Untitled Document
April 18, 2024 [GMT]
ஈழத்தை நீக்கியது இனஅழிப்பின் தொடர்ச்சியே! - சிறீதரன் எம்.பி விசனம் Top News
[Monday 2017-06-26 08:00]

2009 இல் இனப்படுகொலையொன்றை திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட அரசு போருக்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உலகம் அவதானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் இனப்படுகொலையொன்றை திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட அரசு போருக்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உலகம் அவதானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

  

கடந்த வாரம் கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரது எச்சரிக்கையின் காரணமாக நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு ஈந்த தேசத்தின் தமிழறிஞன் திருவள்ளுவரை எமது மண்ணில் சிலை நிறுவி நினைவு கொள்ள முடியாத அடிமைத்தனத்திற்குள் இன்றும் தமிழர் தேசம் மூழ்கிக் கிடப்பதை நினைவூட்டுவதாகவே இச்சம்பவம் அமைகின்றது. கடந்த 2009 இல் இனப்படுகொலையொன்றை திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட அரசு போருக்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உலகம் அவதானிக்க வேண்டும்.

தமிழர் இராச்சியத்தின் அடையாளமாகத் திகழும் சோழத்தமிழரசின் கொடியில் மிளிர்ந்த புலிச்சின்னத்தை கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் இலச்சினையிலிருந்து நீக்குமாறு 2012 இல் இதே பயங்கரவாதப் பிரிவு எச்சரித்து நீக்கச் செய்திருந்தது. தமிழர் சாம்ராட்சியம் நிலவியபோது இலங்கைத் தேசத்தின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாக விளங்கிய ஈழம் என்ற சொல்லை நீக்குமாறு தமிழ்ச் சங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கைகளையும் அழுத்தத்தையும் பயங்கரவாதப் பிரிவு விடுத்து அப்பெயரை நீக்கச் செய்துள்ளது.

திருமூலரால் ஈழம் எனச் சிறப்பிக்கப்பட்டது இலங்கை தேசம். பிறநாட்டவர்கள் இலங்கையை தமது ஆளுகைக்குள் வைத்திருந்தபோது செரண்டிப், தப்ரபேன், சிலோன் போன்ற பெயர்களால் இலங்கையை அழைத்தார்கள் என்பது வரலாறு. அதுபோலவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருந்த இந்துமத மற்றும் கலாசாரத் தொடர்புகள் காரணமாக திருமூலர் இலங்கையை ஈழம் என விளித்தார்.

இலங்கை அரசினுடைய அரசினர் பாடத்திட்டத்தின் பிரகாரம் ''ஈழம் எங்கள் நாடெடா அது இன்பமான வீடெடா..'' எனவும் ஈழத்து ''ஈச்சரங்கள் எவை'' எனவும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் நாங்கள் படித்திருக்கிறோம். ஈழம் என்ற சொல் பல இடங்களில் இலங்கையைக் குறிக்கிறது என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் இலங்கையின் தேசிய கீதத்தில் ''ஈழசிரோன் மணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே...'' என நிலைகொண்டுள்ள இலங்கையின் ஈழம் எனும் நாமத்தை அழிக்கக் கட்டளையிட்டமை தமிழ் மக்களின் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

வரலாற்றின் தெளிந்த பார்வையின்றி ஈழத்தமிழ் மக்களின் தொன்மங்கள் மீதும் அவர்தம் அடையாளங்கள் மீதும் குறிவைத்துத் தாக்கி தமிழரை இனவழிப்புச் செய்கின்ற சிங்கள அரச மூலோபாயத்தின் கருவிகளாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இலங்கையில் இனங்களுக்கிடையே ஒருபோதும் நல்லிணக்கம் நடைபெறப்போவதில்லை என்ற செய்தி துல்லியமாக வெளிப்பட்டு நிற்கின்றது.

எனவே இவ்விடயத்தில் சகவாழ்வுத்துறை அமைச்சு நல்லிணக்கச் செயலணி இலங்கையின் அதிஉத்தம ஜனாதிபதி ஆகியோர் இவ்விடயங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து ஈழம் என்னும் சொல் மீண்டும் அதே இடத்தில் பொறிக்கப்படுவதற்கும்., வரலாற்று அறிவற்று இனமுரண்பாட்டை கூர்மையடையச் செய்தமைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மீது தகுந்த, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை மாலுமிகள் மீட்பு!
[Thursday 2024-04-18 05:00]

ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்கு வியூகமா?
[Thursday 2024-04-18 05:00]

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



மைத்திரிக்கு எழுந்து மரியாதை செலுத்தாத நிமல்!
[Thursday 2024-04-18 05:00]

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108 ஆவது ஜனன தினம் கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.



அருட்தந்தை சிறில் காமினிக்கு சிஐடி அழைப்பாணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.



சுதந்திர கட்சியை ஐதேகவுடன் இணைக்க அனுமதியேன்!
[Thursday 2024-04-18 05:00]

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



வடக்கிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
[Thursday 2024-04-18 05:00]

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இ வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.



பேராயருக்கு ஐக்கிய மக்கள் சக்தி எழுத்து மூலம் உறுதிமொழி!
[Thursday 2024-04-18 05:00]

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



அராலியில் கணவன் தாக்கி மனைவி படுகாயம்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, அராலி பகுதியில் நேற்று மாலை கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கொத்துக்கு 1900 ரூபா விலை கூறிய கடைக்காரருக்கு பிணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு புதுக்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.



சாவகச்சேரியில் தப்பியோடிய கைதிகள்- 30 நமிடங்களில் துரத்திப் பிடித்த பொலிஸ்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!
[Wednesday 2024-04-17 16:00]

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி தாயின் நகைகள், மோட்டார் சைக்கிள் கொள்ளை!
[Wednesday 2024-04-17 16:00]

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.



திருநெல்வேலியில் விபத்து - இளைஞன் காயம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.



சுதந்திரக் கட்சியில் புதிய நியமனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆட்சேபனை!
[Wednesday 2024-04-17 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.



கோட்டாவின் 10 கோடி ரூபா வாகனம் மொடல் அழகி பியூமியிடம் வந்தது எப்படி?
[Wednesday 2024-04-17 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்துவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி எனது நாடு அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.



தனக்குத் தானே புதைகுழி வெட்டிய தெவரப்பெரும! - அங்கேயே சனியன்று அடக்கம்.
[Wednesday 2024-04-17 16:00]

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் விஷ பூச்சி கடித்ததால் ஒருவர் மரணம்!
[Wednesday 2024-04-17 16:00]

யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்த ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.



டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிவு!
[Wednesday 2024-04-17 16:00]

கடந்த காலாண்டு முழுவதும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது சிறிய அளவு சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.



சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம்!
[Wednesday 2024-04-17 16:00]

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



திருமணமாகி ஒரே மாதத்தில் காணாமல்போன கணவன்! - மனைவி முறைப்பாடு.
[Wednesday 2024-04-17 16:00]

தனது கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா