Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த சபதம் ஏற்போம்: - மு.க.ஸ்டாலின்
[Sunday 2017-09-10 09:00]

 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பெரியார் சிலை அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா, சட்டமன்ற பணியில் வைரவிழா, முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விழாவில் திமுக தேர்தல் பணிக்குழு தலைவர்  எல்.கணேசன் எழுதிய ‘டாக்டர் கலைஞர் தி வெர்சைடல் ஜீனியஸ்’ என்ற நூலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பெரியார் சிலை அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா, சட்டமன்ற பணியில் வைரவிழா, முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விழாவில் திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன் எழுதிய ‘டாக்டர் கலைஞர் தி வெர்சைடல் ஜீனியஸ்’ என்ற நூலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

  

இந்தியாவில் சமூக நீதிக்குப் பெரிய ஆபத்து வந்துவிட்டது. மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. இதற்கு முக்கியக்காரணம் திமுகதான். இப்பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் கருணாநிதி தெரிவித்தார். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சமூகநீதிக்கு உலைவைக்கும் வகையில் திட்டமிட்டு பாஜக செயல்படுகிறது. அதன் முதல்கட்ட நடவடிக்கைதான் நீட் தேர்வு. நீட் கட்டாயம் என்பதை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்.

இதை எதிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் நேற்று (நேற்று முன்தினம்) கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்கூட்டத்தில், பாஜகவினர் பதிலளிக்க வேண்டும் என 6 கேள்விகளை கேட்டுள்ளேன். அதற்கு போட்டி பொதுக்கூட்டத்தை பாஜக இன்று (நேற்று) நடத்துகிறது. சபாஷ் சரியான போட்டி. ஏற்புடைய பதிலை தருவார்களா? பொதுக்கூட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பைக்காட்டி போலீஸ் மூலம் பாஜக தடை ஏற்படுத்த முயன்றது. இதன் மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

மருத்துவப்படிப்புக்கு நீட் வந்தால் அடுத்து ெபாறியியல், நீதிபதிகள் தேர்வு என அனைத்துக்கும் அகில இந்திய அளவிலான தேர்வு வைப்பார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர்பதவிகளுக்கு வரக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக வேலைபார்க்கிறது. அதை அதிமுக வேடிக்கைபார்க்கிறது. கடந்த தேர்தலில் திமுகவை விட அதிமுக 1.1 % அதிக வாக்குகள்தான் பெற்றது. ஆனால் அவர்கள் ஆளுங்கட்சியாகவும், நாம் பிரதான எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தோம். ஜெயலலிதா ஊழல் சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும், நீட்டுக்கு தடை இருந்தது. திமுக ஆட்சியிலேயே நீட் பிரச்னை வந்தது. நாட்டிலேயே முதல்முதலாக திமுக தலைவர் அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் எதிர்த்தார். திமுக நீதிமன்றம் சென்று தடை பெற்றது. திமுக இருந்தவரை தமிழகத்தில் நீட் தலைகாட்ட முடியவில்லை. ஆனால் இப்போது குதிரைபேர அதிமுக ஆட்சியில் வந்துவிட்டது.

மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று சொன்னதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமத்தில் நாட்டாமை செய்கிறார் என்று சொல்வார்கள். நாட்டாமைகள் நல்லது கெட்டதை ஆராய்ந்து, தீர்ப்பு வழங்குவார்கள். கட்டப்பஞ்சாயத்து என்பது ஒன்றை இரண்டாக்குவது, இரண்டை ஒன்றாக்குவது. மோடி ஒன்றை இரண்டாக்கினார். இரண்டை மூன்றாக்கினார். தற்போது மூன்றை இரண்டாக்கியிருக்கிறார். இது மைனாரிட்டி ஆட்சி. அதிமுகவின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள், இப்போது நடைபெறும் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கூறுகின்றனர். திமுக தரப்பில் எதிர்க்கட்சி தலைவரான நான், சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமென்று கடிதம் அனுப்பினேன். தற்போது, 21 பேர் எடப்பாடி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்கள். ஜெயலலிதா இறந்ததால் 233 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டி தேவையென்றால், 116 உறுப்பினர் ஆதரவு வேண்டும். இதில் 21 பேர் ஆதரவை விலக்கியுள்ளனர். திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, அதிமுக உறுப்பினர்கள் 21 பேர் சேர்த்தால் 119 வருகிறது. இந்தக் கணக்கு கவர்னருக்குத் தெரியாதா? கவர்னர் கணக்கில் அந்த அளவுக்கு வீக்கா? அவருக்குத் தெரியும். தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. நாளை(இன்று) மாலை 5 மணிக்கு எனது தலைமையில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களுடன் 10 பேர், கவர்னரை சந்திக்கிறோம். அப்போது இந்தக்கணக்கை எடுத்துக்கூறுவோம். இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுப்போம். கோரிக்கையைக் கவர்னர் ஏற்காவிட்டால் மக்களைத் திரட்டி ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம். ஆட்சியை அப்புறப்படுத்துவோம். இந்தச் செயல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்காகவோ, பதவிக்கு வருவதற்காகவோ அல்ல. தமிழகத்தைக் காப்பாற்ற, தமிழகம் டெல்லியில் மண்டியிடுவதைத் தவிர்க்க, சமூகநீதியை பாதுகாக்க இதைச் செய்கிறோம். இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட அப்புறப்படுத்த ஒன்று கூடுவோம்; சபதம் ஏற்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

  
   Bookmark and Share Seithy.com17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த குடும்ப தலைவி: -பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Saturday 2017-11-18 17:00]

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இவர் மனைவிக்கு 24 வயதாகிறது, இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லை.இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற விசாரணை கமிஷன் கண்துடைப்பு நாடகம்: - ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
[Saturday 2017-11-18 15:00]

செம்மரம் விவகாரத்தில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான நடக்கும் விசாரணை கமிஷன் விசாரணை, வெறும் கண் துடைப்பு நாடகம்’’ என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும் ஈ.பி.எஸ் போன்றவர்களுக்குப் புரியாது: - விஜயகாந்த்
[Saturday 2017-11-18 15:00]

'என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும்' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறி நெகிழ்ந்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50-லிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மகனுக்கு 7 ஆண்டு சிறை!
[Saturday 2017-11-18 15:00]

புதுக்கோட்டை காமராஜர்புரத்தை சேர்ந்த தொக்கு என்ற துரை (57). பெயிண்டரான இவருடைய மகன் பிரகாஷ் (26), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3.7.2015 அன்று தந்தையும், மகனும் சேர்ந்து 12 வயதுள்ள 3 சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லைகொடுத்துள்ளனர்.சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியல் வெளியீடு: - முதலிடத்தில் இந்தியா
[Saturday 2017-11-18 15:00]

வாட்டர்எய்டு என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அவுட் ஆப் ஆர்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தூய்மை இந்தியா திட்டம் வழியே தீவிர முன்னேற்றம் அடைந்தபொழுதிலும், இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் பொதுவெளி அல்லது பாதுகாப்பற்ற பகுதி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மேலும் மோசம்.குடும்ப தகராறில் கர்ப்பிணியை கொடூரமாக கொன்ற கணவர் கைது!
[Saturday 2017-11-18 09:00]

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் சபரியேல். இவரது மகன் சீமோன் (வயது 33). கட்டிடத் தொழிலாளி.இவருக்கும், காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த தாசையன் மகள் ஷாலினி (24) என்பவருக்கும் கடந்த 22.5.2017 அன்று திருமணம் நடந்தது. ஷாலினி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். லேப்-டெக்னீசியன் படிப்பு முடித்த ஷாலினி, அங்குள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: - இடம்பிடித்த சென்னை பெண்
[Friday 2017-11-17 18:00]

போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதுக்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த இளம்பெண் அக்சயா இடம் பிடித்துள்ளார். Lumme Inc நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான பணியாற்றி வரும் அக்சயா சண்முகம் என்ற 29 வயது இளம்பெண் புகைப்பழகத்தில் இருந்து விடுபடுவதற்கான புதிய சாப்ட்வேர் கொண்ட சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் போர்ப்ஸ் பத்திரிக்கை அவரது பெயரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அக்‌சயா சண்முகம், போதை பழக்கம், அதனால் நடத்தையில் ஏற்படும் மாற்றம் இவற்றை ஆராய்ந்து மருத்துவ ரீதியாக அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கு: - சசிகலாவின் கணவர் நடராசனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது
[Friday 2017-11-17 17:00]

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சசிகலாவின் கணவர் நடராசன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராசன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது.இலங்கை - இந்தியா கடற்படையின் கூட்டுச் சதியா? - கேள்வி எழுப்பும் திருமாவளவன்
[Friday 2017-11-17 17:00]

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைக்குப் பின் இலங்கை - இந்தியா கடற்படையின் கூட்டுச் சதி இருக்குமோ என்று ஐயம் ஏற்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையால் கடந்த இரண்டு தினங்களில் 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் கைது நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.குழந்தையின் உயிரை காப்பாற்ற 500 கி.மீட்டரை 6.45 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் சாரதி!
[Friday 2017-11-17 08:00]

கேரளாவில் ஒரு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற வாட்ஸ்அப் உட்பட சமூக இணையதளங்கள் உதவியுடன் 500 கிமீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் ஆம்புலன்சில் சென்ற டிரைவருக்கும் உதவிய போலீசாருக்கும் பாராட்டுகள் குவிகிறது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒரு மாத குழந்தை, இதய நோய் காரணமாக கண்ணூர் பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த குழந்தையின் உடல் நிலை ேமாசமானதால் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா மருத்துமனைக்கு கொண்டு செல்லவேண்டும். 10 மணி நேரத்திற்குள் அங்கு அனுமதித்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.இனியும் பேரறிவாளனை விடுவிப்பதில் என்ன தயக்கம்? - ராமதாஸ் கேள்வி
[Friday 2017-11-17 08:00]

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தும் அவரை அந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இவ்வழக்கில் எந்தக்குற்றமும் செய்யாத பேரறிவாளனை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதி வலை தாமதமானாலும் அறுத்தெறியப்பட்டிருக்கிறது. இனியும் பேரறிவாளனை விடுவிப்பதில் என்ன தயக்கம்?" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இலங்கையில் தொண்டைமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரம்: - ஸ்டாலின் கடிதத்துக்கு சுஷ்மா பதில்
[Friday 2017-11-17 08:00]

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இலங்கையில் மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சௌமியமூர்த்தி தொண்டைமானின் பெயர் இலங்கையில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டிருந்தது. சமீபத்தில் அரசு நிறுவனங்களிலிருந்து அவருடைய பெயரை இலங்கை அரசு நீக்கியதாகத் தகவல் வெளியானது.சிங்கள அரசின் வதை முகாம்களில் தமிழர்களை சித்ரவதை செய்வது தொடர்கிறது: - வைகோ வேதனை
[Thursday 2017-11-16 15:00]

'சிங்கள அரசின் வதை முகாம்களில் தமிழர்களை சித்ரவதைசெய்வது இன்றும் தொடர்கிறது' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், '2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடூரத்தோடு ஈழத்தமிழ் இனப்படுகொலைக் கொடுமைகள் முற்றுப்பெறவில்லை. இன்றுவரை தொடர்கின்றது. கடந்த ஜூலை 18-ம் தேதி ஐரோப்பா கண்டத்துக்கு அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழ் இளைஞர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை இதயம் வெடிக்கத் தெரிவித்து இருந்தார்கள்.ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி!
[Thursday 2017-11-16 15:00]

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டுவந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர்.ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு உதவ வேண்டும்: - சோனியா காந்திக்கு நீதிபதி கடிதம்
[Thursday 2017-11-16 15:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிப்பதற்குப் பெருந்தன்மை காட்ட வேண்டுமென, தண்டனை அளித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸேவுக்கு கோயில்கட்ட அடிக்கல்: - சர்ச்சையைக் கிளப்பும் இந்து மகா சபா
[Thursday 2017-11-16 15:00]

நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டுவதற்காக, இந்து மகா சபா அடிக்கல் நாட்டியுள்ளது. குவாலியர் மாவட்ட நிர்வாகம், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டத் தடை விதித்துள்ள நிலையில், அதையும் மீறி இந்து மகா சபை அடிக்கல் நாட்டியுள்ளது. குவாலியரில் தவுலஜ்கனி பகுதியில் உள்ள இந்து மகா சபா அலுவலகப் பகுதியில், கோயில் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவின்போது,கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்ற புதுப்பெண்!
[Thursday 2017-11-16 09:00]

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகள் முத்துட்சுமி (வயது 25). இவருக்கும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரை சேர்ந்த பால் வியாபாரி முருகன் (31) என்பவருக்கும் கடந்த மாதம் 30–ந்தேதி திருமணம் நடந்தது.இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற முத்துலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பாடசாலை மாணவியை கடத்தி திருமணம் செய்த விவசாயிக்கு 10 ஆண்டு சிறை!
[Thursday 2017-11-16 09:00]

திருவண்ணாமலை அடுத்த கானலாபாடி பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 37), விவசாயி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு நம்பியந்தல் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.நளினியை முன்கூட்டியே விடுதலைசெய்ய முடியாது: - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
[Wednesday 2017-11-15 17:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை முன்கூட்டியே விடுதலைசெய்ய முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது மன்னிக்க முடியாத குற்றம்: - வைகோ
[Wednesday 2017-11-15 08:00]

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இம்மாதம் 13-ந் தேதி அன்று பிற்பகல் 4 மணியளவில், இந்திய கடலோரக் காவல்படையினர், ராமேசுவரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா