Untitled Document
October 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மீனவர் பிரச்சினை குறித்து இந்தியா- இலங்கை இடையே புதுடெல்லியில் நாளை பேச்சு!
[Friday 2017-10-13 09:00]

எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு நாளை இந்தியாவில் நடைபெறவுள்ளது. புதுடில்லியில் நடைபெறும் இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. இந்திய தரப்பில் கமநல மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.

எல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு நாளை இந்தியாவில் நடைபெறவுள்ளது. புதுடில்லியில் நடைபெறும் இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. இந்திய தரப்பில் கமநல மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.

  

கடல்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இழுவை மடிவலைத் தொழிலை தடைசெய்ய வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இழுவை மடிவலைத் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலாக ஆள்கடல் மீன்பிடிக்கு மீனவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.

அதேநேரம், அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் மீனவ பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லையென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். வெளிநாட்டு படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்ததையில் இழுவை மடிவலைத்தொழிலை நிறுத்துவது என்ற விடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக அவர் கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com



அரசியல் கைதிகள் குறித்து நாளை முடிவெடுப்பதாக அரசாங்கம் அறிவிப்பு!
[Wednesday 2017-10-18 18:00]

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் வழக்குகளை மீண்டும் வவுனியாவிற்கு மாற்றம் செய்வது தொடர்பில் நாளை பேச்சு நடத்தி உரிய தீர்மானம் எடுப்போம். இது தொடர் பில் பேசித் தீர்க்க நாம் தயாராக உள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகளின் வழக்கு விசார ணைகளை துரிதப்படுத்த தயாராக உள்ளோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.



முல்லைத்தீவு கடலில் மூழ்கிய இளைஞர்கள்! - ஒருவரின் சடலம் மீட்பு, இன்னொருவரைக் காணவில்லை Top News
[Wednesday 2017-10-18 18:00]

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயினர். அவர்களில் ஒருவர் சடலமாக இன்று மாலை மீட்கப்பட்டுள்ளார். மற்றவரைத் தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.



கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க கோத்தா முயற்சி!
[Wednesday 2017-10-18 18:00]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள கோத்தபாய கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்.இதற்காக உச்ச நீதிமன்றம் சென்று பாதுகாப்பு கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளர்.



தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை! - புன்னைக்குடாவில் பயங்கரம் Top News
[Wednesday 2017-10-18 18:00]

மட்டக்களப்பு- புன்னக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். புன்னக்குடாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே 26 வயதுடைய தாயும் அவரது 11வயது மகனும் கழுத்து வெட்டபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் பீதாம்பரம் மதுசாந்தி மற்றும் 12 வயதுடைய மதுசான் என பொலிஸார் தெரிவித்தனர்.



ஐ.நா விசேட பிரதிநிதி ஜனாதிபதியை சந்திப்பு!
[Wednesday 2017-10-18 18:00]

இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் அவர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தார். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் சந்திப்பின்போது உடனிருந்தனர்.



கற்பிட்டியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலம்! Top News
[Wednesday 2017-10-18 18:00]

புத்தளம் - கற்பிட்டி, கண்டல்குழி, குடாவ கடற் பிரதேசத்தில் சுமார் 60 அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று மாலை குறித்த கடற்பிரதேசத்தில் பாரிய திமிங்கலமொன்று மிதந்து வந்துள்ளதை மீனவர்கள் அவதானித்துள்ளனர். நேற்றிரவு 7 மணிக்கு குறித்த மீன், கண்டல்குழி குடாவ கடற்பிரதேசத்தில் கரையொதுங்கியதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.



விக்கிக்கு எதிரான டெனீஸ்வரனின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
[Wednesday 2017-10-18 18:00]

தம்மை வட­மா­காண அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யமை தவறு என்று தெரி­வித்து முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. வழக்கு ஆவ­ணத்­தில் இருந்த குறை­பாட்­டைச் சுட்­டிக்­காட்டி வழக்­கின் விட­ய­தா­னத்தை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தா­ம­லேயே அத­னைத் தள்­ளு­படி செய்­தது நீதி­மன்­றம்.



அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற யாழ். இளைஞன் இந்தோனேசியாவில் மரணம்!
[Wednesday 2017-10-18 18:00]

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞனே வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.



இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கியிருந்தால் அரசியல் கைதிகள் பிரச்சினை எழுந்திருக்காது! - நாடாளுமன்றில் சம்பந்தன்
[Wednesday 2017-10-18 08:00]

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கியிருந்தால், அரசியல் கைதிகள் பிரச்சினை எழுந்திருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்களை காலம் தாழ்த்தாமல் விடுவிக்குமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றில் நேற்று சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தவே அனுராதபுரத்துக்கு வழக்கு மாற்றப்பட்டதாம்!
[Wednesday 2017-10-18 08:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தும் நோக்கிலேயே அவர்களுக்கு எதிரான வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



வடக்கில் சமஷ்டி ஆட்சியா? - கேள்வி எழுப்புகிறார் வெல்கம
[Wednesday 2017-10-18 08:00]

வடக்கு மாகாணத்திற்கு சமஸ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர், நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டம் நடத்தியதனால் நாமல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக சபாநாயகர் கூறுகின்றார்.



சீ.சீ.டி.வியில் பதிவான வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்! Top News
[Wednesday 2017-10-18 08:00]

மானிப்பாய் லோட்டன் வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு தொடர்பிலான சீ.சீ.டி.வி காணொளி பதிவு வெளியாகியுள்ளது. தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமெராவில் வாள்வெட்டு குழுவின் அடாவடித்தனங்கள் பதிவாகியியுள்ளன. மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த நால்வர் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.



வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு புதுடெல்லியில் கருத்தரங்கு! - இனப்பிரச்சினை குறித்து தெளிவுபடுத்தல் Top News
[Wednesday 2017-10-18 08:00]

வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வு கடந்த வாரம் புதுnlல்லியில் நடைபெற்றது. ஓபி ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை ஆரம்பமானது முதல் தற்போது வரை இலங்கை அரசியலில் அவதானிப்புக்களை செய்து வரும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் நாளாக இந்த தீபத் திருநாள் அமைய வேண்டும்! - ஜனாதிபதி வாழ்த்து
[Wednesday 2017-10-18 08:00]

தீபத்திருநாளானது, அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-



சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய இந்து மாநாடு! Top News
[Wednesday 2017-10-18 08:00]

சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்திய இந்து மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.



ஜனாதிபதியின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவர் அங்கஜன்! - அமைச்சர் துமிந்த திசாநாயக்க Top News
[Wednesday 2017-10-18 08:00]

ஜனாதிபதியின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவர் அங்கஜன் இராமநாதன் என யாழில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.



அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்! - மாலையில் கைவிட்டனர் Top News
[Tuesday 2017-10-17 18:00]

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை காலவரையற்ற சாகும் வரையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியே பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.



காணிகளை விடுவிக்கக் கோரி புதுக்குடியிருப்பில் மீண்டும் போராட்டம்! Top News
[Tuesday 2017-10-17 18:00]

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினர் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை பொமக்களால் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு - புதுமாத்தளன் வீதியில் பிரதேச செயலகம் முன்பாக உள்ள 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி 682ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்துள்ளது.



இனி வடக்கிற்கு இறக்குமதி முதலமைச்சர் இல்லை! - சி.வி.கே
[Tuesday 2017-10-17 18:00]

இனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டு வரப்போவதில்லை என, தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளதாக வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.



கஜேந்திரகுமாரை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார் சிவாஜிலிங்கம்!
[Tuesday 2017-10-17 18:00]

அரசியல் கைதிகளின் விடயம் தவிர்ந்து வேறு எந்த விடயமாக இருந்தாலும் பரவாயில்லை என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சவால் விடுத்துள்ளார்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா