Untitled Document
February 25, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
நீண்ட காலம் வாழ உதவும் கோப்பி: - ஆய்வில் தகவல்
[Monday 2017-07-17 08:00]

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.
உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

ஆனால் அதை காபி அருந்துபவர்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று கூறலாமே தவிர, காபியில் பாதுகாப்பு விளைவு உள்ளதாகக் குறிப்பிடுவது சாத்தியமற்றது என நிச்சயமாகக் கூறலாம் என்று சந்தேகத்துடன் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.எனவே, கூடுதலாக ஒரு கப் காபிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

புதிய ஆய்வு கூறுவது என்ன?

அதிகமாக காபி அருந்துவது, மரணம் நேருவதற்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்றும் குறிப்பாக இதய நோய்கள் மற்றும் குடல் நோய்களுடன் உள்ளவர்களுக்கு இது பொருந்தும் என்று புற்று நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஐரோப்பிய யூனியனில் உள்ள பத்து நாடுகளைச் சேர்ந்த 35 வயதுக்கும் அதிகமான ஆரோக்கியமாக வாழும் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுக்கு பிறகு, இந்த முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

ஆய்வின் தொடக்கத்தில் எவ்வளவு காபி குடிக்கின்றனர் என்று அந்த மக்களிடம் ஆய்வாளர்கள் கேட்டனர். பிறகு, அவர்களில் சராசரியாக 16 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களை அனுமானித்தனர்.பொதுமக்களால் உணரப்படும் ஆபத்து பற்றி ஆய்வு செய்த பிறகு, காபியால் மரணங்கள் குறைவதாக மதிப்பிட்டால், தினமும் கூடுதலாக காபி குடிப்பதால் ஒருவரின் ஆயுள் சுமார் மூன்று மாதங்களும் ஒரு பெண்ணின் ஆயுள் சராசரியாக ஒரு மாதமும் அதிகமாகலாம் என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீக்ஹால்டர்.

ஆனால், இதுபோன்ற ஆய்வு அளவு கோல் இருந்தாலும், காபி கொட்டைகளை மாயாஜால மூலப்பொருள் என்பதை மிகச்சரியாக அர்த்தம் கொள்ள முடியாது. அதை நிரூபிக்கவும் இயலாது என்கிறார் அவர்.எதற்காக நீங்கள் அவசரப்பட்டு, அதிக காபியை வாங்க வேண்டும்?இந்த கண்பிடிப்புகள், அவை முதலில் தோன்றியது போல மிகத் தெளிவாக இல்லை என்பது காபி பிரியர்களை விரக்தியடையச் செய்யலாம்.

காபியின் விளைவுகள் மீது ஒருவரால் எந்த அளவுக்கு நிச்சயத்தன்மையுடன் இருக்க முடியும் போன்ற ஒவ்வொரு காரணியையும் கவனத்தில் கொள்ள ஆய்வுகளால் முடியவில்லை என்பது ஒரு காரணம்.உதாரணமாக, காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, காபி அருந்துபவர்கள் அடைந்த ஆதாயம் என்ன என்பதை அந்த ஆய்வு ஆராயவில்லை.நாளொன்றுக்கு மூன்று கப் காபி வாங்க முடிபவர் பணக்காரராக இருக்கலாம். மேலும், அந்த கூடுதல் பணம், சில வழியில் அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க உதவலாம்.

மூன்று கப் காபி அருந்துவோர், சமூக பழக்க வழக்கங்களுக்காக கூடுதல் நேரத்தை செலவிடலாம் மற்றும் அதன் பலனாக தங்கள் நலனை அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை இதற்கு காபிதான் பொறுப்பு என்றும் அதனால் ஒவ்வொரு ஆபத்தும் மேம்படவில்லை என்றும் அவர்கள் நிச்சயமாக இருந்திருக்கலாம்.உதாரணமாக, அதிகமாக காபி அருந்துவது பெண்களிடையே கருப்பை புற்றுநோய் அதிகரிக்கும் விகிதத்துடன் தொடர்புபடுத்தப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இருப்பினும், ஆய்வில் ஏராளமானோர் உட்படுத்தப்பட்டிருந்தாலும், தொடக்கத்திலேயே நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் அல்லது மாரடைப்பு ஏற்பட்டவர்களை ஆராய்ச்சியாளர்கள் விலக்கி விட்டனர்.

எனவே, உடல் நலமில்லா மக்கள் காபி அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகளையும் பலன்களையும் பற்றி அந்த ஆய்வு பெரிதாகக் கூறவில்லை.அதனால் வழக்கமான பானங்களை அருந்தும்போது சில பேர் உடல் சுகவீனம் அடைந்திருக்கவும் வாய்ப்புள்ளது. காபி உங்களுக்கு நல்லதா?

முந்தைய ஆய்வுகள் முரண்பட்ட மற்றும் மாறுபட்ட முடிவுகளை தெரிவித்துள்ளன.காஃபின் கலந்த பானங்கள், தற்காலிகமாக தங்களை விழிப்புடன்உணரச் செய்வதாக பல பேருடைய அனுபவம் கூறுகிறது.ஆனால், காஃபின் பிறரை விட சில பேரை பாதிப்பதாகவும் அந்த பாதிப்பு ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது.தேசிய சுகாதார சேவை நிபுணர்கள், பொதுப்படையான மக்கள்தொகையில் எவ்வளவு காபி அருந்த வேண்டும் என்பதற்கான வரம்பை நிர்ணயிக்கவில்லை. ஆனால், கர்ப்பிணி பெண்கள் தினமும் 200 மில்லி கிராம் காஃபினுக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

காபி அதிகமாக அருந்துவதால் குழந்தை சிறியதாக பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதால் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.அதிகப்படியான கேஃபைன், கருச்சிதைவுக்கான ஆபத்தை அதிகம் விளைவிக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். காஃபின் என்பது காபியில் மட்டுமல்ல. இரண்டு குவளை தேநீர் மற்றும் ஒரு கேன் கோலா அல்லது உதாரணமாக, இரண்டு கப் உடனடி காபி போன்றவற்றை அருந்துவதாலும், 200 மில்லி கிராம் கேஃபைன் அளவை நாம் எட்டி விட முடியும்.

அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பருவ வயதுடைய ஒருவர், அளவுக்கு அதிகமான காஃபின் கலந்த பானங்களை வேகமாக அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காபியால் உங்களால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என நம்மால் எவ்வாறு நிச்சயமாக இருக்க முடியும்? உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களிடையே காபி அருந்துவதை கட்டாய வழக்கமாக்கியும், மேலும் சில ஆயிரக்கணக்கான மக்களை காபி அருந்துவதில் இருந்து தவிர்க்கச் செய்தும், காபியால் நீண்ட காலம் உயிர் வாழச் செய்ய முடியுமா என மிகக் கடுமையான அறிவியல் வழியில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொருவரின் வாழ்வையும் விஞ்ஞானிகள் கண்காணிக்க வேண்டும்.

உதாரணமாக அவர்கள் என்ன சாப்பிட்டனர் மற்றும் குடித்தனர், அதனால் என்ன பலன் கிடைத்தது, எவ்வளவு உடற்பயிற்சி செய்தனர் போன்றவற்றை ஆராய வேண்டும். அத்தகைய ஆய்வு நடைபெறுவதற்கான சாத்தியமே இல்லை. எனவே, தற்போதைக்கு காபி குடிப்பதால் உங்களுக்கு நல்லது ஏற்படுமா என பந்தயம் கட்டுவதற்கு பதிலாக, உங்கள் ஆயுளை நீட்டிக்க - நீங்கள் காபி குடிக்கவோ அல்லது குடிக்காமல் இருப்பதற்காகவோ, அருகே உள்ள காபி கடை வரை விறுவிறுப்பான 20 நமிட நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்

  
   Bookmark and Share Seithy.comவேகமாக சாப்பிடுபவருக்கு உடல் குண்டாகும் அபாயம்: ஆய்வில் புதிய தகவல்
[Saturday 2018-02-24 13:00]

உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெண்களின் கோபத்தால் வரும் மனவருத்தங்கள்
[Saturday 2018-02-24 10:00]

நன்றாக நெருங்கிப் பழகி கொண்டிருப்பவர்களிடத்தில் திடீரென்று ஏற்படும் மனஸ்தாபம் அவர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விடும். நெருக்கமான நண்பர்களில் ஒருவருடைய செயல்பாடு மற்றவருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும்போது இருவரும் நிதானமாக பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனநிலைக்கு வர வேண்டும்.அயோடின் குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள்
[Saturday 2018-02-24 10:00]

நமது வளர்சிதை ஒழுங்குமுறைக்கான பிரதான பங்கை அயோடின் கொண்டிருக்கிறது. அயோடின் இல்லையென்றால் கடுமையான வளர்ச்சி பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம்.குழந்தைகளின் குறட்டை பழக்கத்திற்கு காரணம்
[Saturday 2018-02-24 10:00]

குழந்தைகளின் குறட்டைப்பழக்கத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களிடம் காட்டி கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.பெண்களுக்கான மாரடைப்பு பாதிப்பு அறிகுறிகள்
[Friday 2018-02-23 15:00]

55 வயதுக்கு கீழிருக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு நோயும், உயிரிழப்பும் ஏற்படுகின்றது. ஆக அறிகுறிகளை அறிந்து கொள்வது தன்னையும் பிறரையும் காப்பாற்ற உதவும்.சருமத்தை பாதுகாக்கும் இயற்கை முறை பேஷியல்
[Friday 2018-02-23 15:00]

முகத்திற்கு தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் சருமத்திற்கு எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.மின்சாரம் தாக்கினால் முதலுதவி அளிப்பது எப்படி?
[Friday 2018-02-23 15:00]

குளியல் அறை மற்றும் சமையல் அறை போன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும்.மாணவர்களின் பரீட்சை பயத்தை போக்குவது எப்படி
[Friday 2018-02-23 15:00]

தேர்வு பயம் மாணவர்கள் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். மாணவர்களின் பரீட்சை பயத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம்.ஆண்களுக்கு பேஷியல் அவசியமா?
[Friday 2018-02-23 15:00]

அழகு என்பது பெண்களுக்கு மட்டுமா சொந்தம். ஆண்களும் அவர்களின் முகத்தை பொலிவாக்க கண்டிப்பாக பேஷியல் செய்து கொள்ள வேண்டும்.மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்
[Thursday 2018-02-22 13:00]

நம்முடைய சில பழக்கங்கள் மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கின்றது என்பதனை அறிந்தால் நாம் அதனை சரி செய்து கொள்ளுவோம் அல்லவா. அவற்றினை இப்பொழுது அறிவோம்.குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது எப்படி?
[Thursday 2018-02-22 13:00]

உடல் பருமனாக இருக்கும் பெண்கள் ஆடைத் தேர்வில் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.பெற்றோர் குழந்தைகளின் கவலையை புரிந்து கொள்வது எப்படி
[Thursday 2018-02-22 12:00]

குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.உடல் எடைக்கும், நீரிழிவு நோய்க்கும் சூப்பரான தீர்வு!
[Thursday 2018-02-22 12:00]

அனைவரது வீட்டு சமையலறையிலும் இருக்கும் நறுமணமிக்க மசாலாப் பொருள் தான் சீரகம். இது , உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் சேர்த்து வரும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது பார்ப்பதற்கு ஓமம் போன்று தான் காணப்படும். ஆனால் இதன் நறுமணம் மற்றும் சுவை வேறுபடும். இந்த சீரகம் உணவிற்கு மணத்தையும், சுவையையும் அளிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது.இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் உணவுகள்!
[Thursday 2018-02-22 12:00]

மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்தல், கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது.உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை
[Wednesday 2018-02-21 18:00]

உலர்திராட்சையில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணம்
[Wednesday 2018-02-21 18:00]

சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள்
[Wednesday 2018-02-21 17:00]

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது .இனி செரிமானக் கோளாறால் வரும் நோய்களைப்பற்றி காண்போம்.குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி
[Wednesday 2018-02-21 17:00]

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி எளிய வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக சாப்பிட வைக்கலாம் என்று பார்க்கலாம்.வழுக்கைத் தலையிலும் முடி வளர செய்யலாம்!
[Wednesday 2018-02-21 17:00]

ஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…வயதானவர்கள் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள்!
[Tuesday 2018-02-20 12:00]

வயதானவர்கள் கடுமையான பயிற்சிகள் செய்ய முடியவில்லை என்றால், மிதமான முயற்சியில் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா