Untitled Document
April 19, 2024 [GMT]
செல்வாவின் வழியிலேயே சிங்கக்கொடியைப் புறக்கணித்தேன்! - சர்வேஸ்வரன்
[Wednesday 2017-11-22 07:00]

 சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக்கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என தந்தை செல்வா கூறியிருந்தார். அவரின் வழியிலேயே நான் அதனை ஏற்ற மறுத்தேன் என்று வடக்கு மாகாண கல்வி  அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக்கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என தந்தை செல்வா கூறியிருந்தார். அவரின் வழியிலேயே நான் அதனை ஏற்ற மறுத்தேன் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

  

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவர் 'இலங்கையின் தேசியக்கொடியாக வடிவமைக்க்பபட்ட வாளேந்திய சிங்கம் பதிக்கப்பட்ட சிங்கக்கொடி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்ற கொடியாக இருப்பதால், அதனை நாங்கள் தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று 1950 இல் தந்தை செல்வா கூறியிருந்தார்.

அந்த வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டுமன்றி எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான ஒவ்வொரு பேச்சுக்களின் போதும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேசுகின்ற போது தேசியக்கொடியை மாற்றுகின்ற விடயம் குறித்து பேசப்பட்டுள்ளன.

தேசியக்கொடி என்பது ஒரு பிரச்சினையாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த 60 ஆண்டுகால வரலாற்றில் எமக்குத் தெரிந்த மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகளாக இருந்தாலென்ன,விடுதலைப்போராட்ட இயக்கங்களாக இருந்தாலென்ன, அதற்குப்பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலென்ன ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர் தந்தை செல்வாவின் கொள்கையைப் பிரதி பலிக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்ற உறுதியான கொள்கையுடனேயே செயற்பட்டு வருகின்றனர்.

அதனால்,அதற்கான எதிர்ப்பையும் காட்டிக்கொண்டிருக்கிறோம். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக்கூட்டத்தில் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவருக்கருகில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சம்பந்தன் தேசியக்கொடியை கையிலே வைத்து ஆட்டுகின்ற படங்கள் பத்திரிகையிலே வெளிவந்தன.

அதனைப்பார்த்த பின்னர் பத்திரிகைகளில் பல்வேறு கண்டனங்களும், மிகக்கடுமையான விமர்சனங்களும் வந்தன. அதேவேளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தேசியக்கொடியை சம்பந்தர் கையில்வைத்து ஆட்டியதைப்பார்த்து மிகப்பெரிய விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களுக்குப்பதிலாக அடுத்த நாளே சம்பந்தருடைய சார்பிலே தான் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று இப்போது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராசா அறிக்கைவிட்டார். ஆகவே அன்று சம்பந்தர் கொடி ஏற்றியது தவறு என்று அறிக்கை விட்டு மன்னிப்பு கோரிய போது அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத சிங்கள இனவாதம் இன்றைக்கு அதனைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ச இருக்கின்ற போது சிங்கக்கொடியை ஆட்டியது தவறு என்று கூறிய தமிழரசுக்கட்சி இன்று மைத்திரி ஆட்சியில் அந்தக்கொடி ஏற்ற மறுத்தமை தொடர்பில் மௌனம் சாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த விடயத்தை தூக்கிப்பிடிப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதால்,அரசு மீண்டும் தேசியக்கொடி தொடர்பில் ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது.

இப்போது இருக்கின்ற சிங்களத்தலைவர்கள் சிலர் இது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்று பேசுகின்றனர். அரசியலமைப்பின் மீது நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம். அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து விட்டு நாங்கள் அதை மீறுவதாக கூறியிருக்கின்றனர். இது தவறான விடயம் என்று கூறுகிறேன். ஏனெனில் இந்த அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் நாட்டின் ஜனாதிபதியும் வருகிறார். இந்த அரசியலமைப்பை நான் போற்றிப்பாதுகாப்பேன்,அவற்றை நடைமுறைப்படுத்துவேன் என்று தான் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட அனைவருமே சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் யாப்பிலே 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கான பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்க மாட்டேன் என்று ஏற்கனவே இருந்த ஜனாதிபதிகளும், இப்போது இருக்கின்ற ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே திரும்பத்திரும்ப கூறிவருகின்றனர். ஆகவே அரசியல் யாப்பிலே கொடுத்திருக்கக்கூடிய பொலிஸ் காணி அதிகாரங்களை நான் நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று சொல்வது அரசியல் யாப்பை மீறுகின்ற ஒரு செயலாக இவர்களுக்குத் தெரியவில்லையா.? ஆகவே இவ்வாறு அவர்கள் பகிரங்கமாகவே அரசியல் யாப்பை மீறுகின்ற போதெல்லாம் வாய் திறக்காதவர்கள் இன்று சிங்கச் சின்னம் பொறித்த கொடி ஏற்றவில்லை என்பதற்கு மட்டும் வாய் திறப்பதென்பது இன்று இருக்கக்கூடிய முக்கியமான அரசியல் விடயங்களில் இருந்து மக்களை திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த சமரசிங்க உரையாற்றுகையில், "வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தேசியக்கொடியை ஏற்றாமல் புறக்கணித்திருக்கிறார். ஆகவே நாங்கள் எப்படி அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியும்" என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படி கேள்வி கேட்கின்ற போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்ற 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாரேனும் அதற்குப்பதில் சொல்லவில்லை. அதனுடைய அர்த்தம் என்ன? அவர்கள் அனைவரும் இந்த தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டு விட்டார்களா? அல்லது தமிழரசுக்கட்சி தந்தை செல்வா என்று சொல்லிக்கொண்டு செல்வாவின் கொள்கைகளை குழி தோண்டிப்புதைத்து விட்டதா?

இன்றைய ஊடகங்களிலே இந்த விடயம் பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் சரி,வெளியிலும் சரி வாய் மூடி மௌனிகளாக இருப்பது இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்விக்கான பதில்களை எங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து பெறவேண்டும் - என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்! Top News
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.



செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]

யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.



ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா