Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
பல் சொத்தையை குணமாக்கும் ஆஸ்பிரின் மாத்திரை: - விஞ்ஞானிகள் தகவல்
[Sunday 2017-09-10 15:00]

பல் சொத்தையின் பாதிப்புக்களை ஆஸ்பிரின் மாத்திரை மாற்ற முடியும் என்றும், அந்த பல்லின் சொத்தையை சரிசெய்யும் சிகிச்சையான

பல் சொத்தையின் பாதிப்புக்களை ஆஸ்பிரின் மாத்திரை மாற்ற முடியும் என்றும், அந்த பல்லின் சொத்தையை சரிசெய்யும் சிகிச்சையான "நிரப்புதலை" நம்முடைய பல்லாலேயே செய்துவிட முடியும் என்றும் வட அயர்லாந்தின் தலைநகரும், முக்கிய துறைமுகமுமான பெல்ஃபாஸ்டிலுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பல் சொத்தை பகுதியில் குணமாக்குதலை மேம்படுத்தி, பல்லிலுள்ள குருத்தணுக்களை (ஸ்டெம் செல்) தூண்டுவதாக குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொடக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  

பல்லில் வரக்கூடிய பொதுவான நோயான பல் சொத்தை, பல் நாளங்களில் வீக்கம் ஏற்பட செய்து பல் வலியை உருவாக்குகிறது. வட அயர்லாந்தில் 15 வயது வரையானோரில் 72 விழுக்காட்டினர் பல் சிதைவு பெற்றிருப்பதாக பிரிட்டிஷ் பல் கூட்டமைப்பு 2016 ஆம் ஆண்டு தெரிவித்தது.இதுவே, இங்கிலாந்தில் 44 சதவீதமாகவும், வேல்ஸில் 63 சதவீதமாகவும் உள்ளது.வலி நிவாரணியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரை தான் ஆஸ்பிரின் (அசிட்டிலசிலிசிசிலிக் அமிலம்). வீக்கத்தை தடுக்கின்ற மருத்துவ குணம் இதிலுள்ளது. தலை வலி, மாதவிடாய் வலி, தசை வலி போன்றவைகளில் இருந்து விடுபடுவதற்கு இது பயன்படுத்தப் படுகிறது. ஒரு ஆஸ்பிரின் மாத்திரையின் விலை ஒரு பென்னிதான்.

பற்கள் இயற்கையாகவே குணமாகுவதற்கு மிகவும் குறைவான திறன்களையே கொண்டுள்ளது. உள் பல்கூழ் வெளியே தெரிந்தால், இனாமலுக்கு கீழே மெல்லிய உட்பல்லுறை அடுக்கை அவற்றால் உருவாக்க முடியும். ஆனால், இதனால் பெரிய பல் பிரச்சனைகளை தடுக்க இயலாது.பல் சிதைவுக்கு அதனை நிரப்பிவிடுவதுதான் தற்போதைய சிகிச்சையாக உள்ளது. இந்த பல்லின் வாழ்நாளில் பலமுறை இதனை மாற்றிவிட்டு, மீண்டும் நிரப்ப வேண்டிய நிலையுள்ளது.பேராசிரியை இக்ளஸ் எல் கரீம், குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்ட்டிலுள்ள மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் உயிர் மருத்துவ அறிவியல் கல்லூரியில் மூத்த விரிவுரையாளராக உள்ளார்.

பற்களில் காணப்படும் பல் குருத்தணுக்களை மையப்படுத்தியும், சேதமடைந்த பற்களில் நிரப்புதல் சிகிச்சையை மாற்றிவிட்டு, பற்களே அதனுடைய மீண்டும் குணம்பெறுகின்ற, சரிப்படுத்தும் திறன்களை பல்மருத்துவர் எவ்வாறு மேம்படுத்தியும் அவருடைய ஆய்வு அமைந்தது.வியாழக்கிழமை நடைபெற்ற பிரிட்டிஷ் வாய் மற்றும் பற்கள் ஆய்வு ஆண்டு மாநாட்டில், இந்த ஆய்வு முடிவுகள் சமர்பிக்கப்பட்டன.ஆஸ்பிரின் மாத்திரை குருத்தணுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். இதன் மூலம் இழந்துவிட்ட பல் அமைப்பை மீண்டும் பெறுமளவுக்கு தானாகவே சரி செய்ய உதவக்கூடும் என்று இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உண்மையிலேயே இங்கு நாங்கள் கூற வருவதெல்லாம், பற்களை அவற்றையே குணமாக்கிக்கொள்ளக்கூடிய சிகிச்சை முறை ஒன்றை வடிவமைத்துகொள்ள முடியும் என்று நம்புகின்றோம் என இக்ளஸ் எல் கரீம் கூறினார். தற்போதைய மருத்துவ சிகிச்சையான பற்களில் நிரப்புதலை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வராமல், படிப்படியாக புதிய சிகிச்சை முறை வரும்" என்று அவர் கூறியுள்ளார்.

புதிய உள் பல்கூழை உருவாக்க தேவைப்படக்கூடிய மரபணு முத்திரைகளை தூண்டுகின்ற ஒரு பொருளாக ஆஸ்பிரின் மாத்திரையை இனம்காண முந்தைய பெருமளவான ஆய்வு தரவுகளை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர்.வட்டவடிவ தட்டை கண்ணாடி தட்டில், குருத்தணுக்களை ஆஸ்பிரினோடு சேர்த்து பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிகிச்சை அளித்தபோது, மரபணு மற்றும் பொருள் ஆதாரமாகவும் இது உள் பல்கூழை உருவாக்க முடியும் என்பதை கண்டுபிடித்தனர்.

"உள் பற்கூழை மீண்டும் உருவாக்குவது மற்றும் நிரப்புதல் சிகிச்சை அளிப்பதை மாற்றிவிடுவதற்கு, ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவதை எப்படி செய்ய போகிறோம் என்பதுதான் அடுத்த செயல்பாடாக அமையும்" என்று அவர் கூறியுள்ளார்.ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவது என்பது அதனை பல் சிதைவு ஏற்பட்டுள்ள பற்களில் எளிதாக போட்டுவிடுவதாக இருக்கப்போவதில்லை.

"உள் பற்கூழை மீண்டும் உருவாக்குவது மற்றும் நிரப்புதல் சிகிச்சை அளிப்பதை மாற்றிவிடுவதற்கு, ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவதை எப்படி செய்ய போகிறோம் என்பதுதான் அடுத்த செயல்பாடாக அமையும்" என்று அவர் கூறியுள்ளார்.ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவது என்பது அதனை பல் சிதைவு ஏற்பட்டுள்ள பற்களில் எளிதாக போட்டுவிடுவதாக இருக்கப்போவதில்லை.

சிகிச்சை சோதனைகளுக்கு பிறகு, அதனை பற்களில் வைப்பதற்கான ஒரு கருவியை வடிவமைக்க மருந்தக சக பணியாளர்களோடு முயற்சி எடுப்பதுதான் அடுத்த செயல்பாடாக இருக்கும்" என்று அவர் தெளிவாக்கியுள்ளார்.ஆஸ்பிரின் மாத்திரை ஏற்கெனவே உரிமம் பெற்ற ஒரு மருந்தாக இருப்பது, இந்த புதிய சிகிச்சையை வடிவமைக்க உருவாக்குவதற்கு உதவும்.

"10 அல்லது 20 ஆண்டுகள் காலத்தில் வரக் கூடியதை பற்றி நாம் பேசவில்லை. வெகு விரைவாக நோயாளிகளோடு சிகிச்சை சோதனை நடைபெறலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "நாம் சந்தித்து வருகின்ற பல் தொடர்பான பெரிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு நம்முடைய அணுகுமுறையை மாற்றுகின்ற பெரும் சாத்தியக்கூறு நிலவுகிறது" என்கிறார் டாக்டர் எல் கரீம். "இந்த புதிய அணுகுமுறை பற்களின் வாழ்நாளை அதிகரிப்பது மட்டுமல்ல, பிரிட்டன் தேசிய சுகாதார சேவைகள் மற்றும் உலக அளவிலான சுகாதார பராமரிப்பு அமைப்புகளுக்கு மிக பெரிய நிதி சேமிப்பாகவும் அமையும்" என்று டாக்டர் எல் கரீம் தெரிவித்திருக்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com



பொருளாதார தேவைகளுக்காக வயதான ஆண்களுடன் டேட்டிங்: - இணையதளத்தில் குவிந்த பிரித்தானிய மாணவிகள்
[Tuesday 2018-01-16 16:00]

பிரித்தானியாவில் பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவிகள் தங்களது படிப்பு செலவு மற்றும் இதர பொருளாதார தேவைகளுக்காக, SeekingArrangement.com எனும் இணையதளத்தை நாடுகின்றனர்.அதாவது, இந்த இணையதளம் டேட்டிங் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. வயதான நபர்களுடன் இப்பெண்கள் டேட்டிங் செல்வதால் அவர்கள் 'sugar daddies' என அழைக்கப்படுகின்றனர். அதே போன்று இந்த மாணவிகள் 'sugar baby' என அழைக்கப்படுகின்றனர்.



300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை!
[Tuesday 2018-01-16 16:00]

17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா நாடு டச்சு எனப்படும் நெதர்லாந்து நாட்டின் காலனி (அடிமை) நாடாக இருந்து வந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் விலையுயர்ந்த தேயிலை, காபிக்கொட்டை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை கடந்த 17-ம் நூற்றாண்டுவாக்கில் கட்டியது.



சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி!
[Tuesday 2018-01-16 16:00]

சவுதியில் 35 ஆண்டுகளுக்கு பின் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அனிமேஷன் திரைப்படங்கள் திரைப்படவுள்ளன. மன்னர் முகமத் பின் சல்மான் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக சவுதியில் திரைப்படங்களை திரையிடுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



கனடாவில் ஹிஜாப் அணிந்த சிறுமி தாக்கப்பட்டாரா? - விளக்கம் அளித்த பொலிஸ்
[Tuesday 2018-01-16 09:00]

கனடாவின் டொரண்டோவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற 11 வயது சிறுமி தாக்கப்பட்டதாகவும், கத்திரிக்கோலால் அவளது ஹிஜாப் வெட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.இதை கனடா நாட்டு அரசியல்வாதிகள் வன்மையாகக் கண்டித்திருந்தனர், இதற்கு கனடா பிரதமரும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.



வருங்கால பிரித்தானியா இளவரசி மெர்க்கலின் கவர்ச்சி போட்டோ ஷூட்!
[Tuesday 2018-01-16 09:00]

பிரபல அமெரிக்க பத்திரிக்கைக்கு கடைசியாக மேகன் மெர்க்கல் நடித்து கொடுத்த கவர்ச்சியான போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.பிரபல நடிகையும், மொடலுமான மேகன் மெர்க்கலும், பிரித்தானிய இளவரசர் ஹரியும் காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் மே மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.இந்நிலையில் Good Housekeeping பத்திரிக்கையின் அமெரிக்க பதிப்புக்காக மெர்க்கல் கவர்ச்சியான போட்டோ ஷூட்டில் நடித்திருந்தார்.



கோல்டன் குளோப் விருது வென்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் மீது செக்ஸ் புகார்!
[Tuesday 2018-01-16 09:00]

சிறந்த ஹாலிவுட் சினிமா படங்களுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் நடந்தது.அதில் சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகருக்கான விருது ஆசிஷ் அன்சாரிக்கு வழங்கப்பட்டது.இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இவரது தந்தை டாக்டர் சவுகத் அன்சாரி, இவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர்.



வருங்கால பிரித்தானிய இளவரசியிடம் மன்னிப்பு கோரிய மொடல் அழகி!
[Monday 2018-01-15 18:00]

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கலை கருப்பித்தனவர் என இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த மொடல் அழகி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.UK Independence Party- யின் தலைவராக இருக்கும் Henry Bolton(54) - யின் காதலியும், மொடலுமான Jo Marney, இனவாதத்தை தூண்டும் வகையில் மேகன் மெர்க்கல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.



கலிபோர்னியா வில் சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்!
[Monday 2018-01-15 18:00]

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது.



நான் இன வெறியன் அல்ல: - டொனால்டு டிரம்ப்
[Monday 2018-01-15 18:00]

அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்து எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து பேசினார். மேலும் எல்சால்வேடர், ஹோண்டுராஸ் மற்றும் ஹைதி நாட்டில் இருந்து வந்து வெளியேறியவர்களையும் குறிப்பிட்டார்.



300 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்தவரின் ஆவியை திருமணம் செய்த பிரித்தானியா பெண்!
[Monday 2018-01-15 18:00]

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்த மனிதரின் ஆவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்த பெண் Amanda Teague(வயது 45), ஐரிஷ் கடற்கரையில் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் புடைசூழ 300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஹைதியின் கடற்கொள்ளையரான ஜாக் என்பவரின் ஆவியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த 1700 ஆண்டுகளில் வசித்து தூக்கிலிடப்பட்டவர் தான் ஜாக், 2014ம் ஆண்டு படுக்கையறையில் இருந்த போது தன்னுள் ஆவி வந்ததை உணர்ந்திருக்கிறார் Amanda Teague.அன்றிலிருந்து ஆவியுடன் பேச ஆரம்பித்தபோது சுவாரசியமாக இருந்ததாம்,



வெடித்து சிதறும் எரிமலை: - பப்புவா நியூகினி தீவில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
[Monday 2018-01-15 08:00]

ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.ஒசானியா கண்டத்தில் அமைந்துள்ளது பப்புவா நியூகினி தீவு. இதனருகில் உள்ள கடோவர் தீவிலுள்ள எரிமலை கடந்த 5-ம் தேதி முதல் குமுறி கொண்டிருந்தது.



ஓடுதளத்திலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்த விமானம்: - அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய பயணிகள்
[Monday 2018-01-15 08:00]

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷடவசமாக பெரும் உயிரிழப்பு ஏற்படவில்லை. துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.



பொங்கலோ பொங்கலோ: - சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து அசத்திய சிங்கப்பூர் பிரதமர்
[Sunday 2018-01-14 17:00]

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. லீ சியன் லூங் ’பொங்கலோ பொங்கல்!’ என்று வாழ்த்துத் தெரிவித்து இன்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். தமிழரின் திருநாளான பொங்கல், சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: - ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
[Sunday 2018-01-14 17:00]

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: - 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம்
[Sunday 2018-01-14 17:00]

இனவெறி குறித்து விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார்.



போர்த்துகல்: ஓய்வு விடுதியில் தீவிபத்து - 8 பேர் உயிரிழப்பு
[Sunday 2018-01-14 13:00]

போர்த்துகல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்தனர்.

 


தென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய்க்கு 60 பேர் பலி!
[Sunday 2018-01-14 12:00]

தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்ற மர்ம நோய் தாக்கியதில் 60 பேர் பலியாகி உள்ளனர்.தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்று அழைக்கப்படுகிற மர்ம நோய், மனிதர்களை தாக்கி வருகிறது.



தமிழ்ச் சமூகத்தால் நாங்கள் பெருமையடைகிறோம்: - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து
[Sunday 2018-01-14 12:00]

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.



பாகிஸ்தானில் ஏழு வயதுச் சிறுமி படுகொலை: - நியாயம் கேட்டு மகளுடன் டி.வி.யில் தோன்றிய செய்தி வாசிப்பாளர்
[Friday 2018-01-12 18:00]

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள கசூர் நகரில் கடந்த 4-ம் தேதி ஜைனப் அன்சாரி என்ற 7வயதுச் சிறுமி ஒருவர் புனித குர்ஆன் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில் மர்மநபரால் கடத்தப்பட்டார். கடந்த 9-ந்தேதி அந்தச் சிறுமி உடலில் பலத்த காயங்களுடன், குப்பை கிடங்கில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சிறுமியின் பெற்றோர், புனித ஹஜ் பயணத்துக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.



பாரீஸ் ஹோட்டலில் ரூ.35 கோடி நகைகள் கொள்ளை!
[Friday 2018-01-12 13:00]

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு ‘ரேஷா’ உள்ளிட்ட பல நகைக்கடைகளும், ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.இந்த நிலையில் நேற்று திடீரென அங்கு கோடாரி மற்றும் துப்பாக்கியுடன் 3 கொள்ளையர்கள் புகுந்தனர். கண்மூடித்தனமாக சுட்டு கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா