Untitled Document
December 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
எனது ஆடைகளை உருவி பலாத்காரம் செய்ய முயன்றார்: - தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் புகார்
[Wednesday 2017-12-06 17:00]

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது பற்றி சில நடிகைகள் பகிரங்க புகார் கூறி வருகின்றனர். தற்போது நடிகை காயத்ரி குப்தா இதுபற்றி பகீர் புகார் தெரிவித்திருக்கிறார். ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. இவர் தெலுங்கில் ‘ஃபிட்டா’ படத்தில் நடித்தார். அவரது தோழியாக காயத்ரி குப்தா நடித்தார். அவர் கூறும் போது, ‘திரையுலகில் வாய்ப்பு பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒருமுறை எனக்கு பட வாய்ப்பு வந்தது. முதலிலேயே அவர்களிடம் எனது நிபந்தனைகளை கூறி விட்டேன்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது பற்றி சில நடிகைகள் பகிரங்க புகார் கூறி வருகின்றனர். தற்போது நடிகை காயத்ரி குப்தா இதுபற்றி பகீர் புகார் தெரிவித்திருக்கிறார். ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. இவர் தெலுங்கில் ‘ஃபிட்டா’ படத்தில் நடித்தார். அவரது தோழியாக காயத்ரி குப்தா நடித்தார். அவர் கூறும் போது, ‘திரையுலகில் வாய்ப்பு பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒருமுறை எனக்கு பட வாய்ப்பு வந்தது. முதலிலேயே அவர்களிடம் எனது நிபந்தனைகளை கூறி விட்டேன்.

  

எனக்கு தரப்படும் வாய்ப்புக்காக தயாரிப்பாளர், இயக்குனர் யாருடனும் நான் படுக்கையை பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்றேன். அவர்களும், அப்படி எதுவும் கிடையாது என்றனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நிலை மாறியது. இரவுப் பொழுதை கழித்தால் அதற்கான பணம் தரப்படும் என்றனர். உடனே நான், எனது சுயமரியாதையை இழந்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றேன். ஆனாலும் அவர்கள் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

ஒருநாள் தயாரிப்பாளர் தனது காரில் என்னை எனது வீட்டில் விட்டுவிடுவதாக அழைத்துச் சென்றார். நடுவழியில் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டதுபோல நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று எனது ஆடைகளை உருவி பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பித்து சென்றேன். பின்னர் அந்த படத்திலிருந்தே நான் விலகி விட்டேன். பலாத்காரத்துக்கு எதிராக நான் போராடுவேன். சில பெண்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களின் ஆசைக்கு உடன்படுவதால் என்னையும் அதுபோல் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது’ என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



நான் இருந்திருந்தால் அவரது காலை உடைத்திருப்பேன்: - கங்கனா ரணாவத்
[Friday 2017-12-15 19:00]

‘சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், பாலியல் தொல்லை கொடுத்த நபரின் காலை உடைத்திருப்பேன்” என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.நடிகர் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலம் அடைந்தவர், சாயிரா வாசிம். இவர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொழில் அதிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.



பொங்கல் பண்டிகைக்கு வீரவிளையாட்டாக மதுரைவீரன் படம் ரிலீசாகும்: - விஜயகாந்த்
[Friday 2017-12-15 12:00]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு வீரவிளையாட்டாக `மதுரைவீரன்' படம் ரிலீசாகும் என்று நடிகர் விஜயகாந்த் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் பிரபுதேவாவின் குலேபகாவலி ரிலீசாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை பொங்கல் ரேசில் இருந்து விலகி குடியரசு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



அரசியலில் குதிக்கிறாரா வரலட்சுமி சரத்குமார்?
[Friday 2017-12-15 12:00]

அரசியலில் குதிக்க போகிறதாக வந்த செய்திக்கு வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த வருடம் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சத்யா’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.



விக்ரம் வேதா படத்தால் மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன்: - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
[Friday 2017-12-15 08:00]

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' படம் எனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.



எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை: - இளைய தளபதியை புகழ்ந்த சிபிராஜ்
[Friday 2017-12-15 08:00]

மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் விஜய் அண்ணா இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவது இல்லை என்று நடிகர் சிபிராஜ் கூறியுள்ளார்.சிபிராஜின் சத்யா திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் சிபிராஜ், நாயகிகள் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் கே கிங் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் அறிவழகன், ஷணம் (தெலுங்கு) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா!
[Thursday 2017-12-14 15:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா திரையுலகில் 15 ஆண்டுகளை தாண்டி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார்.



அடங்க மறுக்கிறாரா ஜெயம் ரவி?
[Thursday 2017-12-14 15:00]

`சங்கமித்ரா' படத்திற்கு முன்னதாக கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அடங்கமறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.



ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
[Thursday 2017-12-14 08:00]

`வேலைக்காரன்', `சீமராஜா' படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் தியா மிர்ஸா!
[Thursday 2017-12-14 08:00]

பெண்களுக்கு மிகவும் அவசியமான விஷயம் நாப்கின். பல நடிகைகள் இதற்காக விதவிதமான விளம்பரங்களில் நடிக்கின்றனர். பல அரசு பள்ளிகளிலும் இவை மாணவிகளுக்கு இலவசமாக தரப்படுகின்றன. ஆனால் நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார் தியா மிர்ஸா. ஹம் தும் அவுர் கோஸ்ட், லவ் பிரேக்அப்ஸ் ஜிந்தகி, பாபி ஜோஸ் போன்ற பல இந்தி படங்களில் நடித்ததுடன் தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார்.



நடிகை சுரபியின் திடீர் சோகம்!
[Thursday 2017-12-14 08:00]

கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மின்னாமினுங்குனு’ மலையாள படத்தில் நடித்த சுரபி பெற்றார். அவருக்கு சில அமைப்புகள் பாராட்டு விழா நடத்தின. கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் பங்கேற்க தனக்கு அழைப்பிதழ் வரவில்லை. தர முடியுமா என மலையாள பட இயக்குனர் கமலிடம் கேட்டார். அழைப்பிதழை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக அவர் பதில் அளித்தார். ஆனால் அழைப்பிதழ் வந்து சேரவில்லை. வருத்தம் அடைந்தார் சுரபி.



சம்பளத்தை குறைக்க முடிவு செய்த ஹன்சிகா!
[Wednesday 2017-12-13 16:00]

ஹன்சிகாவுக்கு கடந்த சில காலமாகவே பெரிய அளவில் படங்கள் இல்லாத சூழல் உள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்தவர் அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார். இந்நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. இப்படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். ஹன்சிகா தமிழில் ‘குலேபகாவலி’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.



மீண்டும் சென்னையில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு!
[Wednesday 2017-12-13 16:00]

கௌதம் வாசுதேவ் மேனன், என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டாவில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.



இணையதளத்தில் வெளியாகும் சமந்தா படங்கள்: - சைபர் கிரைமில் புகார் செய்ய முடிவு
[Wednesday 2017-12-13 16:00]

நாக சைதன்யாவை மணந்த சமந்தா திருமணம் முடிந்த சில நாட்களில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ராம் சரணுடன் சமந்தா நடிக்கும் புதிய தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் பாவாடை, தாவணி அணிந்து ஏழைப்பெண் தோற்றத்தில் நடிக்கும் சமந்தா, மாடு மேய்ப்பது போலவும், வீட்டு வேலை செய்வது போலவும் சில முக்கிய ஸ்டில்கள் இணைய தளத்தில் வெளியானது. அதைக்கண்டு இயக்குனர் சுகுமார் அதிர்ச்சி அடைந்தார்.



பேய் எல்லாம் பாவங்க: - சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் படம்
[Wednesday 2017-12-13 16:00]

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளர் தீபக் நாராயணன் இயக்கும் படம் ‘பேய் எல்லாம் பாவங்க’. இதன் நாயகன் அரசு. இவர் ‘வல்லதேசம்’, ‘ஐவர்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். கேரளத்து புதுவரவு டோனா சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, ஸ்ரீஜித் ரவி, சிவகுமார்,செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பிரசாந்த். இசை நவீன் சங்கர். கதை, திரைக்கதை, வசனம் தவமணி பாலகிருஷ்ணன்.



யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை: - ஒரே நாளில் நடிகை பல்டி
[Wednesday 2017-12-13 07:00]

பாலிவுட்டில், ‘மெயின் அவுர் சார்லெஸ்’, ‘சரப்ஜித்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள், டி.வி சீரியல்களில் நடித்திருப்பவர் ரிச்சா சட்டா. சில தினங்களுக்கு முன் இவர் பரபரப்பு பேட்டி அளித்தார். ‘நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு பெற்றுத்தரும் காஸ்டிங் கவுச்கள் படுக்கைக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு என கண்டிஷன் போடுகிறார்கள். எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளித்தால் அப்படிப்பட்டவர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிடுவேன். அதைப்பார்த்து நூற்றுக்கணக்கானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக சொல்வார்கள்’ என்றார். என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ? தெரியவில்லை.



காஜல் அகர்வாலை பின் தொடரும் ரசிகர்கள்!
[Tuesday 2017-12-12 17:00]

நடிகை காஜல் அகர்வாலை டுவிட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மே மாதம் டுவிட்டர் கணக்கை தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் புகைப்படங்களை இதில் வெளியிட்டு வந்தார். இதை பார்ப்பதற்காக டுவிட்டரில் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகி வந்தது. இதையடுத்து ரசிகர்களுடன் அவ்வப்போது டுவிட்டரில் கலந்துரையாடினார்.



நடிகர் தனுஷ் வெளியிட்ட ரஜினியின் புதிய தோற்றம்!
[Tuesday 2017-12-12 17:00]

காலா, 2.0 என இரண்டு படங்களில் ரஜினி நடித்து வருகிறார். இதில் முதலில் வரப் போவது எந்த படம் என்பதுபற்றி இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இரண்டு படங்களின் புரமோஷன்களும் நடந்து வருகிறது. ஏற்கனவே காலா படத்தில் ரஜினி தோற்றத்தை நடிகர் தனுஷ் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது காலா படத்தில் ரஜினியின் புதிய தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார். ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தை தனுஷ், தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.



என் அன்புக்குரிய குஞ்சுமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: -ஆர்யாவை கலாய்த்த த்ரிஷா
[Tuesday 2017-12-12 17:00]

நேற்று நடிகர் ஆர்யாவிற்கு பிறந்த நாள். அவருக்கு நடிகை த்ரிஷா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் என் அன்புக்குரிய ஆர்யாவுக்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள். உன் வாழ்க்கையில் எப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியில் Hugs Kunjumani என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு Thank you so much my Kunjumani என்று ஆர்யா பதில் அளித்துள்ளார். ஆர்யா - த்ரிஷா சர்வம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



சித்தார்த்தின் இணைய தள பக்கத்தில் விஷமிகள் ஊடுருவல்!
[Tuesday 2017-12-12 17:00]

சமீபகாலமாக நடிகர், நடிகைகள் இணைய தள ஃபேஸ்புக், டுவிட்டரில் பிஸியாக இருக்கின் றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் மற்றும் கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற் காக இதனை பயன்படுத்துகின்றனர். சில சமயம் பிரபல நட்சத்திரங்களின் இணைய தள பக்கங்களில் சிலர் ஊடுருவி அவர்களது படங்களை ஆபாசமாக வெளியிடுவது, திட்டுவது போன்ற தகாத காரியங்களில் ஈடுபடுகின்றனர். நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த ஊடுருவலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.



ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன்: - நடிகை ரோஜா பேட்டி
[Tuesday 2017-12-12 17:00]

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா