Untitled Document
September 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வெளியேறுவேன் என்று மிரட்டுகிறார் ரஞ்சன்!
[Monday 2017-07-17 08:00]

சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தை விட்டு வெளியேற  நேரிடும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் தொனியில் எச்சரித்தார் என வெளியான செய்திகள் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் தொனியில் எச்சரித்தார் என வெளியான செய்திகள் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

  

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நான் பல முறைப்பாடுகளை செய்தேன். கள்வர்களை பிடிப்பதாக நான் மக்களிடம் வாக்குறுதி அளித்தேன். ஊருக்கு செல்லும் போது கள்வர்களை பிடித்து விட்டீர்களா என ஊர் மக்கள் கேட்கின்றார்கள். நான் இதய சுத்தியுடன் பேசினேன். எனக்கு சந்தர்ப்பம் வழங்கினால் கள்வர்களை ஆதாரங்களுடன் பிடிக்க முடியும்.

கும்பிடப் போன கோயிலின் கூரை தலையில் விழுந்தது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். கடந்த 1956ம் ஆண்டு வோல்டர் தல்கொட பிட்டியவின் அறிக்கைக்கு அமைய அமைச்சரவை அமைச்சர்கள் ஐந்து பேரின் குடியுரிமையை அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க பறித்திருந்தார். அன்று வழக்கு விசாரணை நடைபெறவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் எனவே அவரது உத்தரவுகளை மறுக்க முடியாது. இதேவேளை,அரசாங்கத்தை விட்டு வெளியேறச் சொன்னால் வெளியேற நேரிடும். எனினும் அரசாங்கத்தை விட்டு வெளியேறி என்னால் குரல் கொடுக்க முடியாது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது! - ஜெனிவா கூட்டத்தில் ஐ.நா விசேட பிரதிநிதி Top News
[Wednesday 2017-09-20 20:00]

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது என ஐ.நாவின் விசேட பிரதிநிதி பேராசிரியர் அல்பிரட் சயஸ் தெரிவித்தார். பிரான்ஸ் தமிழர் மனித உரிமையத்தின் ஒருங்கிணைப்பில் உலக அணி (Global Allianes) என்ற அமைப்பினால் ஜெனிவாவில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



எழிலன் படையினரிடம் சரணடையவில்லையாம்! - இராணுவ அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியம்
[Wednesday 2017-09-20 19:00]

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தன நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து பதவியில் இருக்கவே கிழக்கு முதல்வர் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு! - விக்னேஸ்வரன்
[Wednesday 2017-09-20 19:00]

தொடர்ந்தும் பத­வியில் இருப்­ப­தற்­கா­கவே இரு­பதாம் திருத்த சட்­டத்தை கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஆத­ரித்­துள்­ள­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தெரிவித்துள்ளார். கைத­டியில் அமைந்­துள்ள முத­ல­மைச்சர் செய­ல­கத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.



உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடாது தமிழரசு! - சம்பந்தன்
[Wednesday 2017-09-20 19:00]

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே போட்டியிடும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவில் ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டி!
[Wednesday 2017-09-20 19:00]

அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு சென்ற பெற்றோருக்கு பிறந்த கிரிஷாந்தி விக்னராஜா என்ற இலங்கை பெண்ணே தேர்தலில் போட்டியிடவுள்ளார். இலங்கை பூர்வீகத்தை கொண்ட அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக தப்பிச் சென்ற அவரது குடும்பத்தினர் மேரிலாந்தில் குடியேறினர்.



மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் நிறைவேற்றியது!
[Wednesday 2017-09-20 19:00]

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பிலான இரண்டாவது மதிப்பீடு மூன்றிலில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தார். இதனடிப்படையில், இன்றுமாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.



குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறீலங்காவை பரிந்துரைக்க வேண்டும்! - ஜெனிவாவில் கஜேந்திரகுமார்
[Wednesday 2017-09-20 19:00]

சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் கலந்து கொண்டு இன்று உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.



நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத் தூபி அமைக்க ஞானசாரர தேரர் ஆதரவு!
[Wednesday 2017-09-20 19:00]

தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்கு நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தாலும் பிரச்­சினை இல்லை என்று பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­ ப­ல­சேனா கட்சி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­ கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.



சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க, அனுஷவுக்கு பிணை!
[Wednesday 2017-09-20 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்டவுக்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் அவர்களை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, விடுவித்தார்.



மானிப்பாயில் போதைப் பொருளுடன் 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!
[Wednesday 2017-09-20 19:00]

மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப்பொருள் பக்கற்றுக்கள் நான்கு அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! - வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் Top News
[Wednesday 2017-09-20 19:00]

திருகோணமலை - கிளிவெட்டி 03 ஆம் கொலனி லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இந்த வருடத்தில் 05 பேர் இப்பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் தமக்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டுமென தெரிவித்து சேருநுவர பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை பிரதேச மக்களால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்தார் ஜனாதிபதி! Top News
[Wednesday 2017-09-20 19:00]

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முறையாகச் சந்தித்தார். இதன்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பாரியார் ஜயந்தி புஷ்பா குமாரியும் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடனிருந்தனர்.



2020இல் இலங்கையைச் சூழப் போகும் இருள்! - ஆணைக்குழு எச்சரிக்கை
[Wednesday 2017-09-20 07:00]

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கடுமையான மின்பற்றாக் குறையை எதிர்கொள்ளும் என்று பொதுவசதிகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. மின்சார உற்பத்தி, பயன்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் மின் ​சேமிப்பு என்பன தொடர்பில் பொது வசதிகள் ஆணைக்குழு அண்மையில் ஆய்வொன்றை நடத்தியிருந்தது.



ஒரு நாட்டிற்குள் சந்தோஷமாக வாழும் மக்களாக இலங்கை மக்களை மாற்றுவதே எனது நோக்கம்! - ஐ.நாவில் ஜனாதிபதி உரை
[Wednesday 2017-09-20 07:00]

இலங்கை மக்களை, உலகில் சந்தோஷமாகவும் ஒரு நாட்டிற்குள் வாழும் மக்களாகவும் மாற்றுவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 72 பொதுச்சபை கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.



இலங்கைத் தமிழ் அகதிகளை நாடு கடத்தக் கோருகிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர்!
[Wednesday 2017-09-20 07:00]

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்கியா அகதிகளை இந்திய மத்திய அரசு மியன்மாருக்கு நாடு கடத்துமானால், இலங்கை தமிழ் அகதிகளையும் நாடு கடத்த வேண்டும் என காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றில் முதல் முறையாக வாய்திறந்தார் மஹிந்த!
[Wednesday 2017-09-20 07:00]

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உருவான பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷ முதன் முறையாக பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பினார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது, முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ, "உள்ளூராட்சி சபை தேர்தல் எப்போது இடம்பெறும்" என கேள்வி எழுப்பியிருந்தார்.



பாகிஸ்தான் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரி பேச்சு! Top News
[Wednesday 2017-09-20 07:00]

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அபாஸியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிராந்தியம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், இரு நாட்டு உறவுகள் பற்றியும் அர்த்தபூர்வ பேச்சுவார்த்தைகள் இச்சந்திப்பின்போது இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.



கஞ்சா வைத்திருந்தவரை 3 வருட புனர்வாழ்வுக்கு அனுப்பினார் சாவகச்சேரி நீதிவான்!
[Wednesday 2017-09-20 07:00]

கஞ்சா தனது வைத்திருந்த நாவற்குழி வாசியை பல்லேகல புனர்வாழ்வு நிலையத்தில் 3 வருடங்கள் புனர்வாழ்வு பெற அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான். கடந்த 12 ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் நாவற்குழிப் பகுதி வீடொன்றில் சோதனையிட்ட போது ஆயிரத்து 640 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்தனர்.



சர்வஜன வாக்கெடுப்புக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு!
[Wednesday 2017-09-20 07:00]

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதில் சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடில்லை என்று அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “ அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள சில சரத்துக்கள் குறித்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



புலிகளை அழித்ததால் என்னைப் பழிவாங்குகின்றனர்! - புலம்பும் மகிந்த
[Wednesday 2017-09-20 07:00]

புலி­க­ளை அழித்­த­தால் இன்று இந்த ஆட்­சி­யா­ளர்­கள் எங்­களை அர­சி­யல் ­ரீ­தி­யா­கப் பழி­வாங்­கு­கின்­ற­னர் என்று முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். “நாங்­கள் மிக­வும் சிர­மப்­பட்டு இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து மீட்­டெ­டுத்­தோம். தாய் நாட்­டின்­மீது நாம் வைத்த அன்பு கார­ண­மாக இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து பாது­காப்­ப­தற்குப் பல தியா­கங்­களைச் செய்­தோம். எமது படை­யி­னரே உயி­ரை­யும் உடல்­க­ளை­யும் இழந்து நாட்­டைக் காப்­பாற்­றி­னர்.


Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா