிரான்ஸ் நாட்டில் கால்பந்து விளையாட்டு பந்தயத்தில் தோல்வி அடைந்த அந்நாட்டு மேயர் ஒருவர் எலி இறைச்சி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு பிரான்ஸில் உள்ள Mont-de-Marsan நகர் மேயராக Charles Dayot என்பவர் பதவி வகித்து வருகிறார்.கால்பந்து விளையாட்டு ரசிகரான இவர் போட்டிகள் நடக்கும்போது பந்தயத்தில் ஈடுப்படுவது வழக்கம்.மெக்சிகோவில் மலையில் மோதிய பயணிகள் விமானம்: -விமானி உட்பட 7 பேர் பலி
[Wednesday 2017-07-26 12:00]

மெக்சிகோவில் மலைப்பகுதியில் பயணிகள் விமானம் மோதியதில் விமானி உட்பட 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Tamazula நகரிலிருந்து U206 ரக சிறிய பயணிகள் விமானம் Culiacan நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.விமானத்தில் விமானி உட்பட 7 பேர் பயணம் செய்தார்கள். Sinaloa மாகாணத்தின் Imala பகுதியில் சென்று கொண்டிருந்த போது மலைப்பகுதியில் பயங்கரமாக மோதி விமானம் விபத்துள்ளானது.ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சை!
[Wednesday 2017-07-26 07:00]

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து கோரக்பூர் ஐஐடியில் படித்தவர் சுந்தர் பிச்சை. பிரபல தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனத்தில் இவர் கடந்த 2004ம் ஆண்டு சேர்ந்தார்.போர்னியோ தீவில் படகு கவிழ்ந்து விபத்து: - 10 பேர் பலி
[Wednesday 2017-07-26 07:00]

இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் வேகமாக சென்ற ஒரு படகு நேற்று கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்து நடந்தபோது அந்தப் படகில் 40 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா