Untitled Document
April 19, 2024 [GMT]
எம். ஏ சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் !! பதில் என்ன ?
[Saturday 2018-01-20 19:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால் ஒன்றிறை விடுத்துள்ளார்.
சிங்கள மக்களை திருப்பித்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரன் அவர்களை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால் ஒன்றிறை விடுத்துள்ளார். சிங்கள மக்களை திருப்பித்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரன் அவர்களை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.

  

இந்நிலையில் கனடாவில் இடம்பெற்று வருகின்ற நா..தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வில் இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க சவால் ஒன்றை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது. முடிந்தால் நீங்கள் நல்லுறுவு கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுடன் பேசி, 6வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மக்கள் முன்னால் வந்து ஆணை கேளுங்கள். நீங்கள் தமிழீழத் தனியரசுக்கு எதிரான பக்கம் நில்லுங்கள். நாம் தமிழீழ அரசுக்கு ஆதரவான பக்கம் நிற்கிறோம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். அப்போது மக்கள் உங்களுக்குச் சார்பான தீர்ப்பு வழங்கினால் அதன் பிறகு தமிழீழ தனியரசு நிலைப்பாட்டைக் கைவிட்டதாகப் பேசுங்கள். அதுவரை சற்று அமைதியாக இருங்கள் எனத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் செயல்வழிப்பாதை குறித்தும், சமகால அரசியல் தட்பவெப்பம் குறித்தும் குறித்துரைத்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் உரையின் முக்கிய பகுதிகள் :

நான் எனது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டவாறு தமிழ் மக்களின் அரசியற்தலைவிதி தமிழ் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது செயற்பாடுகளை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒரு வலுமையமாகத் திரட்டி அந்த வலுமையத்தின் பலத்தில் தங்கி நின்று உலக நாடுகளுடன் எமது நலன் சார்ந்து உரையாடும் பலத்தை நாம் பெற வேண்டும். அரசற்ற ஒரு தேசம் என்ற வகையில் தமிழ் மக்கள் தாமாக அணிதிரண்டு அரசுகளை எதிர்கொண்டு செயற்படக் கூடியதொரு வலுவைப் பெறம் வகையில் மக்கள் அணியாக உருத்திரள வேண்டும்.

இந்தத் தொலைநோக்கை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது செயற்பாடுகளைக் கட்டியமைக்க வேண்டியவர்களாக உள்ளோம். கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? என்று நம் மூத்தோர்கள் காட்டிய வழிமுறையொன்று நம்முன்னே உண்டு. வெண்ணெய்யை உருக்கி நெய்யைப் பெறும்போது முயற்சியின் ஊடாக ஒரு உருமாற்றம் நிகழ்கிறது.

இதேபோல் நாம் எமது முயற்சியின் ஊடாக உலகத்தமிழ் மக்கள் என்ற மக்கள் பலத்தை அனைத்துலகில் அரசியற் பொருளாதார சக்தியாக உருமாற்றம் செய்ய வேண்டும். நாம் எடுத்துக் கொண்ட உதாரணத்தில் உருமாற்றம் இலகுவானது. நாம் இப்போது பேசும் அரசியல் உருமாற்றம் கடினமானது. மிகுந்த முயற்சியிiனை வேண்டி நிற்பது. இருந்த போதும் நாம் அதனைச் செய்தாக வேண்டும்.

எந்தவொரு மக்கள் கூட்டமும் தனது அரசியற் பெருவிருப்பை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், இப் பெருவிருப்புகளை அடைந்து கொள்வதற்காகச் செயற்படுவதும் அடிப்படை மனித சுதந்திரத்தின் பாற்பட்டது. இந்த மனித சுதந்திரத்துக்கு தமிழீழ மக்கள் உரித்துடையவர்கள். ஆனால் சிறிலங்காவின் சிங்கள பௌத்த இனவாத அரசு தனது அரசியற் சட்டங்கள் ஊடாகவும் இராணுவ ஆக்கிரிமிப்பின் ஊடாகவும் இந்த அடிப்படை மனித சுதந்திரத்தை ஈழத் தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்திருக்கிறது. சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்துச் சட்டம் மக்களின் கருத்துரிமைக்கு எதிரானது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரிச்சினைக்கு சுதந்திரமும் இறைமையும் உடைய சுதந்திரத் தமிழீழ அரசுதான் தீர்வாக அமையும் என்று சொல்வதற்கும் செயற்படுவதற்கும் உள்ள உரிமையை 6வது திருத்தச் சட்டம் மறுதலிக்கிறது.

நாம் அதனை எதிர்கிறோம். எமது மக்களின் தீர்மானிக்கும் உரிமையினை சிறிலங்கா அரசோ அல்லது சிங்கள தேசமோ தீர்மானிக்க முடியாது. இதனால் அரசியலமைப்புpன் இந்தப் பிரிவை நீக்குமாறு நாம் குரல் கொடுக்கிறோம். 6வது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் எவையும் தமிழீழத் தனியரசு குறித்த மக்கள் விருப்பினை வெளிப்படுத்தமொன்றாகக் கொள்ள முடியாது.

இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் 6வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும்வரை தமிழீழத் தனியரசு அமைக்கும் விருப்பினை மக்கள் கைவிட்டு விட்டார்கள் என்று எவரும் கூமுடியாது. இவ்வாறு கூறும் உரித்தோ ஆணையோ தற்போதய தமிழ்த் தலைவர்கள் எவருக்கும் கிடையாது. 1977 ஆம் ஆண்டில் தமிழீழம் குறித்த மக்கள் வாக்கெடுப்பு எனக்கூறி நடாத்தப்பட்ட தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையும், போர்க்களத்தில் 50;,000 க்கும் மேற்பட்ட போராளிகள் குருதி சிந்தி வழங்கிய உயிர்க்கொடையும் தமிழீழம் என்ற இலட்சியத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

அண்மையில் வந்த பத்திரிகைச் செய்தியொன்றில் பெரும்பான்மைச் சமூகத்தைத் திருப்திப்படுத்தவதற்காக தனிநாட்டுக் கோரிக்கையினை கைவிட்டு விட்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் சுமந்திரன் அவர்களுக்கு ஓரு செய்தியைச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது. முடிந்தால் நீங்கள் நல்லுறுவு கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுடன் பேசி, 6வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மக்கள் முன்னால் வந்து ஆணை கேளுங்கள். நீங்கள் தமிழீழத் தனியரசுக்கு எதிரான பக்கம் நில்லுங்கள். நாம் தமிழீழ அரசுக்கு ஆதரவான பக்கம் நிற்கிறோம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். அப்போது மக்கள் உங்களுக்குச் சார்பான தீர்ப்பு வழங்கினால் அதன் பிறகு தமிழீழ தனியரசு நிலைப்பாட்டைக் கைவிட்டதாகப் பேசுங்கள். அதுவரை சற்று அமைதியாக இருங்கள்.

நண்பர்களே!

எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரிமைக்காக நாம் முனைப்பாகக் குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். தமிழீழ மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான ஈடுசெய்நீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்நீதியின் அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்; முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது. இதற்காக

  
   Bookmark and Share Seithy.com



கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல்! Top News
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.



திருகோணமலையில் நினைவுகூரப்பட்ட அன்னை பூபதி!
[Friday 2024-04-19 16:00]

மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்ட பணிமனையில் இன்றையதினம் இடம்பெற்றது.



செம்மணியின் அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து! - ஐங்கரநேசன் எச்சரிக்கை.
[Friday 2024-04-19 16:00]

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சுதந்திரக் கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது! - கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு.
[Friday 2024-04-19 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



ஈரானிய ஜனாதிபதிக்கு உயர் பாதுகாப்பு!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



புங்குடுதீவில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Friday 2024-04-19 16:00]

யாழ். புங்குடுதீவில் கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.



ஈரான் ஜனாதிபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகலாம்!
[Friday 2024-04-19 16:00]

ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு என்று நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.



சஜித்துக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி! - தூண்டில் போடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி.
[Friday 2024-04-19 16:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



அருட்தந்தை சிறில் காமினி வாக்குமூலம்!
[Friday 2024-04-19 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக 'ஞானார்த்த பிரதிபய' கத்தோலிக்க பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அருட்தந்தை சிறில் காமினி இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவில் கடத்தப்படும் சுண்ணக்கற்கள்!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!
[Friday 2024-04-19 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.



கனடாவின் இனஅழிப்புக் குற்றச்சாட்டு - இலங்கை அரசின் தோல்வி!
[Friday 2024-04-19 05:00]

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



மேதினத்தில் பலத்தை நிரூபிப்போம்!
[Friday 2024-04-19 05:00]

மே தினத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



மாரடைப்பால் கணவன் மரணம், உயிரை மாய்த்தார் மனைவி! - இரு பெண் பிள்ளைகள் நிர்க்கதி.
[Friday 2024-04-19 05:00]

நெடுங்கேணியில் மாரடைப்பு காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இழப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சுற்றுலாவியிடம் உளுந்து வடை, தேனீருக்கு 800 ரூபாய் கறந்தவர் கைது!
[Friday 2024-04-19 05:00]

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் கடையில் இருக்கும் நபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாவிகள் இலங்கை வருகை!
[Friday 2024-04-19 05:00]

இந்த வருடத்தின் முதல் 14 வாரங்களில் 700, 000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது



இதய சத்திர சிகிச்சையில் தவறு - உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு!
[Friday 2024-04-19 05:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்து பெண் மரணம்!
[Friday 2024-04-19 05:00]

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா