Untitled Document
April 19, 2024 [GMT]
ISIS தீவிரவாதம், பெண் மனம், க்ளாஸிக் பார்வதி..!
[Friday 2017-06-23 18:00]

உலக அளவில் ரெஸ்க்யூ- ஆப்பரேசன் படங்கள் பல வெளிவந்துள்ளன. விமான நிலைய தீவிரவாதம், ஏதோ ஒரு இடத்தில் பிணைக்கைதிகள் ஆக்கப்பட்டு பின் அங்கிருந்து தப்பிப்பது என பலவகை.தேசப்பற்று படங்களைக் கடந்து, உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ரெஸ்க்யூ-ஆப்பரேசன் படங்களும் அவ்வப்போது வெளிவரும். 2014ல் ஈராக்கில் இருந்து தப்பித்து வந்த 19 மலையாள செவிலியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் டேக் ஆஃப்.

உலக அளவில் ரெஸ்க்யூ- ஆப்பரேசன் படங்கள் பல வெளிவந்துள்ளன. விமான நிலைய தீவிரவாதம், ஏதோ ஒரு இடத்தில் பிணைக்கைதிகள் ஆக்கப்பட்டு பின் அங்கிருந்து தப்பிப்பது என பலவகை.தேசப்பற்று படங்களைக் கடந்து, உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ரெஸ்க்யூ-ஆப்பரேசன் படங்களும் அவ்வப்போது வெளிவரும். 2014ல் ஈராக்கில் இருந்து தப்பித்து வந்த 19 மலையாள செவிலியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் டேக் ஆஃப்.

  

அங்கமாலி டைரீஸ், டேக் ஆஃப் என கேரள சினிமா நிஜமாகவே வேறு லெவலில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அதிக சம்பளத்திற்காக ஈராக்கிற்கு செல்கிறது கேரளாவில் இருந்து ஒரு செவிலியர் குழு. வேலையா இல்லை குடும்பமா என கணவர் ஃபைசல் முரண்டு பிடிக்க, வீட்டுக் கடன் சூழ்நிலை காரணமாக , விவாகரத்து செய்துவிட்டு, ஈராக் செல்ல ஆயுத்தமாகிறாள் சமீரா (பார்வதி). தன்னுடன் பணியாற்றும் சாஹீதை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறாள். பணத்திற்காக சென்று இருந்தாலும், ஈராக்கின் நிஜ நிலை அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அங்கு இருக்கும் ஒரு கணவன் மனைவி மருத்துவர்கள், இவர்களுக்கு நண்பர்களாகின்றனர்.

டிக்ரிட்டில் இருக்கும் மருத்துவமனையில் வேலை செய்கிறார்கள். முதல் கணவர் ஃபைசல், இனி தான் சமீராவின் மகனை பார்த்துக்கொள்ள முடியாது என சொல்லி, ஈராக் வந்து குழந்தையை சமிராவிடம் விட்டு செல்கிறார்.சமிராவின் எட்டு வயது மகனிடம் இருந்து இரண்டு விஷயங்களை சமீரா மறைக்க வேண்டும். சமீரா எல்லாவற்றையும் மகனிடம் சொல்வதற்காக, மோசூல் நகரத்தில் இருக்கும் வேறொரு முகாமிற்கு மருத்துவர்களுடன் செல்கிறார் சாஹீத்.

ஈராக்கில் தற்போதைய சூழல் போலவே அது ISIS தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய காலம்.சாஹீத் தீவிரவாத குழுக்களிடம் மாட்டிக்கொள்கிறார். மொசூல் நகரத்தை ISIS கைப்பற்றிவிட, ஈராக்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் உதவியை நாடுகிறாள் சமீரா. நிலைமை இன்னும் மோசமாகிறது.டிக்ரிட்டில் கேரள பெண்கள் இருக்கும் மருத்துவமனையையும், ISIS தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.ஷாஹீதை, சமீரா உயிருடன் மீட்டாளா?. அனைவரும் உயிருடன் இந்தியா திரும்பினார்களா என்பதை சாமர்த்திய த்ரில்லராக எடுத்து இருக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயணன். எடிட்டரான மகேஷ், எழுதி இயக்கி இருக்கும் முதல் படம் இது.

படத்தின் ஈராக் காட்சிகள் முழுவதும் துபாயில் எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விஸ்வரூபம், தூங்காவனம் படங்களின் ஒளிப்பதிவாளர் ஷானு வர்கீஸ் ஒளிப்பதிவில் அந்தக் காட்சிகள் அனைத்துமே சிறப்பு.

மொசூலில் இருக்கும் தீவிரவாத தலைவன், காயம்பட்ட தீவிரவாதிக்கு மருத்துவம் பார்க்க சொல்ல, மறுத்துவிடுகிறார் ஈராக் மருத்துவர், " இஸ்லாம் தீவிரவாதம் செய்ய சொல்லவில்லை" என உரக்க சொல்வதால் கொல்லப்படுகிறார். யாஜிதி இன பெண்களை அடிமைகளாக நடத்தும் ISIS குழுக்களிடம் மாட்டிக்கொள்கிறாள் மருத்துவரின் மனைவி. யாஜிதி இன பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை காட்டும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.கேரளாவில் இருக்கும் இளைஞர்கள் எப்படி ISIS தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறாகள் என்பதையும் ஒரு காட்சியில் சொல்கிறார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்: பரபரப்பான வாக்குச்சாவடி!
[Friday 2024-04-19 16:00]

இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார். இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.



வாக்களிக்க வந்த இடத்தில் நடந்த சம்பவத்தால் பதறிய திரிஷா!
[Friday 2024-04-19 16:00]

இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரபலங்கள் பலரும் காலையில் இருந்தே வந்துகொண்டிருக்கின்றனர். அஜித், விஜய் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை நடிகர்கள் அனைவரும் வாக்களித்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.



"அஜித்துக்கு முன்னாடியே ஓட்டு போட வந்துட்டேன்" - ஆதங்கமாக பேசிய முதியவர்!
[Friday 2024-04-19 16:00]

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் வருகை தந்து வாக்களித்த நிலையில், அவருக்கு முன்பாகவே நான் வந்துவிட்டேன் என்று முதியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.



நாடாளுமன்ற தேர்தல்: முதல் ஆளாக வாக்களிக்க வந்த அஜித்!
[Friday 2024-04-19 08:00]

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் கூடிய விரைவில் இப்படத்தின் பைனல் ஷெடியுல்-லில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.



திரையில் மீண்டும் ஜோடி சேரும் சூர்யா, ஜோதிகா!
[Friday 2024-04-19 07:00]

நட்சத்திர ஜோடிகளான சூர்யா, ஜோதிகா இருவரும் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைய உள்ளனர். இதை அறிந்த சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த ஜோதிகா பட பிஸியாக இருந்து வருகிறார். மம்முட்டியுடன் தி கோர் படத்தில் நடித்த நிலையில் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.



சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!
[Thursday 2024-04-18 18:00]

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



இதுவரை பாரதிராஜா உடன் இணையாத 3 ஜாம்பவான்கள்!
[Thursday 2024-04-18 18:00]

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆவார். நடிக்கும் ஆசையோடு வந்து ,16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. இன்று வரை பல முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் ஆசானாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவிற்கு பல திறமையான நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தமது படங்களில் மண்வாசனையுடன் கலந்த கிராமத்து கதைகளில் தமிழ் கலாச்சாரத்தை முன்னுறுத்தி ரசிகர்களை கொண்டாட செய்தார். இப்படிபட்ட இயக்குனர் இமயம் தமிழ் சினிமாவில் பயன்படுத்த தவறிய மூன்று ஜாம்பவான்களை காணலாம்.



ரோபோ ஷங்கர் மனைவியின் உதட்டில் முத்தம்: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த இந்திரஜா கணவர்!
[Thursday 2024-04-18 18:00]

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தனது தாய் மாமா கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய பெரிய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.



சரத்குமார், ராதிகாவின் முகத்திரையை கிழித்த பிரகாஷ்ராஜ்!
[Thursday 2024-04-18 06:00]

பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் நாட்டு நடப்புகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அதில் தற்போது அவர் சரத்குமார், ராதிகா இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் ராதிகா பிஜேபி சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான தீவிர பிரச்சாரத்தில் அவர் இருக்கும் நிலையில் சரத்குமார் பக்க பலமாக செயல்பட்டு வருகிறார்.



"இதுவரைக்கும் இந்த மாதிரி உடலுறவு பண்ணது இல்ல" - சலித்துக்கொள்ளும் ஓவியா!
[Thursday 2024-04-18 06:00]

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். ஒரு சிலருக்கு மட்டும் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பெயருடன் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை தந்திருக்கிறது. அந்த வகையில் சில நடிகர்கள், நடிகைகள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்கள் மீது ஒரு மெல்லிய புகழ் வெளிச்சத்தை பெற்றிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மைதான்.



மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.



மீண்டும் ஒரு வசூல் சாதனை படைத்த விஜய்யின் கில்லி!
[Wednesday 2024-04-17 15:00]

விஜய்யின் மஸ்டர்பீஸ் திரைப்படங்களில் ஒன்று கில்லி. பிரபல இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி. ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் தனக்கென்று தனி மாஸை உருவாக்கினார்.



நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம்: கனடாவில் வாழும் நபர்களுக்கு தொடர்பு!
[Wednesday 2024-04-17 15:00]

பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட விடயத்தில், அது தொடர்பில் கனடாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 5.00 மணியளவில், மும்பையிலுள்ள நடிகர் சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.



லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்!
[Wednesday 2024-04-17 03:00]

தொழிலதிபர் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகம் ஆன படம் லெஜெண்ட். அவரது சொந்த தயாரிப்பில் பிரம்மாண்ட செலவில் படம் எடுக்கப்பட்டாலும் பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. லெஜெண்ட் சரவணன் அடுத்து தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருகிறார். அந்த படத்தினை துரை செந்தில்குமார் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



நடிகை பிரியா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள்! Top News
[Wednesday 2024-04-17 03:00]

நடிகை பிரியா ஆனந்த் வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அவர் தற்போது தாராள கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள்.



அடுத்த வெற்றிமாறனாக உருவாகும் ஹீரோ!
[Tuesday 2024-04-16 18:00]

இன்றைய நடைமுறையில் உலகமயமாக்கல் தத்துவம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கலை துறையும் தனது படைப்புகளை தனக்குரியது என்று மட்டும் சொந்தம் கொண்டாடாமல் பான் இந்தியா மூவியாக மொழியை கடந்து சினிமா ஆர்வலர்கள் அனைவரும் கொண்டாடும் படைப்புகளாகவே வெளி வருகிறது. தரமான சிறந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும் ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுப்பவர்தான் வெற்றிமாறன்.



கவர்ச்சியில் எல்லைமீறும் அனிகா! Top News
[Tuesday 2024-04-16 18:00]

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார் மலையாள பைங்கிளி அனிகா. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா.



பிச்சைக்காரனில் சம்பாதித்ததை மொத்தமாய் இழந்த விஜய் ஆண்டனி!
[Tuesday 2024-04-16 18:00]

விஜய் ஆண்டனி சம்பாதித்த பேரும் புகழும் என்னவென்றால் இதுவரை அவரை வெறுக்கும் அளவிற்கு ரசிகர்கள் யாரும் இல்லாமல் இருப்பது தான். அதற்கு காரணம் சாதாரணமான ஒரு மனிதராகவும், நடிப்பை எதார்த்தமாகவும் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கான படத்தை கொடுப்பதும் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.



மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்!
[Tuesday 2024-04-16 05:00]

நடிகர் ஷாருக் கான் தற்போது ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். தொடர்ந்து 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் படங்களாக கொடுத்து மீண்டும் பாலிவுட்டை தலைநிமிர செய்து இருக்கிறார். தொடர்ந்து தென்னிந்திய படங்களை ஹிந்தியில் வசூல் சாதனை படைத்து வந்த நிலைமையை மாற்றி இருக்கிறார் அவர்.



ரெட் ஜெயண்ட் பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்!
[Tuesday 2024-04-16 05:00]

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். தானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என விஷால் சமீபத்தில் அறிவித்து இருந்தார். 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறி இருக்கிறார். அடுத்து அவர் நடிப்பில் ரத்னம் என்ற படம் திரைக்கு வருகிறது. ஹரி இயக்கி இருக்கும் அந்த படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியாகி இருந்தது.


Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா