Untitled Document
April 24, 2024 [GMT]
சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தவரின் மகன் இன்று இந்தியாவின் ஜனாதிபதி!
[Wednesday 2017-07-26 12:00]

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார்.1945 ஆம் ஆண்டு தெஹாத் கான்பூர் மாவட்டத்தில் தலித் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்துள்ளார்.இவரின் தந்தையின் பெயர் மைகுலா, 5 மகன்கள் மற்றும் 2 பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ராம்நாத் கடைக்குட்டியாகப் பிறந்தார்.

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார்.1945 ஆம் ஆண்டு தெஹாத் கான்பூர் மாவட்டத்தில் தலித் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்துள்ளார்.இவரின் தந்தையின் பெயர் மைகுலா, 5 மகன்கள் மற்றும் 2 பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ராம்நாத் கடைக்குட்டியாகப் பிறந்தார்.

  

குடும்பச் செலவுகளுக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தனது பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை செய்யாமல் ஒரு சிறிய பெட்டிக்கடையை வைத்திருந்தார் ராம்நாத் அவர்களின் சந்தை மைகுலா.மண் தரையில் பிறந்த ராம்நாத் கோவிந்த், தான் 5 வயதாக இருக்கும் போது தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது தாயையும், வீட்டையும் இழந்தார்.கான்பூர் கிராமத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ராம்நாத், டிஏவி கல்லூரியில் காமர்ஸ் மற்றும் சட்ட படிப்புகளை முடித்துப் பட்டம் பெற்றார்ராம்நாத் கோவிந்த் கான்பூர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து விட்டு டெல்லிக்குச் சென்று ஐஏஎஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாரானார். ஆனால் இரண்டு முறை ஐஏஎஸ் தேர்வு எழுதியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மூன்றாவது முறை மறுபடியும் எழுதி ஒரு வழியாகத் தேர்ச்சி பெற்றார்.

ஆனால், ஒரு ஐஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடரவில்லை. மாறாக வழக்கறிஞர் படிப்பினை படித்து முடித்த இவர், 1977 ஆம் ஆண்டு முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக பணிபுரிந்திருக்கிறார்.பின்னர் 1980லிருந்து 1993வரை அவர் உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் வழக்கறிஞராக இருந்தார். டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்த ராம்நாத் கோவிந்த், 1971 இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தம்மைப் பதிவு செய்து கொண்டார்.1994 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பழங்குடியினர், உள்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சமூக நீதி, சட்டம் - நீதி அமைப்பு மற்றும் மாநிலங்களவை குழு என பல கமிட்டிகளில் உறுப்பினராக ராம்நாத் கோவிந்த் பணியாற்றியிருக்கிறார்.கடந்த 1977ல் ஜனதா கட்சியின் ஆட்சியின் போது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் உதவியாளராக கோவிந்த் பணியாற்றினார். இதுவே கோவிந்தின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது. கடந்த 1990 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய ராம்நாத் கோவிந்த், அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.அதேநேரம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து இரு முறை மாநிலங்களவை எம்பியாகவும் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பாஜகவின் தலித் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக 1998ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பையும் ராம்நாத் கோவிந்த் வகித்துள்ளார்.தலித் சமூகத்தின் பிரதிநிதியாக பார்க்கப்படும் கோவிந்த், மாணவ பருவத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.மேலும், பாஜனவின் மூத்த தலைவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இவர் அந்த கட்சியால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதில் வெற்றியும் பெற்று, இந்தியாவின் 14 வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் ஆவேசம்!
[Wednesday 2024-04-24 18:00]

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.



'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி!
[Wednesday 2024-04-24 06:00]

'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.



பாபநாசம் பட பாணியில் கொலை: போலீசாரே அதிர்ந்த சம்பவம்!
[Wednesday 2024-04-24 06:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.



'பஞ்சுமிட்டாய் போல நைட்ரஜன் பிஸ்கட் தடை செய்யப்படுமா?
[Wednesday 2024-04-24 06:00]

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி!
[Tuesday 2024-04-23 18:00]

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்: விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்!
[Tuesday 2024-04-23 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-04-23 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி: சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்!
[Tuesday 2024-04-23 18:00]

ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ராமரை பாஜக அடையாளப்படுத்துவது தான்.



தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன்!
[Tuesday 2024-04-23 06:00]

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.



'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'மோடி மீது நடவடிக்கை வேண்டும்' - தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
[Monday 2024-04-22 18:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி: காவலை நீட்டித்த நீதிமன்றம்!
[Monday 2024-04-22 18:00]

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.



தேர்தல் முடிவுக்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!
[Monday 2024-04-22 18:00]

மக்களவை தேர்தலில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய மாநிலமான குஜராத், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.



லட்சக்கணக்கில் ஏலம் போன கூரை கத்தாழை மீன்!
[Monday 2024-04-22 18:00]

தஞ்சாவூரில் 25 கிலோ எடை கொண்ட கூரை கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மாவட்டமான தஞ்சாவூர், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் தினமும் மீன் விற்பனை செய்து வருகிறார்கள்.



பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்!
[Monday 2024-04-22 06:00]

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.



தேர்தல் பறக்கும் படை கலைப்பு: எல்லையில் மட்டும் கண்காணிப்பு!
[Monday 2024-04-22 06:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா