Untitled Document
December 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ். மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி!
[Thursday 2017-12-07 08:00]

சாவகச்சேரி நகரசபை தவிர்ந்த யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி நேற்று செலுத்தியது.

சாவகச்சேரி நகரசபை தவிர்ந்த யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி நேற்று செலுத்தியது.

  

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மேலதிக நிர்வாகச் செயலாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) உள்ளிட்டோர் அடங்கிய கட்சியின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினர். கடந்தமாதம் 28ஆம் திகதி சாவகச்சேரி நகரசபைக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியிருந்தது.

  
   Bookmark and Share Seithy.com



தன்னிச்சையான தடுத்து வைப்புக்களை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும்! - ஐ.நா குழு
[Friday 2017-12-15 18:00]

தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் காரணமாக, இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாக 'தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள்' தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக் குழு, அடையாளம் கண்டுள்ளது. மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஐ.நா தூதுக்குழு இலங்கையில் மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் இறுதியில் வெளியிட்ட பிரசுரத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.



தமிழரசுக் கட்சி - ரெலோ முறுகலைத் தீர்க்கும் முயற்சியில் ஆயர் இல்லம்!
[Friday 2017-12-15 18:00]

மன்­னார் நக­ர­சபை ஆசனப் பங்கீடு தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும், ரெலோ­வுக்­கும் இடை­யில் நில­வும் சர்ச்­சைக்கு மன்­னார் ஆயர் இல்­லம் ஊடா­கத் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் மன்­னார் நகர சபை ரெலோ­வுக்கு ஒதுக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மன்­னார் ஆத­ர­வா­ளர்­கள் கடும் அதி­ருப்­தி­ய­டைந்­த­னர்.



யாழ், வவுனியா, மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது கூட்டமைப்பு! Top News
[Friday 2017-12-15 18:00]

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கட்டுப்பணம் செலுத்தியது.



கிளிநொச்சியில் பிரதான கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின! Top News
[Friday 2017-12-15 18:00]

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று முக்கிய கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தின. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான குழு இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.



கூட்டமைப்புக்கு முடிவு கட்டும் தர்மயுத்தம் ஆரம்பம்! - ஓபிஎஸ் பாணியில் சபதம் செய்கிறார் சிவகரன்
[Friday 2017-12-15 18:00]

தமிழ்த் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனநாயக தமிழரசு கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.



இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யா தடை! - ஆப்பு வைத்தது வண்டு
[Friday 2017-12-15 18:00]

தேயிலை உட்பட இலங்கையின் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்துள்ளது. தடைக்குக் காரணம், ஒரு வண்டு ஆகும். ரஷ்யாவில் விற்கப்படும் தேயிலையில் 23 சதவீதமானவை இலங்கைத் தேயிலையே. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இலங்கை வருமானமாகப் பெறுகிறது.



அரசுடன் இணைந்த ஶ்ரீயானிக்கு இராஜாங்க அமைச்சர் பதவி! Top News
[Friday 2017-12-15 18:00]

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக ஶ்ரீயானி விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்ரம கூட்டு எதிர்க்கட்சியுடன் செயற்பட்டு வந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.



தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்புமனுக்கள் திருகோணமலையில் நிராகரிப்பு!
[Friday 2017-12-15 18:00]

திருகோணமலையில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவொன்றின் வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 7 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி மதியம் வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.மொத்தமாக 53 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சைக்குழுவும் இதன்போது வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன.



கோத்தா கைதுக்கு தடை நீடிப்பு!
[Friday 2017-12-15 18:00]

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



வேட்பாளர்களின் காலை வாரிய சுபநேரம்!
[Friday 2017-12-15 18:00]

உள்ளாட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு சில அடிப்படை காரணங்கள் தாக்கம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இறுதிச் சந்தர்ப்பத்தில் வேட்புமனுக்களை கையளித்தல், உரிய அவதானம் செலுத்தாமை மற்றும் சுபநேரத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய திட்டமிடல் என்பன இதற்கு காரணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



சாரதிக்கு திடீர் மாரடைப்பு - தடுமாறி ஓடிய லொறி விபத்துக்குள்ளாக்கி உதவியாளர் பலி!
[Friday 2017-12-15 18:00]

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். லொறி சாரதி திடீரென சுகவீனமுற்றதையடுத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதியின் சுகவீனத்தால் வீதியை விட்டு விலகிய லொறி, அருகாமையில் இருந்த மரங்களில் மோதியே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லொறி உதவியாளர் உயிரிழந்தார். சுகவீனமுற்ற சாரதி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அடிதடி வரை சென்ற சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு! Top News
[Friday 2017-12-15 08:00]

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் அருந்தவபாலன் ஆத்திரத்தின் உச்சத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தனை கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் (ஹெல்மட்) தாக்கியுள்ளார்.



கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது! Top News
[Friday 2017-12-15 08:00]

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார்.



அம்பாறையில் கூட்டமைப்பின் இரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ரெலோ எம்.பியே காரணம்!
[Friday 2017-12-15 08:00]

அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. அந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பு ரெலோ கட்சியைச் சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே கட்சியின் முகவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தவறு காரணமாகவே அந்த இரு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தது.



தமிழ்ப் பெண்ணை நாடு கடத்த வேண்டாம்! - அவுஸ்ரேலியாவிடம் ஐ.நா குழு கோரிக்கை
[Friday 2017-12-15 08:00]

இலங்கைத் தமிழ் பெண்ணை நாடு­க­டத்த வேண்டாம் என அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­திடம் ஐக்­கிய நாடுகள் சபையின் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது என கார்­டியன் பத்­திரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.



8 ஆண்டுகள் சிறையில் இருந்த ரெலோ உறுப்பினர் பிணையில் விடுவிப்பு!
[Friday 2017-12-15 08:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவரை பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு நீதிபதி உபாலி குணவர்த்தனவினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.



சங்கானையில் வேட்பாளர் வீட்டின் மீது கழிவு ஓயில் வீச்சு!
[Friday 2017-12-15 08:00]

யாழ்ப்­பா­ணத்­தில் முத­லா­வது தேர்­தல் வன்­முறை நேற்­றுப் பதி­வா­கி­யது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ள­ரது வீடு மீது கழிவு ஒயில் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வலி. மேற்­குப் பிர­தேச சபைக்கு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ள­ரான கதி­ர­வே­லு­வின் சங்­கா­னை­யி­லுள்ள வீட்­டின் மீதே நேற்று அதி­காலை 1.30 மணி­ய­ள­வில் இனந்­தெ­ரி­யா­தோ­ரால் கழிவு ஒயில் வீசித் தாக்­கி­யுள்­ள­னர்.



இந்தியாவின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்! - இலங்கையிடம் புதுடெல்லி கண்டிப்பு
[Friday 2017-12-15 08:00]

இந்தியாவின் பாதுகாப்பு விடயங்களை இலங்கை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.< பிராந்தியத்தின் அபிவிருத்திகள் மற்றும் மாற்றங்களின் போது பாதுகாப்பு நிலைமை மற்றும் உணர்வுமிக்க விடயங்களில் இலங்கை கவனம் செலுத்த வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ராவீஸ் குமார் கோரியுள்ளார்



தேர்தல் பிரசாரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்த தடை!
[Friday 2017-12-15 08:00]

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.



யாழ்., வவுனியாவில் நேற்று 5 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!
[Friday 2017-12-15 08:00]

வடக்­கில் உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்­டி­யி­டு­வ­தற்­காக 5 சுயேச்­சைக்­கு­ழுக்­கள் நேற்று கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளன.யாழ்ப்­பா­ணத்­தில், நெடுந்­தீவு, காரை­ந­கர், வலி.தெற்கு பிர­தேச சபை­க­ளுக்கு சுயேச்­சைக்­கு­ழுக்­கள் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளன. வவு­னி­யா­வில், வடக்கு மற்­றும் தெற்கு தமிழ்ப் பிர­தேச சபைக்கு இரண்டு சுயேச்­சைக் குழுக்­கள் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளன.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா