Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய்தொலைக்காட்சி பிக்பாஸ் காயத்திரிக்கு இலங்கையிலிருந்து மனோ பதிலடி:
[Monday 2017-07-17 18:00]
 
தென்னிந்தியாவில் மட்டுமல்ல தமிழர்வாழும் நாடுகளிளெல்லாம் சமகாலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்  விஜய்தொலைக்காட்சியே  நிகழ்ச்சியை ஒளிபரப்பாகின்றது. இதை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதால் பட்டிதொட்டியெங்கும் அது ஹிட்டாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று யார் வெளியே போவது, நாளை யார் போவது என்பது உட்பட பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் அதன் ஓட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை அமைச்சர் மனோகணேசனும் பார்த்து இரசிக்கிறார் என அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனது முகநூலில் அவர் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்தியாவில் மட்டுமல்ல தமிழர்வாழும் நாடுகளிளெல்லாம் சமகாலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் விஜய்தொலைக்காட்சியே நிகழ்ச்சியை ஒளிபரப்பாகின்றது. இதை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதால் பட்டிதொட்டியெங்கும் அது ஹிட்டாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று யார் வெளியே போவது, நாளை யார் போவது என்பது உட்பட பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் அதன் ஓட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை அமைச்சர் மனோகணேசனும் பார்த்து இரசிக்கிறார் என அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனது முகநூலில் அவர் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடன இயக்குநர் காயத்திரி ரகுராம் வெளியிட்ட கருத்தொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வசனத்தையும் கொழும்பு அரசியலையும் தொடர்புபடுத்தி ஒருவர் இட்டுள்ள பதிவை மனோ பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவு வருமாறு,
சேரி பிகேவியர்’
என்று சொல்வது என்ன ஒரு பிகேவியர்?
அடடா! என்ன ஒரு வார்த்தையாடல்…?

இங்கே இலங்கை கொழும்பு மாநகரில் எனக்கு வாக்களித்து என்னை இந்நாட்டில் மத்திய அமைச்சராக்கிய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் இந்நகரில் வாழும் சேரி பிகேவியர்காரர்கள் என்று சொல்வதில் எனக்கு பெருமை…

எமது தமிழுறவின் பெருமையின் முன் குத்தாட்ட நடிகை காயத்ரி ரகுமாரமன் தலைகுனிய வேண்டாமா ? என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comபிரபாகரனிடமே போரைக் கற்றுக்கொண்டோம்! - சரத் பொன்சேகா
[Sunday 2017-11-19 09:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னி­டம் இருந்தே நாம் போரைக் கற்­றுக்­கொண்­டோம். பிர­பா­க­ரன் உரு­வா­கி­ய­தன் கார­ண­மா­கவே பீல்ட் மார்­சல் உரு­வா­கி­னார் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சர் பீல்ட்­மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.ஊடரங்கு நீக்கம் - இராணுவம், அதிரடிப்படை குவிப்பு!
[Sunday 2017-11-19 09:00]

காலி பொலிஸ் பிரிவின் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. வெலிபிடிமோதர, மஹபுகல, ரக்வத்தை, கிங்தொட கிழக்கு, கிங்தொட மேற்கு, பியதிகம மற்றும் குருந்துவத்தை ஆகிய கிராம சேவர் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்தப் பகுதிகளில் பொலிஸாருடன் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தேசியக்கொடி ஏற்ற மறுத்த சர்வேஸ்வரன் - சட்டமா அதிபரின் ஆலோசனையை கோருகிறார் ஆளுனர்!
[Sunday 2017-11-19 09:00]

வட மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். நாளை இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் கூறினார்.அவுஸ்ரேலியா ஏற்க மறுத்த 197 இலங்கை அகதிகளை திருப்பி அழைக்க நடவடிக்கை!
[Sunday 2017-11-19 09:00]

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தெரிவித்துள்ளார்.வாள்வெட்டுகள் குறித்து 11 பேரிடம் விசாரணை!
[Sunday 2017-11-19 09:00]

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 11 பேர் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.கொடிகாமத்தில் 35 கிலோ கஞ்சா மீட்பு - இருவர் கைது!
[Sunday 2017-11-19 09:00]

கொடி­கா­மத்­தில் நேற்று இரவு 35 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்­டது. சந்­தே­க­த்தில் இருவர் கைது செய்­யப்­பட்­டனர் என்று கொடி­கா­மம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து கொடி­கா­மம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை ஒட்டி சோதனை செய்த பொலி­ஸார் கஞ்­சாவை மீட்­ட­னர். பொதி­யி­டத் தயா­ராக இருந்த நிலை­யில் 35 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. இதனை வைத்­தி­ருந்த சந்­தே­கத்­தில் இருவ­ரைக் கைது செய்­துள்­ளோம்’’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.கிந்­தொட்ட கலவரத்துக்கு முஸ்லிம்களை குற்றம்சாட்டுகிறது பொது பலசேனா!
[Sunday 2017-11-19 09:00]

காலி - கிந்­தொட்ட பிர­தே­சத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற இனக்­க­ல­வரம் தொடர்பில் பொது­பலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேர­ரினால் அறிக்­கைகள் எதுவும் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் அவரின் பெயரில் அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் த­ளங்­க­ளூ­டாக அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்தி ஊடக பிர­சா­ரங்கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் பொது பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் கைது!
[Sunday 2017-11-19 09:00]

கொக்குவில் பகுதியில் நேற்று இரவு ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று இரவு நீண்ட நேரமாக நின்றுள்ளனர். இது தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய யாழ். தலைமைப்பீட பொறுப்பதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியாவில் வாள்வெட்டு - இளைஞர் படுகாயம்! Top News
[Sunday 2017-11-19 09:00]

வவுனியா- மன்னார் வீதி, புதிய கற்பகபுரம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இளைஞர் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன், இளைஞர் ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று தாக்கியுள்ளது. புதிய கற்பகபுரம் கிராமத்தினுள் வாள்களுடன் புகுந்த இளைஞர் குழு ஒன்று அங்கிருந்த இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.காலியில் மீண்டும் ஊரடங்கு - வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை! Top News
[Saturday 2017-11-18 19:00]

சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிமுதல் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம், நாளை காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்குமென, காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன் தெரிவித்தார்.நாம் இழைக்கும் தவறுகள் வருங்காலச் சந்ததியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும்! - முதலமைச்சர் Top News
[Saturday 2017-11-18 19:00]

இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகி விட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை! மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகி விட்டது. இன்று நாம் இழைக்கின்ற தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பிரதமரின் சிறப்புரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - ஆணைக்குழுவுக்கு ரணில் நிபந்தனை
[Saturday 2017-11-18 19:00]

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு, பிரதமருக்குரிய சிறப்புரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து, நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவே பிரதமரிடம் கேள்விகளை எழுப்புவார் என்றும் தெரியவருகின்றது.உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு - தமிழரசுக் கட்சியுடன் ரெலோ பேச்சு!
[Saturday 2017-11-18 19:00]

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ ஆகியவற்றின் பிரமுகர்களுக்கிடையில் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.காலி கலவரம்- வலைத்தளங்களில் வதந்தி பரப்பியோர் குறித்து சிஐடி விசாரணை!
[Saturday 2017-11-18 19:00]

காலி, ஜின்தொட்டவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் மற்றும் ஏனைய முறைமைகளின் ஊடாக பொய்யான தகவல்களை பிரசாரப்படுத்திய, பிரிவினைவாத நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தக் கோரும் நியூசிலாந்து பிரதமர், மறுக்கும் ஆஸ்திரேலியா!
[Saturday 2017-11-18 19:00]

மனுஸ்தீவு மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 2000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 150 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன் கோரி வருகிறார் . அத்துடன் இந்த அகதிகளின் நலனுக்காக 3 மில்லியன் டாலர்கள் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மன்னாரில் பிள்ளையார் சிலைகள் உடைப்பு! Top News
[Saturday 2017-11-18 19:00]

மன்னாரில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருட்டு மற்றும் உடைப்புச் சம்பவங்கள், இடம்பெற்றுள்ளன. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.மஹிந்தவின் 72 ஆவது பிறந்த நாள்! - கேக் வெட்டி கொண்டாட்டம் Top News
[Saturday 2017-11-18 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது 72ஆவது பிறந்த நாளை இன்று கேக் வெட்டி குடும்பத்தாருடன் இணைந்து தனது அலுவலகத்தில் கொண்டாடியுள்ளார்.அனைத்து இன மக்களையும் இலங்கையர்கள் என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம்! - டக்ளஸ் தேவானந்தா
[Saturday 2017-11-18 19:00]

அனைத்து இன மக்களையும் இலங்கையர்கள் என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வவுனியாவில் சிக்கிய கேரள கஞ்சா - பெண் உட்பட இருவர் கைது!
[Saturday 2017-11-18 19:00]

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9.30 மணியளவில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் மாலையணியும் நிகழ்வு! Top News
[Saturday 2017-11-18 19:00]

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு நேற்று (17.11.2017) காலை 8.00 மணியளவில் அம்மா சாமி , பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாதம் முதல் திகதியான நேற்று 20க்கு மேற்பட்ட ஜயப்பன் பக்த அடியார்கள் மாலை அணிந்து கொண்டனர்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா