Untitled Document
April 25, 2024 [GMT]
பிரபாகரனின் நம்பிக்கையை ராஜீவ்காந்தி காப்பாற்றத் தவறிவிட்டார்: - வைகோ
[Saturday 2017-08-05 08:00]

1987-ம் ஆண்டு ஜூலை 29-ம் நாள் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. இலங்கையில் நடந்த இனப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசியல் நலனுக்கானது மட்டுமே. இப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகியிருக்கிறது என்பது இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல... விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே கடைசி நிமிடத்தில்தான் தெரியவந்தது.

1987-ம் ஆண்டு ஜூலை 29-ம் நாள் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. இலங்கையில் நடந்த இனப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசியல் நலனுக்கானது மட்டுமே. இப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகியிருக்கிறது என்பது இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல... விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே கடைசி நிமிடத்தில்தான் தெரியவந்தது.

  

ராஜீவ் காந்தியிடமிருந்து அவசரமாக வந்த அழைப்பின் பேரில், பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தார். இங்கே ராஜீவ்காந்தியை சந்தித்தபோதுதான், ஏற்கெனவே ராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தனேவும் கூடிப்பேசி இப்படி ஓர் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு தயாராக இருப்பதே அவருக்குத் தெரியவந்தது. இந்த ஒப்பந்தம் முடிந்து இலங்கை திரும்பிய புலிகளின் தலைவர் பிரபாகரன் 04-08-1987 -ல் சுதுமலையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். இந்தப் பொதுக் கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய பிரபாகரன்... "இந்த ஒப்பந்தத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், இந்த ஒப்பந்தத்தால் என் மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் சில உறுதிகளை ராஜீவ்காந்தி கொடுத்துள்ளார். அதனடிப்படையில் நான் ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால், ராஜீவ்காந்தி நம்பிக்கைக்கு உரியவர். அவர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி செய்தார். அதனால் அவர் கண்டிப்பாக தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக வாழ வழி செய்வார் என்று நம்புகிறேன். அதனால் எனது ஆயுதங்களை அவரிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். ஒருவேளை நாம் ஆயுதங்களை கொடுக்காவிட்டால், அது இந்தியாவை அவமதிக்கும் செயலாக இருக்கும். இனி நம் மக்களை பாதுகாக்கும் முழு பொறுப்பும் ராஜீவ் காந்திக்கு உள்ளது" என்று கலங்கலான மனதுடன் பேசினார்.

ஆனால், ராஜீவ் காந்தி, பிரபாகரனுக்கு கொடுத்த உறுதியைக் காப்பாற்றவில்லை. அதன்பிறகான தமிழர் இனப்படுகொலை அனைத்து தமிழர்களும் அறிந்ததே. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டு 30 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், தமிழர்கள் நலன் பற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோரிக்கைகூட இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரபாகரனும் சுதுமலையில் இதைத்தான் பேசினார்... 'இந்த ஒப்பந்தத்தால் என் மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்காது' என்று. புலிகளின் தலைவர் பிரபாகரன், சுதுமலையில் ஆற்றிய அந்த உரை வரலாற்றின் இன்றைய தினத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நினைவுகூரும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகமான தாயகத்தில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக பிரபாகரன் மற்றும் புலிகளுக்கு மலர் தூவி, மாலையிட்டு வணங்கிய வைகோ பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசத்தொடங்கினார். "ஒப்பந்தத்தை ஏற்க மனமில்லை. ஆனாலும் பிரபாகரன் ஏற்றார். காரணம்... 'நம் தாய் இந்தியா நம்மைக் காக்கும்' என்று அவர் தீவிரமாக நம்பினார். ஆயுதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதனால்தான் இன்றைய தினத்தில், சுதுமலையில் மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். ஆனால், ராஜீவ்காந்தி செய்தது என்ன? நம்பிக்கையாகப் பேசி பிரபாகரனை அனுப்பிவிட்டு, தமிழர்களை துன்புறுத்தவும், இலங்கைக்கு ஆதரவு தரவும் இந்திய ராணுவத்தை அனுப்பினார். எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்தை ராஜீவ் காந்தி செய்திருக்கிறார் என்பதை வரலாறு ஒருபோதும் மறக்காது. பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்த பின், 'இந்தியா நம்மைக் காக்கும்' என்று அமைதியாகவே இருந்தார்.

ஆனால், லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 புலிகளை சிங்கள கடற்படை சுற்றிவளைத்தபோது, அருகில் இந்தியக் கடற்படை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சயனைட் சாப்பிட்டு அவர்கள் இறப்பதற்கு முக்கியக் காரணமே இந்தியாதான். இந்த செயல்தான் பிரபாகரனை மீண்டும் ஆயுதம் ஏந்த வைத்தது. அதனால் பிரபாகரனை, பயங்கரவாதி என்று அறிவித்தது இந்தியா. விடுதலைப்புலிகளின் இயக்கத்தையும் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. இந்தியா இதோடு நின்றுவிடவில்லை. உலகநாடுகள் அனைத்திலும் 'புலிகளைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டது. இப்படி அனைத்து துரோகங்களையும் செய்துவிட்டு இன்று நல்லவனாகக் காட்டிக்கொண்டிருக்கிறது இந்தியா. ஆனால், 'விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் அல்ல' என சமீபத்தில் யுரோப்பிய யூனியன் தடையை நீக்கியுள்ளது. இனி உலக நாடுகள் அனைத்தும் புலிகளை ஆதரிக்கும். என்னையும்கூட 'புலிகளில் ஒருவன்' என்று இந்தியா அறிவித்தது. அதனாலேயே இன்றும் என்னால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் சிறு அளவுகூட எனக்குக் கவலை இல்லை. ஈழப்போர் முடிந்துவிட்டதாக இந்தியாவும், சிங்களவனும் நினைக்கவேண்டாம். என் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். அதனால் ஈழப்போர் தொடரும்... இது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை.!" என்று முழங்கினார்.

ராஜீவ்காந்தியின் மீதிருந்த நம்பிக்கையால் பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்தார். ஆனால், அந்த நம்பிக்கையை ராஜீவ்காந்தி காப்பாற்றத் தவறிவிட்டார். ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கோரிக்கையும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழினம் முழுக்க முழுக்க துரோகங்களால் வீழ்த்தப்பட்டது. அதற்கு மிக முக்கியக் காரணம் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்!

  
   Bookmark and Share Seithy.com



“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு!
[Thursday 2024-04-25 06:00]

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.



தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்: பெருகும் ஆதரவு!
[Wednesday 2024-04-24 18:00]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.



உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் மரணம்!
[Wednesday 2024-04-24 18:00]

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண் மகன்கள் உள்ளனர். இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் இருந்தனர்.



பெற்றோர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2024-04-24 18:00]

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் ஆவேசம்!
[Wednesday 2024-04-24 18:00]

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.



'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி!
[Wednesday 2024-04-24 06:00]

'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.



பாபநாசம் பட பாணியில் கொலை: போலீசாரே அதிர்ந்த சம்பவம்!
[Wednesday 2024-04-24 06:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.



'பஞ்சுமிட்டாய் போல நைட்ரஜன் பிஸ்கட் தடை செய்யப்படுமா?
[Wednesday 2024-04-24 06:00]

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி!
[Tuesday 2024-04-23 18:00]

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்: விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்!
[Tuesday 2024-04-23 18:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-04-23 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி: சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்!
[Tuesday 2024-04-23 18:00]

ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ராமரை பாஜக அடையாளப்படுத்துவது தான்.



தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன்!
[Tuesday 2024-04-23 06:00]

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.



'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
[Tuesday 2024-04-23 06:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



'மோடி மீது நடவடிக்கை வேண்டும்' - தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
[Monday 2024-04-22 18:00]

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி: காவலை நீட்டித்த நீதிமன்றம்!
[Monday 2024-04-22 18:00]

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.



தேர்தல் முடிவுக்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!
[Monday 2024-04-22 18:00]

மக்களவை தேர்தலில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய மாநிலமான குஜராத், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா