Untitled Document
January 23, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
துபாயில் லொட்டரி குலுக்கலில் இந்தியருக்கு 19 கோடி பரிசு!
[Tuesday 2018-01-09 08:00]
 
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(42). இவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் அபுதாபியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் அங்கு வாங்கியிருந்த “பிக் டிக்ெகட்” லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஹரிகிருஷ்ணனுக்கு ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.19 கோடி பரிசு விழுந்துள்ளது. ஹரி கூறுகையில், “அது நான் தானா? நிஜமாகவே நான் தானா? என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(42). இவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் அபுதாபியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் அங்கு வாங்கியிருந்த “பிக் டிக்ெகட்” லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஹரிகிருஷ்ணனுக்கு ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.19 கோடி பரிசு விழுந்துள்ளது. ஹரி கூறுகையில், “அது நான் தானா? நிஜமாகவே நான் தானா? என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

  

இதற்கு முன் இரண்டு முறை லாட்டரி வாங்கியுள்ளேன். ஆனால், எந்த பரிசும் விழவில்லை. நான் எப்போதும் உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அதற்கான நேரம் வந்துள்ளது கடவுள் அருளால் அது நிகழ்ந்துள்ளது” என்றார். துபாயில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த லாட்டரி குலுக்கலில் இந்தியருக்கு ரூ.8 கோடி பரிசாக கிடைத்தது. இதேபோல், அக்டோபரில் நடைபெற்ற குலுக்கலில் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் தலா ரூ.1.7 கோடி பரிசு பெற்றனர்.

  
   Bookmark and Share Seithy.comஇரு சக்கர வாகன வெடிகுண்டு தாக்குதல்: தாய்லாந்தில் 3 பேர் உயிரிழப்பு
[Monday 2018-01-22 14:00]

தாய்லாந்தில் மலேசிய எல்லையை ஒட்டியுள்ள மூன்று மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி கேட்டு கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெறுகிறது. இந்த மோதல் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 7000 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.தென் அமெரிக்காவில் 5 வயது குழந்தையிடம் மாதம் தோறும் வாடகை வசூல் செய்யும் வினோத தாய்!
[Monday 2018-01-22 07:00]

தென் அமெரிக்காவில் இவான்ஸ் எனும் பெண் 5 வயது மதிக்கதக்க தன் சொந்த மகளிடமே மாதம் மாதம் 5 டொலர் வாடகையாக வசூல் செய்து வருகிறார்.பெற்றோர்கள் அனைவரும் வெவ்வேறு விதமாக அல்லது தங்களது விருப்பத்தின் பேரிலே தங்களது பிள்ளைகளை வளர்ப்பார்கள் பிள்ளைகளும் அவ்வாறே உலகில் வளரவும் அடுத்தவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்ளும்.சீனாவில் பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்ட நான்கு வயது சிறுவன்!
[Monday 2018-01-22 07:00]

நான்கு வயது சீனச் சிறுவனை தங்கள் வாகனத்தால் மோதிய பொலிசார் அவனை 36 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்தனர்.Falun Gong என்பது சீனாவில் பிரபலமாகி வரும் ஒரு ஆன்மீக அமைப்பு. கோடிக்கணக்கானபேர் இதை பின்பற்றிவரும் நிலையில், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீன அரசு இந்த அமைப்பிற்கு தடை விதித்தது.Liu Gexin என்னும் பெண் Beijingஇல் இந்த அமைப்பைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது பொலிசார் அவளைக் கைது செய்தனர்.பிரித்தானியாவில் 8 வயது மகளைக் கொல்லும் முன் பீட்சா வாங்கிக் கொடுத்த தந்தை!
[Monday 2018-01-22 07:00]

பிரித்தானியாவின் Brownhills பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது Bill Billingham. தனது பிள்ளைகளின் புகைப்படங்களை Facebookஇல் அவ்வப்போது வெளியிடுவது அவரது வழக்கம்.தனது 8 வயது மகள் பீட்சா சாப்பிடும் புகைப்படம் ஒன்றை நேற்றிரவு வெளியிட்டார். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, தற்போது அவரை விட்டுப் பிரிந்து வாழும் அவரது மனைவி, சாலையில் நின்று தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூச்சலிட்டார்.தகுதிக்கு மீறி பகட்டான ஆடை மற்றும் நகைகள் அணிந்து வந்த இளைஞர்களை குறி வைத்த பொலிஸ்!
[Monday 2018-01-22 07:00]

நெதர்லாந்தின் Rotterdam நகரில் தகுதிக்கு மீறி பகட்டான ஆடை மற்றும் நகைகள் அணிந்து வந்த இளைஞர்களை பொலிசார் தடுத்து நிறுத்தி விசாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருவாய்க்கு மிஞ்சிய ஆடை அணிகலன்களை அணியும் இளைஞர்கள் மற்றும் சிறார்களையே தாங்கள் குறிவைத்துள்ளதாகவும், இதனால் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் செயல்படுவது தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.கலிபோர்னியாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐந்து வயது சிறுவன்!
[Monday 2018-01-22 07:00]

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே இறக்கி வைக்கும்படிக் கூறியுள்ளார்.மறுத்த அவன், பையைக் கழற்றினால் அதனுள் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்துவிடும் என்று கூறியுள்ளான்.ஆப்கானிஸ்தானில் நட்சத்திர ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: - 15 பேர் பலி?
[Sunday 2018-01-21 15:00]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காபூலில் உள்ள இண்டர்காண்டினெல் ஹோட்டலில் வெளிநாட்டவர் அதிகம் தங்குவது வழக்கம். சனிக்கிழமை இரவு இந்த ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகள் 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.வீட்டில் பணம் திருடிய மகனுக்கு தாய் கொடுத்த கொடூர தண்டனை!
[Sunday 2018-01-21 15:00]

சீனாவில் ‌ஷயோடாங் பகுதியில் உள்ள லுடியான் கவுன்டி என்ற இடத்தில் ஒரு தாய் தனது இளைய மகனை மோட்டார் சைக்கிளின் பின்னால் கயிற்றால் கையை கட்டி இழுத்துச் சென்றார். கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் கதறி அழுதபடி இருந்தான்.விமான பணிப்பெண்களின் சீருடை தொடர்பில் கொந்தளித்த பெண் பயணி!
[Sunday 2018-01-21 07:00]

மலேசியாவில் இருந்து செயல்படும் ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை தொடர்பில் பெண் பயணி ஒருவர் அந்த நாட்டு அமைச்சகத்திற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர், ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை உண்மையில் அருவருப்பை தூண்டுகிறது.விமான பணிப்பெண்களின் உள்ளாடை வரை வெளியே தெரியும் அளவுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது கண்டிப்பாக பாராட்டுதலுக்கு உரியதன்று.உளவாளிகளை அனுப்பி வைக்க வடகொரியா திட்டம்: - முறியடிக்குமா தென் கொரியா?
[Sunday 2018-01-21 07:00]

தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுடன் மிக ரகசியமாக உளவாளிகளையும் அனுப்பி வைக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தங்கள் நாட்டு ரகசியங்கள் வெளி உலகிற்கு கசியாமல் இருக்கும் என வடகொரிய அதிகாரிகள் நம்புகின்றனர்.சியோலில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரும் புதிருமாக இருந்துவரும் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் கலந்துகொள்ள இசைந்துள்ளது.அமெரிக்காவில் பத்து வயது மகளின் கைப்பேசியில் இருந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்!
[Sunday 2018-01-21 07:00]

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 10 வயது மகளின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.தனது பெயர் மற்றும் தனது மகளின் பெயரை குறிப்பிட விரும்பாத அந்த தாய் கூறியதாவது, எனது மகள் செல்போன் பயன்படுத்துகிறான். வீட்டில் உள்ளவர்களுடன் அவசர நேரத்தில் பேசுவதற்கும், கணிணி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் மட்டுமே அவளுக்கு அது வாங்கி கொடுக்கப்பட்டது.ஆனால், அவளது செல்போனில் இருந்த குறுஞ்செய்திகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவளது வயதுக்கு மீறிய பேச்சுகளை தனது நண்பனின் பேசியுள்ளார்.சவுதியில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த இரட்டை சகோதரர்கள்!
[Sunday 2018-01-21 07:00]

சவுதியில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த இரட்டை சகோதரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நாட்டின் ரியாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. காலித் மற்றும் ஷலி ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவார்கள்.இவர்கள் Daesh என்ற தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து செயல்பட முடிவெடுத்த நிலையில் அதை அவர்களின் தாய் கண்டுப்பிடித்துள்ளார்.நான் கர்ப்பமாக இருக்கின்றேன்: - நியூசிலாந்து பிரதமர்
[Saturday 2018-01-20 17:00]


குங்பூ பாணியில் மெழுகுவர்த்தியை அணைக்க முயன்ற சீன சிறுவன் - 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
[Saturday 2018-01-20 17:00]

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் தற்காப்பு கலையான குங்பூ மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்தான். குங்பூ படங்களில் வருவது போல கடந்த சில தினங்களுக்கு முன் தீயை கையால் அணைக்க முயற்சி செய்தான். பார்க்கிங்கில் உள்ள இருசக்கர வாகனம் மீது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தி அதனை குங்பூ பாணியில் அணைக்க முயன்றான். தீ அணையாததால் அதிருப்தி அடைந்த சிறுவன் மெழுவர்த்தியை அணைக்காமல் சென்று விட்டான்.ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்க முடியும்!
[Saturday 2018-01-20 17:00]

உயிர்க்கொல்லி நோயான புற்று நோய் அதன் அறிகுறி மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது. அதை துல்லியமாக கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போது அதை மிக எளிதான ரத்த பரிசோதனை முலம் கண்டுபிடிக்க முடியும். அதுவும் ஒரு பரிசோதனையின் மூலம் கர்ப்பபை, கல்லீரல், வயிறு, கணையம், நுரையீரல், மார்பக பெருங்குடல், உணவுக் குழாய் என 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்க முடியும்.திருமணத்திற்கு முன்னர் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி!
[Saturday 2018-01-20 09:00]

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்னர் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிற்கு, பொதுமக்கள் முன்னிலையில் 20 பிரம்படிகள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபடுவது குற்றமாகும், இந்த குற்றத்திற்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை அளிக்கப்படும்.இந்நிலையில், திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.கர்ப்பம் தரிக்க வைக்கிறேன்: - வயிற்றை வீங்க வைத்து நூதன மோசடி
[Saturday 2018-01-20 09:00]

கென்யாவில் பெண்மணி ஒருவர் கர்ப்பம் தரிக்க வைக்கிறேன் எனக்கூறி இலைகள் மற்றும் மூலிகைகளை கொடுத்து பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பபட்டுள்ளார்.பாண்டா காமாரா என்ற பெண்மணி, குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மருத்துவ சிகிச்சையை நடத்தி வந்துள்ளார்.இவரிடம் வரும் பெண்களிடம், வயிறை வீங்கவைக்ககூடிய இலைகள் மற்றும் மூலிகைகளை கொடுத்துள்ளார்.உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு 13 பிள்ளைகளை சித்திரவதை செய்த தம்பதியைப் பற்றிய சமீபத்திய தகவல்!
[Saturday 2018-01-20 09:00]

உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு 13 பிள்ளைகளை சித்திரவதை செய்த Louise Turpin, 16 வயதில் தனது காதலனுடன் வீட்டைவிட்டு ஓடி வந்தது தெரியவந்துள்ளது.David Turpin தனது காதலியிடம், தன்னுடன் வந்து விட்டால் அவள் உலகத்தில் எதைக்கேட்டாலும் தருவதாக வாக்களித்துள்ளான்.நாட்டை விட்டு 1000 மைல்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டு நாட்டுக்குக் திரும்பக்கொண்டு வரப்பட்டனர், எனினும் அவரை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.10 நாட்களுக்கு முன் இறந்த பெண்ணுக்கு பிறந்தது குழந்தை: - தென்னாப்ரிக்காவில் அபூர்வம்
[Friday 2018-01-19 18:00]

தென்னாப்ரிக்காவின் தாம்போ மாவட்டத்தில் தயிசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி டோயி சில தினங்களுக்கு முன்னா் இறந்து விட்டார். நிறை மாத கா்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடா்ந்து முறைப்படி சடங்கு, சம்பரதாயங்கள் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் நடத்தினர். இறுதியில் அப்பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக பிணவறையில் வைக்கப்பட்டது.தனிமையில் அவதிப்படும் மக்களுக்காக அமைச்சர் நியமனம்: - பிரிட்டன் பிரதமரின் புது முயற்சி
[Friday 2018-01-19 18:00]

பிரிட்டன் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, தனிமையில் அவதிப்படும் மக்களுக்காக ஓர் அமைச்சரை நியமனம் செய்திருக்கிறார் பிரதமர் தெரேசா மே. தற்போது விளையாட்டு அமைச்சராகப் பணிபுரிந்துவரும் ட்ரேசி கிரௌச், தனிமை அமைச்சராக (Loneliness Minister) சமீபத்தில் பதவியேற்றார். மறைந்த MP ஜோ காக்ஸின் நினைவாக இந்தப் பதவியை அறிவித்திருக்கிறார் தெரேசா மே.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா