Untitled Document
November 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண்ணை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறை!
[Friday 2017-07-14 08:00]


கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2013ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய 43 வயதுடைய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2013ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய 43 வயதுடைய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் Vicente Arbis என்ற நபருக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார்.2013ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13ம் திகதி அன்று டொரொன்டோவின் வடமுனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.அன்றைய தினம் காலை 11 மணியளவில் ட்ரக் வண்டி ஒன்றை ஓட்டிச் சென்ற Arbis என்பவர், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மோதியமையினால் விபத்து நிகழ்ந்துள்ளது.இதன்போது ரஞ்சனா கனகசபாபதி என்ற 52 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

ரஞ்சனா கனகசபாபதி என்ற பெண் கோவிலுக்கு சென்ற போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபர் தொலைபேசியை பேசியவாறு தவறான வழியில் வாகனத்தை ஓட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 10 ஆண்டுகளுக்கு சாரதியாக செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comசீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தண்ணீர் நடன திருவிழா!
[Monday 2017-11-20 14:00]

தென்மேற்கு சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தண்ணீரில் நடனமாடும் விழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கியுஸூ மாகாணத்தின் கலாச்சாரத்தை உணர்த்தும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தண்ணீரில் அரங்கேற்றப்படும் நடனம் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையம்!
[Monday 2017-11-20 08:00]

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத்திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை பின்பற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மகளிர் நோய் தொடர்பான ஆன்லைன் இதழ் கடந்த அக்டோபர் 26ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:நியூ கலிடோனியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: - ரிக்டர் அளவில் 7ஆக பதிவு
[Monday 2017-11-20 07:00]

ஆஸ்திரேலியா அருகே பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் நியூ கலிடோனியா மற்றும் அருகில் உள்ள வனூவாட் பகுதிகளில் சிறிய அளவு சுனாமி தாக்கியது.வியாழன் கிரகத்தில் கடும் புயல்: - நாசா விஞ்ஞானிகள் தகவல்
[Monday 2017-11-20 07:00]

வியாழன் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமிரா வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்ப நிலைப்பாடுகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.சொத்துகளை எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள்: - சவுதி அரசு நிபந்தனை
[Saturday 2017-11-18 16:00]

சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. சவுதியின் பெரும் பணக்காரரான அல் வலீத் பின் தலாலும் ஊழல் ஒழிப்புக் குழுவின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பவில்லை.வெற்றிகரமாக நடந்த பிணத்துக்கு தலைமாற்றும் ஆபரேசன்: -மனிதர்களுக்கு பொருத்த திட்டம்
[Saturday 2017-11-18 16:00]

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடைபெறுவது சகஜமாகி விட்டது. அதன் அடிப்படையில் தலைமாற்று ஆபரேசன் நடத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.ரஷியாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று ஆபரேசன் நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று ஆபரேசன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.அர்ஜெண்டினாவில் 44 பேருடன் மாயமான ராணுவ நீர்மூழ்கி கப்பல்!
[Saturday 2017-11-18 15:00]

அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது.தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி: - அமெரிக்கா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
[Saturday 2017-11-18 09:00]

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பிற எந்த நாட்டைக் காட்டிலும் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பலி!
[Saturday 2017-11-18 09:00]

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.குழந்தை பிறந்த பிறகு காதலனை கைப்பிடித்த டென்னிஸ் ஜாம்பவான் செரீனா!
[Friday 2017-11-17 18:00]

டென்னிஸ் உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். 36 வயதாகும் செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியனை காதலித்து வந்தார்.வானில் திடீரென தோன்றிய மர்மப்பொருளால் ஜேர்மனியில் பரபரப்பு!
[Friday 2017-11-17 18:00]

ஜெர்மனியில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள் வானில் பறந்து சென்றுள்ளது. பந்து போன்று காணப்பட்ட அந்த பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.இதனால் ஒளியுடன் பறந்த அந்தப் பொருள் விண்கல்லா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ஒபாமா: - இளம் தலைவர்களுக்கு அழைப்பு
[Friday 2017-11-17 17:00]

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒபாமா பேசும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அவர், 'இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் இளம் தலைவர்கள் அனைவரையும் நாங்கள் ஒன்றிணைக்கவுள்ளோம். இந்தியா முழுவதும் பல்வேறு ஆக்கபூர்வமான பணியில் ஈடுபட்டுவரும் இளம் தலைவர்களுடன் நான் உரையாற்ற விரும்புகிறேன்.அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் சீனா பேச்சுவார்த்தை!
[Friday 2017-11-17 08:00]

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சீனா தயாராகி உள்ளது.கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், ’அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, 'நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை' என மறுத்தது.தற்கொலை செய்ய விரும்பியவர்களை கொலை செய்த ட்விட்டர் கொலையாளி!
[Friday 2017-11-17 08:00]

தற்கொலை எண்ணம் உடைய சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு அவர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜப்பானிய நபர் குறித்த செய்தியால் தாம் மிகவும் கவலையுற்றிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.ஜப்பானில் சீக்கிரமாக புறப்பட்டதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்!
[Friday 2017-11-17 08:00]

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 20 நொடிகள் முன்னதாக ரெயில் புறப்பட்டதற்காக ஜப்பான் ரெயில்வே நிர்வாகம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.பொதுவாக போக்குவரத்துக்கான வண்டிகள் கால தாமதமாக புறப்பட்டோ அல்லது வந்தோ சேருமானால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.ஆஸ்திரேலியாவில் ஓரின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதா: - நாடாளுமன்றத்தில் தாக்கல்
[Thursday 2017-11-16 16:00]

ஓரின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஓரின திருமணத்தை அங்கிகரிக்க கோரி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்புக்கு 60% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் பண்டிகை தொடங்கும் முன் இதற்கான சட்டம் ஏற்றப்பட்டு ஓரின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படும் என ஆஸ்திரோலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வாக்குறுதி அளித்துள்ளார்.மூடுபனியால் 30 வாகனங்கள் மோதி விபத்து: - சீனாவில் 18 பேர் பலி
[Thursday 2017-11-16 16:00]

சீனாவின் புயாங் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் அடுத்தடுத்து 30 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியுள்ளன. இதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்: - லிபியாவில் நடைபெறும் கொடூரம்
[Thursday 2017-11-16 15:00]

வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவி வெறிபிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம்!
[Thursday 2017-11-16 15:00]

500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. ’சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடத்திலேயே 450.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.தொலைக்காடசி நேரடி உரையின்போது அநாகரீகமான முறையில் தண்ணீர் குடித்த டிரம்ப்!
[Thursday 2017-11-16 15:00]

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நாடு திரும்பிய அவர் இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக டெலிவி‌ஷனில் நேரடி உரை நிகழ்த்தினார்.அப்போது அவருக்கு திடீர் தாகம் ஏற்பட்டது. இதனால் பக்கத்தில் தண்ணீர் பாட்டில் ஏதும் இருக்கிறதா? என்று தேடினார். அவர் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு கீழே சிறிய பெஞ்சில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய உதவியாளர் அதை அவருக்கு சுட்டிக்காட்டினார்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா