Untitled Document
January 23, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ்ப்பாணத்தில் புலிகளின் பாடலை ஒலிக்கவிட்டு வாக்குப் பிச்சை கேட்கும் சுதந்திரக்கட்சி!
[Friday 2018-01-12 19:00]

யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற  விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று  காலை யாழ். நகரிலுள்ள “பிள்ளையார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழ். நகரிலுள்ள “பிள்ளையார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது.

  

நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலில் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கடுமையாக விமர்சிக்கும் “ அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா.... அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா.... இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா....” போன்ற வரிகள் அடக்கியிருக்கின்ற நிலையில் குறித்த பாடல் ஜனாதிபதியின் கட்சியின் நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வேட்டையாடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பில் வாக்குக் கேட்கும் நிலைக்கு வந்திருப்பதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.comயாழ்ப்பாணத்தில் வேட்பாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைது செய்ய நீதிபதி உத்தரவு!
[Monday 2018-01-22 18:00]

தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 54 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக விளக்கமறியலில் உள்ள நபர் ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை வழக்கு இன்று யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.தமிழ் மக்களின் இருப்புகளை, நிலங்களை, தொழில்களைச் சூறையாட தென்னவர்கள் கங்கணம்!
[Monday 2018-01-22 18:00]

கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு அலுவலகம் ஒவ்வொரு இடத்தில் இயங்கிவந்த காரணத்தினால் பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு எட்டமுடியாது கடிதப் போக்குவரத்தில் வீணே காலத்தைக் கடத்தி வந்தோம். அந்த நிலைகளுக்கு, இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.வெளியிடப்பட்டது கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம்! Top News
[Monday 2018-01-22 18:00]

யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் இன்றுமாலை இடம்பெற்றது.கொழும்பு வந்தார் சிங்கப்பூர் பிரதமர்! Top News
[Monday 2018-01-22 18:00]

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் இன்று மாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.அதிபரை முழந்தாளிட வைத்த முதலமைச்சருக்கு எதிராக பேரணி! Top News
[Monday 2018-01-22 18:00]

பதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பதுளையில் பெரும் ஆர்ப்பாட்ட இடம்பெற்றது. பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பேரணியாக பதுளை நகரை சென்றடைந்தது.12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!
[Monday 2018-01-22 18:00]

பூநகரி - நாச்சிக்குடா பகுதியில் 12 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்தில், குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.வடமராட்சியில் கரையொதுங்கிய மூங்கில் வீடு! Top News
[Monday 2018-01-22 18:00]

தாய்லாந்து மக்களால் உருவாக்கப்பட்ட மூங்கில் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் பருத்தித்துறைக் கடலில் மீட்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டவர்கள் தமது மூதாதையருக்குப் பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வகையிலான வீடொன்றை உருவாக்கிக் கடலில் மிதக்க விடுவது அவர்களின் மரபாகவுள்ள நிலையில் அவ்வாறானதொரு வீடே குறித்த வீடு எனத் தெரியவருகிறது. தற்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த அதிசய வீட்டைப் பார்வையிட ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.யாழ்ப்பாணத்தில் இன்று சுமுகமாக நடந்த தபால் வாக்குப்பதிவு!
[Monday 2018-01-22 18:00]

யாழ். மாவட்டத்தில் இன்று தபால் மூல வாக்குப்பதிவுகள் சுமூகமாக இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 17,273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பொலிஸார் மற்றும் யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள் யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்குகளை செலுத்தினர். அடுத்தகட்டமாக எதிர்வரும் 25,26ம் திகதி ஏனைய தபால் மூல வாக்காளர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் தங்கள் வாக்குகளை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவித்தார்.புத்தளத்தில் தமிழ்ப் பெண் வெட்டிக் கொலை!
[Monday 2018-01-22 18:00]

புத்தளம்- பாலாவி, ரத்மல்யாய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, பெண்ணொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த, ​புவனேஸ்வரி (வயது 61) என்ற பெண்ணே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில்!
[Monday 2018-01-22 18:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.பிரான்சு சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த பொங்கல் விழா! Top News
[Monday 2018-01-22 18:00]

பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (21.01.2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரியின் பிரதம நிர்வாகி செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்லூரியின் முன்றிலில் கோலமிட்டு பொங்கல் இடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.வாக்களிப்பு எப்படி?
[Monday 2018-01-22 18:00]

நாட்டில் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.50 ஆயிரம் கனடிய டொலர் உதவியை பெற முடியாத நிலையில் வடக்கு மாகாணசபை! - முதலமைச்சர்
[Monday 2018-01-22 07:00]

வடக்கு மாகாணசபைக்கு கனடியத் தமிழர்கள் 50 ஆயிரம் டொலர் நிதியை வழங்க முன்வந்தனர். ஆனால் முதலமைச்சர் நிதியம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சம்பந்தனுக்கு முடியாவிட்டால் விட்டுப் போ! - கஜேந்திரகுமார் ஆவேசம்
[Monday 2018-01-22 07:00]

நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தெரிவித்துள்ளார்.ஹக்கீம், ரிஷாட் போல நாள் ஏமாளி இல்லை! - என்கிறார் மனோ கணேசன்
[Monday 2018-01-22 07:00]

தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம், கொச்சிக்கடை. அங்கு வாழும் தமிழ​ர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்க​ளை போலவே நானும் திமிரானவன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.மக்களின் பணத்தை திருடியவர்களை மன்னிக்கமாட்டேன்! - மட்டக்களப்பில் ஜனாதிபதி
[Monday 2018-01-22 07:00]

நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது. அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க நானும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஆனைக்கோட்டையில் வயோதிப பெண் அடித்துக் கொலை!
[Monday 2018-01-22 07:00]

மானிப்பாய் - ஆனைக்கோட்டை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் மர்ம நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். தனிமையில், உறவினர் ஒருவரின் உதவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டியே தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தமிழ் மக்களை ஈபிஆர்எல்எப் கொன்று குவித்ததை மக்கள் மறந்து விடமாட்டார்கள்! - சிறீதரன்
[Monday 2018-01-22 07:00]

நாங்கள் அரசாங்கத்திடம் இரண்டு கோடி ரூபா பணத்தை வாங்கியதை சிவசக்தி ஆனந்தன் நிரூபித்துக் காட்டுவாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சவால் விடுத்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்கு கூடுதல் வாய்ப்பு! - புலனாய்வு அறிக்கையால் சலசலப்பு
[Monday 2018-01-22 07:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில்தேசிய புலனாய்வு சேவை நடத்திய இரகசிய ஆய்வு ஐதேகவுக்கு சாதகமாக இருந்ததால், அரசாங்கத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.கஞ்சா பிடிக்கப்போன பொலிசார் யானையிடம் மாட்டினர்! - துப்பாக்கியை போட்டு விட்டு ஓட்டம்
[Monday 2018-01-22 07:00]

கதிர்காமம் - லுணுகம்வேஹெர வனப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், கஞ்சா சுற்றிவளைப்புக்காக சென்ற போது, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகினர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரைக் காப்பாற்ற தப்பியோடிய போது, ஒருவரது ரி- 56 ரக துப்பாக்கி தவறிப் போயுள்ளது. இதேவேளை, காட்டு யானையின் தாக்குதலால் இரு கான்ஸ்டபில்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா