Untitled Document
September 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நிலை தடுமாறி குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதிய போப் பிரான்சிஸ்!
[Tuesday 2017-09-12 08:00]

போப் ஆண்டவர் பிரான்சிஸ், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அங்குள்ள கார்ட்டஜினா நகரில் மக்களை சந்தித்தார். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு சென்றார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அங்குள்ள கார்ட்டஜினா நகரில் மக்களை சந்தித்தார். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு சென்றார்.

  

அப்போது திடீரென நிலைதடுமாறிய போப் பிரான்சிஸ், வாகனத்தில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதினார். இதில் அவரது கன்னத்திலும், புருவத்திலும் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, காயத்தில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டது. பின்னர் அந்த காயத்துடனே மக்களை சந்தித்து ஆசி வழங்கினார். பின்னர் அங்கு வழிபாடு நடத்தினார்.

முன்னதாக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாக மனித உரிமைக்குழுக்கள் வெளியிட்டு இருக்கும் செய்தி குறித்து அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டார். கொலம்பியாவின் அண்டை நாடான வெனிசூலாவில் நிகழ்ந்து வரும் அரசியல் வன்முறைகள் குறித்தும் போப் ஆண்டவர் வருத்தம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘கொலம்பியா மற்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். மனிதாபிமானத்துக்காக ஏங்கும் அவர்கள் நிலம் அல்லது கடல் வழியாக வெளியேறுகின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் உரிமை, கண்ணியம் என அனைத்தையும் இழந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.comவடக்கு லண்டனில் பாரிய தீ விபத்து: - மீட்பு பணியில் 140 தீயணைப்பு வீரர்கள்
[Tuesday 2017-09-19 16:00]

வடக்கு லண்டனிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.மனித உரிமை மீறல்களுக்கு முதன்முறையாக கண்டனம் தெரிவித்த ஆங் சான் சூகி!
[Tuesday 2017-09-19 12:00]

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.கலவர வழக்கு: - எகிப்தில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை!
[Tuesday 2017-09-19 07:00]

எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரத்துவ மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டம் கலவரமாக மாறியது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களும், 50-க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.கழிவறைக்குள் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் மீட்பு: - ஜெனிவாவில் மர்ம செயற்பாடு
[Tuesday 2017-09-19 07:00]

ஜெனீவாவில் நபர் ஒருவர் பல்லாயிரக்கணக்கான யூரோக்களை கழிப்பறைக்குள் நுழைப்பதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜெனீவா வங்கி கிளைக்கு அருகில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கழிவறையிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரியளவு 500 யூரோ தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.உலக மக்களை கவலையில் ஆழ்த்திய குழந்தை: - நெஞ்சை உருக்கும் சம்பவம்
[Tuesday 2017-09-19 07:00]

மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உயிருக்கு பயந்து வங்கதேசத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.இதுவரை நான்கு லட்சம் மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு வந்துள்ளனர், இவர்கள் தங்க முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.குறட்டை விடுவதை தடுக்கும் கருவியை கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் விருது!
[Monday 2017-09-18 18:00]

குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச அளவில் மகத்தான சாதனை படைத்த நபர்களுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்குவது வழக்கம்.இதே போல், மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சாதனைகளை செய்யும் நபர்களுக்கு Ig Nobel என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது.துனிசியாவில் வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி!
[Monday 2017-09-18 18:00]

இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வாழும் துனிசியா நாட்டில் ஷரீஅத் சட்ட,திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது.பெற்றோரின் சொத்துகளில் அங்குள்ள பெண்களுக்கு சம உரிமை கிடையாது. மகன்களுக்கு இரண்டு பங்கும், மகள்களுக்கு ஒரு பங்கும் வழங்கும் பழக்கம்தான் செயல்பாட்டில் உள்ளது.பொருளாதார தடை கடுமையாக இருந்தால் அணு ஆயுத சோதனை வேகமாக நடைபெறும்: - வட கொரியா எச்சரிக்கை
[Monday 2017-09-18 18:00]

வடகொரியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடை கடுமையாக இருந்தால் தங்களது அணு ஆயுத சோதனையும் வேகமாக நடைபெறும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி வட கொரியா தனது 6-வது அணு ஆயுத சோதனையை செய்து முடித்துள்ளது.வடகொரியாவின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை புதிய பொருளாதார தடையை விதித்தது.பிரான்ஸ் ரயில் நிலையத்தில் நான்கு வெளிநாட்டு மாணவிகள் மீது ஆசிட் வீச்சு!
[Monday 2017-09-18 08:00]

அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்கு சுற்றுலா வந்த நான்கு மாணவிகள் மீது ஆசிட் வீசிய மனநலம் சரியில்லாத பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த Courtney Siverling, Charlotte Kaufman, Michelle Krug மற்றும் Kesley Korsten ஆகிய நான்கு மாணவிகள் சுற்றுலா வந்துள்ளனர்.வங்காளதேசத்தில் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு: - 14,000 புதிய முகாம்கள் அமைப்பு
[Monday 2017-09-18 08:00]

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பாகிஸ்தானின் லாகூர் தொகுதி இடைத்தேர்தல்: - நவாஸ் செரீப் மனைவி வெற்றி
[Monday 2017-09-18 08:00]

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிட்டார்.ரோஹிஞ்சா பிரச்சனையை தடுத்து நிறுத்த ஆங் சான் சூச்சிக்கு கடைசி வாய்ப்பு: - ஐ.நா. பொது செயலாளர்
[Sunday 2017-09-17 17:00]

மியான்மரில் இருந்து பல ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லீம்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு காரணமாக அமைந்த வன்முறை மற்றும் ராணுவ தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த அந்நாட்டின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு தற்போது கடைசி வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.உலகில் 81.5 கோடி மக்கள் பசியால் தவிப்பு: - வெளியான தகவல்
[Sunday 2017-09-17 17:00]

உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் மற்றும் பருவநிலை மாற்றத்தால் 81.5 கோடி பேர் பசியால் பரிதவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்.இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதமாகும். ஆசியாவில் மட்டும் 52 கோடி பேரும் ஆப்பிரிக்காவில் 24 கோடி பேரும் பசியால் வாடுகின்றனர்.கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஆஸ்திரேலியா மாடல் அழகி பலி!
[Sunday 2017-09-17 17:00]

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார்.கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு 3 மணியளவில் இவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.சவுதியில் பட்டத்து இளவரசரை விமர்சனம் செய்த முக்கிய தலைவர்கள் கைது!
[Sunday 2017-09-17 08:00]

சவுதி அரேபியாவின் அரசராக சல்மான் உள்ளார். அங்கு பட்டத்து இளவரசராக அவரது மருமகன் முகமது பின் நயீப் இருந்தார். ஆனால் திடீரென அங்கு பட்டத்து இளவரசர் மாற்றி அமைக்கப்பட்டார். ஜூன் 20ல் நடந்த அரச குடும்பத்து கூட்டத்தில் புதிய பட்டத்து இளவரசராக அரசர் சல்மான் மகன், முகமது பின் சல்மான் தேர்வு செய்யப்பட்டார். அதோடு துணை பிரதமர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.வாய்விட்டு சிரிக்கும் போதும் அப்படியே தூங்கிவிடும் இளம் பெண்: - விசித்திர நோயால் அவதி
[Sunday 2017-09-17 08:00]

வாய்விட்டு சிரிக்கும் போதும் திடீரென அப்படியே தூங்கிவிடும் விசித்திர நோயால் இளம் பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார்பிரித்தானியாவின் Nottingham நகரை சேர்ந்தவர் Jessica Southall (20) இவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது Jessica, narcolepsy மற்றும் cataplexy எனப்படும் விசித்திர நோயால் பாதிக்கபட்டுள்ளார். அதாவது, எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடி தூங்கிவிடுவார்.இலக்கை எட்டும் வரை அணு ஆயுத உற்பத்தியைத் தொடர்வோம்: - வடகொரியாவின் மிரட்டல்
[Saturday 2017-09-16 18:00]

இலக்கை எட்டும் வரை அணு ஆயுத உற்பத்தியைத் தொடர்வோம்’ என வடகொரியா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது.தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐ.நா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும், தன் நிலைப்பாட்டை இதுவரை வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தும் அது கண்டுகொள்ளவில்லை.மியான்மர் மீது வங்காளதேசம் போர் தொடுக்க வேண்டும்: - வங்காளதேச மக்கள் போராட்டம்
[Saturday 2017-09-16 18:00]

மியான்மரில் ரக்கினே மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு எதிராக மெஜாரிட்டியாக வாழும் புத்தமதத்தினர் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரம் மூண்டது. அதை தொடர்ந்து அங்கு வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. ஏராளமான ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை விமர்சித்த பிரிட்டிஷ் பிரதமர்!
[Saturday 2017-09-16 08:00]

லண்டன் நிலத்தடி ரயிலில் வெள்ளிக்கிழமை நடந்த வெள்ளிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவை பிரிட்டீஷ் பிரதமர் தெரீசா மே விமர்சித்துள்ளார். "தோற்றுப்போன தீவிரவாதி ஒருவரால் லண்டனில் நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல்.இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட கிருஸ்தவருக்கு மரணதண்டனை!
[Saturday 2017-09-16 08:00]

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான பாகிஸ்தானில் அம்மதத்திற்கு எதிராக கருத்து கூறுவது கடும் கண்டத்திற்குறிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும். அவ்வாறான கருத்து வெளியிட்டதற்காக 1990ம் ஆண்டுமுதல் சுமார் 67 பேர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா