Untitled Document
December 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வைரலாகும் விஜயகாந்த்தின் புதிய புகைப்படம்!
[Wednesday 2017-12-06 18:00]

மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் ஹோட்டல்களில் விஜயகாந்த் இருக்கும் போட்டோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் ஹோட்டல்களில் விஜயகாந்த் இருக்கும் போட்டோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.

  

தற்போது, சிகிச்சைப் பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  
   Bookmark and Share Seithy.com



பைக் மோதியதில் இருவர் கவலைக்கிடம்: - உருகவைத்த குழந்தையின் அழுகுரல்
[Friday 2017-12-15 19:00]

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள ஆலங்கிணறு விலக்கில் எதிரெதிரே வந்த இரண்டு பைக் மோதியதில் இருவர் கவலைக்கிடமாகவும் மூன்று பேர் சிகிச்சையிலும் உள்ளனர். பைக்கில் உறவினர்களுடன் வந்த குழந்தை ரத்தக்காயத்துடன் அழுதுகொண்டிருந்தது பார்த்தவர்களின் நெஞ்சையும் கரைய வைத்தது.



மூன்று மாத குழந்தையின் வயிற்றில் வளர்ந்து வந்த கரு: - அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய மருத்துவர்கள்
[Friday 2017-12-15 19:00]

பீகார் மாநிலத்தில் மூன்று மாத குழந்தை ஒன்று வயிற்றினுள் கட்டி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் வயிற்றில் இருப்பது கட்டியல்ல, அது பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள மற்றொரு குழந்தை என்பது தெரிய வந்தது. அந்த குழந்தைக்கு கண்கள் மற்றும் தோல்கள் வளர்ச்சியடைந்து இருந்தன.



சட்டக்கல்லூரி மாணவி கொடூர கொலை: - அசாம் வாலிபருக்கு மரண தண்டனை
[Friday 2017-12-15 11:00]

கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் அசாம் வாலிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் பாப்பு. இவரது மகள் ஜிஷா(24). சட்டக்கல்லூரியில் பி.எல். படித்து வந்தார். கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதியன்று ஜிஷா வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீருல் இஸ்லாம் (26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதியை பணி நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்!
[Friday 2017-12-15 11:00]

காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்தது.



ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்!
[Friday 2017-12-15 11:00]

பேரறிவாளன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக புழல் சிறையில் இருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.ராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு, கடந்த நவம்பர் 20-ம் தேதி, சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. சோதனைக்குப் பின், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைசெய்தனர். அதன்பேரில், புழல் மத்திய சிறைக்கு மாற்றும்படி பேரறிவாளன் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது



குடிக்க தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு மது கொடுத்த ஆசிரியர்கள்!
[Friday 2017-12-15 08:00]

கர்நாடகாவின் துமக்குரு (Tumakuru) மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு மதுபாட்டில்களைக் கொடுத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.துமுக்குரு மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், பெண் ஆசிரியர் உட்பட ஏழு ஆசிரியர்களும் கடந்த 10-ம் தேதியன்று தக்ஷின கன்னடாவுக்கு (Dakshina kannada) கல்விச் சுற்றுலா சென்றுள்ளார்கள். இந்நிலையில், அவர்கள் துமுக்குருவிற்கு திரும்பி வரும்போது, இரண்டு மாணவர்கள் ஆசிரியரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்கள். மதுபோதையில் இருந்த ஆசிரியர்கள், ஆல்கஹால் கலந்து வைத்திருந்த பாட்டிலை மாணவர்களிடம் கொடுத்துள்ளார்கள்.



வடமாநில கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா!
[Thursday 2017-12-14 13:00]

கோவையில் ஏ.டி.எம் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த வடமாநில கொள்ளையர்கள், நாமக்கல்லில் கைதுசெய்யப்பட்டனர்.கோவை, விளாங்குறிச்சி அருகே இண்டஸ் இண்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமராக்களை மறைத்துவிட்டு, வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் மெஷினை உடைத்துள்ளனர். இரண்டு இடங்களிலும் மொத்தம் 29 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.



பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆபாச நடனம்: - அரச பாடசாலையில் நடந்த கொடுமை
[Thursday 2017-12-14 12:00]

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களின் முன் பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடியக் கூத்து அரங்கேறியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின்போது, பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடினார். பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆபாசமாக நடந்த இந்த நடனத்தைக் கண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் முகம் சுளித்தனர்.



திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து: - மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
[Thursday 2017-12-14 12:00]

திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி மூன்று பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முருகன் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபம் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.



சென்னையில் உள்ள சீன உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோக்கள்!
[Thursday 2017-12-14 08:00]

சென்னையில் உள்ள சீன உணவகம் ஒன்றில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வருகிறது. வெளிநாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். ஆனால் நம் நாட்டில் பொறுத்தவரை ரோபோக்களின் பயன்பாடு என்பது ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்தது. அந்த கவலையை போக்குவதற்காகவே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் ரோபோக்களை கொண்டு ஒரு உணவகம் செயல்பட்டு வருகிறது.



ஏ.டி.எம்.மில் கொள்ளை அடிக்கும் கும்பல்: - கூகுள் மப்ஸ் மூலம் கொள்ளை
[Thursday 2017-12-14 08:00]

ஏ.டி.எம் கொள்ளைகளில் தொடர்புடைய 8 பேர் நாமக்கல், சேலத்தில் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் கோவையில் 2 ஏ.டி.எம் களில் நடந்த கொள்ளையில் தொடர்பு என சந்தேகம் எழுந்தது.



ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: - திருமாவளவன் வலியுறுத்தல்
[Thursday 2017-12-14 08:00]

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட உள்ள நிவாரண உதவி போதுமானதாக இல்லை. இறந்துபோன மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நாகர்கோவில் வந்திருந்தார். அவருக்கு கறுப்புக்கொடி காட்ட காத்திருந்த இந்து மகா சபா அமைப்பினரை போலீஸார் கைதுசெய்தனர்.



இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா!
[Wednesday 2017-12-13 16:00]

இலங்கை அணிக்கெதிராக இன்று நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தது. இதில் ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும்.



நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு: குற்றவாளியை உடனடியாக விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு
[Wednesday 2017-12-13 16:00]

1986-ம் ஆண்டு நிகழ்ந்த, நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் 18 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த குற்றவாளியை உடனடியாக விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை வெட்டி கொன்ற வாலிபர்!
[Wednesday 2017-12-13 16:00]

சோளிங்கர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் சேட்டு (வயது 30), நவீன் (25), மகள் அமுதா (28). சேட்டு அவரது மனைவி சகுந்தலாவுடன் தனியாக வசித்து வருகிறார். அமுதா திருமணமாகி காரையில் வசித்து வருகிறார். சுப்பிரமணி இறந்து விட்டதால் தாய் சாந்தியுடன் நவீன் வசித்து வந்தார். மேஸ்திரி வேலைக்கு சென்று வந்தார்.நவீன் அம்மூரை சேர்ந்த வைத்தீஸ்வரி (18) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு நேற்று மாலை வீட்டிற்கு அழைத்து வந்தார்.



ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் கட்டுக்கதை அல்ல: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[Wednesday 2017-12-13 08:00]

ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.



பிள்ளைகளை வளர்க்க கடலுக்குள் போராடுகிறேன்: - பெண் மீனவர் ரேகா
[Wednesday 2017-12-13 08:00]

அதிகாலை நேரம் அரபிக்கடல் அமைதியாகக் காட்சியளிக்கிறது. படகை, கயிற்றில் இருந்து அவிழ்க்கிறார் அந்தப் பெண். படகில் நைலான் வலைகள் இறைந்து கிடக்கின்றன. ஒற்றை இன்ஜின் கொண்ட அந்தப் படகு, தண்ணீரைக் கிழித்து கடலுக்குள் சீறிச் செல்கிறது. சூரியன் மறைவதற்குள் கரை திரும்புகிறார். படகு நிறைய மீன்கள். `தரைமேல் பிறக்கவைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்...' என்ற பாடல் கே.சி.ரேகாவுக்கு அப்படியே பொருந்தும். இந்தியாவில் உரிமம் பெற்ற முதல் பெண் மீனவர் இவர்தான்.



முத்தப் போட்டியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!
[Wednesday 2017-12-13 08:00]

ஜார்க்கண்ட் முத்தப்போட்டிஜார்க்கண்ட் மாநிலம், பகூர் மாவட்டத்தின் ஜூமாரியா கிராமத்தில் நடந்த தம்பதிகள் முத்தப்போட்டியில் பங்கேற்றதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் சிபு சோரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.



கணவரைக் கொன்று காதலரைக் கணவராக்கிய பிளாஸ்டிக் சர்ஜரி: - காட்டிக் கொடுத்த மட்டன் சூப்
[Wednesday 2017-12-13 07:00]

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னுல் நகரைச் சேர்ந்த நர்ஸ் ஸ்வாதி. இவரின் கணவர் சுதாகர் ரெட்டி. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு முன்பே, ஸ்வாதி ராஜேஷ் என்பவரைக் காதலித்துள்ளார். நிர்பந்தம் காரணமாகச் சுதாகரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் ஸ்வாதியால் காதலரை மறக்க முடியவில்லை. எனவே, கணவரைக் கொன்றுவிட்டு, காதலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, கணவர்போல மாற்றத்திட்டமிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 27-ம் தேதி இருவரும் சேர்ந்து சுதாகர் ரெட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் புதைத்துள்ளனர்.



அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மக்கள் துயரத்தில் பங்கெடுக்கவில்லை: - பொங்கிய சீமான்
[Tuesday 2017-12-12 17:00]

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள். அவர்களில் சிலர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் எனக் குமரி மீனவக் கிராமங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா