Untitled Document
April 24, 2024 [GMT]
மன்னாரில் மாணவியைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! - கைது செய்ய நடவடிக்கை
[Friday 2017-06-23 18:00]

மன்னாரில் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், குறித்த சம்பவத்தை நேரில் கண்டு உரிய அதிகாரிகளிடம் தெரிவித்த அதே பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், குறித்த சம்பவத்தை நேரில் கண்டு உரிய அதிகாரிகளிடம் தெரிவித்த அதே பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   

மன்னார் மடு வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை குறித்த பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் நீண்ட காலமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வருகின்றார் என்ற சம்பவத்தை அறிந்து கொண்ட குறித்த பாடசாலையில் மற்றுமொரு ஆசிரியர், அந்த சம்பவத்தை உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் குறித்த துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் மடு வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில், குறித்த துஸ்பிரயோக சம்பவத்திற்கு நீதி கோரும் வகையில் சம்பவத்தை நேரில் கண்ட ஆசிரியர், பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி கடந்த 19 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் பிரச்சினையை மூடி மறைக்கும் வகையிலும், துஸ்பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் ஆசிரியர், அதனை மூடி மறைக்க முற்பட்ட பாடசாலை அதிபர் ஆகியோரை காப்பாற்றும் வகையில் மடு வலயக்கல்விப் பணிப்பாளர் செயற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து நீதி கோரிய குறித்த ஆசிரியர் ஒருவரை மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் திடீர் இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முதல் மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும், ஏற்கனவே தாங்கள் கடமையாற்றிய பாடசாலைக்கு எதிராகவும், பாடசாலை செயற்பாடுகளை குழப்பும் வகையிலும் செயற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் தாங்கள் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் அனுப்பியுள்ள திடீர் இடமாற்றக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, தற்போது இடமாற்றப்பட்டுள்ள ஆசிரியர் பாடசாலையில் உள்ள மாணவர்களை ஆசிரியர்களுக்கு எதிராக துண்டி விட்டு முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த துஸ்பிரயோக சம்பவம் தொடர்பாக அவ் ஆசிரியர் கடந்த 12 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் எனக்கு தெரியப்படுத்தினார். குறித்த ஆசிரியர் என்னிடம் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து நான் 13 ஆம் திகதி தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தேன். இந்த நிலையில் குறித்த ஆசிரியர் 16 ஆம் திகதி பாடசாலை அமைந்துள்ள ஊர் பகுதிக்குள் சென்று குறித்த பிரச்சினைக்கு இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டம் ஒன்றை 19 ஆம் திகதி முன்னெடுக்க வேண்டும் என மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக 18 ஆம் திகதி பொலிஸார் எனக்கு தெரிவித்தனர்.

எனினும் 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் எவையும் இடம் பெறக்கூடாது எனவும் நாங்கள் அங்கே வருகின்றோம் என நான் அடம்பன் பொலிஸாரிடம் தெரிவித்தேன். இந்த நிலையில் 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற பாடசாலைக்கு முன் பொலிஸார் சென்று ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முயற்சி செய்தனர். இதன் போது குறித்த ஆசிரியர் பிறிதொரு நபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெற்றோர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தூண்டி விட்டுக்கொண்டிருந்தார். தொடர்ந்தும் குறித்த ஆசிரியர் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் எச்சரித்து அவரை பாடசாலைக்குள் அனுப்பி விட்டனர்.

தொடர்ந்தும் குறித்த ஆசிரியர் வன்முறையை ஏற்படுத்திய நிலையில் அவர் வழங்கிய வாய் மூல முறைப்பாடுகளுக்கு அமைவாக மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் குறித்த ஆசிரியர்கள் உற்பட சிலருக்கு திடீர் இடமாற்றத்தை வழங்கினோம்.எனினும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி தனக்கு அப்படி எதுவித சம்பவமும் இடம் பெறவில்லை என அடம்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய விபரங்களை சேகரித்து நாங்கள் உடனடியாக மாகாணத்திற்கு அனுப்பியுள்ளோம். சட்ட வைத்திய அதிகாரி(ஜே.எம்.ஓ) அவர்களின் பரிசோதனை அறிக்கையே எமது அறிக்கை. அந்த வகையில் மாணவி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்ற பதில் அறிக்கையூடாக கிடைத்துள்ளது.

குறித்த மாணவி 18 ஆம் திகதி மன்னார் வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பாரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். 19 மற்றும் 20 ஆம் திகதி வரை குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.20 ஆம் திகதி மாலை 3 மணியளவில் குறித்த மாணவி வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 21ஆம் திகதி குறித்த மாணவியை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டோம்.அதற்குள் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று விட்டது.

மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக கூறப்படும் ஆசிரியரை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக தெரிவித்த குறித்த ஆசிரியர் எங்களிடம் வழங்கி வாய் மூல வாக்கு மூலம் மற்றும் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை ஆகியவற்றை கருத்தில் கொண்டே குறித்த ஆசிரியருக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.



உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .



கைது செய்யத் தயாராக இருந்த இன்டர்போல்! - இலங்கை வராமலேயே நழுவிய ஈரான் அமைச்சர்.
[Wednesday 2024-04-24 16:00]

1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பில் இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ளவிருந்த ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.



மைத்திரி, விஜயதாச, துஷ்மந்தவுக்கு நீதிமன்றம் தடை!
[Wednesday 2024-04-24 16:00]

கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.



நீதிபதி இளஞ்செயழியனின் பாதுகாப்பு அதிகாரி கொலை - விசாரணை தொடங்கியது!
[Wednesday 2024-04-24 16:00]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி மீனவர் பலி!
[Wednesday 2024-04-24 16:00]

மன்னார் -முத்தரிப்புத்துறையில் இருந்து கடற் தொழிலுக்கு சென்றவேளை படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.



சுதந்திரக் கட்சியில் இணைந்தவர் மொட்டு கட்சியில் இருக்க முடியாது!
[Wednesday 2024-04-24 16:00]

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை நடத்தும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



சுற்றுலாப் பயணிகள் வருகை மந்தம்!
[Wednesday 2024-04-24 15:00]

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.



சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு அனுரவுடன் சந்திப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.



ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.



கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்!
[Wednesday 2024-04-24 05:00]

கனேடியத் தமிழர் பேரவை'யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் விவாதம்!
[Wednesday 2024-04-24 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.



சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி!
[Wednesday 2024-04-24 05:00]

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.



அனுரவுடன் விவாதம் - மாற்றுத் திகதிகளை முன்மொழித்த சஜித்!
[Wednesday 2024-04-24 05:00]

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்!
[Wednesday 2024-04-24 05:00]

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



அரகலயவின் அமைப்பு மாற்றத்தை கட்சியில் இருந்து தொடங்கும் நாமல்!
[Wednesday 2024-04-24 05:00]

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2024-04-24 05:00]

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
[Wednesday 2024-04-24 05:00]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா