Untitled Document
September 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட 15 நாட்களாகும்! - சென்று திரும்பிய பிரதேச செயலர் தெரிவிப்பு
[Wednesday 2017-09-13 07:00]

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட 15  நாட்கள் தேவைப்படும் என்று பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார். இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்காக, பூநகரி பிரதேச செயலாளர் அடங்கிய குழு நேற்றுக் காலை 9 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்து, மீண்டும் பிரதேச செயலகத்தை  மாலை வந்தடைந்த பூநகரி பிரதேச செயலாளர், ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட 15 நாட்கள் தேவைப்படும் என்று பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார். இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்காக, பூநகரி பிரதேச செயலாளர் அடங்கிய குழு நேற்றுக் காலை 9 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்து, மீண்டும் பிரதேச செயலகத்தை மாலை வந்தடைந்த பூநகரி பிரதேச செயலாளர், ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

  

“இரணைதீவு பூர்வீக காணிகளை அடையாளம் காணும் முகமாக, பிரதேச செயலகத்தில் இருந்து பிரதேச செயலாளரோடு நில அளவை திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களோடு, கள விஜயம் இடம்பெற்றிருந்தது. இந்த அளவீட்டு பணிகளுக்காக 2017 ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக, பூர்வீக நிலங்களை எல்லைப்படுத்துவதற்காகவும் நில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இக்குழு சென்றிருந்தது.

இதன்போது, அப்பிரதேசத்தில் பல இடங்களில் உள்ள எல்லைக் கற்களை அடையாளம் காணும் பணியில் எமது குழுவினர் ஈடுபட்டனர். கணிசமான எல்லைக் கற்கள் முதற்கட்டமாக அடையாளம் இடப்பட்டுள்ளது. இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை. நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களது கருத்துப்படி, ஏற்கெனவே அளக்கப்பட்ட நில அளவை வரைபடத்தில் உள்ள கற்களை இனம் காணுவதற்கு ஏறத்தாழ 15 நாட்கள் வேலை நாட்களுக்கு மேல் செலவிட வேண்டி உள்ளது.

ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவல்களை, தங்களால் பதிவிட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு, ஒரு செயற்றிட்டத்தை தயாரித்தப் பின்னர் அதன் களப்பணியில் ஈடுபட உள்ள உத்தியோகத்தர்களுடன் அங்கு தங்கி இருந்து தொடர்ச்சியாக அளவீட்டுப் பணிகளை முடிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இந்த அறிக்கை மாவட்ட செயலாளர் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன், ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவல்களை தங்களது தகவல்களுடன் ஒப்பிட்டு ஒரு செயற்றிட்டத்தை தயாரிக்கவும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தேவைப்படும்” என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள்! - ஜெனிவாவில் வைகோ அழைப்பு Top News
[Tuesday 2017-09-19 07:00]

உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.



வெள்ளியன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரை தனியறையில் சந்திக்கிறார் ஜனாதிபதி!
[Tuesday 2017-09-19 07:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு தனித்த அறையிலான சந்திப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தாமதமடைவதாக ஹூசைன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தேர்தலை ஒத்திவைக்க பின்கதவால் முயற்சிக்கிறது அரசு! - கீர்த்தி தென்னக்கோன்
[Tuesday 2017-09-19 07:00]

தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்க அஞ்சும் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உபாயத்தை பின் கதவால் நிறைவேற்ற முயற்சிப்பது வெட்கக்கேடானது என்று சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே விமர்சித்துள்ளது.



காணாமல் போவதில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை குறித்த விவாதம் நடக்காது!
[Tuesday 2017-09-19 07:00]

காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போவதில்இருந்து அனைைவரையும் பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பம் இட்டிருந்தது. 2016 மே மாதம் அந்த உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது.



வடக்கு - கிழக்கை இணைக்க ஒருபோதும் விடமாட்டோம்! - ஹிஸ்புல்லா சூளுரை
[Tuesday 2017-09-19 07:00]

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மட்டக்களப்பு ஏறாவூர் பதீயுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் நேற்று நடந்த நிகழ்வு, ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவருக்கு இடமாற்றம்!
[Tuesday 2017-09-19 07:00]

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் பதில் தலைமை மருத்துவ அதிகாரியான நிர்மலி ​தேனுவர, உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை, அங்கிருந்து நீக்கி, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இணைத்துகொள்ளுமாறு, சுகாதார ஊடச்சத்து, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டாரவுக்கு பணித்துள்ளார்.



புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் சடலங்களை எரிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடை!
[Tuesday 2017-09-19 07:00]

புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் சடலங்களை குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ்.மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மக்கள் இலகுவாக ஏமாறும் முட்டாள்கள் என்கிறார் ரில்வின் சில்வா!
[Tuesday 2017-09-19 07:00]

மக்களை ஏமாற்றுவது மிகவும் சுலபமான வேலை என்று தெரிவித்துள்ளார் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா. குருணாகலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் “ நாட்டில் அனைவருக்கும் மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது. எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்பது குறித்து மக்களுடன் பேச வேண்டியதே எமது முயற்சியாகும். மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் மக்களை ஏமாற்றிய போது இன்றும் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.



தேர்தல் ஆணையாளரைச் சாடுகிறார் டிலான் பெரேரா!
[Tuesday 2017-09-19 07:00]

விருப்பு வாக்கு முறையில் தேர்தலை நடத்தி, தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் முறை தொடர்பில் தேர்தல் ஆணையகத்தின் நிலைப்பாடு மற்றும் தலைவரின் சுயாதீனத் தன்மை தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக அமைச்சர் டிலான் பெரேரா நேற்று ஜாஎலயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்தார்.



பிரசன்ன ரணதுங்கவுக்கு நீதிமன்றம் பிடியாணை!
[Tuesday 2017-09-19 07:00]

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறு பேருக்கு, பூகொடை நீதிவான் நீதிமன்றத்தால், நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர சபையின் ஊடாக, கொழும்பு நகரத்தில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை, கிரிந்திவெல மாளிகாவத்த குப்பை முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு, குப்பைலொறிகள் மூலமாக எடுத்து சென்றபோது, அவற்றுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழே, அறுவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி கொட்டும் மழையிலும் ஜெனிவாவில் பேரணி!
[Monday 2017-09-18 20:00]

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் கொட்டும் மழையிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பமாகியது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, தற்போது ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்தது.



ஜோசப் முகாம் சித்திரவதைக் கூடத்தை ஜெனிவாவில் அம்பலப்படுத்திய தமிழ்ச்செல்வனின் மனைவி! Top News
[Monday 2017-09-18 20:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜோசப் முகாமில் வைத்து தன்னிடம் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டதாக, அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.



யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பூங்காக்களாக பராமரிக்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு!
[Monday 2017-09-18 19:00]

யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாகப் பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.



சர்வதேச விசாரணை மூலம் நீதி கிடைக்க வேண்டும்! - காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் Top News
[Monday 2017-09-18 19:00]

சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா். 211ஆவது நாளாக, இன்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து ஜேர்மனிய சட்டத்தரணியிடமே அவா்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனா்.



தேர்தல்களை நடத்த முன்னர் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்! - அரசிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்
[Monday 2017-09-18 19:00]

நாட்­டில் எந்­த­வொரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­ன­ரும், புதிய அர­ச­மைப்­புக்­கான பொது வாக்­கெ­டுப்பே நடத்­தப்பட­வேண்­டும் என்று அர­சி­டம் அழுத்­தம் திருத்­த­மா­கக் கூறி­யுள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. கிழக்கு, வட­மத்தி, சப்­ர­க­முவ ஆகிய மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தல் எதிர்­வ­ரும் டிசெம்­ப­ரில் நடை­பெ­ற­லாம் என்­கிற எதிர்பார்ப்பு எழுந்­துள்ள நிலை­யில் இந்த விட­யத்தை அர­சி­டம் மீண்­டும் ஆணித்­த­ர­மா­கக் கூட்­ட­மைப்­புக் கூறி­யுள்­ள­து.



ஒக்ரோபர் 2ஆம் திகதிக்குள் அனைத்து மாகாணசபைகளையும் கலைக்குமாறு கோரிக்கை!
[Monday 2017-09-18 19:00]

மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் இணக்கப்பாட்டுடன் அனைத்து மாகாண சபைகளையும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்குள் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் (கபே) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கமைவாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்த யோசனை அறிவிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.



திலீபன் நினைவுத் தூபியை மாநகரசபை புனரமைக்க வேண்டும்! - ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை
[Monday 2017-09-18 19:00]

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை, யாழ் மாநகர சபை புனரமைப்பு செய்ய ஆவன செய்ய வேண்டும் என இன்று நடந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கோரிக்கை விடுத்தார்.



நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி! Top News
[Monday 2017-09-18 19:00]

ஐக்கிய நாகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நியூயோர்க் ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். நியூயோர் நகரில் ஜனாதிபதி தங்கும் ஹோட்டலில் அமெரிக்காவுக்கான இலங்கை தூவராலய உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியையும் ஜயந்தி சிறிசேன அம்மையாரையும் கோலாகலமாக வரவேற்றனர்.



காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலைக் குற்­ற­மாக அறி­விக்­கும் சட்­ட­ வ­ரைவை, ஒத்திவைக்க அரசு முடிவு!
[Monday 2017-09-18 19:00]

பல­வந்­த­மாகக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலைக் குற்­ற­மாக அறி­விக்­கும் சட்­ட­ வ­ரைவை, மகிந்த அணி­யு­ட­னான சந்­திப்­பை­ய­டுத்து எதிர்­வ­ரும் 21ஆம் திகதி மீள­வும் ஒத்­தி­வைப்­ப­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ள­தாக கூறப்படுகிறது.



சி்றைவாசம் அனுபவிக்க பசில் ராஜபக்சவே காரணம்! - அனுஷ பல்பிட்ட
[Monday 2017-09-18 19:00]

தாம் சிறை தண்டனை அனுபவிக்க பசில் ராஜபக்சவே காரணம் என இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார். வெலிகடை சிறைச்சாலைக்கு வந்து தன்னை சந்தித்த நண்பர்களிடம் அவர் இதனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா