Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
164 அகதிகளுடன் நியூசிலாந்து சென்ற 4 படகுகள் இடைமறிப்பு! - இலங்கையர்களும் உள்ளடக்கம்?
[Tuesday 2017-11-14 08:00]

நியூசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் நான்கு  படகுகளை  அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்தப் படகுகளில் 164 அகதிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

நியூசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் நான்கு படகுகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்தப் படகுகளில் 164 அகதிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.comசர்வதேசச் சட்டத்தை ஒரு கேடயமாக ஏந்தி மத்திய அரசுடன் மோதமுடியும்! - முதலமைச்சர்
[Wednesday 2018-01-17 08:00]

நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.5 கோடி ரூபா தங்க பிஸ்கட்டுகளுடன் காங்கேசன்துறை கடலில் இருவர் கைது!
[Wednesday 2018-01-17 08:00]

காங்கேசன்துறை கடற்பரப்பில் சுமார் 5கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய படகை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். கைதாகிய இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து நகைப்புக்கிடமானது! - கஜேந்திரகுமார்
[Wednesday 2018-01-17 08:00]

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இறையாண்மை மதிக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய தீர்வினை பெறுவோம் என பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இந்த ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.ஐதேகவினரால் ஆபத்து! - என்கிறார் விஜேதாச
[Wednesday 2018-01-17 08:00]

ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தே தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். “ எனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏழு பேரில் ஐந்து பேர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். நான் அமைச்சராக இருந்த காலத்திலேயே எனக்கு ஏழு பேர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். பாதுகாப்பு நீக்கப்பட்டதில் பிரச்சினையில்லை. எனினும் அனைவருக்கும் ஒரே விதமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.பாதை தெரியாமல் ஹெலியை செலுத்திய விமானியின் அனுமதி இடைநிறுத்தம்!
[Wednesday 2018-01-17 08:00]

அமைச்சர் மஹிந்த அமரவீர பயணித்த உலங்குவானூர்தியை பாதை தெரியாமல் செலுத்திய விமானியின் அனுமதி இடைநீக்கம் செய்யயப்பட்டதோடு உயர்மட்ட விசாரணைகளும் ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளன. பலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல், அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.மைத்திரியின் ஆசையால் மெய்சிலிர்த்துப் போனாராம் மகிந்த!
[Wednesday 2018-01-17 08:00]

5 வருடங்கள் போதாது எனக்கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தமை தமக்கு மெய்சிலிர்க்க வைத்து விட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரைகள் நாளை மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2018-01-17 08:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் கலைபீட மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்ட பொதுவான தடையை உடனடியாக அமுலுக்கும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 18.01.2018ம் திகதியிலிருந்து (வியாழக்கிழமை) அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும், யாழ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.அறுவைச்சிகிச்சை செய்து தெருநாயின் உயிரைக் காப்பாற்றிய அவுஸ்ரேலியாவில் இருந்து சென்ற மருத்துவர்! Top News
[Wednesday 2018-01-17 08:00]

அவுஸ்ரேலியாவில் கால்நடை வைத்தியராக பணியாற்றும் சின்னத்தம்பி கஜேந்திரன் என்பவர் நாயொன்றின் உயிரை காப்பாற்றியுள்ளார்.மல்லாகம் சந்தியில் நின்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெருநாய் ஒன்றுக்கே இவ்வாறு சிகிச்சை அளித்துள்ளார். நாய்க்கு சத்திர சிகிச்சையை மேற்கொண்ட பின் மீண்டும் மல்லாகம் சந்தியில் கொண்டு வந்து விட்டுள்ளார்.அளவெட்டியைச் சேர்ந்த வைத்தியர் சின்னத்தம்பி கஜேந்திரனின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இன்று அவசரமாக கூடுகிறது ஐதேக செயற்குழு!
[Wednesday 2018-01-17 08:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.இதன்போது ஜனாதிபதி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.பின்னர், பிரதமர் உள்ளிட்டோர் அவரை சந்தித்து மீள அழைத்ததையடுத்து, கூட்டத்தில் ஜனாதிபதி மீண்டும் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தமது செயற்குழு கூட்டத்தை இன்று நடத்த முடிவு செய்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.மிருசுவில் ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா சிக்கியது!
[Wednesday 2018-01-17 08:00]

மிருசுவில் ரயில் நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் 6 கிலோ கஞ்சாவை, மீட்டுள்ளனர். இன்று காலை மிருசுவில் ரயில் நிலையத்தில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக கொடிகாமம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், குறித்த பகுதியில் ஆறு கிலோ கஞ்சாப் பொதிகளை கைப்பற்றினர்.இடைக்கால அறிக்கை: மாயைகளை கட்டுடைத்தல் - யாழ்ப்பாணத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும்! Top News
[Tuesday 2018-01-16 19:00]

இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில், வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமை உரை நிகழ்த்தினார்.அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறிய ஜனாதிபதி!
[Tuesday 2018-01-16 19:00]

மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெளிநடப்புச் செய்தார். மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
[Tuesday 2018-01-16 19:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய முயற்சித்த தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவருக்கே இன்று இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.மாடு மீது மோதியது ரயில் - மாணவிக்கு காயம்!
[Tuesday 2018-01-16 19:00]

மீசாலை- வீரசிங்கம் மகாவித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள ரயில் பாதையில் இன்று புல் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் ஒரு பசுமாடு உயிரிழந்ததுடன் மாணவி ஒருவரும் காயமடைந்தார். யாழ்பாணத்தில் இருத்து கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்த ரயில், புல் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகளை மோதி தூக்கி வீசியது.கோத்தாவே அடுத்த ஜனாதிபதியாம்!
[Tuesday 2018-01-16 19:00]

அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் அவரே வெற்றிபெறுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றிபெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.ஜனாதிபதி முதலில் தனது கட்சியை சுத்தப்படுத்த வேண்டும்! - ஐதேக அமைச்சர் காட்டம்
[Tuesday 2018-01-16 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் தனது கட்சியை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டுமென இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார். தங்காலையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மட்டக்களப்பில் இளைஞர்கள் கடத்தல் - வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவர் கைது!
[Tuesday 2018-01-16 19:00]

மட்டக்களப்பு - கல்லடியில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைது செய்யப்பட்டவர்களில் இருவர், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள், மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில், சுயேட்சையாக போட்டியிடும் கஜ மோகன் மற்றும் கவிதாஸ் ஆகியோர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.நடுக்கத்தைச் சமாளிக்கவே கூட்டமைப்பினர் எங்களிடம் பேசினர்! - வரதர் Top News
[Tuesday 2018-01-16 19:00]

மாற்று அணி குறித்து கூட்டமைப்பினர் அச்சம் கொண்டதால் தான் எம்மிடம் பேசினர் என வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் மஞ்சள் விரட்டு! Top News
[Tuesday 2018-01-16 19:00]

கிளிநொச்சி - பெரியபரந்தனில் இன்W நடைபெற்ற மஞ்சள் விரட்டு விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள் தங்கள் வீரத்தையும் வலிமையையும், பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டில் மஞ்சள் விரட்டு என்ற போட்டி உள்ளது.குறித்த விளையாட்டு கிளிநொச்சியின் பல பகுதியில் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெற்று வந்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் நடத்தப்படவில்லை.எனினும், இம் முறை மீண்டும் மஞ்சள் விரட்டும் விளையாட்டு கிளிநொச்சி பிரதேச இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.நெடுந்தீவு கடற்பரப்பில் 16 இந்திய மீனவர்கள் கைது!
[Tuesday 2018-01-16 19:00]

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களது 4 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா