Untitled Document
January 16, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
தூய்மை இந்தியா திட்டத்தால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது: - ஐ.நா சபை
[Tuesday 2017-11-14 15:00]

 பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது” என ஐ.நா சபை சாடியுள்ளது.

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது” என ஐ.நா சபை சாடியுள்ளது.

  

பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், 'தூய்மை இந்தியா'. இத்திட்டம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோதும் இந்தியாவின் தூய்மை மேம்படவே இல்லை என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இத்திட்டம்குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலைதான் உருவாகியுள்ளது. பிரதமர் அறிமுகப்படுத்திய இத்திட்டம்மூலம் நாட்டின் தூய்மை மேம்படவே இல்லை; மோசம் அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் முழுதாக நிறைவேற இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், இந்தியாவின் தூய்மை முன்னேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

கழிவறைகள் பராமரிப்புகூட முறையாக இன்னும் இந்தியாவில் நிறைவேற்றவில்லை. மேலும், இந்தப் பணிகளுக்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களையே அரசு பயன்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது” என்று ஐ.நா சபை கடுமையாகச் சாடியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: - போகி அன்று நடந்த சோகம்
[Monday 2018-01-15 18:00]

திருமணமான சில நாள்களிலேயே, பெண் ஒருவர் பெற்றோர், தங்கையுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம், நாகை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள ஆக்கூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், கண்ணன் (55). இவர், தனது வீட்டின் கீழ் பகுதியில் ஒரு மளிகைக்கடை நடத்திவந்துள்ளார். வீட்டின் மேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவரின் மனைவி குணசுந்தரி (50). இவர்களுக்கு சரண்யா (22), சுகன்யா (20) என்ற இரு மகள்கள். மூத்த மகள் சரண்யாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.



வைரலாகும் விஜயகாந்த்தின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்!
[Monday 2018-01-15 18:00]

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. பச்சை சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து உற்சாகம் பொங்க மாடுகளுடன் கொஞ்சி விளையாடுகிறார் விஜயகாந்த். பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் விஜயகாந்த்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ’எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரைப்பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



காரை வரி ஏய்ப்புசெய்த வழக்கு: - போலீஸில் சரணடைந்தார் நடிகை அமலா பால்!
[Monday 2018-01-15 18:00]

தனது சொகுசு காரை புதுச்சேரியில் பதிவுசெய்து வரி ஏய்ப்புசெய்த வழக்கில், நடிகை அமலா பால் கேரள க்ரைம் பிராஞ்ச் முன்பு சரணடைந்தார்.தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தக் காரை கேரளாவில் பதிவுசெய்ய ரூ.20 லட்சம் வரி கட்ட வேண்டும்.



கேரளாவில் சகோதரரின் மரணத்துக்கு நீதி கேட்டு 764 நாட்களாக போராட்டம்!
[Monday 2018-01-15 18:00]

கேரளாவில் சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு இளைஞர் ஒருவர் 764 நாட்களாக தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.கடந்த 2014ம் ஆண்டு மே 19ம் திகதி ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜீவ், மொபைல் போனை திருடு செய்வதாக கூறி பாரசால பொலிசார் கைது செய்தனர்.இந்நிலையில் சிறையில் விஷம் அருந்தியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஜீவ், 21ம் திகதியே இறந்துபோனார்.



மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்!
[Monday 2018-01-15 08:00]

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிரூபயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜன்சா என்ற கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளி மகள் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த தொழிலாளிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் மூத்தவர் தான் இந்த மாணவி.



புதிய மதம்...வித்தியாசமான உடை...சில ஆச்சரியங்கள்: - இது மெய்வழிச்சாலை கிராமத்தின் கதை
[Monday 2018-01-15 08:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது 'மெய்வழிச்சாலை' என்ற கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் ஒரு புதிய மதத்தின் அடையாளத்துடனும் வித்தியாசமான உடை அலங்காரத்துடனும் பழக்க வழக்கங்களுடனும் வலம் வருகிறார்கள். ஆண்கள் எல்லோரும் தங்களது பெயருக்கு முன்னால் 'மெய்வழிச்சாலை'என்று சொந்த கிராமத்தின் பெயரை கட்டாயமாகப் போட்டுக்கொள்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் இவர்கள் இந்த பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் ஊருக்கு வந்து ஒன்று கூடி,பொதுப் பொங்கல் வைத்து ஒன்றாக உண்கிறார்கள். இன்னும் பல ஆச்சரியங்களைக் கொண்ட தங்களது சமூகம் பற்றி 'மெய்வழிச்சாலை' மாணிக்கம் என்பவர் விவரித்தார்.



சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: - பக்தர்களின் சரண கோஷத்தால் அதிர்ந்தது சபரிமலை
[Monday 2018-01-15 08:00]

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்தனர்.சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மகர ஜோதி தரிசனம். அதற்காகவே அன்றைய தினம் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு வருவார்கள். இன்று மகரஜோதி தரிசன தினமாகும்.



படகு விபத்தில் 4 மாணவர்கள் பலி
[Sunday 2018-01-14 22:00]
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பர்னகா என்ற கடற்கரையிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.


யானையுடன் விளையாடுவதும் பாம்புக்கு முத்தம் கொடுப்பதும் ஆத்மதிருப்தி தரும்: - ரியல் துருவன்
[Sunday 2018-01-14 17:00]

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டம் உதானி நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சந்திர கோச்சாயத். இவரை பாம்புகளின் நேசர் என்றே அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர். ஏனெனில், இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து இவர் பத்திரமாக காட்டுக்குள் விட்டுள்ளார். சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பை கண்டாலே இவரைத் தான் உடனே தொடர்பு கொள்கிறார்களாம்.



உலகமெங்கும் தமிழர் திருநாள் கொண்டாட்டம்: -புதுப்பானையில் பொங்கல் இட்டு மக்கள் உற்சாகம்!
[Sunday 2018-01-14 16:00]

இயற்கை நன்றி செலுத்தும் உயர்வான விழாவான உழவர் திருநாள் தை முதல் நாளில் கொண்டாடுவது தமிழர்களின் மரபு ஆகும். அப்படிப்பட்ட பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று தரணி எங்கும் தமிழக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முன் வண்ண கோலங்கள் தீட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகள் வைத்து பொங்கலோ பொங்கல் என உற்சாக குரல் எழுப்பி வழிபட்டனர். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட தொடங்கினர்.



என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது: - வைரமுத்து விளக்கம்
[Sunday 2018-01-14 16:00]

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து.



ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட கொடூரம்!
[Sunday 2018-01-14 14:00]

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் கண்ணன் (வயது 55). இவர், தனது மாடி வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். வீட்டின் மேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி குணசுந்தரி (50), மகள்கள் சரண்யா (22), சுகன்யா (20). மகள் சரண்யாவுக்கும், விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 


காசநோயாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
[Sunday 2018-01-14 12:00]

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் (டி.பி.) பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.



என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்: - ரஜினி
[Sunday 2018-01-14 12:00]

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்திலுள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறினார்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
[Sunday 2018-01-14 11:00]

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



கல்லூரி மாணவரின் தலையைத் துண்டித்துக் கொன்றக் கொடூரம்!
[Friday 2018-01-12 18:00]

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஐ.டி.ஐ மாணவரின் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த கும்பலைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இளைஞர்களுக்குள் நடந்த மோதல் கொலையில் முடிந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.நெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர் சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், முருகன். 17 வயது நிரம்பிய இவர் வீரகேரளம்புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.



உலக தலைவர்கள் தரவரிசையில் மோடிக்கு 3-வது இடம்!
[Friday 2018-01-12 14:00]

சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் இணைந்து எடுத்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். மோடி 8 புள்ளிகள் பெற்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் பிடித்துள்ளார். -->



மாமல்லபுரம் பகுதியில் உள்ள பாரம்பர்ய கலைச் சின்னங்களுக்கு ரசாயனக் கலவை பூச்சு!
[Friday 2018-01-12 14:00]

மாமல்லபுரம் பகுதியில் உள்ள பாரம்பர்ய கலைச் சின்னங்களை ரசாயனக் கலவை மூலம் தொல்லியல் துறை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவர்கள் மாமல்லபுரம் பகுதிகளில் உள்ள பாறைகளில் சிற்பங்களை செதுக்கி வைத்திருக்கின்றனர். தொல்லியல் துறையால் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.



இந்திய அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை கலக்கிய அரசியல்வாதி யார் தெரியுமா?
[Friday 2018-01-12 09:00]

பிரதமர் மோடி, இள வயதில் டீ விற்றதாகச் சொல்வர். பிரதமர் முதல் லேட்டஸ்டாக அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் வரை பலரும் எளிய பின்னணி கொண்டவர்களே. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொல்கத்தாவில் டெபுடி அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக வாழ்க்கையைத் தொடங்கியவர். பேராசிரியராகப் பகுதி நேரப் பத்திரிகையாளராகவும்கூட பணிபுரிந்த அவர், அரசியலில் புகுந்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரானார். நிதியமைச்சராகப் பதவி வகித்த அவர், 2012-ம் ஆண்டு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தார். தற்போதையக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கான்பூரில் சட்டம் பயின்றவர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி மூன்றாவது முயற்சியில் தேர்வுபெற்றவர்தான். குடியரசு முன்னாள் தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரிந்தவர்.



பொட்டும் பூவும் இல்லாமல் வாழ முடியாது: - கணவனுக்கு முன் உயிர் துறந்த பெண்
[Thursday 2018-01-11 18:00]

சென்னையைச் சேர்ந்த தம்பதி, சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கிண்டி சிறுவர் பூங்காவில் பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் பிரகாஷ் துடித்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் சிகிச்சை பெற்றார். அப்போது, அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல், பிரகாஷ் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மற்றவர்களைவிட பிரகாஷின் மனைவி உமா மகேஸ்வரி சோகத்தில் உறைந்தார்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா