Untitled Document
November 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தனக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியான துன்புறுத்தலை தானே பதிவு செய்த பெண்!
[Tuesday 2017-09-12 09:00]



பாலியல் வன்கொடுமை பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும். இது வெறும் உடல்ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல. இது ஒரு கொடூர தாக்குதல், மனதை வாட்டும் நினைவு. ஆனால் அது தொடர்பான குறிப்பான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் இலக்காக வேண்டியிருக்கும்.ஒருவர் பாலியல்ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகும்போது என்ன செய்யவேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இதிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதையும் தெரிந்துக் கொள்வது அவசியம்.

பாலியல் வன்கொடுமை பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும். இது வெறும் உடல்ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல. இது ஒரு கொடூர தாக்குதல், மனதை வாட்டும் நினைவு. ஆனால் அது தொடர்பான குறிப்பான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் இலக்காக வேண்டியிருக்கும்.ஒருவர் பாலியல்ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகும்போது என்ன செய்யவேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இதிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதையும் தெரிந்துக் கொள்வது அவசியம்.

  

ஓராண்டுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தான். அப்போது எனக்கு 18 வயதுதான். அந்த இடத்தில் இருந்து ஒரு நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவிலேயே என் வீடு இருந்தது. இருள் சூழந்த அந்த நேரத்தில் என்னுடைய மொபைல் ஃபோனில் 'ரிகார்ட்' பட்டனை அழுத்திவிட்டேன்.

மொபைல் வெளிச்சத்தை கண்டு சுதாரித்து அவன் என்னை விட்டு விலகிவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. 'மொபைலில் பதிவு செய்கிறேன், என்னை விட்டுவிடு' என்று நான் கத்தினேன், ஓலமிட்டேன். ஆனால் அவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. என்னை தரையில் கீழே தள்ளி துன்புறுத்தினான். அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்ற போதிலும், எல்லாமே முடிந்துவிட்டது போல், தோற்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். என் வீட்டுக்கு அருகிலேயே நான் கற்பழிக்கப்பட்டேன் என்பதை நம்பவே முடியவில்லை, நான் எழுந்து வீட்டிற்கு ஓடினேன். நிலைமையை உணர்ந்த என் குடும்பத்தினர் உடனே காவல்துறைக்கு போன் செய்தார்கள். நான் மிகவும் அழுக்காக உணர்ந்தேன். உடலை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றபோது, தடுத்துவிட்டார்கள். மிகவும் கேவலமாக உணர்ந்தேன்

அருகிலுள்ள 'பாலியல் தாக்குதல் உதவி மையத்திற்கு' செல்லும்படி சொன்னார்கள்.வீட்டிலிருந்து 45 நிமிடங்கள் பயணத் தொலைவில் இருந்த மையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன்.அந்த பரிசோதனையின்போது உடலில் இருந்து ஆடைகள் அகற்றப்பட்டன. உலோக படுக்கை ஒன்றில் படுக்க வைத்து, குச்சி போன்ற ஒரு பொருளை பிறப்புறுப்புக்குள் செலுத்தினார்கள்.

அது மிகவும் கொடுமையான அனுபவம். காயமும், வலியும் ஏற்படுத்தியது. அந்த மருத்துவ மையத்தில் இருந்த பெண்கள் அன்புடன் ஆதரவாக நடந்து கொண்டார்கள்.என் உடலில் வரைந்திருந்த 'டேட்டூ'வைப் பற்றி அவர்கள் பேசினார்கள். நான் பாதுகாப்பாக, இயல்பாக இருப்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டது ஆறுதலாக இருந்தது.எஸ்.டி.ஐ, எச்.ஐ.வி மற்றும் கர்ப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. எச்.ஐ.வி உட்பட வேறு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, சில மாத்திரைகளை கொடுத்தார்கள். நாளொன்றுக்கு மூன்று முறை என ஒரு மாதத்திற்கு மாத்திரைகளை சாப்பிடவேண்டியிருந்தது.

'பல சங்கடமான கேள்விகள் கேட்கப்பட்டன'

மருந்துகளை சாப்பிட்டதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. வாந்தி வரும், மயக்கமாக இருக்கும். அடிக்கடி மருத்துவரிடம் சென்றேன். ஒரு மாதம் முழுவதும் இப்படி அலைச்சலாகவே இருந்த்து, மனதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஒரு சாதாரண பெண்ணான நான், காவல் நிலையத்திற்கும் சென்றுவர வேண்டிய சூழ்நிலை. 'பரிசோதனைக்கூட எலியாக இருக்கிறேனா? என்றும் தோன்றத் தொடங்கியது.எனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு எனக்காக விபத்துபோல் இருந்தாலும், அதைப் பற்றி எத்தனை முறை திரும்பத் திரும்ப சொல்லியிருப்பேன் என்றே தெரியவில்லை.

மருத்துவர் ஒருமுறை என்னிடம் விசாரித்தபோது, மிகவும் ஆழமான, அந்தரங்கமான விவரங்களை எல்லாம் கேட்டபோது அதிர்ந்து போனேன்.'உன் காலுக்கு கீழ் இருந்த ஆடையை கீழ்புறமாக இழுத்தானா? இல்லை மேற்புறமாக தூக்கினானா?, அவன் உன்னை எப்படி தாக்கினான், நீ என்ன செய்தாய்? என்பது போன்ற கேள்விகளால் வெறுத்துப்போனேன்.

'என்னைப் போல் பாதிக்கப்பட்ட பலர்'

இதுபோன்ற சங்கடங்களை நான் மட்டுமே எதிர்கொள்ளவில்லை. மேலும் பலருக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் அனைவரும் இதைப் பற்றி வெளியே சொல்வதில்லை. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களில் 15 சதவித பெண்களே அது குறித்து புகார் அளிக்கின்றனர்.அதில் 5.7 சதவிதத்தினருக்கே நியாயம் கிடைக்கிறது. அவர்களில் ஒருத்தியாக நான் இருக்கமுடியாதா என்று எனக்கு நானே நம்பிக்கையூட்டிக் கொண்டேன். பாதி கட்டத்தை தாண்டிய பிறகு, பின்வாங்கும் நினைப்பே வரக்கூடாது என்று உறுதி பூண்டேன். சாலையில் சென்று கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியை கைது செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏன் கைநழுவ விடவேண்டும்? என்று நினைத்தேன். என்னுடைய பாதையில் குறுக்கிட்டு தவறு செய்தவனை தண்டிக்க வேண்டுமானால் நான் பின்வாங்கக்கூடாது.

என்னுடைய படுக்கையில் அமர்ந்தவாறே இப்படித்தான் என்னை தேற்றிக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வேன்.நான் பதிவு செய்த பலாத்கார வீடியோவை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் அதை ஒரு சாட்சியாக பயன்படுத்தி, அவனை குற்றவாளி என நிரூபித்தோம். அவனுக்கு 13 வருட சிறை தண்டனை என தீர்ப்பானது.எனக்கு பக்கபலமாக நீதிமன்றத்தில் அம்மாவும் என்னுடன் இருந்தார். இந்த வழக்கில் எனக்கு வேறு பலரும் உதவி செய்தார்கள். தீர்ப்புக்கு பிறகு அனைவரின் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி எனக்கு ஆறுதல் அளித்தது.

மாதக்கணக்கான போராட்டமும் அழுத்தமும் முடிவுக்கு வந்து அனைவரும் ஆசுவாசமடைந்தோம். வாழ்க்கையின் கொடிய காலகட்டத்தில் இருந்து இப்போது நான் வெளியே வந்துவிட்டேன். பல மாதங்களுக்கு பிறகு யூடியூபில் ஒரு வீடியோவை உருவாக்கினேன். அதற்கு நான் வைத்த பெயர் என்ன தெரியுமா? 'பாலியல் தாக்குதல் பற்றி உங்களுக்கு சொல்லப்படாத விஷயங்கள்.எனக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுவதற்கு முன்பு இது போன்ற வீடியோவை பார்த்திருந்தால், அதை சமாளித்திருப்பேனே என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதுபோன்ற சமயத்தில் என்ன செய்யவேண்டும் என்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



புதிதாக தேர்தலை சந்திக்க தயார்: - ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அதிரடி அறிவிப்பு
[Tuesday 2017-11-21 18:00]

ஜெர்மனியில் புதிதாக தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் நான்காவது முறையாக ஏஞ்சலா பிரதமரானார். இதற்கிடையே ஏஞ்சலா ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஃபிராங் வால்டர் வலியுறுத்தியுள்ளார்.



நைஜீரியா மசூதிக்குள் மனித வெடி குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலி!
[Tuesday 2017-11-21 15:00]

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்த தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.



ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்: - ஆங் சான் சூகி அறிவிப்பு
[Tuesday 2017-11-21 15:00]

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு தயார்: - சீனா அறிவிப்பு
[Tuesday 2017-11-21 15:00]

சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. ‘டாங்பெங்-41’ என்ற ஏவு கணையை தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக சோதனை நடத்தியது.இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தி தாக்குதல் நடத்த முடியும்.



அமெரிக்காவின் ஹாலிவுட் பீச்க்கு வந்த முதலையால் பரபரப்பு!
[Tuesday 2017-11-21 15:00]

அமெரிக்காவின் பிரபல கடற்கரையான ஹாலிவுட் பீச்க்கு திடீரென வந்த முதலையால் சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்து போய்யினர். ஹாலிவுட் கடற்கரையில் வழக்கம் போல அவர்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர். அப்போது கரைக்கு வந்த அலைகளின் இடையே 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று திடீரென வந்து சேர்ந்தது. இதனை கண்ட அனைவரும் பீதியடைந்து பின்வாங்கினர்.



ஐந்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிப்பு: - அதிகாரி அதிர்ச்சி தகவல்
[Tuesday 2017-11-21 08:00]

சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பு சார்பில் அரபு நாடுகளின் பிராந்தியத்தில் 5-வது சர்வதேச குழந்தைகள் தின மாநாடு துபாயில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைல் முகம்மது தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-



சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தண்ணீர் நடன திருவிழா!
[Monday 2017-11-20 14:00]

தென்மேற்கு சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தண்ணீரில் நடனமாடும் விழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கியுஸூ மாகாணத்தின் கலாச்சாரத்தை உணர்த்தும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தண்ணீரில் அரங்கேற்றப்படும் நடனம் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.



நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையம்!
[Monday 2017-11-20 08:00]

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத்திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை பின்பற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மகளிர் நோய் தொடர்பான ஆன்லைன் இதழ் கடந்த அக்டோபர் 26ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:



நியூ கலிடோனியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: - ரிக்டர் அளவில் 7ஆக பதிவு
[Monday 2017-11-20 07:00]

ஆஸ்திரேலியா அருகே பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் நியூ கலிடோனியா மற்றும் அருகில் உள்ள வனூவாட் பகுதிகளில் சிறிய அளவு சுனாமி தாக்கியது.



வியாழன் கிரகத்தில் கடும் புயல்: - நாசா விஞ்ஞானிகள் தகவல்
[Monday 2017-11-20 07:00]

வியாழன் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமிரா வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்ப நிலைப்பாடுகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.



சொத்துகளை எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள்: - சவுதி அரசு நிபந்தனை
[Saturday 2017-11-18 16:00]

சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. சவுதியின் பெரும் பணக்காரரான அல் வலீத் பின் தலாலும் ஊழல் ஒழிப்புக் குழுவின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பவில்லை.



வெற்றிகரமாக நடந்த பிணத்துக்கு தலைமாற்றும் ஆபரேசன்: -மனிதர்களுக்கு பொருத்த திட்டம்
[Saturday 2017-11-18 16:00]

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடைபெறுவது சகஜமாகி விட்டது. அதன் அடிப்படையில் தலைமாற்று ஆபரேசன் நடத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.ரஷியாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று ஆபரேசன் நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று ஆபரேசன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.



அர்ஜெண்டினாவில் 44 பேருடன் மாயமான ராணுவ நீர்மூழ்கி கப்பல்!
[Saturday 2017-11-18 15:00]

அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது.தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி: - அமெரிக்கா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
[Saturday 2017-11-18 09:00]

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பிற எந்த நாட்டைக் காட்டிலும் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.



சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பலி!
[Saturday 2017-11-18 09:00]

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.



குழந்தை பிறந்த பிறகு காதலனை கைப்பிடித்த டென்னிஸ் ஜாம்பவான் செரீனா!
[Friday 2017-11-17 18:00]

டென்னிஸ் உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். 36 வயதாகும் செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியனை காதலித்து வந்தார்.



வானில் திடீரென தோன்றிய மர்மப்பொருளால் ஜேர்மனியில் பரபரப்பு!
[Friday 2017-11-17 18:00]

ஜெர்மனியில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள் வானில் பறந்து சென்றுள்ளது. பந்து போன்று காணப்பட்ட அந்த பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.இதனால் ஒளியுடன் பறந்த அந்தப் பொருள் விண்கல்லா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.



இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ஒபாமா: - இளம் தலைவர்களுக்கு அழைப்பு
[Friday 2017-11-17 17:00]

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒபாமா பேசும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அவர், 'இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் இளம் தலைவர்கள் அனைவரையும் நாங்கள் ஒன்றிணைக்கவுள்ளோம். இந்தியா முழுவதும் பல்வேறு ஆக்கபூர்வமான பணியில் ஈடுபட்டுவரும் இளம் தலைவர்களுடன் நான் உரையாற்ற விரும்புகிறேன்.



அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் சீனா பேச்சுவார்த்தை!
[Friday 2017-11-17 08:00]

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சீனா தயாராகி உள்ளது.கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன. ஒரு கட்டத்தில், ’அமெரிக்கா போரை அறிவித்தது. அதனால், நாங்களும் தாக்குதலுக்குத் தயார்’ என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்கா, 'நாங்கள் எந்த நாட்டின்மீதும் போர் அறிவிக்கவில்லை' என மறுத்தது.



தற்கொலை செய்ய விரும்பியவர்களை கொலை செய்த ட்விட்டர் கொலையாளி!
[Friday 2017-11-17 08:00]

தற்கொலை எண்ணம் உடைய சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு அவர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜப்பானிய நபர் குறித்த செய்தியால் தாம் மிகவும் கவலையுற்றிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா