Untitled Document
October 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
போரை சந்திக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும்: - வடகொரியா மிரட்டல்
[Thursday 2017-10-12 16:00]
 
வடகொரியா சமீப காலமாக அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் 2 அதிநவீன குண்டு வீச்சு போர் விமானங்களை கொரிய தீபகற்ப பகுதியில் பறக்க விட்டது. இதில்

வடகொரியா சமீப காலமாக அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் 2 அதிநவீன குண்டு வீச்சு போர் விமானங்களை கொரிய தீபகற்ப பகுதியில் பறக்க விட்டது. இதில்

  

கடும் ஆத்திரமடைந்த வடகொரியா நாங்கள் எங்கள் பதிலடியை போர் மூலம் அவர்களுக்கு காட்டுவோம் என்றும் போரை சந்திக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வடகொரியா 22 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதால் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் பீதியடைந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு போர் மூலம் பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா கூறியுள்ளது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comவெள்ளை மாளிகையில் தீபாவளியை கொண்டாடிய டொனால்டு டிரம்ப்!
[Wednesday 2017-10-18 16:00]

இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரிகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.இக்கொண்டாட்டத்தில் டிரம்பின் மகளான இவான்கா டிரம்ப்பும் கலந்து கொண்டுள்ளார்.சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் கோழி இறைச்சியில் ஈ.கோலி பாக்டீரியா!
[Wednesday 2017-10-18 09:00]

சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் கோழி இறைச்சி யில் இருக்கும் ஈ.கோலி பாக்டீரியா, மனிதர்களின் சிறுநீர் பாதையில் நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதற்கு உணவு பழக்கம் உட்பட பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என ஏற்கனவே பல ஆராய்ச்சி தகவல்கள் கூறியுள்ளன. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுபவர்களின் சிறுநீரை சோதித்து பார்த்ததில், 80 சதவீதம் பேருக்கு எஸ்செரிசியா கோலி(இ.கோலி) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இது எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த இ.கோலி பாக்டீரியாவில் பல வகை உள்ளன.கிழக்கு அண்டார்ட்டிகா பகுதியில் அதிக அளவில் பென்குவின்கள் உயிரிழப்பு!
[Wednesday 2017-10-18 09:00]

கிழக்கு அண்டார்ட்டிகா பகுதியில் அடெய்லி பென்குவின் இனம் உள்ளது. அதில் சமீபத்தில் மாறி வரும் பருவகால நிலைகளால் அதிக எண்ணிக்கையில் குட்டிகள் இறந்துள்ளன. இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடெய்லி என்று அழைக்கப்படும் அந்த பென்குவின் பெருங்கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையின் காரணமாக பென்குவின் இறப்பது இது இரண்டாவது முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.மகனுடன் பத்து நாட்கள் காட்டில் சிக்கி கொண்ட பெண்: - தண்ணீர் மட்டும் குடித்து உயிர்வாழ்ந்த அதிசயம்
[Tuesday 2017-10-17 18:00]

காட்டுக்குள் சென்று வெளியே மீண்டும் வர வழித்தெரியாமல் பத்து நாட்கள் அங்கேயே உணவின்றி வெறும் தண்ணீர் மட்டும் குடித்து தாயும், மகனும் உயிர்வாழ்ந்துள்ளனர்.அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மிச்சலே ஸ்மால் (40), இவர் மகன் டைலன் டீனே (9)எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்: - ஐ.நா-வில் எச்சரித்த வடகொரியா
[Tuesday 2017-10-17 18:00]

ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் துணைத் தூதர் கிம் இன் யாங், 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்' என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார். மேலும், '1970-களுக்குப் பிறகு அமெரிக்காவால் மிகத் தீவிரமான அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நாடு, வடகொரியா மட்டும்தான். ஆகையால், தற்காப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொள்ள வடகொரியாவுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. கொரிய தீபகற்பத்தில் பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கிறது.தேர்தலில் மீண்டும் போட்டியிட தயாரா? - ஹிலாரிக்கு டிரம்ப் சவால்
[Tuesday 2017-10-17 18:00]

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான கருத்துக்களே பரவி வந்த நிலையில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.எனினும், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 48.5 சதவிகித வாக்குகள் பெற்று 276 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 47.2 சதவிகித வாக்குகள் பெற்று 218 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.மின்சக்தியை உருவாக்கும் நுண்ணிய நொதிப்பொருள் கண்ணீரில்!
[Tuesday 2017-10-17 08:00]

தண்ணீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல், நமது கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரிலும் மின்சக்தியை உருவாக்கும் நுண்ணிய நொதிப்பொருள் உள்ளது. இந்த மூலக்கூறுகள் வினை ஊக்கியாக செயல்படுவதால் மின்சக்தி உருவாகிறது என்று அயர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். கோழி முட்டையில் உள்ள வெள்ளைக்கருவில் உள்ளது போன்றே நுண்ணிய நொதிப்பொருள் மூலக்கூறுகள் கண்ணீரிலும் உள்ளது என்கின்றனர்.பூமியில் விழுந்து அழியப்போகும் சீனாவின் விண்வெளி நிலையம்!
[Tuesday 2017-10-17 08:00]

விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்து வரும் நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். விண்வெளி நிறுவனங்கள் நிறுவி பெரிய அளவில் விண்வெளி ஆராய்ச்சிகள் செய்யும் நாடுகளின் பட்டியல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என்ற நான்கு நாடுகளுடன் நின்றுவிடுகிறது. இதில், சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்குச் சொந்தமான விண்வெளி நிலையங்கள் சில பூமியின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் சில அவ்வப்போது பூமியில் விழுந்து நொறுங்குவது நடக்கும் நிகழ்வுதான். இதற்கு முன் ரஷ்யாவின் சால்யுட் 7 விண்வெளி நிலையமும், நாசாவின் ஸ்கைலேப் விண்வெளி நிலையமும் இந்த முடிவைச் சந்தித்துள்ளன.படகு ஆற்றில் கவிழ்ந்ததில் ரோஹிங்கியா அகதிகள் எட்டு பேர் பரிதாபமாக பலி!
[Tuesday 2017-10-17 08:00]

வங்கதேசத்திற்கு வந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 8 ரோஹிங்கியா அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 10க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மியான்மரில் ராணுவ நடவடிக்கை மற்றும் வன்முறை காரணமாக அங்கிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். வங்கதேசத்தையும், மியான்மரையும் பிரிக்கும் நப் ஆற்றில் படகு மூலம் ஏராளமானவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வங்கதேசத்தை அடைகின்றனர்.பட்டினியில்லா நாடுகளின் பட்டியலை வெளியிட்ட உலக உணவு கொள்கை ஆய்வு மையம்!
[Saturday 2017-10-14 17:00]

பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப்பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதற்கு உலகின் சக்திமிக்க நாடுகள் ஆதரவு!
[Saturday 2017-10-14 17:00]

இரான் அணு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல் வழங்க மறுத்திருந்தாலும், அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் உள்பட உலகின் சக்திமிக்க நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அணு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தப்போவதாக வெள்ளிக்கிழமை டிரம்ப் அறிவித்துள்ளார்.கனடா வைத்தியசாலையில் மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் புதிய கருவி!
[Saturday 2017-10-14 16:00]

ஆக்ரோஷமாக புற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் கருவி ஒன்றை சனிபுறூக் வைத்தியசாலை வெளியிட்டுள்ளது.இந்த வகை முதன் முதலில் கனடாவில் குறிப்பிட்ட வைத்தியசாலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.Gamma Knife Icon எனப்படும் இதனால் குறைந்த டோஸ் கதிர் வீச்சை மூளையில் இருக்கும் கட்டிகளை மட்டும் துல்லியமாக அகற்ற பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனக்கு தேவையானது மனைவி மட்டும் தான்: - ஒன்பது வயது சிறுவன்
[Saturday 2017-10-14 16:00]

இங்கிலாந்தில் 9 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால், தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த Jack Joe என்ற சிறுவனுக்கு, தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை.யுனெஸ்கோவிலிருந்து வெளியேறவுள்ள அமெரிக்கா - இஸ்ரேல்!
[Saturday 2017-10-14 09:00]

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.பட்டினியால் செத்து மடியும் பென்குயின் குஞ்சுகள்!
[Saturday 2017-10-14 09:00]

கிழக்கு அண்டார்டிகாவில் பென்குயின்கள் கொத்து கொத்தாக இறப்பது பேரழிவு என்று சூழ்நிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடேலி வகை பென்குயின்களின் பிறந்த இரண்டு குஞ்சுகளைத் தவிர அனைத்து பென்குயின் குஞ்சுகளும் உணவின்றி பட்டினியால் இறந்துள்ளன. அண்டார்டிகாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அளவுக்கும் அதிகமான பனி சூழ்ந்துள்ளதால், பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட மிகவும் நீண்ட தூரம் கடலுக்குள் செல்ல வேண்டியுள்ளது. அதனால், உணவு கிடைக்கத் தாமதமாகி பட்டினியால் அந்த இளம் குஞ்சுகள் இறந்துள்ளன. சுமார் 36,000 பென்குயின்கள் வசிக்கும் அந்த பென்குயின் குடியிருப்பில் கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு பகுதி ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிகமோசமானது: - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
[Saturday 2017-10-14 09:00]

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது கடந்த 2015-ல் ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தைத்தான் ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ‘ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே மிகமோசமானது. அந்த ஒப்பந்தத்தை என்னால் அங்கீகரிக்க முடியாது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியுமா என்பதுகுறித்து ஆய்வுசெய்து 60 நாள்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் குறுஞ்செய்தி:
[Friday 2017-10-13 19:00]

ஆஸ்திரேலியாவில் இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து, அதில் அவரின் சகோதரரின் செல்பேசி எண்ணையே பெறுநருக்கான இடத்திலும் நிரப்பியுள்ளார்.பெண்ணியவாதிகளாக வளரும் என் பிள்ளைகள்! - கனடா பிரதமர்
[Friday 2017-10-13 09:00]

சர்வதேச பெண் குழந்தைகளுக்கான தினமாக உலகம் முழுவதும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான சுதந்திரமான, பாகுபாடற்ற, பாதுகாப்பான, ஒடுக்குமுறைகளற்ற சமூகத்தை உருவாக்கித்தந்து, சுகாதாரமும் ஊட்டச்சத்தும் நிறைந்த உணவு, அடிப்படை உரிமைகள், வன்முறைகளற்ற சூழல்களை ஏற்படுத்தித் தருவதை உறுதிசெய்வதே இந்த நாளின் நோக்கமாகும்.வியட்நாமில் புயல் மழை 37 பேர் பலி! 40 பேரை காணவில்லை!
[Friday 2017-10-13 08:00]

வியட்நாமில் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகிறது. இந்த புயல் மழை நேற்று அதிகரித்தது. இதில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் முழ்கின. சாலைகள், தெருக்கள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்துவிழுந்தன. 16,740 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணங்களில் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது.கலிபோர்னியா காட்டுத் தீயால் 23 பேர் பலி!
[Thursday 2017-10-12 16:00]

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ பரவியது. இப்பகுதிகளில் திராட்சைப் பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவியது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா