Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
மலேசியாவில் இலங்கையர் கொலை! Top News
[Wednesday 2017-10-11 18:00]

மலேசியா Jalan Gombak Lama மலைப் பகுதியில் இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கால்கள் மற்றும் தலை சாக்கினால் மூடப்பட்ட நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மலேசியா Jalan Gombak Lama மலைப் பகுதியில் இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கால்கள் மற்றும் தலை சாக்கினால் மூடப்பட்ட நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

  

கடந்த திங்கட்கிழமை மலைப்பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டு சில மணித்தியாலத்தில் 26 மற்றும் 51 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Gombak பொலிஸ் தலைமை அதிகாரி Ali Ahmad தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவர், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அட்டை வைத்திருக்கும் 32 வயதான இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடலில் குத்தப்பட்டிருந்த பச்சையினை வைத்து, அவரது மலேசியா மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

15 மீற்றர் உயரத்திலிருந்து இந்த நபரின் சடலம் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் கடுமையான காயம் காணப்பட்டுள்ளதாகவும், கனமான பொருள் ஒன்றினால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



இரண்டாவது ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்! - கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நிகழ்வு Top News
[Tuesday 2018-02-20 19:00]

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது ஆண்டுக்குள் நுழைந்துள்ளது. இதனை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை!
[Tuesday 2018-02-20 19:00]

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு வார இடைவெளிக்குப்பின் Bellinzonaவிலுள்ள Federal Criminal நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.



பொதுக் கொள்கையுடன் இணையுங்கள்! - சிறிகாந்தா அழைப்பு
[Tuesday 2018-02-20 19:00]

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்காக, தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ரெலோ செயலாளர் என். ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.



அமைச்சரவைக் கூட்டத்தில் சுசிலும் தயாசிறியும் மாயம்!
[Tuesday 2018-02-20 19:00]

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் இருவர் கலந்து ​கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகி​யோரே அமைச்ச​ரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த இரு அமைச்சர்களையும் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவை சந்திப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.



மகிந்தவிடம் நாட்டைக் கையளிக்கச் சொல்கிறார் ஞானசார தேரர்!
[Tuesday 2018-02-20 19:00]

உள்ளூராட்சி தேர்தலில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சவிடம் நாட்டை கொண்டு நடத்துவதற்கு இடமளிக்க வேண்டும் என கோரியுள்ள பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர், நாட்டிற்கு தேவையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முடியாவிடின் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமிக்க பதவியில் இருந்து என்ன பயன் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.



நாரந்தனை வாசியின் கையைத் துண்டித்தவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை!
[Tuesday 2018-02-20 19:00]

நாரந்தனையில் குடும்பத்தலைவரை வெட்டிப் படுகாயம் ஏற்படுத்திய 4 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியைச் சேர்ந்த அன்ரன் எட்வெட் ஹென்றி என்பவரை கும்பல் ஒன்று வெட்டிக் காயப்படுத்தியது. அதன் போது, அவரது ஒரு கை துண்டாகியது.



மாணவர்களுக்கு டப் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி!
[Tuesday 2018-02-20 19:00]

பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டப் (Tab) வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. டப் (Tab) வழங்கும் இத்திட்டத்தால் 175,000 பாடசாலை மாணவர்களும், 28,000 ஆசிரியர்களும் பயனடைய இருந்தனர்.



சுமந்திரன் எழுப்பிய பிரச்சினையால் விவாதம் ஒத்திவைப்பு!
[Tuesday 2018-02-20 19:00]

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பிரதிகள் இல்லாததினால் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் மட்டும் குறித்த அறிக்கை இருப்பதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ்மொழியில் பிரதிகள் வரும்வரை விவாதத்திற்கு ஒத்துழைக்க முடியாது எனக் கூறினார். இதை தொடர்ந்தே விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.



இரணைமடு குளம் வற்றியதால் விவசாயம் கேள்விக்குறி! Top News
[Tuesday 2018-02-20 19:00]

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து காணப்படுவதால், சிறுபோக நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இரணைமடுகுளத்தில் 30 அடி நீர் சேமிக்கப்படுகின்ற போது, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடியாக காணப்படும். இவ்வாறான வேளைகளில் இரணைமடுகுளத்தின் கீழ் 8 ஆயிரம் ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.



தென்மராட்சி விபத்துகளில் நால்வர் படுகாயம்!
[Tuesday 2018-02-20 19:00]

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்ற விபத்­துக்­க­ளில் தாளை­யடி கத்­தோ­லிக்க பங்­குத் தந்தை உட்­பட நால்­வர் காய­ம­டைந்­த­னர். இவர்­க­ளில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.



நிலையான ஆட்சிக்கே ஆதரவு! - ரிஷாட் பதியூதீன்
[Tuesday 2018-02-20 19:00]

நிலையான ஆட்சியை அமைப்பவர்களுக்கே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “ நிலையான ஆட்சியை அமைப்பவர்களுடன் நாமும் இணைவோம். இந்நாட்டின் சிறுபான்மை இனம் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தும் நல்லாட்சிக்கே ஆதரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கும்” என்றார்.



செயற்கை மழையை பொழியச் செய்வதற்கு திட்டம்!
[Tuesday 2018-02-20 19:00]

நாட்டின் மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீரேந்து பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.



தணிந்தது அரசியல் குழப்பம் - நாளை அமைச்சரவை மாற்றம்?
[Tuesday 2018-02-20 09:00]

தனித்து அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அந்த முயற்சியை கைவிட்டு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அரசியல் குழப்பநிலை தீரும் நிலையை எட்டியுள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முன்தினம் இரவு தீர்மானித்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று பகல் நடைபெற்ற விசேட மற்றும் அவசர சந்திப்பின்போது ஜனாதிப தியின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய அரசாங்கத்தில் நீடிக்க தீர்மானித் துள்ளது.



ரணிலின் பதவியைப் பிடுங்குவதில் தோல்வி கண்ட மகிந்த சம்பந்தனின் பதவி மீது குறி!
[Tuesday 2018-02-20 09:00]

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டதொடரின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



வல்வை உள்ளிட்ட சபைகளில் சுயேட்சைகளுடன் கூட்டுச் சேர கூட்டமைப்பு முயற்சி!
[Tuesday 2018-02-20 09:00]

வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



கச்சதீவில் கோலோச்சவுள்ள சிங்கள ஆதிக்கம்! - வடக்கு ஊடகவியலாளர்களும் புறக்கணிப்பு
[Tuesday 2018-02-20 09:00]

கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் போது, இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 24 ஆம் திகதி பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.



வடக்கு பட்டதாரிகள் அரசுக்கு 2 வார காலக்கெடு! Top News
[Tuesday 2018-02-20 09:00]

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாக்குறுதி அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த “அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்களை நடத்தப்போவதாக வடக்கு மாகாண பட்டதாரிகள் எச்சரித்துள்ளனர்.



உலகளவிலான போட்டியில் வெற்றி பெற்றார் கனடியத் தமிழர்! Top News
[Tuesday 2018-02-20 09:00]

உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழர் மார்கஸ் மரியதாஸ் வெற்றி பெற்றுள்ளார். ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் 6 சர்வதேச போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தான் ஒரு போதும் கற்பனை செய்து பார்த்ததில்லை என மார்கஸ் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.



முல்லைத்தீவில் சிறந்த விவசாயிகள் முதலமைச்சரால் கௌரவிப்பு! Top News
[Tuesday 2018-02-20 09:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள்- பண்ணையாளர்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் கௌரவித்துள்ளார். இந்த நிகழ்வு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் வடமாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன் தலைமையில் நடைபெற்றது.



ஹெரோயினுடன் சிக்கியவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டது அம்பலம்!
[Tuesday 2018-02-20 09:00]

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த 6 ஆம் திகதி ஒருவரைக் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹொரேயினைக் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டபோது பல சம்பவங்கள் வெளியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா