Untitled Document
April 20, 2024 [GMT]
ஈழ மக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன்: - கமல்ஹாசன்
[Friday 2017-09-22 08:00]
இந்திய சினிமாவில் பல சிகரம் தொட்ட நடிகர் கமல்ஹாசன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.விரைவில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் அடுத்து வரும் தமிழக முதல்வர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் பல சிகரம் தொட்ட நடிகர் கமல்ஹாசன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.விரைவில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் அடுத்து வரும் தமிழக முதல்வர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

  

இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக தான் வெற்றி பெற்றால், இலங்கை மக்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் தமி்ழக அரசியல்வாதிகள் இதுவரை செயற்பட்டது போன்று அல்லாமல், அதற்கும் அப்பால் சென்று காத்திரமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாககொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இந்திய ஊடகம் ஒன்றுக்கு கமல்ஹாசன் வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை இந்திய டுடே தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் வழங்கி சேவையில் தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.<முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொண்ட மரியாதையின் காரணமாகவே தான் இதுவரை அரசியலில் நுழையவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைமைத்துவம் ஒன்றை தமிழக மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.அவர்களின் எதிர்பார்ப்பை தீர்க்கும் வகையில் முதலமைச்சர் பதவிக்காக தேர்தலில் களமிறங்கவுள்ளேன். முதற்கட்டமாக மக்கள் சந்திப்பு விரைவில்ஆரம்பிக்கப்படும்.அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர்.இடதுசாரியா, வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.என்னைப் பொருத்தவரை கறுப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது. அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன்.உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



அமித்ஷாவின் சொத்து மதிப்பு? - வெளியான விவரம்!
[Saturday 2024-04-20 16:00]

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.



“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு!
[Saturday 2024-04-20 16:00]

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.



மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி!
[Saturday 2024-04-20 16:00]

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!
[Saturday 2024-04-20 16:00]

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.



வாக்கு சதவீதம் சரிவு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்!
[Saturday 2024-04-20 08:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.



“சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம்” - டெல்லி எம்.பி. குற்றச்சாட்டு!
[Saturday 2024-04-20 08:00]

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.



பேச்சுவார்த்தை தோல்வி: இறுதிவரை தேர்தலை புறக்கணித்த இறையூர் மக்கள்!
[Saturday 2024-04-20 08:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.



உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்மணி!
[Friday 2024-04-19 16:00]

‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் கோயம்புத்தூர் பெண் இடம்பிடித்துள்ளார். ‘டைம்’ இதழ் 2024 -ம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.



லண்டனில் இருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு அதிர்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

'சர்கார்' பட பாணியில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயல் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



வாக்களித்தவுடன் குஷ்பு போட்ட ட்வீட்டால் பாஜகவுக்கு அதிர்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

மக்களவை தேர்தலில் நடிகை குஷ்பு வாக்களித்த பின்னர் பகிர்ந்த ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.



தமிழகத்தில் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் மரணம்!
[Friday 2024-04-19 16:00]

சேலம் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.



அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்!
[Friday 2024-04-19 07:00]

தமிழகத்தில் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.



தேர்தல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர சோதனை!
[Friday 2024-04-19 07:00]

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஈரோட்டில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனை!
[Friday 2024-04-19 07:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Thursday 2024-04-18 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.



“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!
[Thursday 2024-04-18 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராமம்!
[Thursday 2024-04-18 18:00]

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு, முனங்காடு மீனவ கிராமத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை தான் தார் சாலை போடப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். அதுவும் ஒருசில மாதங்களில் பழுதாகி பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், புகார் மனுக்களை அளித்தும் பலனளிக்காத நிலையில் இரண்டாவது தார் சாலை போட சொல்லியும் மற்றும் சுத்தமான குடிநீர் கேட்டும் போராடும் ஒரு அத்திப்பட்டி மாதிரியான அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு குக்கிராமம் தான் அது.



கோவையில் அண்ணாமலை வெற்றி பெற கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகர்!
[Thursday 2024-04-18 18:00]

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற பாஜக நிர்வாகி ஒருவர் கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான கடலூர், ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர், அம்மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக உள்ளார்.



ஓய்ந்தது பிரச்சாரம்: முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா