Untitled Document
November 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் கண்டறியும் பேனா!
[Monday 2017-09-11 13:00]

ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் புற்றுநோய்க்கு கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் புற்றுநோய்க்கு கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

  

சிகிச்சைக்குப் பின்னர் எதாவது புற்றுநோய் அணுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்துவிடும் துயரத்தைத் தவிர்க்க இது உதவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்தப் பரிசோதனைகள் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பம் 96% துல்லியமாகச் செயல்படுவதாக அக்கட்டுரை கூறுகிறது.

புற்றுநோய் அணுக்களின் தனிப்பட்ட வளர்சிதை மாற்றத்தை இந்த 'மாஸ்பெக் பேனா' எனப் பெயரிடப்பட்டுள்ள சாதனம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. புற்றுநோய் திசுக்கள் வளர்வதிலும் பரவுவதிலும் காட்டும் வேகம், அவற்றின் உள்வேதியியல் ஆரோக்கியமான திசுக்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இது எப்படிச் செயல்படுகிறது?

அறுவை சிகிச்சையின்போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்தப் பேனாவால் ஒரு துளி நீர் செலுத்தப்படும். உயிரோடு இருக்கும் செல்களில் உள்ள ரசாயங்கள் அந்தத் நீர்த் துளியில் நுழையும். இப்போது அந்தத் நீர்த் துளி ஆய்வுக்காக பேனாவால் உறிஞ்சப்படும்.ஒவ்வொரு நொடிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசாயனங்களை அளவிடக்கூடிய ஸ்பெக்ட்ரோமீட்டர் எனச் சொல்லப்படும் நிறமாலைமானியுடன் இந்தப் பேனா பொருத்தப்படும்.இதன் ஆய்வுமுடிவுகளில் இருந்து கிடைக்கும் ரசாயன ரேகைகள் அந்தத் திசுக்கள் ஆரோக்கியமான திசுக்களா இல்லை புற்றுநோய் வந்த திசுக்களா என்பது குறித்து மருத்துவருக்கு தெரியப்படுத்தும்.

புற்றுநோய் அணுக்களுக்கும், ஆரோக்கியமான அணுக்களுக்கும் இடையேயான எல்லையை கண்டுபிடிப்பதுதான் அறுவைச்சிகிச்சை நிபுணர்களுக்கு இருக்கும் சவாலாகும். சில கட்டிகளில் ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் புற்றுநோய் திசுக்கள் இடையேயான எல்லை வெளிப்படையாகத் தெரியும்; சிலவற்றில் மங்கலாகவே தெரியும். அறுவைச் சிகிச்சையின் போது புற்றுநோய் அணுக்கள் எதுவும் நீக்கப்படாமல் விட்டுவிடுவதை தவிர்க்க மருத்துவர்களுக்கு இந்தப் பேனா உதவியாக இருக்கிறது.

"எந்த அளவுக்கு மருத்துவத் தேவையில் இந்தத் தொழிலநுட்பம் உதவப்போகிறது என்பதை அறியும்போது உற்சாகமாக இருக்கிறது. நேர்த்தியாகவும் ,எளிமையாகவும் இருக்கும் இந்தப் பேனா இன்னும் குறுகிய காலத்துக்குள் மருத்துவர்களின் கையில் வந்துவிடும்," என பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார் டெக்சாஸ் பல்கலைகழகத்தின் வேதியியல் பிரிவின் உதவிப் பேராசிரியரான லிவியா எபெர்லின்.

தொடரும் சோதனைகள்

இந்தத் தொழில்நுட்பத்தின் ஆய்வுக்காக இதுவரை 253 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருடம் பயன்பாட்டுக்கு வரும்வரை இந்தக் கருவியை இன்னும் துல்லியமாக்க மேலும் சோதனைகளைத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தப் பேனா மலிவான விலையில் இருந்தாலும் நிறமாலைமானியானது அளவில் பெரிதாகவும், அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது. மருத்துவர் எபேர்லின் கூறுகையில் " நிறமாலைமானி நிச்சயம் இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தடையாக இருக்கும். அளவில் சிறிதாகவும், விலை சற்றே குறைவானதாகவும், ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்கும் நிறமாலைமானியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்"என்றார்.

"எப்போதும் நோயாளிகளுக்கு துல்லியமான, வேகமான மற்றும் பாதுகாப்பான அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தொழில்நுட்பம் மூன்றையும் சாத்தியமாக்கியிருக்கிறது" எனக் கூறியிருக்கிறார் பெய்லர் மருத்துவக் கல்லூரியின் நாளமில்லாசுரப்பி அறுவைச்சிகிச்சை பிரிவின் தலைவரும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருமான மருத்துவர் ஜேம்ஸ் சலிபர்க்.அறுவைச்சிகிச்சையில் துல்லியத்தை கூட்டும் சமீபத்திய முயற்சியே இந்த மாஸ்பெக் பேனா.

மற்ற ஆய்வுகள் என்னென்ன?

லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியின் ஒரு குழு ஏற்கனவே ஒரு கத்தியை உருவாக்கியிருந்தது. அறுவைச்சிகிச்சையின்போது வெட்டப்படும் திசுக்கள் புற்றுநோய் வந்தவைதானா என்பதை உறுதி செய்ய உதவும் வகையில் அந்தக் கத்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.ஹார்வார்டு பல்கலைகழகத்தில் உள்ள இன்னொரு குழு மூளைப்புற்று நோய் வந்தவர்களுக்கு எந்த அளவுக்கு நோய் பாதித்த அணுக்களை அகற்ற வேண்டும் என்பதை அறிய லேசர்களை பயன்படுத்தியது.

"அறுவைச்சிகிச்சையின் போது ஒரு கட்டி புற்றுநோய் கட்டியா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும் அதன் இயல்புகளை மருத்துவர்கள் மிக விரைவாக அறிந்துகொள்ளும் சாத்தியத்தை இன்னும் துரிதப்படுத்த இது போன்ற உற்சாகமூட்டும் ஆராய்ச்சிகள் உதவும்.

அறுவைச்சிகிச்சையின் போது எவ்வளவு விரைவாக தகவல்களை மருத்துவர்கள் தெரிந்து கொள்கிறார்களோ அதற்கேற்ப மிகச்சிறந்த சிகிச்சைகளை நோயாளிகளுக்கு விரைவில் வழங்கமுடியும்," எனத் தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மருத்துவர் அயின் மெக்கர்த்தி.

  
   Bookmark and Share Seithy.com



புதிதாக தேர்தலை சந்திக்க தயார்: - ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அதிரடி அறிவிப்பு
[Tuesday 2017-11-21 18:00]

ஜெர்மனியில் புதிதாக தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் நான்காவது முறையாக ஏஞ்சலா பிரதமரானார். இதற்கிடையே ஏஞ்சலா ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஃபிராங் வால்டர் வலியுறுத்தியுள்ளார்.



நைஜீரியா மசூதிக்குள் மனித வெடி குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலி!
[Tuesday 2017-11-21 15:00]

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்த தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.



ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்: - ஆங் சான் சூகி அறிவிப்பு
[Tuesday 2017-11-21 15:00]

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு தயார்: - சீனா அறிவிப்பு
[Tuesday 2017-11-21 15:00]

சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. ‘டாங்பெங்-41’ என்ற ஏவு கணையை தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக சோதனை நடத்தியது.இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தி தாக்குதல் நடத்த முடியும்.



அமெரிக்காவின் ஹாலிவுட் பீச்க்கு வந்த முதலையால் பரபரப்பு!
[Tuesday 2017-11-21 15:00]

அமெரிக்காவின் பிரபல கடற்கரையான ஹாலிவுட் பீச்க்கு திடீரென வந்த முதலையால் சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்து போய்யினர். ஹாலிவுட் கடற்கரையில் வழக்கம் போல அவர்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர். அப்போது கரைக்கு வந்த அலைகளின் இடையே 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று திடீரென வந்து சேர்ந்தது. இதனை கண்ட அனைவரும் பீதியடைந்து பின்வாங்கினர்.



ஐந்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிப்பு: - அதிகாரி அதிர்ச்சி தகவல்
[Tuesday 2017-11-21 08:00]

சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பு சார்பில் அரபு நாடுகளின் பிராந்தியத்தில் 5-வது சர்வதேச குழந்தைகள் தின மாநாடு துபாயில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைல் முகம்மது தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-



சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தண்ணீர் நடன திருவிழா!
[Monday 2017-11-20 14:00]

தென்மேற்கு சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தண்ணீரில் நடனமாடும் விழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கியுஸூ மாகாணத்தின் கலாச்சாரத்தை உணர்த்தும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தண்ணீரில் அரங்கேற்றப்படும் நடனம் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.



நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையம்!
[Monday 2017-11-20 08:00]

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத்திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை பின்பற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மகளிர் நோய் தொடர்பான ஆன்லைன் இதழ் கடந்த அக்டோபர் 26ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:



நியூ கலிடோனியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: - ரிக்டர் அளவில் 7ஆக பதிவு
[Monday 2017-11-20 07:00]

ஆஸ்திரேலியா அருகே பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் நியூ கலிடோனியா மற்றும் அருகில் உள்ள வனூவாட் பகுதிகளில் சிறிய அளவு சுனாமி தாக்கியது.



வியாழன் கிரகத்தில் கடும் புயல்: - நாசா விஞ்ஞானிகள் தகவல்
[Monday 2017-11-20 07:00]

வியாழன் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமிரா வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்ப நிலைப்பாடுகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.



சொத்துகளை எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள்: - சவுதி அரசு நிபந்தனை
[Saturday 2017-11-18 16:00]

சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. சவுதியின் பெரும் பணக்காரரான அல் வலீத் பின் தலாலும் ஊழல் ஒழிப்புக் குழுவின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பவில்லை.



வெற்றிகரமாக நடந்த பிணத்துக்கு தலைமாற்றும் ஆபரேசன்: -மனிதர்களுக்கு பொருத்த திட்டம்
[Saturday 2017-11-18 16:00]

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடைபெறுவது சகஜமாகி விட்டது. அதன் அடிப்படையில் தலைமாற்று ஆபரேசன் நடத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.ரஷியாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று ஆபரேசன் நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று ஆபரேசன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.



அர்ஜெண்டினாவில் 44 பேருடன் மாயமான ராணுவ நீர்மூழ்கி கப்பல்!
[Saturday 2017-11-18 15:00]

அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது.தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி: - அமெரிக்கா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
[Saturday 2017-11-18 09:00]

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பிற எந்த நாட்டைக் காட்டிலும் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.



சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பலி!
[Saturday 2017-11-18 09:00]

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.



குழந்தை பிறந்த பிறகு காதலனை கைப்பிடித்த டென்னிஸ் ஜாம்பவான் செரீனா!
[Friday 2017-11-17 18:00]

டென்னிஸ் உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். 36 வயதாகும் செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியனை காதலித்து வந்தார்.



வானில் திடீரென தோன்றிய மர்மப்பொருளால் ஜேர்மனியில் பரபரப்பு!
[Friday 2017-11-17 18:00]

ஜெர்மனியில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள் வானில் பறந்து சென்றுள்ளது. பந்து போன்று காணப்பட்ட அந்த பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.இதனால் ஒளியுடன் பறந்த அந்தப் பொருள் விண்கல்லா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.



இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ஒபாமா: - இளம் தலைவர்களுக்கு அழைப்பு
[Friday 2017-11-17 17:00]

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒபாமா பேசும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அவர், 'இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் இளம் தலைவர்கள் அனைவரையும் நாங்கள் ஒன்றிணைக்கவுள்ளோம். இந்தியா முழுவதும் பல்வேறு ஆக்கபூர்வமான பணியில் ஈடுபட்டுவரும் இளம் தலைவர்களுடன் நான் உரையாற்ற விரும்புகிறேன்.



அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் சீனா பேச்சுவார்த்தை!
[Friday 2017-11-17 08:00]

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சீனா தயாராகி உள்ளது.கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், ’அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, 'நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை' என மறுத்தது.



தற்கொலை செய்ய விரும்பியவர்களை கொலை செய்த ட்விட்டர் கொலையாளி!
[Friday 2017-11-17 08:00]

தற்கொலை எண்ணம் உடைய சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு அவர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜப்பானிய நபர் குறித்த செய்தியால் தாம் மிகவும் கவலையுற்றிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா