Untitled Document
July 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்!
[Monday 2017-07-17 17:00]

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

  

தமிழகத்தில் ஊழல் அதிகரித்து வருவதாக நடிகர் கமல் கருத்து தெரிவித்த நாள் முதல் அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இன்று பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் கமலுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்த பிறகு கருத்து கூறட்டும் என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் கமலுக்கு ஜனநாயக முறையில் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அவர்களின் பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை அச்சுறுத்தக்கூடாது என கூறியுள்ளார்.2015 சென்னை வெள்ளத்தின் போது அரசின் மீட்பு பணி குறித்து கமல் விமர்சித்ததிற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



மந்திரவாதியால் செய்வினைப் பொம்மையாக பயன்படுத்தப்பட்ட சிறுமி: - உடலில் ஊசிகள் பாய்ச்சப்பட்ட நிலையில் பலி
[Friday 2017-07-21 15:00]

மேற்கு வங்காளம் மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள மந்திரவாதி வீட்டில் பெண் ஒருவர் வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில் அம்மந்திரவாதி தனக்கு அதிக மந்திர சக்தி கிடைப்பதற்காக அப்பெண்ணின் மூன்று வயது மகளை ஊசியால் குத்தி சித்தரவதை செய்துள்ளான்.



பழுதான மேற்கூரையால் ஹெல்மெட் அணிந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்: - தெலங்கானாவில் வினோதம்
[Friday 2017-07-21 15:00]

தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.



சென்னை கொடுங்கையூரில் தீ விபத்து: - தீயணைப்பு வீரர் உட்பட 4 பேர் பலி
[Friday 2017-07-21 08:00]

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 16-ம் தேதி, சென்னை கொடுங்கையூரில் உள்ள முருகன் சிப்ஸ் கடையில், இரவு 11.30 மணியளவில் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.



கமலிடம் மிரட்டலாக, நாகரீகம் அற்ற வார்த்தைகளில் பேசுவது தவறு: - ஜி.கே.மணி
[Friday 2017-07-21 08:00]

"தமிழகத்தில் வாக்களித்த, வாக்களிக்கும் உரிமையுள்ள யாரும் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்கலாம். தவறுகளை சுட்டிக் காட்டலாம். அதற்கு, மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த வகையில், கமல் இந்த ஆட்சியை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை.



முரசொலி பவள விழா: - ரஜினி, கமல் வருகையால் என்ன நடக்கும்?
[Friday 2017-07-21 08:00]

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 18-வது வயதில் 10.08.1942-ல் 'முரசொலி' செய்தித்தாளை கொண்டு வந்தார். அது இரண்டாம் உலகப்போர் காலம் என்பதால் முரசொலியை, கிடைத்த தாள்களில் அச்சிட்டு வெளியிட்டார் கருணாநிதி. அந்த முரசொலிக்கு இந்த வருடம் பவள விழா ஆண்டு. அதை விமரிசையாக கொண்டாட தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.



ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ஆசிரியர் படிப்பை துறந்த பெண்!
[Friday 2017-07-21 08:00]

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தான் விரும்பிய ஆசிரியர் படிப்பை துறந்துள்ளார்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹஸ்னா. இவரது கணவர் ஹர்ஷத் மொகமது. ஆசிரியர் வேலை பார்ப்பதையே ஹஸ்னா தன் லட்சியமாக கொண்டிருந்தார்.



குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி!
[Thursday 2017-07-20 17:00]

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தல், கடந்த திங்கள் கிழமை நடந்தது. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதன் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. முதல் இரண்டு சுற்றுகள் முடிவில் ராம்நாத் கோவிந்த், மீரா குமாரை விட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார்.



மக்களுக்காகப் போராட்டம் நடத்தினால் குண்டர் சடடத்தை ஏவுவதா? - தி.மு.க. ஆவேசம்
[Thursday 2017-07-20 17:00]

மக்களுக்காகப் போராட்டம் நடத்தியதால் குண்டர்சட்டம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சேலம் மாணவி வளர்மதி, கதிராமங்கலம் மக்கள், பேராசிரியர் ஜெயராமன் ஆகியோரை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி விடுதலைசெய்ய வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.



அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்: - திருமாவளவன்
[Thursday 2017-07-20 17:00]

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனாதிபதி தேர்தலில் மீராகுமார் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தற்போது அரசியல் சூழல் அப்படி இல்லை. இந்தியாவில் குடியரசு தலைவர் பதவி ரப்பர் ஸ்டாம்பாகத்தான் வைத்துள்ளனர் என்ற எண்ணம் மக்கள் மனதில் நீண்டகாலமாக உள்ளது .



இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
[Thursday 2017-07-20 08:00]

ஜனாதிபதி தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்று, 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர்இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் உள்ளனர்.



இளம் பெண் மர்ம சாவு: - கணவர் குடும்பத்தினர் கைது
[Thursday 2017-07-20 08:00]

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் முத்தழகன். இவருடைய மகன் இளஞ்சேரன். திருச்சியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.இவருக்கும் சேரன் குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும் (25) கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.



ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: - அச்சத்தில் மக்கள்
[Thursday 2017-07-20 08:00]

திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ட கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் என்பவரின் குடும்பத்தில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி கிறிஸ்டோபர் இறந்த அதே மாதத்தில் விமல்ராஜ் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.



சிறையில் சசிகலா கைப்பையுடன் இருப்பது போல வெளியாகியுள்ள வீடியோ உண்மையானது: - டிஐஜி.ரூபா
[Thursday 2017-07-20 08:00]

பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள்குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்குக் கடந்த 13-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 17-ம் தேதி, தலைமைச் செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியாவைச் சந்தித்துப் பேசினார்.



சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பற்றி எந்த உறுப்பினரும் பேசுவதே கிடையாது: - டிராபிக் ராமசாமி
[Thursday 2017-07-20 08:00]

பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி திருப்பூர் வந்திருந்தார்.நேராக திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றவர், அங்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த இரண்டு பேனர்களை உடனே அகற்றுமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.



கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
[Wednesday 2017-07-19 17:00]

கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளில் ஊழல் காணப்படுக்கிறது என்று தெரிவித்திருந்தார். கமலின் பேச்சுக்கு அமைச்சர்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும், அவரை ஒருமையிலும் விமர்சித்தனர். இந்நிலையில், சென்னை, மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்



பெற்றோர் நிர்ப்பந்தப்படுத்தியதால் நடந்த விபரீதம்: - பறிபோன மாணவியின் உயிர்
[Wednesday 2017-07-19 17:00]

பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோர்களின் ஆசையால் இன்னும் எத்தனை பிள்ளைகளைப் பறிகொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. ஹாஸ்டலில் படிக்கமாட்டேன் என்று சொல்லிய பிறகும் பெற்றோர் நிர்ப்பந்தப்படுத்தியதால், விஷம் குடித்து இறந்துள்ளார் சிவசங்கரி என்ற மாணவி. அரியலூர் மாவட்டத்தில்தான் இந்தச் சோக சம்பவம் நடந்துள்ளது.



ஜிஎஸ்டி வரி போட்டு சினிமாவை நாஸ்தி ஆக்கிவிட்டார்கள் : - ஜிஎஸ்டி-யைக் கலாய்த்த டி.ஆர்
[Wednesday 2017-07-19 17:00]

சென்னையில் இன்று காலை, லட்சிய தி.மு.க சார்பில் அதன் நிறுவன தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் ஜிஎஸ்டி-க்கு எதிராகவும் கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது.



சென்னையின் ஆயுள் இவ்வளவுதான்? - அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!
[Wednesday 2017-07-19 17:00]

அண்டார்டிகாவில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரமாண்ட பனிப்பாறை (Larsen C Ice Shelf) ஒன்றில், கடந்த 12-ம் தேதி மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. ஒரு ட்ரில்லியன் டன் எடையும், சுமார் 200 முதல் 600 மீட்டர் தடிமனும் கொண்ட இந்த பனிப்பாறையில் விரிசல் ஏற்பட்டதை நாசாவின் ‘Aqua MODIS’ என்ற செயற்கைகோள் கண்டுபிடித்தது. உலக அளவில் சூழலியலாளர்களை மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் இச்செய்தியை, வெறும் செய்தியாக கருதி கடந்துவிட முடியாது.



மக்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: - எடப்பாடி எச்சரிக்கை
[Wednesday 2017-07-19 16:00]

மக்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது சிறுமி: - ஊசியால் குத்தி சித்திரவதை
[Wednesday 2017-07-19 13:00]

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 50 வயது நபர் ஒருவரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா