Untitled Document
November 20, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி!
[Monday 2017-11-13 07:00]

துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடி உள்ளார்.

துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடி உள்ளார்.

  

இந்த நிலையில் இவர் கடந்த ஒரே வருடத்தில் 80 மொழிகளில் பாடல் பாடுகிற ஆற்றலை பெற்றுள்ளார். இன்னும் 5 மொழிகளில் பாட கற்றுக்கொண்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடி அதுதான் கின்னஸ் சாதனை ஏட்டில் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.இந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.அடுத்த மாதம் 29-ந் தேதி இவர் 85 மொழிகளில் பாட திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:- முதன் முதலாக அன்னிய மொழி என்கிற வகையில் ஜப்பானிய மொழி பாடலைத்தான் கற்றேன். எனது தந்தையின் தோழி, ஜப்பானை சேர்ந்த சரும நோய் மருத்துவ நிபுணர். அவர் ஓராண்டுக்கு முன்னர்தான் துபாய்க்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்தபோது ஜப்பானிய பாடல் பாடினார். எனக்கு அந்த பாடல் ரொம்பவும் பிடித்தது. அதை கற்றேன். வழக்கமாக 2 மணி நேரத்தில் ஒரு பாடலைப் பாட கற்றுக்கொண்டு விடுவேன். உச்சரிப்பதற்கு சற்று எளிதாக இருந்தால், இன்னும் விரைவாக கற்றுக்கொண்டு விடுவேன். பெரிய பாடலாக இல்லாத பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் பாட கற்றுக்கொண்டு விடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.இவரைப் பொருத்தவரையில் ஜெர்மன், பிரெஞ்சு, ஹங்கேரி மொழி பாடல்கள்தான் கடினமாக இருக்கிறதாம்.

  
   Bookmark and Share Seithy.com



இளம்பெண் கற்பழித்து கொலை: - மர்ம கும்பல் வெறிச்செயல்
[Monday 2017-11-20 08:00]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் ஓடை உள்ளது. இதன் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் இருந்தது.அந்த வழியாக சென்றவர்கள் பெண் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.



பைனான்ஸ் அதிபர் கடத்திக்கொலை: - கள்ளக்காதலனுடன் மனைவி கைது
[Monday 2017-11-20 08:00]

தர்மபுரியில் பைனான்ஸ் அதிபரை கடத்திச்சென்று, கொலை செய்து உடலை புதைத்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தர்மபுரியை சேர்ந்தவர் கவியரசு(42). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி செல்வி(37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற செல்வி தனது குழந்தைகளுடன் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கவியரசு வீட்டருகே வசிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான நிர்மலா(23) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் செம்மனஅள்ளி பெருமாள் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.



பொதுஇடங்களில் சாதிரீதியான மோசமான கருத்துகளைப் போனில் தெரிவித்தாலும் குற்றமே: - உச்ச நீதிமன்றம்
[Monday 2017-11-20 08:00]

சாதிரீதியான மோசமான கருத்துகளை பொதுஇடங்களில் போனில் தெரிவித்தாலும், அது குற்றமே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்படவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனுத் தாக்கல் செய்தார்.



17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த குடும்ப தலைவி: -பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Saturday 2017-11-18 17:00]

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இவர் மனைவிக்கு 24 வயதாகிறது, இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லை.



இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற விசாரணை கமிஷன் கண்துடைப்பு நாடகம்: - ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
[Saturday 2017-11-18 15:00]

செம்மரம் விவகாரத்தில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான நடக்கும் விசாரணை கமிஷன் விசாரணை, வெறும் கண் துடைப்பு நாடகம்’’ என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.



என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும் ஈ.பி.எஸ் போன்றவர்களுக்குப் புரியாது: - விஜயகாந்த்
[Saturday 2017-11-18 15:00]

'என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும்' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறி நெகிழ்ந்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50-லிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மகனுக்கு 7 ஆண்டு சிறை!
[Saturday 2017-11-18 15:00]

புதுக்கோட்டை காமராஜர்புரத்தை சேர்ந்த தொக்கு என்ற துரை (57). பெயிண்டரான இவருடைய மகன் பிரகாஷ் (26), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3.7.2015 அன்று தந்தையும், மகனும் சேர்ந்து 12 வயதுள்ள 3 சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லைகொடுத்துள்ளனர்.



சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியல் வெளியீடு: - முதலிடத்தில் இந்தியா
[Saturday 2017-11-18 15:00]

வாட்டர்எய்டு என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அவுட் ஆப் ஆர்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தூய்மை இந்தியா திட்டம் வழியே தீவிர முன்னேற்றம் அடைந்தபொழுதிலும், இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் பொதுவெளி அல்லது பாதுகாப்பற்ற பகுதி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மேலும் மோசம்.



குடும்ப தகராறில் கர்ப்பிணியை கொடூரமாக கொன்ற கணவர் கைது!
[Saturday 2017-11-18 09:00]

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் சபரியேல். இவரது மகன் சீமோன் (வயது 33). கட்டிடத் தொழிலாளி.இவருக்கும், காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த தாசையன் மகள் ஷாலினி (24) என்பவருக்கும் கடந்த 22.5.2017 அன்று திருமணம் நடந்தது. ஷாலினி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். லேப்-டெக்னீசியன் படிப்பு முடித்த ஷாலினி, அங்குள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.



போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: - இடம்பிடித்த சென்னை பெண்
[Friday 2017-11-17 18:00]

போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதுக்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த இளம்பெண் அக்சயா இடம் பிடித்துள்ளார். Lumme Inc நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான பணியாற்றி வரும் அக்சயா சண்முகம் என்ற 29 வயது இளம்பெண் புகைப்பழகத்தில் இருந்து விடுபடுவதற்கான புதிய சாப்ட்வேர் கொண்ட சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் போர்ப்ஸ் பத்திரிக்கை அவரது பெயரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அக்‌சயா சண்முகம், போதை பழக்கம், அதனால் நடத்தையில் ஏற்படும் மாற்றம் இவற்றை ஆராய்ந்து மருத்துவ ரீதியாக அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்,



சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கு: - சசிகலாவின் கணவர் நடராசனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது
[Friday 2017-11-17 17:00]

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.சசிகலாவின் கணவர் நடராசன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராசன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது.



இலங்கை - இந்தியா கடற்படையின் கூட்டுச் சதியா? - கேள்வி எழுப்பும் திருமாவளவன்
[Friday 2017-11-17 17:00]

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைக்குப் பின் இலங்கை - இந்தியா கடற்படையின் கூட்டுச் சதி இருக்குமோ என்று ஐயம் ஏற்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையால் கடந்த இரண்டு தினங்களில் 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் கைது நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.



குழந்தையின் உயிரை காப்பாற்ற 500 கி.மீட்டரை 6.45 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் சாரதி!
[Friday 2017-11-17 08:00]

கேரளாவில் ஒரு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற வாட்ஸ்அப் உட்பட சமூக இணையதளங்கள் உதவியுடன் 500 கிமீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் ஆம்புலன்சில் சென்ற டிரைவருக்கும் உதவிய போலீசாருக்கும் பாராட்டுகள் குவிகிறது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒரு மாத குழந்தை, இதய நோய் காரணமாக கண்ணூர் பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த குழந்தையின் உடல் நிலை ேமாசமானதால் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா மருத்துமனைக்கு கொண்டு செல்லவேண்டும். 10 மணி நேரத்திற்குள் அங்கு அனுமதித்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.



இனியும் பேரறிவாளனை விடுவிப்பதில் என்ன தயக்கம்? - ராமதாஸ் கேள்வி
[Friday 2017-11-17 08:00]

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தும் அவரை அந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இவ்வழக்கில் எந்தக்குற்றமும் செய்யாத பேரறிவாளனை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதி வலை தாமதமானாலும் அறுத்தெறியப்பட்டிருக்கிறது. இனியும் பேரறிவாளனை விடுவிப்பதில் என்ன தயக்கம்?" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.



இலங்கையில் தொண்டைமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரம்: - ஸ்டாலின் கடிதத்துக்கு சுஷ்மா பதில்
[Friday 2017-11-17 08:00]

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இலங்கையில் மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சௌமியமூர்த்தி தொண்டைமானின் பெயர் இலங்கையில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டிருந்தது. சமீபத்தில் அரசு நிறுவனங்களிலிருந்து அவருடைய பெயரை இலங்கை அரசு நீக்கியதாகத் தகவல் வெளியானது.



சிங்கள அரசின் வதை முகாம்களில் தமிழர்களை சித்ரவதை செய்வது தொடர்கிறது: - வைகோ வேதனை
[Thursday 2017-11-16 15:00]

'சிங்கள அரசின் வதை முகாம்களில் தமிழர்களை சித்ரவதைசெய்வது இன்றும் தொடர்கிறது' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், '2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடூரத்தோடு ஈழத்தமிழ் இனப்படுகொலைக் கொடுமைகள் முற்றுப்பெறவில்லை. இன்றுவரை தொடர்கின்றது. கடந்த ஜூலை 18-ம் தேதி ஐரோப்பா கண்டத்துக்கு அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழ் இளைஞர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை இதயம் வெடிக்கத் தெரிவித்து இருந்தார்கள்.



ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி!
[Thursday 2017-11-16 15:00]

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டுவந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர்.



ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு உதவ வேண்டும்: - சோனியா காந்திக்கு நீதிபதி கடிதம்
[Thursday 2017-11-16 15:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுவிப்பதற்குப் பெருந்தன்மை காட்ட வேண்டுமென, தண்டனை அளித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.



காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸேவுக்கு கோயில்கட்ட அடிக்கல்: - சர்ச்சையைக் கிளப்பும் இந்து மகா சபா
[Thursday 2017-11-16 15:00]

நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டுவதற்காக, இந்து மகா சபா அடிக்கல் நாட்டியுள்ளது. குவாலியர் மாவட்ட நிர்வாகம், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டத் தடை விதித்துள்ள நிலையில், அதையும் மீறி இந்து மகா சபை அடிக்கல் நாட்டியுள்ளது. குவாலியரில் தவுலஜ்கனி பகுதியில் உள்ள இந்து மகா சபா அலுவலகப் பகுதியில், கோயில் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவின்போது,



கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்ற புதுப்பெண்!
[Thursday 2017-11-16 09:00]

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகள் முத்துட்சுமி (வயது 25). இவருக்கும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரை சேர்ந்த பால் வியாபாரி முருகன் (31) என்பவருக்கும் கடந்த மாதம் 30–ந்தேதி திருமணம் நடந்தது.இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற முத்துலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா