Untitled Document
January 23, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
பேருந்து விபத்தால் பறிபோன 3 உயிர்கள்: - 37 பேருக்கு பலத்த காயம்
[Wednesday 2018-01-10 14:00]

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே   தனியார் பேருந்து, டிராக்டருடன் மோதிய விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். 37 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து, டிராக்டருடன் மோதிய விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். 37 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள்.

  

விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்த சந்திரா என்ற தனியார் பேருந்து, அருப்புக்கோட்டைக்குள் நுழையும் முன் புளியம்பட்டி எனுமிடத்தில் டிராக்டருடன் மோதிக் கவிழ்ந்தது. இதில் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள், பெயின்டர் என மூவர் பலியானார்கள். பேருந்தில் கூட்டம் அதிகம் என்பதால், படிக்கட்டில் பயணம்செய்துள்ளனர்.

தொடரும் விபத்து

வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்ததால், அதி வேகமாகச் சென்ற பேருந்து, கட்டுப்பாடில்லாமல் டிராக்டர் மீது மோதித் தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்ததில், பேருந்துக்குள் சிக்கி மோசமாக இறந்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வர அரசு முயற்சிக்காததால், இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக ஆனதால்தான் இப்படிப்பட்ட விபத்துகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். இதில், 37 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை தீயணைப்புப் படையினர், பேருந்தை நிமிர்த்தி அடியில் கிடப்பவர்களை பொதுமக்களுடன் சேர்ந்து மீட்டுவருகிறார்கள். இதுபற்றி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணைசெய்துவருகின்றனர்.

இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாலமுருகன், அருண் இருவரும் காரியாபட்டி போகர் பாலி டெக்னிக் மாணவர்கள். மாரிச் செல்வம் (58) பெயின்டர். 37 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 9 பெண்கள், 9 ஆண்கள் உள்நோயாளிகளாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 8 ஆண்கள், 6 பெண்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சைபெற்றுவருகின்றனர். கஸ்தூரி (68) என்ற பெண்மணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஆபாச வீடியோ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்: -மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த சுசி லீக்ஸ்
[Monday 2018-01-22 07:00]

மீண்டும் சுசி லீக்ஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.



ஜெயலலிதாவின் அறையை திறந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும்: - கேரள நம்பூதிரி பகீர்
[Monday 2018-01-22 07:00]

ஜெயலலிதா செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார் என்றும் அவரது அறையை திறந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என கேரள நம்பூதிரி ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கேரள நம்பூதிரி வேங்கட சர்மா அளித்துள்ள பேட்டியில், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அவர் உயிர் பிரிந்தது. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். தொண்டர்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை தெய்வ நிலையை அடைய வைத்துவிட்டது.



ஏன் திராவிடக் கட்சிகள் மீண்டும் வர வேண்டும்: - கிருஷ்ணசாமி
[Monday 2018-01-22 07:00]

"தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இருக்கக் கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே திராவிடக்கட்கள் தான்." என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.



நடிகர் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: - குஷ்பு
[Monday 2018-01-22 07:00]

சூர்யா நடிக்கும் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை வைத்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கிசு கிசு’ நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் சூர்யாவை கிண்டல் செய்யும் விதமாக அனுஷ்காவுடன் ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு, அமிதாப்பச்சனுடன் ஸ்டூல் போட்டு ஏறி நின்றுதான் பேசணும் என்று உயரத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.பெண் தொகுப்பாளர்களுக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.



கர்ப்பிணி பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்த மர்ம கும்பல்!
[Sunday 2018-01-21 15:00]

உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் படூன் மாவட்டம் காஞ்சுலா கிராமத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி. கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றது. அங்குள்ள காட்டுப் பகுதியில் கர்ப்பிணி பெண்ணை 3 பேரும் கற்பழித்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.



கள்ளக்காதல் பிரச்சினை தொழிலாளி படுகொலை: - 3 பேருக்கு கத்திக்குத்து
[Sunday 2018-01-21 15:00]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.கணவன்-மனைவிக் கிடையே நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெரியண்ணன் கத்தியை எடுத்து மனைவி பாக்கியலட்சுமியை சரமாரியாக குத்தினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஏழுமலை (50), ராஜசேகர் (27), வெண்ணிலா (36) ஆகியோர் பெரியண்ணன் வீட்டுக்கு ஓடிவந்தனர். தகராறில் ஈடுபட்ட பெரியண்ணனை தடுத்தனர்.



12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: - அமுலுக்கு வந்த புதிய சட்டம்
[Sunday 2018-01-21 07:00]

இந்தியாவின் அரியானா மாநிலத்தில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அரியானா மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.இந்நிலையில், அரியானா மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால், மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.



பருவம் எய்திடாத 9 வயது சிறுமிக்கு 39 வயது நபருடன் திருமணம்!
[Sunday 2018-01-21 07:00]

தமிழகத்தில் பருவம் கூட எய்திடாத 9 வயது சிறுமியை 39 வயது நபருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினரே முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது.தமிழகத்தின் திருச்சியில் கடந்த 18-ஆம் திகதி அன்று முசிறி அனைத்து பெண்கள் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், திடுக்கிடும் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் 9 வயது பள்ளி மாணவியை 39 வயது நபருக்கு திருமணம் செய்திட மின்னதம்பட்டி கிராமத்தில் முயற்சி நடப்பதாக அந்த நபர் கூறியதால், அதிர்ச்சியடைந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துவங்கியுள்ளனர்.



பணத்துக்காக மகளை ஆண்களிடம் வாடகைக்கு விட்ட தந்தை: -அதிர்ச்சி சம்பவம்
[Sunday 2018-01-21 07:00]

கேரளாவில் மது குடிக்க தேவையான பணத்துக்காக சிறுமியான தனது மகளை பலருக்கு வாடகைக்கு விட்ட தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் சிறுமியை பலாத்காரம் செய்த ஆறு பேரை ஏற்கனவே பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சனிக்கிழமை சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.இதில் முதல் குற்றவாளியான அதிரா அலியாஸ் குளேரியா (24) அளித்துள்ள வாக்குமூலத்தில், மாற்றுதிறனாளியான சிறுமியின் தந்தைக்கு மது குடிக்க 300 ரூபாய் பணம் கொடுத்து சிறுமியை அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.



கண்ணாடி புட்டிக்குள் அதிசய பூதம்: - 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற 4 நபர்கள் கைது
[Sunday 2018-01-21 07:00]

இந்தியாவில் கண்ணாடி புட்டிக்குள் அதிசய பூதம் இருப்பதாக கூறி 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொல்கத்தாவின் பகுயாட்டியைச் சேர்ந்த டபஸ் ராய் சவுத்ரி என்னும் நபரிடம் பேசிய அவரது நண்பர் ஒருவர், உன் தேவை அனைத்தையும் நிறைவேற்றித்தரும் அதிசய பூதம் தனக்கு தெரிந்த நபரிடம் இருப்பதாக கூறியுள்ளார்.அதிசய பூதம் இருப்பதாக நம்பிய சவுத்ரியும், பூத வியாபாரியை சந்திக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.



ஸ்ருதியின் காதல் வலையில் சிக்கிய ஆண்கள்: - சினிமாவை மிஞ்சும் உண்மை கதை
[Saturday 2018-01-20 18:00]

கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ருதி என்ற இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளிநாட்டு ஆண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படியெல்லாம் நாடகம் நடத்தி இப்படி பல இளைஞர்களை வலையில் விரித்தார்கள் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கடலூரை சேர்ந்த சித்ரா என்பவர் தனது கணவர் இறந்துவிட்டதால் தனது இளம்வயது மகள் ஸ்ருதி, மகன் சுபாஸ் ஆகியோருடன் வசித்து வந்தார். இடையில் பிரச்சன்னா வெங்கடேஷ் என்பவரை சித்ரா திருமணம் செய்துகொண்டு கோவையில் வசித்து வந்துள்ளார்



வீதியில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
[Saturday 2018-01-20 17:00]

இருமனம் இணையும் திருமணங்கள் சமீப நாள்களாகப் பெரும் பொருள்செலவில் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. நாகரிகம் மெதுவாக நடைபயின்றுக்கொண்டிருந்த காலத்தில், காலையில் வயலுக்குப் போய்விட்டு, மாலை வீடு திரும்பிய பிறகு உற்றார், உறவினர்கள் கூடி நின்று வாழ்த்த இரவில்தான் திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், நாகரிகம் நான்கு கால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓடத் தொடங்கிய பிறகு, காலை வேளையில் திருமணங்களை நடத்தி வருகிறோம். திருமணங்களில் வகைவகையான சாப்பாடு, மேள தாளம் என எந்தளவுக்கு ஆடம்பரம் அதிகமாக இருக்கிறதோ அதுதான் சிறந்த திருமணம் என்ற சிந்தனை சமூகத்தில் பரவிக்கிடக்கிறது.



கடையில் அமர்வதற்காகச் சாலையைக் கடந்த சமையல்காரருக்கு நடந்த கொடூரம்!
[Saturday 2018-01-20 17:00]

தூத்துக்குடி சக்தி விநாயகர்புரத்தைச் சேர்ந்தவர், துரை. சமையல் தொழிலாளியான இவர், சாப்பாட்டு ஆர்டருக்காக தூத்துக்குடி வ.உ.சி காய்கனி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காகத் தன் நண்பர் ஜெயராஜுடன் பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது பைக் பஞ்சரானது. பஞ்சர் பார்க்க பைக்கை மெக்கானிக் ஷாப்பில் விட்டுவிட்டு, சாலையின் எதிரில் உள்ள ஒரு கடையில் அமர்வதற்காக, துரை சாலையைக் கடந்து சென்றபோது, தூத்துக்குடியிலிருந்து முடிமண் ஊருக்குச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.



ஆண்டாள் சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம்!
[Saturday 2018-01-20 17:00]

ஆண்டாள் கட்டுரை தொடர்பான சர்ச்சைகுறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள்குறித்து ஒரு நாளிதழில் வைரமுத்து எழுதியிருந்த கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்டார். ஆண்டாளை அவமதிப்பது என் நோக்கமல்ல என்று கூறினார். என்றாலும் சிலர் சமாதானமடையவில்லை. வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.



பெற்ற மகனைக் கொன்றது ஏன்? - போலீஸைப் பதறவைத்த தாயின் வாக்குமூலம்
[Saturday 2018-01-20 17:00]

கேரளாவில் பெற்ற தாயே மகனைக் கொலைசெய்து வாழைத்தோட்டத்தில் புதைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் அருகே குரேப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜான் - ஜெயமோல் தம்பதியின் மகன் ஜித்து (14) திங்கள்கிழமை முதல் காணாமல் போனார். 7-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவனைப் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. மாணவனின் தாயார் ஜெயமோலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறினார். போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மகனை, தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.



போலீஸ்காரர்களின் குரூர புத்தியால் பறிபோன இரண்டு உயிர்கள்!
[Saturday 2018-01-20 17:00]

காரில் ரத்தக்கறை படியும் என்று சாலையில் அடிபட்டுக்கிடந்த மாணவர்களை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதைத் தவிர்த்த கொடூரச் சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.



90 ஆண்டுகளாக மண்ணை உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்து வரும் 100 வயது முதியவர்!
[Friday 2018-01-19 18:00]

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 100 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 90 ஆண்டுகளாக மண்ணை உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்து வருகிறார்.11 வயதில் வறுமை காரணமாக மண் சாப்பிட துவங்கியவர் தற்போது 100 வயதாகியும் அந்த பழக்கத்தை விடமுடியாமல் உள்ளார். மண் உண்ணாமல் உயிர் வாழ முடியாது என்ற நிலையில் இப்போது அவர் இருக்கிறார்.



கொலையை ஆதரிக்கும் நபர் இந்து அல்ல: - பிரகாஷ் ராஜ்
[Friday 2018-01-19 14:00]

பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதேபோல் மத்திய அரசு மற்றும் பா.ஜனதாவின் செயல்பாடுகளையும் விமர்சித்து பேசிவருகிறார். இந்நிலையில், ஐதராபாத்தில் இந்தியா டுடே சார்பில் தென்னிந்திய கருத்தரங்கில், ‘கருத்து சுதந்திரம்’ என்ற தலைப்பில் கீழ் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவை மறைமுகமாக வசைபாடினார்.



ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை: - சென்னை உயர்நீதிமன்றம்
[Friday 2018-01-19 14:00]

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக வைரமுத்துவை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மேலும் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.



போதையில் தகராறு செய்தத கணவனை வெட்டிக்கொன்ற மனைவி!
[Friday 2018-01-19 13:00]

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜிக்கு கைவிரல்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் போதையில் வந்தவர் லூர்துமேரியிடம் சண்டை போட்டார்.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா