Untitled Document
March 19, 2024 [GMT]
தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
[Wednesday 2017-07-05 17:00]

ஆண் - பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். இப்போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஆண் - பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். இப்போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

  

ஆண் - பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். தொடர்ந்து ஹெல்மெட் உபயோகித்தால் பத்துவருடங்களில் முடி சொட்டையாகிவிடக் கூட வாய்ப்புண்டாம். அதற்காக ஹெல்மெட் அணியாமல் போகாதீர்கள். ஏனெனில் தலை முடியை விட உங்கள் தலை மிக மிக முக்கியம். மாறாக தலைமுடி உதிர்வதை எப்படி தடுக்க முடியும். அதற்கான வழிமுறைகளை என்னெவென்று கையாளுங்கள். அதுதான் சிறந்தது. இதோ உங்கள் முடியை பாதுகாக்க சில டிப்ஸ்.

* தலையில் வெகு நேரம் ஹெல்மெட் அணியும்போது, சூடும், வியர்வையும் ஒருசேர உங்கள் தலைமுடியில் ஏற்படுகிறது. இதனால் உங்கள் ஸ்கால்ப் பாதிக்கப்படுகிறது. கிருமிகளின் தொற்றுக்களால், பொடுகு, அரிப்பு, ஏற்பட்டு முடி பலமிழந்து உதிர ஆரம்பித்து விடுகிறது.

* ஹெல்மெட் அணியும் முன் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக் கொள்ளுங்கள். இறுக்கமாக கட்டக் கூடாது. இது ரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஸ்கார்ஃப் காட்டனாக இருக்க வேண்டும். இதனால் ஹெல்மெட்டினால் வரும் வெப்பம் தலையினைப் பாதிக்காது. தலையில் ஏற்படும் வெப்பததை காட்டன் ஸ்கார்ஃப் உறிஞ்சுக் கொள்ளும்.

* ஸ்கார்ஃபை வாரம் இரு முறை துவைப்பதை மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால் அதில் அழுக்கு சேர்ந்து அதுவும் தலைமுடி உதிரக் காரணமாகிவிடும். அவ்வப்போது சிக்னலில் ஹெல்மெட் கழட்டி தலையில் காற்று படும்படி விடுங்கள். இது வியர்வை ஏற்படாமல் தடுக்கும்.

* உங்களுக்கு முன்னதாகவே ஸ்கால்ப்பில் பிரச்சனை இருந்தால் அவற்றிற்கு வைத்தியம் செய்த பின் ஹெல்மெட் அணியுங்கள். இல்லையென்றால் வெகு சீக்கிரம் முடியை இழக்க நேரிடும்.

* உங்கள் ஹெல்மெட்டினை வேறொருவருக்கு தராதீர்கள் அல்லது வேறொருவரின் ஹெல்மெட்டினை நீங்கள் போடாதீர்கள். இதனால் மற்றவரிடமிருந்து வரும் பொடுகு அல்லது ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

இது தவிர்த்து நீங்கள் வீட்டில் பண்ண வேண்டியது உங்கள் முடியையும் ஸ்கால்ப்பையும் பராமரிப்பதே. அதற்கான வழிகளை கீழே காணுங்கள்.

* இரு ஸ்பூன் சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை 1 ஸ்பூன் புளிப்பான தயிரில் கலந்து தலையின் வேர்க்கால் மற்றும் முடி நுனி வரை தடவ வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்வதால் தொற்றுக்களிலிருந்து உங்கள் முடியை மீளச் செய்யும். வேர்க்கால்கள் பலப்படும்.

* இஞ்சியை துருவி அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். போதிய அளவு இஞ்சிச் சாற்றினை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தலையில் ஸ்கால்ப்பில் படும்படி செய்ய வேண்டும். காய்ந்த பின்ழுவங்கள். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் குறைந்த பின் வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.

* வாரம் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். அதில் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள். போதிய அளவு நீர் குடியுங்கள். - அதோடு மேற்கூறியவைகளை பின்பற்றுங்கள். அதன் பின் உங்கள் தலைமுடி மிக பத்திரமாக இருக்கும்.

  
   Bookmark and Share Seithy.com



டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது தெரியுமா?
[Monday 2024-03-18 18:00]

பொதுவாக நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அந்த செல்லப்பிராணிகளில் அநேகமானோரின் வீட்டில் இருக்கும் பிராணி நாய் தான். நாய்களில் பல வகையான நாய்கள் உள்ளது. அந்த வகையில் டாபர்மேன் எனும் ஒரு நாய் இனம் உள்ளது. இந்த நாய் இனத்தின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது என்பதை இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.



மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா?
[Sunday 2024-03-17 18:00]

பொதுவாக மின்மினி பூச்சிகள் வெயில் காலங்களில் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்ந்து திரிவதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அப்போது இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த மின்மினி பூச்சிகள் ஒளிர்வதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.



தொப்பையை குறைக்கும் அற்புத பானம்!
[Saturday 2024-03-16 18:00]

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த தொப்பை கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து காணப்படுகின்றது. இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.



சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லதா?
[Friday 2024-03-15 18:00]

தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் அவை நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறினாலும், ஆய்வுகள் அதற்கு எதிரான முடிவுகளை வைக்கின்றது. தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள நிலையில், இவை எளிதில் ஜீரணிக்கப்பட்டு நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.



திடீரென சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?
[Thursday 2024-03-14 18:00]

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் மேற்கொள்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடவில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.



நோன்பு திறக்கும் போது சாப்பிட வேண்டிய இப்தார் உணவுகள்!
[Wednesday 2024-03-13 18:00]

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர். இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கிறார்கள். இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.



கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?
[Tuesday 2024-03-12 18:00]

கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக பங்கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இது சிறந்த எண்ணெயாகும். இந்த கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



ஜப்பானியர்கள் 90 வயதை கடந்து உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-03-11 18:00]

நம்மில் பெரும்பாலான இனத்தவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்பினாலும் தவறான உணவுப்பழக்கம் காரணமாக 60 வயதை எட்டும் போதே இறந்துவிடுகிறார்கள். இது உலக சுகாதார புள்ளியின் விபரப்படி நிரூப்பிக்கப்பட்டதாகும். ஆனால் மத்திய ஜப்பானியர்கள் 90 வயதை தாண்டி 112 மற்றும் 100 வயது வரை வாழ்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.



கோடை காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க!
[Sunday 2024-03-10 16:00]

வெயில் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே அதிக சூரிய ஒளி நம்மை சோர்வடைய வைத்துவிடும். இதற்கு முக்கிய காரணம் நமது உடம்பிலிருந்து வெளியேறும் அதிகப்படியாக வியர்வை தான்.



தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் என்ன பயன்?
[Saturday 2024-03-09 15:00]

நமது உடல் ஆரோக்கியத்திற்கு நட்ஸ் சாப்பிடுவது மிகவும் பயன் தரும். அந்த வகையில் பாதாமை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பாதாமில் அதிக நார்ச்சத்து மற்றும் கூடுதலான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன.



ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மிளகு குழம்பு!
[Friday 2024-03-08 18:00]

தொன்று தொட்டு சமையலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிளகு உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மிளகில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அது தவிர, நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்றாகவும் மிளகு உள்ளது. மிளகில் செய்யப்பட்ட ரசம் கண்டிப்பாக நாம் அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இருப்பினும், மிளகு குழம்பு பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.



மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கும் கருணைக்கிழங்கு!
[Thursday 2024-03-07 18:00]

நமது உடலில் ஏற்படும் நோய்களை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாமல் இருப்பதை கூட ஆரோக்கியமான உணவுகள் குணப்படுத்துகின்றன. இயற்கையில் கிடைக்கூடிய உணவுகளை நாம் தவறவிடாமல் அதை உண்பது அவசியம். அந்த வகையில் கருணைக்கிழங்கு உண்பதால் இது உடலில் என்னென்ன நோய்கள் குணமாகின்றது மற்றும் என்னென்ன பயன் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் முருங்கைக்காய்!
[Wednesday 2024-03-06 18:00]

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது. தற்காலத்தில் முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கொய்யா பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?
[Tuesday 2024-03-05 17:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கக்கூடிய பழங்களுள் கொய்யா முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த பழத்தில் ஆப்பிள் பழத்தை விடவும் அதிகமாக வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலில் நோய்டியதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொய்யா பெரும் பங்கு வகிக்கின்றது. அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.



தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்!
[Monday 2024-03-04 18:00]

முன்னொரு காலத்தில் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலே மோர் கொடுக்கும் பழக்கம் இருந்தது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் கோடை காலத்திற்கு ஏற்ற பானம் என்றால் அது மோர் தான். மோரில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், உப்பு என மருத்துவகுணங்கள் நிறைந்த பொருட்களுடன் தயாரிக்கும் போது மிகச்சிறந்த பானமாக மாறுகிறது.



குடல் புழுவை உடனே வெளியேற்றும் சுண்டைக்காய் துவையல்!
[Sunday 2024-03-03 16:00]

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.



சப்போட்டா பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
[Saturday 2024-03-02 19:00]

சப்போட்டா பழம் அதிக சத்துள்ளதுடன், விலை மலிவாகவும் கிடைக்கின்றது. இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சப்போட்டா, "சிக்கூ" என்றும் அழைக்கப்படும், ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதில் பல வைட்டமின்கள் இருக்கின்றது.



உடல் ஆரோக்கியத்தில் நாம் செய்யும் தவறுகள்!
[Friday 2024-03-01 18:00]

நாம் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நாம் பல நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கலாம். அந்த வகையில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல ஆரோக்கிய வழிகளை கூட தவறான வழிமுறையில் செய்கிறோம். அந்த தவறான வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



குதிக்கால் வெடிப்புக்கு உடனடி தீர்வு!
[Thursday 2024-02-29 18:00]

பெண்கள் எதிர்நோக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளுள் ஒன்று குதிக்கால் வெடிப்பு இதனை ஆரம்பத்திலே சரிசெய்ய வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாதங்களை பாரியளவில் சேதப்படுத்தி பார்ப்பதற்கு அவலட்சணமாக மாற்றி விடும்.எவ்வளவு தரமான பாதணிகளை அணிந்தாலும் பாதங்களில் வெடிப்பு காணப்பட்டால் இது மொத்த அழகையும் கெடுத்துவிடும்.



தினசரி 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Wednesday 2024-02-28 18:00]

கடவுள் எமக்கு அளித்த எண்ணற்ற வரப்பிரசாதங்களில் ஒன்று தான் அத்திப்பழம், மற்ற பழங்களை விட இதில் நான்கு மடங்கு சத்துக்கள் உண்டு. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா