Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தாய்மொழியில் பேசுங்கள்: - துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு
[Wednesday 2017-09-20 07:00]

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: "பெற்ற தாயையும், தாய் நாட்டையும், பிறந்த பூர்வீக ஊரையும், தாய் மொழியையும் நாம் என்றைக்குமே மறந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

  

அப்படி மறந்து செயல்படுபவர்களை மனிதர்களாக கருத முடியாது. எல்லோரும் எப்போதும் தத்தம் தாய்மொழியில் பேசுங்கள். உங்கள் தாய்மொழிக்கு மதிப்பும் மரியாதையும் அளியுங்கள். அதேசமயம் ஆங்கிலேயர்களிடம் ஆங்கில மொழியில் பேசுவதும் தவறில்லை. தற்போது பலரும் தமது பெற்றோரை மம்மி, டாடி என்று ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசிவருகிறோம். ஆனால், அம்மா மற்றும் உருது மொழியில் அம்மி என்று அழைப்பதே நம் உள்ளத்தில் இருந்துவரும் சொல். மம்மி என்று சொல்வது வெறும் உதடுகளில் இருந்து மட்டுமே வரும் வார்த்தை. அது உள்ளத்தில் இருந்து வருவதில்லை. இனியாவது தாய்மொழியில் பெற்றோரை அழைப்போம். இக்கருத்துகளை நான் மத்திய அமைச்சராக இருந்தபோதும் அடிக்கடி கூறிவந்திருக்கிறேன்" என்று கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com



மது குடிக்கும் போட்டி: - மகளிர் அமைப்பு போர்க்கொடி
[Monday 2017-12-18 08:00]

கோவா மாநிலத்தில் மது குடிக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு அந்த மாநிலத்தின் மகளிர் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறது.சுற்றுலா மையமான கோவாவில் படகுப் போட்டி, அலைச்சருக்குப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தற்போது மதுபான நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பாப்லோ என்ற நிறுவனம் மதுக்குடிக்கும் போட்டியை நடத்துகிறது. 19-ம் தேதி வாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் இந்த மதுக்குடிக்கும் போட்டி தொடர்பான அறிவிப்பு சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



கள்ளர் வெட்டுத் திருவிழா: - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
[Sunday 2017-12-17 09:00]

பிரசித்திப் பெற்ற தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் ஐயனார் கோவிலில் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரிக்குடியிருப்பில் கூடினர்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகிலுள்ள பிரசித்திப் பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் ஐயனார் கோவில் கள்ளர்வெட்டு திருவிழா விமரிசையாக நடந்தது. கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி இத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிசேகங்கள் மற்றும் வில்லிசை மூலம் கற்குவேல் ஐயனாரின் பிறப்புக் கதை பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.



பாரம்பரிய ஆன்மிக தளங்களுக்கு பயணம்: - காஞ்சிபுரம் வந்த வரலாற்று ஆர்வலர்கள்!
[Sunday 2017-12-17 09:00]

பாரம்பரிய கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதென்பது அவசியமான ஒன்று. அதற்காக காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சோழர் வரலாறு ஆய்வு சங்கம் மற்றும் செலிபரேட் காஞ்சி ஆகிய இரு அமைப்புகள் இணைந்து பாரம்பரிய ஆன்மிக தளங்களுக்கு இரண்டுநாள் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். 'காஞ்சி மரபு நடை' என்ற இந்த நிகழ்விற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலில் இருந்து 140 பேர், காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தார்கள்.



தமிழகத்தில் திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டுகிறார்: - ஹெச்.ராஜா
[Sunday 2017-12-17 08:00]

தமிழகத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிய திருமாவளவன் அது எடுபடாமல் போனதால் தற்போது மதக்கலவரத்தைத் தூண்டுகிறார் என்று நாகப்பட்டினத்தில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்துக் கோயில்கள் குறித்துப் பேசிய திருமாவளவனைக் கண்டித்தும், சீர்காழியில் பா.ஜ.க.வினரைத் தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்தும் நாகை அவுரித்திடலில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோரை போலீஸ் கைதுசெய்தது.



என் குடியால் மனைவியை கொன்றுவிட்டேன்: - கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்
[Saturday 2017-12-16 17:00]

குடி குடியைக் கெடுக்கும் என்பதை வார்த்தைகளாகக் கேட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். ஆனால், குடியால் ஒரு குடும்பமே நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவன் காவல்துறையிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் அனைவரையும் அதிர்சியில் உறைய வைத்திருக்கிறது.



தந்தையின் நண்பரைக் குத்திக்கொன்ற எம்.பி.பி.எஸ் மாணவர்!
[Saturday 2017-12-16 17:00]

நண்பரின் மகனுக்கு அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த எம்.பி.பி.எஸ் மாணவன், அவரை குத்திக்கொலைசெய்துள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தக்கலை அருகில் உள்ள சிவனி க்ளத்மை சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர், குமார். கேரளாவில் தொழில்செய்து வரும் இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். அதில் ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகள் பல் மருத்துவம் படித்துவருகிறார். மகன் சந்தோஷ் குமார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த சந்தோஷக்கு, மீண்டும் படிக்கச்செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். தேர்வு எழுத ஹால் டிக்கெட் வந்த பிறகும் அவர் செல்லவில்லை. இதனால், தந்தை குமாரும் தாயார் வசந்தியும் பலமுறை சொல்லியும் படிக்கச் செல்ல மறுத்துள்ளார்.



எங்களைப் பார்த்து சிலர் சவால்விடுகிறார்கள்: - டாக்டர் தமிழிசை
[Saturday 2017-12-16 17:00]

''ஊழல் செய்யாத கட்சி பா.ஜ.க மட்டும்தான். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள். மாற்றத்தைக் கொண்டுவர பா.ஜ.க-வுக்கு ஓட்டு போடுங்கள். வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தி.மு.க-வை ஆதரிப்பதால், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்கு தோல்வி உறுதி'' என்று பேசினார், பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை. ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு ஓட்டு கேட்டு, மாநிலத் தலைவர் தமிழிசை பேசுகையில், ''சென்னையிலேயே இங்குதான் டெங்கு காய்ச்சல் அதிகம். குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால், டாஸ்மாக் கடையில் விற்பனை ஜோராக நடக்கிறது. மது ஆறுபோல ஓடுகிறது. இந்தத் தொகுதியில், டாஸ்மாக் மாத விற்பனை, இரண்டரை கோடி ரூபாய் என்கிறார்கள். ஜெயலலிதா தொகுதி என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், இந்தத் தொகுதியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தொகுதி மக்களின் தேவைகளை உடனே நிறைவேற்றுவோம்' என்று சொல்லி ஏமாற்றுகிறார்.



மகனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்து கொண்ட பெற்றோர்!
[Saturday 2017-12-16 17:00]

சேலம் குகை, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (55). இவரது மனைவி சந்திரகலா (50). இவர்களுக்கு அருண் பிரகாஷ், ஜெய்கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடராஜன், துணி வியாபாரம் செய்துவருகிறார். அருண்பிரகாஷ் பெங்களூருவிலும், ஜெய்கார்த்திக் தாய்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலைபார்க்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தன் மகன் அருண்பிரகாஷிற்கு, ''உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. நானும், அம்மாவும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்'' என்று ஒரு கடிதத்தில் எழுதி, அதில் வீட்டு சாவியையும் வைத்து கூரியர் அனுப்பிவிட்டனர். அந்தக் கடிதம், நேற்று மாலை பெங்களூருவில் உள்ள அருண்பிரகாஷ் கையில் கிடைத்திருக்கிறது.



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு: - காவல்துறையினர் விசாரணை
[Saturday 2017-12-16 09:00]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டிவனம் ரோஷணைப் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், ராஜாராம் (46). கடலூர் போலீஸ் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிவரும் இவருக்கு சுமதி (40) என்ற மனைவியும் ரஞ்சித் (25) என்ற மகன் மற்றும் வித்யப்ரியா (24) என்ற மகளும் இருந்தனர். ராஜாராமுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழந்ததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.


பெண்நாகத்தை விழுங்க முயன்ற ஆண் ராஜநாகம்!
[Saturday 2017-12-16 08:00]

ராஜநாகங்கள் மிகவும் சென்சிடிவானவை. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கூடுகட்டி வாழக்கூடியவை. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மைகொண்டவை. ராஜநாகங்கள் பாம்புகளைத்தான் உணவாக உட்கொள்ளும். மலைப்பாம்புக் குட்டிகளைக்கூட விழுங்கி விடும். ஆனால், இதுவரை ராஜநாகம் இன்னொரு ராஜநாகத்தை விழுங்கியதாகக் கேள்விப்பட்டதில்லை. இனப்பெருக்கக் காலங்களில் உறவுக்கு ஒத்துழைக்காதபட்சத்தில் ஆண் ராஜநாகங்கள் பெண் நாகங்களைத் தாக்குவது உண்டு. ஆனால், முதன்முறையாக ஆண் ராஜநாகம் ஒன்று பெண்நாகத்தை விழுங்க முயன்றச் சம்பவம் தென்மலை அருகே நடந்துள்ளது.



பைக் மோதியதில் இருவர் கவலைக்கிடம்: - உருகவைத்த குழந்தையின் அழுகுரல்
[Friday 2017-12-15 19:00]

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள ஆலங்கிணறு விலக்கில் எதிரெதிரே வந்த இரண்டு பைக் மோதியதில் இருவர் கவலைக்கிடமாகவும் மூன்று பேர் சிகிச்சையிலும் உள்ளனர். பைக்கில் உறவினர்களுடன் வந்த குழந்தை ரத்தக்காயத்துடன் அழுதுகொண்டிருந்தது பார்த்தவர்களின் நெஞ்சையும் கரைய வைத்தது.



மூன்று மாத குழந்தையின் வயிற்றில் வளர்ந்து வந்த கரு: - அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய மருத்துவர்கள்
[Friday 2017-12-15 19:00]

பீகார் மாநிலத்தில் மூன்று மாத குழந்தை ஒன்று வயிற்றினுள் கட்டி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் வயிற்றில் இருப்பது கட்டியல்ல, அது பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள மற்றொரு குழந்தை என்பது தெரிய வந்தது. அந்த குழந்தைக்கு கண்கள் மற்றும் தோல்கள் வளர்ச்சியடைந்து இருந்தன.



சட்டக்கல்லூரி மாணவி கொடூர கொலை: - அசாம் வாலிபருக்கு மரண தண்டனை
[Friday 2017-12-15 11:00]

கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் அசாம் வாலிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் பாப்பு. இவரது மகள் ஜிஷா(24). சட்டக்கல்லூரியில் பி.எல். படித்து வந்தார். கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதியன்று ஜிஷா வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீருல் இஸ்லாம் (26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதியை பணி நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்!
[Friday 2017-12-15 11:00]

காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்தது.



ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்!
[Friday 2017-12-15 11:00]

பேரறிவாளன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக புழல் சிறையில் இருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.ராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு, கடந்த நவம்பர் 20-ம் தேதி, சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. சோதனைக்குப் பின், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைசெய்தனர். அதன்பேரில், புழல் மத்திய சிறைக்கு மாற்றும்படி பேரறிவாளன் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது



குடிக்க தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு மது கொடுத்த ஆசிரியர்கள்!
[Friday 2017-12-15 08:00]

கர்நாடகாவின் துமக்குரு (Tumakuru) மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு மதுபாட்டில்களைக் கொடுத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.துமுக்குரு மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், பெண் ஆசிரியர் உட்பட ஏழு ஆசிரியர்களும் கடந்த 10-ம் தேதியன்று தக்ஷின கன்னடாவுக்கு (Dakshina kannada) கல்விச் சுற்றுலா சென்றுள்ளார்கள். இந்நிலையில், அவர்கள் துமுக்குருவிற்கு திரும்பி வரும்போது, இரண்டு மாணவர்கள் ஆசிரியரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்கள். மதுபோதையில் இருந்த ஆசிரியர்கள், ஆல்கஹால் கலந்து வைத்திருந்த பாட்டிலை மாணவர்களிடம் கொடுத்துள்ளார்கள்.



வடமாநில கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா!
[Thursday 2017-12-14 13:00]

கோவையில் ஏ.டி.எம் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த வடமாநில கொள்ளையர்கள், நாமக்கல்லில் கைதுசெய்யப்பட்டனர்.கோவை, விளாங்குறிச்சி அருகே இண்டஸ் இண்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமராக்களை மறைத்துவிட்டு, வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் மெஷினை உடைத்துள்ளனர். இரண்டு இடங்களிலும் மொத்தம் 29 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.



பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆபாச நடனம்: - அரச பாடசாலையில் நடந்த கொடுமை
[Thursday 2017-12-14 12:00]

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களின் முன் பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடியக் கூத்து அரங்கேறியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின்போது, பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடினார். பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆபாசமாக நடந்த இந்த நடனத்தைக் கண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் முகம் சுளித்தனர்.



திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து: - மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
[Thursday 2017-12-14 12:00]

திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி மூன்று பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முருகன் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபம் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.



சென்னையில் உள்ள சீன உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோக்கள்!
[Thursday 2017-12-14 08:00]

சென்னையில் உள்ள சீன உணவகம் ஒன்றில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வருகிறது. வெளிநாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். ஆனால் நம் நாட்டில் பொறுத்தவரை ரோபோக்களின் பயன்பாடு என்பது ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்தது. அந்த கவலையை போக்குவதற்காகவே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் ரோபோக்களை கொண்டு ஒரு உணவகம் செயல்பட்டு வருகிறது.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா