Untitled Document
March 29, 2024 [GMT]
வட மாகாணசபை போனஸ் ஆசனம் புளொட்டுக்கு மறுப்பு - சம்பந்தனுக்கு சித்தார்த்தன் அவசர கடிதம்!
[Friday 2017-07-28 19:00]

சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டு வந்த வட மாகாணசபையின் போனஸ் ஆசனம் தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டு வந்த வட மாகாணசபையின் போனஸ் ஆசனம் தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, "வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றுக்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு எமது கட்சிக்கு மறுக்கப்படுவதை தங்களின் கவனத்துக்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன்.

வட மாகாணசபைத் தேர்தல் நடந்துமுடிந்தவுடன் இடம்பெற்ற, கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கிடையேயான கூட்டத்தில், கிடைத்த மேலதிக ஆசனங்களில், ஓர் ஆசனமானது, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படுமென தாங்கள் எடுத்த முடிவுக்கு அமைய, அஸ்மினுக்கும் மற்றயது ஒவ்வோர் கட்சியையும் ஒரு வருடம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுழற்சி முறையில் வழங்குவதெனவும், அதனடிப்படையில் ஐந்தாவதும் இறுதியுமான வருடத்தில் அவ்வாசனம் புளொட் அமைப்புக்கு வழங்கப்படுமெனவும் முடிவுசெய்யப்பட்டு ஐந்து கட்சிகளும் இதற்கு சம்மதித்திருந்தன.

மேலதிக ஆசனமாக கிடைத்த ஆசனம், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்தாலும், பதவியைப் பெற்றுக்கொண்ட அஸ்மின் தமிழரசுக் கட்சி அங்கத்தவர் போன்றே செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.

மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்பு கூட்டமைப்பின் செயற்பாடுகளில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விலகிய நிலையில், கூட்டணியின் மாகாணசபை உறுப்பினர்களும், வேட்பாளர்களும் தமிழரசுக் கட்சியை தழுவி செயற்படலாயினர். அந்தவகையில், முதல் வாய்ப்பைப் பெற்ற மேரிகமலா தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்துக்கு மேலாக மாகாணசபை உறுப்பினராக இருந்தார்.

பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் பதவிநீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரிகமலாவை பதவிநீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை. தற்போது மேரிகமலா, தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் உப தலைவராக செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளரான மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்குமாறு கோரியதாகவும் அதற்கு சாதகமான பதிலை தமிழரசுக் கட்சி வழங்கியிருந்ததாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள்.

ஆயினும், ஜே.ஆரின் பாணியில் பதவிவிலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக்கட்சி, பதவியிலிருந்த மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவிவிலகல் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்ததுடன், அவ்விடத்துக்கு அவசர அவசரமாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் வேட்பாளரான ஜெயசேகரத்தைநியமித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு இரண்டாவது தடவையாகவும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர். ஏற்கெனவே வட மாகாணசபையின் முல்லை மாவட்ட உறுப்பினராகவிருந்த கனகசுந்தரசுவாமியின் மறைவையடுத்து பதவி வெற்றிடமாகியபோது, அடுத்த நிலையில் இருந்த எமது அமைப்பின் க.சிவநேசனின் பெயரை, பலமுறை நாம் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும்கூட, தேர்தல் அலுவலகத்துக்கு தெரிவிக்காமல் மூன்று மாதகாலமாக தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்துவந்தது.

இறுதியாக தேர்தல் ஆணையாளரே தனது பதவிக்குரிய அதிகாரவழியில் தற்துணிவுடன் சிவநேசனின் உறுப்புரிமையை அறிவித்திருந்தார். கூடவே, தமிழரசுக்கட்சியின் செயலாளரின் பொறுப்பற்றதன்மையை தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார். கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினால் திட்டமிட்டு புறம்தள்ளப்பட்டு வருகின்ற சூழலில், ஒற்றுமை ஒன்றையே அடிப்படையாக கருதி தமிழரசுக்கட்சியின் அடையாளத்தையும், பெயரையும் நாம் தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டு செயற்படுவதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவாகவே தற்போதைய நிலைமையை நாம் பார்க்கிறோம்.

ஓற்றுமைக்கான விலையான எமது விட்டுக்கொடுப்புகளை எமது பலவீனமாக கருதும் செயற்பாடுகள் கண்ணியமானவையோ, அரசியல் நாகரீகம் நிறைந்தவையோ அல்லது தமது பலம் என்று பெருமை கொள்ளக்கூடியவையோ அல்ல. கூட்டான ஓர் அமைப்புக்குரிய அடிப்படைப் பண்புகளை தூக்கிநிறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐக்கியத்தை கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு தஙகளையே சாரும் என நம்புகிறேன்.

எனவே, தமிழரசுக் கட்சியின் மிக மூத்ததலைவர் என்றவகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடித்துவிடாது இணைத்துவைத்திருக்கும் ஆற்றல்கொண்ட தலைவர் என்றவகையிலும் தமிழரசுக்கட்சியின் மிகப் பிந்திய செயற்பாடான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு சுழற்சி முறையிலான ஆசனத்தை முறைகேடாக இரண்டாவது தடவையும் வழங்கும் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு உரிமையுடனும், ஒற்றுமையின் பெயரிலும் தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பிளவை நோக்கி பொதுஜன பெரமுன!
[Friday 2024-03-29 16:00]

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



நாடு முழுவதும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றும், நாளை மறுதினமும் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எந்த தேர்தல் முதலில் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!- பசில்
[Friday 2024-03-29 16:00]

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.



முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டது!
[Friday 2024-03-29 16:00]

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.



எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் மொட்டு தயார்!
[Friday 2024-03-29 16:00]

பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.



எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கை 14 வீதத்தினால் அதிகரிப்பு!
[Friday 2024-03-29 16:00]

நாட்டில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கையின் தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்க சட்டம்! - கனடியப் பிரதமர் அறிவிப்பு.
[Friday 2024-03-29 05:00]

கனடாவில வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாமல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
[Friday 2024-03-29 05:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்னும் ஐந்து அல்லது பத்து வருட காலத்திற்குப் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட முடியும் என்று கூறினார்.



அம்பாந்தோட்டையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் - அவசரப்படுகிறது சினோபெக்!
[Friday 2024-03-29 05:00]

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.



உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.



வட்டுக்கோட்டை இளைஞன் கொலை -பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவு!
[Friday 2024-03-29 05:00]

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.



அனுரவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை!
[Friday 2024-03-29 05:00]

தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



தேர்தலை தீர்மானிக்க பசில் தேர்தல் ஆணையாளர் அல்ல!
[Friday 2024-03-29 05:00]

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.



குளியல் காட்சிகளை படம் பிடித்தவர் கைது!
[Friday 2024-03-29 05:00]

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து தொலைபேசியில் காணொலி எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சுங்கத்தில் சிக்கியுள்ள கீரி சம்பாவை விடுவிக்கவே தற்காலிக வரிக் குறைப்பு!
[Friday 2024-03-29 05:00]

அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்காக அல்ல, தற்போது சுங்கத்தில் சிக்கியுள்ள அரிசியை அகற்றுவதற்காகவே அரிசி மீதான விஷேட பொருட்கள் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா