Untitled Document
December 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் செய்யும் அட்டுழியங்கள் பற்றி தெரியுமா?
[Tuesday 2017-12-05 18:00]

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.

  

குடல் புழுக்களை குழந்தைகளுக்கு நீர்ம மருந்து கொடுப்பதாலும், பெரியவர்களுக்கு புழுவை நீக்கும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் நீக்க முடியும். ஆனால் இது போன்ற மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது கூடாது. இதனை சாப்பிடும் போது மருத்துவர் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. உடலுக்கு எந்த விதமான தீங்கும் இன்றி குடல் புழுக்களை நீக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் குடற்புழுக்கள் எதனால் உண்டாகின்றன, அவை வராமல் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளன.. அவற்றை போக்க உதவும் வைத்தியங்கள் பற்றியும் விரிவாக காணலாம்.

குடல் புழுக்கள் வர காரணம்:அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

குழந்தைகளுக்கு?:சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கழிப்பறை சுத்தம்:சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது. கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

சுத்தம்:

சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.

உள்ளாடைகள்:

குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

உணவு சுகாதாரம்:

ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

நீரில் கழுவவும்:

காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் சமைக்கும், சாப்பிடும் உணவுகள் சுத்தமாகவும் நச்சுக்கள் இன்றியும் இருக்கும்.

சுத்தமான நீர்:

நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.

வெளியில் செல்லும் போது..:

காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

புண்கள் இருந்தால்..:

வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

இறைச்சிகள்:

தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும். மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.

செல்லபிராணிகள்:

வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

பூண்டு:

பூண்டுடை பயன்படுத்தி குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், மஞ்சள், பூண்டு. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில் பூண்டுகளை துண்டுகளாக்கி போட்டு வதக்கவும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதை இருவேளை சாப்பிடும்போது குடல் புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். செரிமானம் சீராகும். 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்த கூடாது.

பூசணி விதை:

பூசணி விதையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூசணி விதை, தேன். அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதை பொடி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் பூசணி விதை பொடியும், குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவுக்கும் எடுக்கவும். இதை 3 நாட்கள் சாப்பிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.

பப்பாளி விதை:

பப்பாளி விதையை பயன்படுத்தி குடல் புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் பப்பாளி விதை எடுக்கவும். சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில் தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெய் காய்ந்ததும் வேப்பம் பூவை சேர்த்து வதக்கவும். இதில், நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கடி மாதம் ஒருறை குடித்துவர குடலில் புழுக்கள் வராமல் இருக்கும்.

வேப்பம் பூ:

வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். தரமற்ற, அதிகளவில் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இஞ்சியை சாறாக்கி தொப்புளில் 5 சொட்டுக்கள் விட்டு, தொப்புளை சுற்றி தடவுவதன் மூலம் வயிற்று வலி குணமாகும்.

கோவைக்காய்:

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.

  
   Bookmark and Share Seithy.com



சிறுவர்களுடன் பெற்றோர்கள் எப்போதும் தொடர்பிலிருக்க புதிய வயர்லெஸ் சாதனம்: Top News
[Thursday 2017-12-14 19:00]

அமெரிக்காவை சேர்ந்த Republic Wireless எனும் பிரபலமான நிறுவனம் புதிய சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய இந்த Walkie-Talkie சாதனமானது சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை எப்போதும் இணைத்து வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கும்.



காளானில் உள்ள மருத்துவ குணங்கள். சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம்.
[Thursday 2017-12-14 19:00]

காளான் சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம். ரத்தசோகை போக்கும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். காளான் சைவ உணவு. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.



தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் மாத்திரையே போடத் தேவையில்லை..!
[Monday 2017-12-04 18:00]

உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள். இதில் நிறைந்துள்ள சத்துக்களைப் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்.



ஆண்மை அதிகரிக்க மன்னர்கள் சாப்பிட்ட உணவுகள்!
[Tuesday 2017-11-28 18:00]

இன்று முப்பதை தாண்டுவதற்குள் இடுப்பு வலி, இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படுவதால் தான் ஆண்மை குறைபாடு, விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக நிவாரணம் தேடி பலரும் ஆங்கில மருந்துகளை தான் நாடி செல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் உணவு கலச்சாரத்திலேயே இதற்கான தீர்வுகள் இருந்தன என சில பண்டையக் கால குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.



இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க தினமும் காலையில் இதை பருகவும்:
[Tuesday 2017-11-28 18:00]

இஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் பொருள். நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ள உணவுப் பொருட்களில் இஞ்சி முதன்மையானது. காரணம், இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்கவும், செரிமானம் சிறக்கவும், இரத்தம் ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.



2018 ஆம் ஆண்டில் பூமிக்கு பேரழிவு! – விஞ்ஞானிகளின் எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்!
[Tuesday 2017-11-21 08:00]

பேரழிவை ஏற்படுத்தும் பாரிய நிலநடுக்கங்களை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் பூமி சந்திக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக உலகின் பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு உலகம் பாரிய அழிவைச் சந்திக்கும் என சதியாலோசனைக் கோட்பாடுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் பூமியானது தன் அச்சில் சுழலும் வேகத்தில் மாற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்..!
[Sunday 2017-11-19 18:00]

கொய்யாவை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும், எந்த நோய்கள் உண்டாவதை தடுக்கிறது எனவும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம். நாட்டு கொய்யாப்பழம் தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆப்பிளை விட கொய்யாவிற்குதான் முதல் மரியாதை தருவீர்கள். அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்கள் மார்க்கெட் பட்ஜெட்டில் கொய்யாவிற்கும் இடமிருக்கும்.



கணவன் மனைவி சண்டைக்கு முதல் காரணம் “இதுதான்”
[Sunday 2017-11-19 18:00]

உடலுறவு தேவையா என்ற கேள்விக்கு பதில் அனைவருக்குமே தெரியும்…..சரி அது எப்பொழுது தேவை ? எதற்காக தேவைப்படுகிறது? அதனால் நன்மைகள் என்ன? இது போன்ற பல கேள்விகளை நம் மனதில் நாமே கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைத்து விடும் திருமணத்திற்கு முன் காதல் கொள்ளும் போது இருக்ககூடிய ஆர்வமும்,அன்பின் மிகுதியால் வரக்கூடிய ஊடலும், திருமணத்திற்கு பிறகு இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.



கருப்பை புற்றுநோய்..! யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
[Tuesday 2017-11-14 18:00]

கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.



பாகற்காய் சர்க்கரை நோயை முழுமையாய் குணப்படுத்துமா..?
[Monday 2017-11-13 18:00]

ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என்பதற்கான நிறைய மருத்துவச் சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான். பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் முதலான தாவர நுண்கூறுகள்தான் இந்த மருத்துவச் செயல்பாட்டுக்குக் காரணம் என்று சான்றளித்துள்ளனர்.



வெங்காயத்தை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்:
[Thursday 2017-11-09 18:00]

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.



பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது..
[Wednesday 2017-11-08 18:00]

பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நேரத்துக்குச் சாப்பிட வேண்டாம். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில், வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.



இரவில் கண் விழிப்பவர்களா நீங்கள்? - ஆபத்துக்களை அறிக
[Thursday 2017-10-26 18:00]

இரவு நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வரவில்லையா, உங்கள் பணியே இரவு நேரத்தில்தானா, இரவு முழுக்க விழித்து செல்போன், சினிமா, கணினியைக் கவனிப்பவர்களா, நண்பர்களோடு சேர்ந்து தினமும் இரவைக் கொண்டாடுபவரா இவை எல்லாமே ஆபத்தானது என்பதை உடனே புரிந்துகொள்ளுங்கள். இரவில் மட்டுமே சுரக்கும் 'மெலடோனின்' என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறது மருத்துவ உலகம்.



இல்லறம் இன்பமயமாக இருக்க நீங்க இந்த 8 விஷயம் செய்தாலே போதுமே!
[Friday 2017-10-13 09:00]

எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர்.

உண்மையில் உடல் சார்ந்த ரீதியில் காணும் இன்பத்தை விட, மனம் சார்ந்த ரீதியில் கிடைக்கும் இன்பம் தான் மிகுதியானது மற்றும் நிலையானது.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஜஸ்ட்

இங்கு கூறியிருக்கும் எட்டு விஷயங்களை உங்கள் வாழ்வில் சரியாக பின்பற்றி, செயல்முறையில் நடைமுறைப்படுத்தி வந்தாலே போதுமானது.



கணனியில் இனி இதயமே பாஸ்வேர்டு!
[Monday 2017-10-09 08:00]

கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது.



அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா நீங்கள்? - மீறி எடுத்துக் கொண்டால் என்னென்ன தீமைகள்?
[Friday 2017-10-06 18:00]

இன்றைக்கு பெரும்பாலானோர் மருத்துவ ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மருத்துவக் குறிப்பாக இந்த உணவு நல்லது என்று சொன்னால் போதும் மூன்று வேலைக்கும் சாப்பிடுவது தொடர்கிறது. என்ன தான் உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் அது அளவுக்கு மீறினால் நஞ்சாகத்தான் முடியும். அப்படி நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் பூண்டு. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு என்றாலும் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் என்னென்ன தீமைகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.



அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி:
[Saturday 2017-09-30 17:00]

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைகுத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது.



தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்தால்..?
[Saturday 2017-09-30 08:00]

தைரொயிட் சுரப்புக் குறைவாகவுள்ள பெண்னொருவர் தான் கர்ப்பமாகவுள்ளேன் என உறுதி செய்தவுடனேயே (சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) வைத்திய ஆலோசனையைப் பெற்று தைரொக்ஸின் மருந்தின் அளவை 25 mic.g இனால் அதிகரித்து உள்ளெடுத்தல் அவசியம். கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்களும் சிசுவின் வளர்ச்சியில் முதன்மையான பங்கை வகிக்கின்றன. இந்தக் காலத்திலேயே குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புக்களின் வளர்ச்சியானது முதன்மை பெற்றிருக்கும்.



உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலியாக மாற்றி வியக்க வைத்த விஞ்ஞானிகள்: Top News
[Wednesday 2017-09-20 07:00]

உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் சேமிக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி பல்கலைகழகத்தில் ஒளித் தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில் நேற்று தங்கள் ஆய்வில் வெற்றிகரமான முடிவை அவர்கள் எட்டியுள்ளனர்.



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி: இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் கண்டறியப்பட்டுள்ளது!
[Sunday 2017-09-10 07:00]

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா