Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஏன் பழங்களையும் காய்கறிகளையும் நீங்கள் அன்றாடம் சேர்க்காமல் இருக்கக் கூடாது?
[Friday 2017-05-19 08:00]

மனித வாழ்வில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏன் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் மருத்துவ குணத்தால் மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளைப் போக்கவல்லது. இதனால் தான் அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மனிதனின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது. வாருங்கள் இப்பொழுது நாம் சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஆப்பிள் ஆப்பிள் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

மனித வாழ்வில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏன் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் மருத்துவ குணத்தால் மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளைப் போக்கவல்லது. இதனால் தான் அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மனிதனின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது. வாருங்கள் இப்பொழுது நாம் சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஆப்பிள் ஆப்பிள் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

  

இவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் நுரையீரல் புற்றுநோயையும் தடுக்குமாம். மேலும், மூட்டுகளுக்கு வலிமை சேர்க்குமாம். பீன்ஸ் பீன்ஸ் சாப்பிடுவதால் கொழுப்பு பிரச்சினைகள், மலச்சிக்கல், மூல நோய் மற்றும் சிலவகை புற்றுநோய்களை தடுக்கலாம். ஆப்ரிகாட் புற்றுநோயைத் தடுக்க, கண்பார்வை மேம்பட, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, அல்மைசர் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க மற்றும் வயதாவதினால் ஏற்படும் சோர்வினை குறைக்க ஆப்ரிகாட் உதவுகிறது. அவகெடோ முகம் பொலிவுடன் இருக்க அவகெடோ சாப்பிடலாம். மேலும், இது கொழுப்பைக் குறைக்கவும், சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பக்கவாதம் வராமலும் தடுக்கவும் உதவுகிறது.

கேரட் கேரட் சாப்பிடுவது கண் பார்வை மற்றும் இதயத்திற்கு மிகவும் நல்லது. இவை மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல, உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. பீட்ரூட் பீட்ரூட் அதிகபடியான இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. எலும்புகளை வலிமையாக்குகிறது. குறிப்பிட்ட வகையான புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதயத்தைப் பாதுகாக்கிறது.

உடல் எடை குறைய உதவுகிறது. ப்ராக்கோலி இது ஒரு சூப்பர் உணவு. இது உங்கள் கண் பார்வைக்கு மற்றும் எலும்புகளுக்கு நல்லது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்க, இரத்த அழுத்தத்தைக் குறைக்க மற்றும் உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. ப்ளூ பெர்ரி இவை இதயத்திற்கு நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



கருப்பை புற்றுநோய்..! யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
[Tuesday 2017-11-14 18:00]

கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.



பாகற்காய் சர்க்கரை நோயை முழுமையாய் குணப்படுத்துமா..?
[Monday 2017-11-13 18:00]

ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என்பதற்கான நிறைய மருத்துவச் சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான். பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் முதலான தாவர நுண்கூறுகள்தான் இந்த மருத்துவச் செயல்பாட்டுக்குக் காரணம் என்று சான்றளித்துள்ளனர்.



வெங்காயத்தை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்:
[Thursday 2017-11-09 18:00]

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.



பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது..
[Wednesday 2017-11-08 18:00]

பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நேரத்துக்குச் சாப்பிட வேண்டாம். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில், வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.



இரவில் கண் விழிப்பவர்களா நீங்கள்? - ஆபத்துக்களை அறிக
[Thursday 2017-10-26 18:00]

இரவு நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வரவில்லையா, உங்கள் பணியே இரவு நேரத்தில்தானா, இரவு முழுக்க விழித்து செல்போன், சினிமா, கணினியைக் கவனிப்பவர்களா, நண்பர்களோடு சேர்ந்து தினமும் இரவைக் கொண்டாடுபவரா இவை எல்லாமே ஆபத்தானது என்பதை உடனே புரிந்துகொள்ளுங்கள். இரவில் மட்டுமே சுரக்கும் 'மெலடோனின்' என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறது மருத்துவ உலகம்.



இல்லறம் இன்பமயமாக இருக்க நீங்க இந்த 8 விஷயம் செய்தாலே போதுமே!
[Friday 2017-10-13 09:00]

எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர்.

உண்மையில் உடல் சார்ந்த ரீதியில் காணும் இன்பத்தை விட, மனம் சார்ந்த ரீதியில் கிடைக்கும் இன்பம் தான் மிகுதியானது மற்றும் நிலையானது.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஜஸ்ட்

இங்கு கூறியிருக்கும் எட்டு விஷயங்களை உங்கள் வாழ்வில் சரியாக பின்பற்றி, செயல்முறையில் நடைமுறைப்படுத்தி வந்தாலே போதுமானது.



கணனியில் இனி இதயமே பாஸ்வேர்டு!
[Monday 2017-10-09 08:00]

கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது.



அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா நீங்கள்? - மீறி எடுத்துக் கொண்டால் என்னென்ன தீமைகள்?
[Friday 2017-10-06 18:00]

இன்றைக்கு பெரும்பாலானோர் மருத்துவ ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மருத்துவக் குறிப்பாக இந்த உணவு நல்லது என்று சொன்னால் போதும் மூன்று வேலைக்கும் சாப்பிடுவது தொடர்கிறது. என்ன தான் உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் அது அளவுக்கு மீறினால் நஞ்சாகத்தான் முடியும். அப்படி நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் பூண்டு. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு என்றாலும் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் என்னென்ன தீமைகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.



அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி:
[Saturday 2017-09-30 17:00]

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைகுத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது.



தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்தால்..?
[Saturday 2017-09-30 08:00]

தைரொயிட் சுரப்புக் குறைவாகவுள்ள பெண்னொருவர் தான் கர்ப்பமாகவுள்ளேன் என உறுதி செய்தவுடனேயே (சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) வைத்திய ஆலோசனையைப் பெற்று தைரொக்ஸின் மருந்தின் அளவை 25 mic.g இனால் அதிகரித்து உள்ளெடுத்தல் அவசியம். கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்களும் சிசுவின் வளர்ச்சியில் முதன்மையான பங்கை வகிக்கின்றன. இந்தக் காலத்திலேயே குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புக்களின் வளர்ச்சியானது முதன்மை பெற்றிருக்கும்.



உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலியாக மாற்றி வியக்க வைத்த விஞ்ஞானிகள்: Top News
[Wednesday 2017-09-20 07:00]

உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் சேமிக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி பல்கலைகழகத்தில் ஒளித் தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில் நேற்று தங்கள் ஆய்வில் வெற்றிகரமான முடிவை அவர்கள் எட்டியுள்ளனர்.



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி: இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் கண்டறியப்பட்டுள்ளது!
[Sunday 2017-09-10 07:00]

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.



சளியை வெளியேற்ற இயற்கை வழிகளை நாடுங்கள். !
[Saturday 2017-09-09 17:00]

ஒருவருக்கு சளி பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் காலநிலை மாற்றம். காலநிலை திடீரென்று மாறும் போது பலருக்கும் சளி பிடிக்கும். இந்நிலையில் வரும் சளி தொல்லைத் தரும் வகையில் இருக்கும். சளி பிடித்தால், அதிலிருந்து விடுபட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், சளியை வெளியேற்ற இயற்கை வழிகளை நாடுங்கள்.



செயலிந்த கிட்னியை சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
[Thursday 2017-09-07 18:00]

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவுகிட்னி பிரச்சினைய எப்படி சரி செய்யலாம்..? creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள், பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு.



உடல் எடையை குறைக்க உதவும் கொழுந்து வெற்றிலை:
[Friday 2017-09-01 20:00]

ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



ஒவ்வொருநாளும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-08-30 17:00]

சத்தான உணவு பொருட் கள் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. கனடாவில் ஹமில்டனில் உள்ள சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக் கழக சுகாதார ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.



இஞ்சியை கொண்டு தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்!
[Friday 2017-08-18 08:00]

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?



ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல் வருகிறதாம்..?
[Wednesday 2017-08-16 18:00]

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.



மாரடைப்பு வராம தடுக்க இதை அடிக்கடி ஸ்வீட் கார்ன் சாப்பிடுங்க!
[Wednesday 2017-08-16 18:00]

ஈஸி ஸ்நாக்ஸாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ட்சாய்ஸ் ஸ்வீட் கார்ன். இதிலிருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு, மிகவும் நல்லது. ஸ்வீட் கார்ன் மூலமாக நமக்கு என்னநன்மையெல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.



நினைவாற்றலை மீட்க உதவும் புதிய புரதம்:
[Friday 2017-08-11 07:00]

அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது. இழக்கப்படும் நினைவாற்றலை மீட்பதற்கு தற்போது எதுவிதமான சிகிச்சை முறைகளும் இல்லை. எனினும் விசேட நொதியம் ஒன்றின் மூலம் இது சாத்தியப்படும் என MIT ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நொதியத்திற்கு தேவையான புரதத்தினை உருவாக்கும் முயற்சியில் குறித்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா