Untitled Document
September 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை: - மீண்டும் ஒரு ஆவணம் கண்டுபிடிப்பு!
[Sunday 2017-07-16 16:00]

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1947-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்று பிரான்ஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர்  கூறியுள்ளார். தைவான் நாட்டில் 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டார் என்கிறது மத்திய அமைச்சகத்தின் ஆவணங்கள். மேலும் கடந்த ஜனவரி மாதம், (நேதாஜியின் 120வது பிறந்தநாள் அன்று) நேதாஜி மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1947-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்று பிரான்ஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். தைவான் நாட்டில் 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டார் என்கிறது மத்திய அமைச்சகத்தின் ஆவணங்கள். மேலும் கடந்த ஜனவரி மாதம், (நேதாஜியின் 120வது பிறந்தநாள் அன்று) நேதாஜி மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  

இந்நிலையில் நேதாஜி மரணம் தொடர்பான பிரெஞ்சு ரகசிய ஆவணம் ஒன்றை வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே கண்டறிந்துள்ளார். அவர் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவர். மோரேக்கு கிடைத்துள்ள அந்த ஆவணங்களில் 1947-ம் ஆண்டு நடந்த தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். அந்த விமான விபத்தில் இறந்தது நேதாஜிதான் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்று மோரே தெரிவித்துள்ளார். மத்திய அரசு நேதாஜி மரணம் தொடர்பாக இதுவரை மூன்று விசாரணைக் கமிஷன்கள் அமைத்து ஆவணங்களை வெளியிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார் என்பதற்கு போதுமான சான்று இல்லை. இந்நிலையில் மோரே வெளியிட்டுள்ள இத்தகவல் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் இனத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம்: - திருமுருகன் காந்தி சூளுரை
[Wednesday 2017-09-20 18:00]

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, அதில் பங்கேற்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள்மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.



உயிரிழப்பிற்கு காரணமான கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை: - அரசு புதிய சட்டம்
[Wednesday 2017-09-20 17:00]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பண்டிகை காலங்களின் போது கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த இந்த சாராயத்தை பருகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இந்த உயிரிழப்பிற்கு காரணமான சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.



தமிழின கலாச்சாரத்தை அழிக்க துடிக்கும் இந்திய அரசு: - ஐ.நா சபையில் கவுதமன்
[Wednesday 2017-09-20 17:00]

ஜெனிவா: தனித்தன்மை கொண்ட தேசிய இனங்களை இந்திய அரசு காவு வாங்க நினைப்பதாக ஐ.நா சபையில் பேசிய திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் புகார் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்ட தொடரின் 2ம் வார நிகழ்வுகள் துவங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கவுதமன், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பைடையால் சுட்டுக்கொல்லப்படுவதாக தெரிவித்தார்.



தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: - சுப்ரமணியன் சுவாமி
[Wednesday 2017-09-20 07:00]

ஆளும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கூறிவந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், இரண்டு வாரத்துக்குள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.



தாய்மொழியில் பேசுங்கள்: - துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு
[Wednesday 2017-09-20 07:00]

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: "பெற்ற தாயையும், தாய் நாட்டையும், பிறந்த பூர்வீக ஊரையும், தாய் மொழியையும் நாம் என்றைக்குமே மறந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.



தகாத உறவைப் பார்த்ததால் என் மகனை கொன்று விட்டார்கள்: - கதறும் தாய்
[Tuesday 2017-09-19 17:00]

"தகாத உறவைப் பார்த்ததால் என் மகனைக் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார்கள். என் மகன் உயிருக்கு நீதி கிடைக்கும் வரையிலும் விடப்போவதில்லை" என்று ஒரு தாய் குமுறுகிறார். இந்தக் கொடூர நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில்தான். அரியலூர் மாவட்டம் புங்கங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்த அன்பழகன்- பாப்பாத்தி தம்பதிக்கு மூன்றாவது மகன் அறிவழகன்.



இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரச வேலை இல்லை: - அரசு அதிரடி
[Tuesday 2017-09-19 16:00]

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலையோ உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ இனி இல்லை என்ற அதிரடி திட்டத்தை அசாம் அரசு கொண்டுவந்துள்ளது. அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது.



12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்!
[Tuesday 2017-09-19 07:00]

12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.



திருமுருகன் காந்தி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!
[Tuesday 2017-09-19 07:00]

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில், திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, அதில் பங்கேற்றவர்களை போலீஸார் கைதுசெய்தனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள்மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.



பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க அற்புதம்மாள் கோரிக்கை மனு!
[Tuesday 2017-09-19 07:00]

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாத கால பரோல் கிடைத்துள்ள பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.



டாக்டர் சீட்டுக்கு தகுதி பெறாத மனைவியை எரித்துக்கொன்ற கணவர்: - பெற்றோர் புகார்
[Tuesday 2017-09-19 07:00]

மனைவியை எரித்துக்கொன்றதாக கணவர் மீது உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நகோல் பகுதியைச் சேர்ந்த ஹரிகா என்பவர் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு போதிய மதிப்பெண் இல்லாததால் பல் மருத்துவத்திற்கான இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முந்தினம் ஹரிகாவின் கணவர், அப்பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்து ஹரிகா உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்ததாக கூறியுள்ளார்.



ஆசிரியர் அடித்ததில் மாணவர் மூளைச்சாவு: - அதிர்ச்சி சம்பவம்
[Monday 2017-09-18 18:00]

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்- சின்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். இந்த மாணவனைக் குப்புசாமி என்ற ஆசிரியர் அடித்ததில் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விஸ்வேஸ்வரனின் அம்மா சின்ராஜிடம் கேட்டபோது,



மகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்று விட்டு தாயும் தற்கொலை: - சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
[Monday 2017-09-18 18:00]

மகளுக்கு விஷ ஊசி செலுத்தி அவர் உயிரிழந்த நிலையில், தாயும் விஷ ஊசி செலுத்தி கொண்டு உயிரை விட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி நகரை சேர்ந்தவர் ராம்பால் சிங், இவர் மனைவி பரம்ஜித் கவுர் (38), இவர்களுக்கு சுக்மந்தீப் கவுர் (12) என்ற மகள் உள்ளார்.பரம்ஜித் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.



நண்பர்களுடன் இணைந்து மாமியாரை பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகன்!
[Monday 2017-09-18 18:00]

மாமியாரை மருமகன் உட்பட மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் ஜோதி, இவர் தனது மகளை செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.



தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம்: - சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
[Monday 2017-09-18 13:00]

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



மூன்று ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் மருத்துவர்!
[Monday 2017-09-18 08:00]

மூன்று ஆண்களை வெவ்வேறு காலகட்டத்தில் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சரிதா (37), ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ளார்.



எனது கணவரை தமிழ் மண்ணில் புதைக்க வேண்டும்: -நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மூதாட்டியின் வைராக்கியம்
[Monday 2017-09-18 08:00]

கேரளாவில் உயிரிழந்த எனது கணவரை தமிழ் மண்ணில் புதைக்க வேண்டும் என 60 வயது மூதாட்டி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தைசேர்ந்த காசி (62)- சகுந்தலா(60) தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.



வாட்ஸ்-அப்பில் காதலனுக்கு நிர்வாண படத்தை அனுப்பி மாட்டிக்கொண்ட மருத்துவ மாணவி!
[Monday 2017-09-18 08:00]

காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் பல் மருத்துவ மாணவி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற்றுவதாக கூறி மணந்த தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுப்பதால் விரக்தி அடைந்த மாணவியின் நிலை மேலும் மோசமாகி உள்ளது.பெங்களூருவில் வசித்துவரும் 20 வயது பல் மருத்துவ மாணவி 2015-ம் ஆண்டு ஒருவரை தீவிரமாக காதலித்தார். இருவரும் வாட்ஸ்-அப்பில் அரட்டை அடித்து வந்தனர். அப்போது, நிர்வாண படத்தை அனுப்பும்படி மாணவியிடம் காதலன் கேட்டதால் அவர் மீதான நம்பிக்கையில் தனது நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார்.



ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க ஜெனிவா செல்கிறார் வைகோ!
[Sunday 2017-09-17 17:00]

ஐ.நா-வின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் வைகோ.ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ.



கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்: - பாகிஸ்தான் போலீஸ்காரரின் விருப்பம்!
[Sunday 2017-09-17 17:00]

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டைலான பேட்டிங், துணிச்சல், ஆக்ரோஷமான அணுகுமுறை என விராட் கோஹ்லியிடம் உள்ள ஒவ்வொரு சிறப்பம்சமும் ரசிகர்களை ஈர்க்கிறது. இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானில் கூட விராட் கோஹ்லிக்கு கணக்கிட முடியாத எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தான்-உலக லெவன் இடையே, லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளின்போது, இதை உணர முடிந்தது. விராட் கோஹ்லி, டோனி போன்ற இந்திய வீரர்கள், உலக லெவன் அணியில் இடம் பெறாத ஏக்கம், மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டிய பேனரில் வெளிப்பட்டது.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா