Untitled Document
July 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்: - மீட்கப்பட்ட 6 பெண்கள்
[Friday 2017-07-14 08:00]

புதுச்சேரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்துள்ள நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி மாநிலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் டிரடிஷனல் ஸ்டைல் பியூட்டி & ஆயுர்வேதிக் கிளினிக் என்ற மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது.இங்கு வந்து செல்லும் நபர்களின் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்துள்ள நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி மாநிலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் டிரடிஷனல் ஸ்டைல் பியூட்டி & ஆயுர்வேதிக் கிளினிக் என்ற மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது.இங்கு வந்து செல்லும் நபர்களின் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  

இதைத் தொடர்ந்து பொலிசார் குறித்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.அதன் பின் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பொலிசார், உடனடியாக அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மசாஜ் சென்டரை நடத்தி வந்தவர் திண்டிவனத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இந்த அதிரடி சோதனையில் கார்த்திக் மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி தமிழ்ச் செல்வி, சாமிப்பிள்ளைத் தோட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி உள்ளிட்ட நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து 12-செல் போன்கள் மற்றும் 20-ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சோதனையின் போது தமிழகத்தின் கடலூர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 6-பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



பணத்திற்காக நடிகையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டேன்: - காதலன் வாக்குமூலம்
[Wednesday 2017-07-26 17:00]

பணத்திற்காக நடிகையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதாக முன்னால் காதலன் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.பிரபல மலையான நடிகை மைதிலி படத்தயாரிப்பு நிர்வாக இயக்குநர் கிராண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.



பதற்றத்தில் 44 மீனவ கிராமங்கள்: - குமரியில் சஜாக் ஆப்ரேஷன்
[Wednesday 2017-07-26 17:00]

இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கன்னியாகுமரியில் சஜாக் ஆப்ரேஷன் நடந்தது.



உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டம்!
[Wednesday 2017-07-26 13:00]

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தின் தமிழ் போராட்டக்குழுவினர் நாளை முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மதுரை காளவாசலில் நாளை காலை 9 மணி முதல் இப்போராட்டம் தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைக்க இருக்கிறார்.



சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தவரின் மகன் இன்று இந்தியாவின் ஜனாதிபதி!
[Wednesday 2017-07-26 12:00]

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார்.1945 ஆம் ஆண்டு தெஹாத் கான்பூர் மாவட்டத்தில் தலித் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்துள்ளார்.இவரின் தந்தையின் பெயர் மைகுலா, 5 மகன்கள் மற்றும் 2 பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ராம்நாத் கடைக்குட்டியாகப் பிறந்தார்.



பேஸ்புக்கில் காதலியின் படத்தை வெளியிட்ட காதலன்: -மிரட்டி பணம் பறிப்பு
[Wednesday 2017-07-26 12:00]

காதலியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு அவர் குடும்பத்தாரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ரஹீம், இவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.



ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 106வது நாளாக மக்கள் போராட்டம்!
[Wednesday 2017-07-26 12:00]

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 106வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி முதல் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர்.நாள்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வரும் மக்கள், நேற்றைய தினம் மத்திய மாநில அரசுகளை கல்லால் அடித்து விரட்டுவது போல் சித்தரித்தனர்.



ஜீவசமாதி அடைவதற்காக ஒருவேளை சாப்பிடும் முருகன்!
[Wednesday 2017-07-26 07:00]

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜிவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி முருகன் ஜீவ சமாதி அடைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்வதாகவும், 18ம் தேதி முதல் பழங்களை மட்டும் ஆகாரமாக எடுத்துக்கொள்வதாகவும் கூறியதாக சிறைத்துறை போலீசார் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



சமுதாயத்தை நல்வழிப்படுத்த திருக்குறளை கண்டிப்பாக கற்பிக்க வேண்டும்: - நீதிபதி நெகிழ்ச்சி
[Wednesday 2017-07-26 07:00]

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நீதிபோதனை வகுப்பில் திருக்குறளைப் படிக்கவைக்க வேண்டும்' என, 2016-ம் ஆண்டு மே மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, நீதிபதிகள் உத்தரவின்படி திருக்குறளை, மாணவர்களுக்கு எளிமையான கையேடாக மாற்றினார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் அதலையூர் சூரியக்குமார்.



மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை: - தடுக்க முயன்ற மனைவி மகள் அடித்து கொலை
[Tuesday 2017-07-25 18:00]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெற்ற மகளையே குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை தடுக்க முயன்றதால் மனைவி மற்றும் மகளை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளன. அஞ்செட்டியில் வசிக்கும் ஓட்டுநர் ஷேசத்திரிக்கு குமுதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளன. நேற்று நள்ளிரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஷேசத்திரி தனது 10-ம் வகுப்பு படிக்கும் மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துளார். அதை கண்டு தடுத்த அவரது மனைவி குமுதாவுக்கும் ஷேசத்திரிக்கும் கடும் சண்டை நடந்துள்ளது.



வாழ்க்கை ஒரு வட்டம் தயாராயிருங்க: - முதல்வருக்கு எச்சரிக்கை விடுக்கும் தி.மு.க
[Tuesday 2017-07-25 18:00]

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிராக கருத்துகளை எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது சகட்டுமேனிக்கு வழக்குகள் பாய்ந்தன. பலர் கைது நடவடிக்கைகளுக்கும் ஆளானார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசும் சமூக ஆர்வலர்கள் பலரை தொடர்ந்து கைது செய்துவருகிறது. இந்நிலையில் இந்தக் கைதுப் பட்டியலில் இன்று இணைந்திருக்கிறார் 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி.



14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்!
[Tuesday 2017-07-25 12:00]

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் நாட்டின் முதல் குடிமகன் என்றும் பெருமைமிக்க பதவியான குடியரசுத் தலைவர் பதவியில் ராம்நாத் கோவிந்த் வரும் 5 ஆண்டுகளுக்கு இருப்பார்.



குடி போதையில் மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபர்: - பரபரப்பு வாக்குமூலம்
[Tuesday 2017-07-25 12:00]

பள்ளிக்கூட மாணவியை குடி போதையில் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள திருப்போரூரை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர்விழி (45). இவருக்கு திவ்யா (23) தனலட்சுமி (13) என்ற மகள்களும் அருண்குமார் (18) என்ற மகனும் உள்ளார்.



பார்வையாளர்களை மிரள வைத்த ஆகாய அசுரன் மிக் 35 ரக போர் விமானம்!
[Tuesday 2017-07-25 07:00]

இந்தியாவுக்கும் மிக் ஏர்கிராஃப்ட் நிறுவனத்துக்கும் நெருக்கம் அதிகம். கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யாவின் இந்த நிறுவனத்துடன் இந்தியா வர்த்தக தொடர்பு கொண்டிருக்கிறது. இந்திய விமானப்படையில் பல ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கும் மிக்- 29 ரக போர் விமானம் இந்நிறுவனத்தின் தயாரிப்புதான்.



தமிழக அரசியலில் புதுவரவாக களம் இறங்கியிருக்க்கும் புதிய அம்மா!
[Tuesday 2017-07-25 07:00]

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் களம் இறங்கியிருக்கிறார் ‘அம்மா’! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு வந்தார் அவரது உயிர்த் தோழியான ‘சின்னம்மா’ சசிகலா. ஆனால், வந்த வேகத்திலேயே, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாராவுக்கும் சென்றுவிட்டார்.



எடப்பாடி பழனிசாமியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்: - கலெக்டரிடம் இளைஞர்கள் மனு
[Tuesday 2017-07-25 07:00]

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரம் வழங்கியதுக்காக மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை சிறைக்கு அனுப்பப்பட்டார்.



சப்பாத்தியை ஏன் வட்டமாகச் சுடவில்லை: - சிம்ரனை அடித்து கொன்ற கணவன்
[Monday 2017-07-24 18:00]

சப்பாத்தியை வட்டமாகச் சுடவில்லை என்பதற்காக கர்ப்பமாக இருந்த தன் மனைவியை அடித்து கொன்றுள்ளார் டெல்லி இளைஞர் ஒருவர். இதுகுறித்து ஆங்கிலச் செய்தித்தளத்தில் வெளியான விவரம் பின்வருமாறு...



தமிழ்நாட்டில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் வெப்பம் அதிகரிப்பு: - மக்கள் கவலை
[Monday 2017-07-24 12:00]

தமிழகத்தில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேகங்கள் அற்ற தெளிவான வானம், காற்று கீழிறங்கி அழுத்தம் பெறுதல், மேற்கிலிருந்து மிதமாக வீசும் வடகாற்று ஆகியவை வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.



துடைப்பத்தை காணிக்கையாகச் செலுத்தி வழிபடும் விசித்திர சிவன் கோயில்!
[Monday 2017-07-24 12:00]

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு, சவான் மாதத்தின் மூன்றாம் திங்கள்கிழமையான இன்று, அனைவரும் துடைப்பத்தை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.



குஜராத்த்தில் கடும் மழை: - வெள்ளத்தில் மிதக்கும் மாநிலம்
[Monday 2017-07-24 08:00]

குஜராத் மாநிலத்தில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்துவருகிறது. குறிப்பாக பனஸ்கந்தா, சபர்கந்தா போன்ற வடக்கு மாவட்டங்கள் மற்றும் வல்சாத் போன்ற தெற்கு மாவட்டத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



கர்ப்பிணிப் பெண்ணை மூங்கில் மூலம் சுமந்து சென்ற உறவினர்கள்: - புதிய இந்தியாவிலும் மாறாத காட்சி!
[Monday 2017-07-24 08:00]

ரூபாய் நோட்டு வாபஸ், ஜி.எஸ்.டி அமல் என கடந்த மூன்று ஆண்டுகளில், பல முறை புதிய இந்தியா பிறந்துவிட்டதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு கிராமங்களில் இன்னும் மருத்துவச் சேவைக்கே படாதபாடு படவேண்டியதாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது உறவினர்களின் சடலங்களைத் தோளில் சுமந்துசென்ற கொடுமையைப் பார்த்திருப்போம்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா