Untitled Document
April 24, 2024 [GMT]
காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாக்கப்பட வேண்டும்! - ஐ.நா நிபுணரிடம் கோரிக்கை
[Thursday 2017-10-12 07:00]

லிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃபிடம், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரியுள்ளது.

லிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃபிடம், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரியுள்ளது.

  

14 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, ​கடந்த 10ஆம் திகதியன்று இலங்கைக்கு வருகைதந்துள்ள, ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃப், கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளை சந்தித்தார். இதன்போது, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, இலங்கையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமுல்படுத்த ஐ.நா.வின் பங்கேற்பு அவசியம் என்ற தொனிப்பொருளில் அறிக்கையொன்றை வழங்கியது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, உட்துறைமுக வீதியில் உள்ள மனித உரிமை மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்குமான நிலையத்தில் வைத்தே, அந்த பிரதிநிதிகளை, பப்லோ டி கிரீஃப் சந்தித்தார். அவரிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டி கிறிவ், கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளை திருகோணமலையில் சந்தித்த போது இலங்கையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமுல்படுத்த ஐ.நா.வின் பங்கேற்பு அவசியம் என்ற தொனிப் பொருளிளான அறிக்கை ஒன்றை வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினராகிய நாம் இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளின் தற்போதைய நிலைவரம் குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.

01. ஒக்டோபர் 2015 அன்று இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1 இல் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் குறித்து அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் தேசிய கலந்தாலோசனை மாத்திரமே நடாத்தப்பட்டு அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்மானம் 30/1 மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்ட போதும், மார்ச் 2017இல் மீளவும் தீர்மானம் 34/1 ஏற்கப்பட்ட பின்னரும், காணாமற்போனோர் அலுவலகம், நீதிப்பொறிமுறை, இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறைகள் எதுவுமே இதுவரையில் அமுலுக்கு வரவில்லை என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். அடிப்படையில் இவற்றை ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்துவதற்கான கொள்கைத்திட்டங்கள் அரசிடம் இருப்பதற்கான சான்றாதாரங்களும் கிடையாது.

தான்தோன்றித்தனமான முறையில் தனக்கு விரும்பியபோது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக சிலவிடயங்களை மேற்கொண்டுவருவதாகவே காண்கிறோம். நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் ஒருங்கிணைந்த முறையிலும் ஒன்றை ஒன்று பலப்படுத்தும் வகையிலும் அமுல்படுத்தப்படும் போதே அவை நீண்டகாலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதுடன் நிலையான நல்லிணக்கத்துக்கும் இட்டுச்செல்லும். எனவே, இது சார்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த எமது கொள்கை நிலைப்பாட்டை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்:

1.நிலைமாறுகால நீதி அமைச்சகத்தை ஸ்தாபித்தல் வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், நீதிப்பொறிமுறை, உண்மையைக் கண்டறிவதற்கான ஆணையகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள் ஆகிய கட்டமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் சுயாதீனமாக இயங்குவதற்கும், அவற்றின் நிதி மற்றும் நிர்வாக விடயங்களை அமுல்படுத்துவதற்கும், ஏனைய அரச மற்றும் நிர்வாக அங்கங்களுடன் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் தொடர்புபட்டு இயங்கவும், சர்வதேச ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளவும் இத்தகையதொரு அமைச்சகம் அவசியமானதாகும். எனவே இந்த அமைச்சகத்தை ஏற்படுத்தி அமுல்படுத்துவதற்கு நிலைமாறுகால நீதி சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை முன்னெடுப்பதற்கு சட்ட அடித்தளம் இடுவதுடன் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரக்கூடிய எந்த ஓர் அரசாங்கமும் தொடர்ச்சியாக இதை கொண்டு நடாத்துவதற்கும் அடித்தளம் இடும். இந்த சட்டத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் உரிய சிறப்பு நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் குடும்பங்களுக்கான நீதி:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறவுகள் தமது காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களின் உண்மை நிலையைக் கண்டறிய தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வயோதிபத் தாய்மார்கள் ஏழு மாதங்களுக்கும் மேலாக தமது உடல்நிலையையும் கருத்திற்கொள்ளாது வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி இரவு பகலாக அரசிடம் தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு கோரி நிற்கின்றனர். ஆனால் அரசு மௌனமாக உள்ளது. இதில் அரசுக்கு வெளிப்படையாக காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைகுறித்த உண்மையைக் கண்டறிவதில் தானும் பங்குதாரராகும் கடப்பாடு உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும். பலவந்தமாக காணாமலாக்கப்படுதலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தைப் பற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானிப்புகளில் கூறியிருப்பவற்றை உள்ளடக்கி இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளுடன் இணைந்து வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30 ஓகஸ்ட் 2017 அன்று ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு முன்வைக்கப்பட்ட பகிரங்க மடலில் உள்ளடக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும் .

3. மீள நிகழாமையை உறுதிப்படுத்தல்:

இலங்கையின் அரசியல் பிரச்சினை என்பது சிறுபான்மை சமூகங்களான வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் சிங்கள பௌத்த இன மேலாதிக்கத்தினால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிப்படையாக அரசியல், சமூக, கலாசார ரீதியாகவும், அரச சட்டங்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்புகளாலும் அடக்கப்படுவது மற்றும் வன்முறைக்கு உள்ளாவதாகும். இவற்றின் நீட்சியாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை நிராகரித்து அவர்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தமும் உரிமை மீறல்களும் அமைந்தன. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்த பின்னரும் சிறுபான்மையினர் மீதான இனவாத பாரபட்சங்கள், அடக்குமுறைகள், வன்முறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இலங்கைச் சூழலில் இனவாதத்தை ஒழிப்பது, மொழியுரிமையை உறுதிப்படுத்துவது மற்றும் அரசியல் தீர்வு என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதில் பிரதான அங்கங்களாகும். அத்துடன் அரச நிர்வாக கட்டமைப்பிலும், பொலிஸ் மற்றும் இராணுவத்திலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீக்குதல், தண்டித்தல் ஆகியனவும் அவசியமாகும். எனினும் அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது மீறல்கள் தொடர்வதற்கு அடிப்படையாயுள்ளது:

- அரசியல் மற்றும் சமூக தளத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தையும் அரசின் நல்லாட்சியில் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே. இந்த சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் நடவடிக்கைகளை உடனடியாக முடக்கி நாட்டில் சிறுபான்மையினரும் கௌரவமாகவும் சமஅந்தஸ்துடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும் .

- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி அமையும் என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருப்பினும், தமிழ் மொழி முழுமையாக நிர்வாக மொழியாக நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அரச நிர்வாக அங்கங்கள் சிங்கள மொழி மூலம் தமிழ் பேசும் மக்களுடன் தொடர்புகொள்கின்றனர். மலையக தமிழ் மக்கள் செறிந்து வாழும் மத்திய பிரதேசங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது. எனவே, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் தமிழ் மொழிப் பரிகரணத்தை அரச நிர்வாகத்தில் உறுதிப்படுத்துவது அவசியம். எனவே தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் தமிழ் பேசும் அரச ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

- வடக்கு, கிழக்கில் நிலவும் இராணுவ மயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவருதல்:

வடக்கு, கிழக்கில் நிலவும் இராணுவ மயமாக்கலானது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை சிறுபான்மையினர் மீது தொடர்ந்தும் நிலை நிறுத்துவதாயுள்ளது. இந்த பிரதேசங்களில் இராணுவத்தின் இருத்தலானது தனிநபர் வாழ்விலும் சமூகவாழ்விலும் எப்பொழுதும் அச்ச உணர்வையும் நிம்மதியற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் சுயாதீனமான சுதந்திரமான நாளாந்த வாழ்வு என்பதை இல்லாது செய்துள்ளது.

இராணுவத்தினால் காணி ஆக்கிரமிப்பு, இராணுவ பொருளாதார நடவடிக்கைகள், தமிழ் பிரதேசங்களில் தென்பகுதி சிங்களவர்களின் அத்துமீறிய பொருளாதார நடடிவக்கைகள் (காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடல்வள சுரண்டல்), பௌத்த மத விரிவாக்கம் மற்றும் இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு இராணுவமயமாக்கல் ஒரு முக்கிய காரணியாகும். இப்பிரதேசங்களில் நிலவும் இராணுவ அதிகாரமானது பொலிஸ் தரப்பின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆதாரமாயுள்ளதுடன் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கும் நீதித்துறை அச்சுறுத்தப்படுவதற்கும் காரணமாயுள்ளது. அத்துடன் உளவுப்பிரிவினர் மக்களின் அன்றாட சமூக வாழ்வில் ஒன்று கலந்து மக்களின் சமூக நடவடிக்கைகளை தொடர் கண்காணிப்புக்குள் வைத்திருப்பதற்கும் இராணுவ மயமாக்கமே அடித்தளமாயுள்ளது. குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினர் (பெண்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோர்) இராணுவமயமாக்கத்தால் அதிகம் மீறல்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, இராணுவமயமாக்கலை முடிவுறுத்தும் நடவடிக்கைகளை அரசு உடன் மேற்கொள்ள வேண்டும். இதில் இராணுவத்தை சீரமைத்தல் மற்றும் குறைத்தல் முக்கிய அம்சமாகும்:

அ) பாரிய மனித உரிமை மீறல்களை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் அதனோடு தொடர்புபட்ட இராணுவத்தினரையும் உடனடியாக பதவிவிலக்கி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆ) இலங்கையின் ஆயுதப் படைகள் இளம் ஆண்களால் ஆனவையாகும். யுத்தம் முடிவுற்ற பின்னர் முகாம்களில் அபரிமிதமாக முடங்கியிருக்கும் இவர்களின் எண்ணிக்கையை 70வீதம் குறைத்து இவர்களை வேறு துறைகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இதன் மூலம் வடக்கு-கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைக்க முடிவதுடன் இராணுவத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தவும் முடியும்

- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையிருக்கும் அரசியல் கைதிகளை நல்லிணக்க நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி அரசு விடுவிக்க வேண்டும். நீண்டகால சிறையிருப்பின் பாதிப்புகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் சட்டமா அதிபரை விழித்து வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையை கவனத்திற்கொள்வதுடன் சர்வதேச மனித உரிமை சட்டங்களையும் கவனத்திற் கொண்டு அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு ஆவண செய்யவேண்டும்.

- தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கான தீர்வு அவசியம்.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்​டி முறையுடன் கூடிய அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவே 1950களில் இருந்து ஜனநாயக வழியில் தமிழர்கள் முன்வைத்து வந்த அரசியல் கோரிக்கை. இலங்கையில் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது

  
   Bookmark and Share Seithy.com



மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! - அமெரிக்கா குற்றச்சாட்டு.
[Wednesday 2024-04-24 16:00]

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.



உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .



கைது செய்யத் தயாராக இருந்த இன்டர்போல்! - இலங்கை வராமலேயே நழுவிய ஈரான் அமைச்சர்.
[Wednesday 2024-04-24 16:00]

1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பில் இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ளவிருந்த ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.



மைத்திரி, விஜயதாச, துஷ்மந்தவுக்கு நீதிமன்றம் தடை!
[Wednesday 2024-04-24 16:00]

கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.



நீதிபதி இளஞ்செயழியனின் பாதுகாப்பு அதிகாரி கொலை - விசாரணை தொடங்கியது!
[Wednesday 2024-04-24 16:00]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி மீனவர் பலி!
[Wednesday 2024-04-24 16:00]

மன்னார் -முத்தரிப்புத்துறையில் இருந்து கடற் தொழிலுக்கு சென்றவேளை படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
[Wednesday 2024-04-24 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.



சுதந்திரக் கட்சியில் இணைந்தவர் மொட்டு கட்சியில் இருக்க முடியாது!
[Wednesday 2024-04-24 16:00]

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை நடத்தும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



சுற்றுலாப் பயணிகள் வருகை மந்தம்!
[Wednesday 2024-04-24 15:00]

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.



சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு அனுரவுடன் சந்திப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.



ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.



கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்!
[Wednesday 2024-04-24 05:00]

கனேடியத் தமிழர் பேரவை'யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் விவாதம்!
[Wednesday 2024-04-24 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.



சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி!
[Wednesday 2024-04-24 05:00]

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.



அனுரவுடன் விவாதம் - மாற்றுத் திகதிகளை முன்மொழித்த சஜித்!
[Wednesday 2024-04-24 05:00]

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்!
[Wednesday 2024-04-24 05:00]

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



அரகலயவின் அமைப்பு மாற்றத்தை கட்சியில் இருந்து தொடங்கும் நாமல்!
[Wednesday 2024-04-24 05:00]

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2024-04-24 05:00]

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
[Wednesday 2024-04-24 05:00]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா