Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது நொண்டிச்சாட்டு! - விக்கி சாடல்
[Friday 2017-10-13 09:00]

ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  

சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றத்திலுள்ள தமது வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இதுபற்றி அரசசாட்சியாக மாறிய ஏனைய தமிழ் கைதிகளின் பாதுகாப்பு பற்றியே அரசாங்கம் தற்பொழுது கரிசனை செலுத்துகிறது. இதில் அரசியல் கலந்திருப்பதாகத் தெரிகிறது. நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும்.

இதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவதாக முன்னாள் பிரதம நீதியரசரான, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரச சாட்சிகளாக மாறிய தமிழர்கள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பது வெளிப்பட்டுவிடும் என்பதாலேயே சட்டமா அதிபர் திணைக்களம், வழக்குகளை அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசசாட்சிகளின் சாட்சியம் முரணாக இருந்தால் கூட வெறுமனே குற்றஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதிகளைக் குற்றவாளிகள் ஆக்கிவிடலாம் என்றே அரசு கருதுகின்றது. இதனால்தான் வெறும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் வைத்து குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதை உசிதமென அரசாங்கமும் அதன் சட்டத்துறைத் தலைமையதிபதியும் எண்ணுவதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.

  
   Bookmark and Share Seithy.com



விக்னேஸ்வரனையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர்!
[Monday 2017-12-18 07:00]

இலங்கைக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.



யாழ். செல்கிறார் மைத்திரி - முதலமைச்சரையும் சந்திப்பார்!
[Monday 2017-12-18 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே அவரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்குரே உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்றும் சில தகலல்கள் தெரிவிக்கின்றன.



248 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்!
[Monday 2017-12-18 07:00]

248 உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தோ்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. ஏற்கனவே கடந்த 11 ஆம் திகதி ஆரம்பித்த 93 உள்ளுராட்சி தோ்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்திருந்தது.



வாக்களிக்காதவர்களுக்கு தண்டம்!
[Monday 2017-12-18 07:00]

சில வெளிநாடுகளில் உள்ளதைப்போன்று வாக்களிக்காதவர்கள் தண்டப்பணம் செலுத்தும் சட்ட ரீதியிலான முறையொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொகமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.



நாடு திரும்புகிறார் சீனத் தூதுவர்!
[Monday 2017-12-18 07:00]

இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியேங் லிங்க் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து சீனா திரும்பியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் இலங்கைக்கான சீனத் தூதுவராக அவர் கடமையாற்றி வந்தார். இலங்கையில் கடமையாற்றிய 20ஆவது சீனத் தூதுவர் இவராவார். தான் பதவி வகித்த காலத்தில் இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் விஜயம் செய்ததாகவும் இலங்கையில் நண்பர்கள் பலர் இருப்பதாகவும் சீனா - இலங்கை இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் இ ஷியேங் லிங்க் கூறியுள்ளார்.



முல்லைத்தீவில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞன் கைது!
[Monday 2017-12-18 07:00]

முல்லைத்தீவு- குமுழமுனையில் சி­றுமி ஒரு­வரை பாலி­யல் வல்லுறவுக்குட்படுத்திய குற்­றச் சாட்­டில் இளைஞன் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டார். இந்தச் சம்­ப­வம் கடந்த 16ஆம் திகதி இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­ கி­றது. சம்­ப­வ­தி­னம் குறித்த நபர் சிறு­மியை பாலி­யல் வல்லுறவுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார். இது­கு­றித்து சிறுமி தனது தாய்க்குத் தெரி­வித்­துள்­ளார். தாயார் முல்­லைத் தீவு பொலி­ஸில் முறை­யிட்­டார். கிரா­மத்துக்குச் சென்ற பொலி­ஸார் சந்­தே­க­ந­ப­ரான இளை­ஞ­ரைக் கைது­செய்­த­னர். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பரை நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்த பொலி­ஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்­கள்.



கொழும்பில் நண்டு சாப்பிட்ட மலேசியப் பிரதமர்! Top News
[Monday 2017-12-18 07:00]

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் மொஹட் நஜீப் துன் ரஸாக், தமது தூதுக்குழுவினருடன் நேற்றிரவு இராப்போசனத்துக்கு நண்டு சாப்பிட்டார். இதுகுறித்து அவர் ‘‘கொழும்பில் நண்டு சாப்பாடு‘‘ என்று மலாய் மொழியில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் மலேசியப் பிரதமர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இராப்போசன நிகழ்வில் மலேசிய பிரதமருடன், அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் பங்கேற்றுள்ளார்.



வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளத் தயார் நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம்!
[Monday 2017-12-18 07:00]

உள்­ளூராட்­சி­த் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. மாவட்­டத்­தில் தேர்­தல் காலத்­தில் மேற்­கொள்­ள­வேண்­டிய பாது­காப்­பு­கள் தொடர்­பில் மாவட்­டச் செய­லா­ளர் தலை­மை­யில் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றுள்­ளது.இந்தச் சந்­திப்­புத் தொடர்­பில் மாவட்­டச் செய­லர் தெரி­வித்­த­தா­வது:



சேவல் சின்னத்தில் சுதந்திரக் கட்சி!
[Monday 2017-12-18 07:00]

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சேவல் சின்னத்தில் பல இடங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.



நாமலுக்காக கட்சியை உடைக்கிறார் மகிந்த! - எஸ்.பி.திசநாயக்க குற்றச்சாட்டு
[Monday 2017-12-18 07:00]

2025 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து தனது எதிர்கால இலக்கை நிறைவேற்ற முயற்சிப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.



முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சல் - 3 வாரங்களில் 9 பேர் பலி!
[Sunday 2017-12-17 18:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்குள், மர்மக் காய்ச்சல் காரணமாக, 9 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து வைத்தியக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்றுள்ளது. இந்தக் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், தடுப்பு நடவடிக்கையும் முன்னெடுத்து வருகின்றது.



தகுதியான வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்! - முதலமைச்சர் கோருகிறார் Top News
[Sunday 2017-12-17 18:00]

உள்ளூராட்சித் தேர்தலில் கட்சிகளைப் பொருட்படுத்தாமல் தகுதியான வெட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



தடையை நீக்குமாறு ரஷ்யாவிடம் கோரவுள்ளார் ஜனாதிபதி!
[Sunday 2017-12-17 18:00]

இலங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.



கொழும்பில் மலேசியப் பிரதமர்! Top News
[Sunday 2017-12-17 18:00]

3 நாட்கள் உத்தியோகப்பூர்வ பணயமாக மலேசிய பிரதமர் மொஹமட் நஜீப் அப்துல் ரசாக் இன்று இலங்கை வந்துள்ளார். அவருடன் 30 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார். இருநாட்டு இராஜதந்திர உறவுகளின் 60 வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் மலேசியப் பிரதமரின் வருகை அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



வாளுடன் கொள்ளையிட முயன்ற இருவர் சிக்கினர்!
[Sunday 2017-12-17 18:00]

கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு முன்பாகவுள்ள கடையொன்றில், வாளுடன் சென்று கொள்ளையிட முயன்ற இருவரை, கோப்பாய் பொலிஸார், இன்று கைது செய்துள்ளனர். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த, 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே, கைது செய்யப்பட்டனர்.



புளொட் விலகாது! - சித்தார்த்தன்
[Sunday 2017-12-17 18:00]

உள்ளூராட்சித் தேர்தலிலிருந்து ஒதுங்குவதாக நாம் ஒரு போதும் கூறவில்லை என்று புளொட் அமைப் பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.' கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இடையில் சபைகள் தொடர்பில் பேச்சு இடம்பெற்ற போது, வலிகாமம் தெற்குப் பிரதேச சபையை எவ்வாறு முதன்மையாகக் கோரினோமோ அதேபோன்று வலிகாமம் மேற்குப் பிரதேச சபையையும் கோரியது உண்மைதான்.



ரஷ்யாவின் தடை புதுமையானதாம்!
[Sunday 2017-12-17 18:00]

இலங்கையின் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடர்பான பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இன்று நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.



வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகிறது கூட்டமைப்பு!
[Sunday 2017-12-17 18:00]

அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை ஆலையடிவேம்பு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட தமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது. புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக சகல சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்ட வகையிலேயே தங்களுடைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் கையளிக்கும் போது ஏற்பட்ட சில குறைபாட்டின் காரணமாகவே தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அம்பாறை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.



100 சீன ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம்! Top News
[Sunday 2017-12-17 18:00]

சீன நாட்டைச் சேர்ந்த 100 ஜோடிகளுக்கு இன்று இலங்கை சம்பிரதாயப்படி கொழும்பில் திருமணம் இடம்பெற்றது. இந்த வைபவம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. சீன சுற்றுலாப்ப யணிகளை கவருரூம் வகையில் இந்த நிகழ்வு அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.



வவுனியா விபத்தில் ஒருவர் பலி!
[Sunday 2017-12-17 18:00]

வவுனியா- ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்குச் சொந்தமான வேன் ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்றவரான 46 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா